Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

கடற்கோள் கொண்ட நினைவுநாளில் கவியோடு வந்திருக்கும் நான்கொண்ட தலைப்பு "திரும்பியது வேரறுந்த வாழ்வு!" 

திரும்பியது வேரறுந்த வாழ்வு!

"அலைவந்து தாலாட்டும் சிறுதீவு" யென்றான் தேசியக்கவியன்று - அந்த 
அலையேவந்து ஆழிப்பேரலையானதோ அடயன்று!

அன்றாடங்காய்ச்சிகள் முதல்
அன்னைமண் காத்தோர் வரை
உன்னிலுதிக்கும் ஞாயிற்றின் நாளில் - அவன் 
உதித்திட முன்னரே காவுகொண்டாய்!

புத்தனை வணங்கிய பேய்கள் 
ஓய்ந்தனவென்றிருக்க,
புதுப்பேயாய், 
நாம் வணங்கிய தாயே நீ வந்ததேனோ?

தூங்கும் பாயே பாடையாகிட - பனைவட்டிடையே
தொங்கி மிதந்தனர் 
தமிழீழ மாந்தரன்று - என்ன? ஓமோம்! (தூங்கும்)

அவர் நடந்த கரையோரம், 
திரைதொட்ட காலம் மலையேறிட,
அவர் கிடக்கக் கரையெங்கும், 
திரைதொட்ட காலமானதன்று!

நாம் நத்தார் நாளில் திழைத்திருக்க,
நம் வீதிபோட வந்தவை எம்மைத் தூக்க,
உலையேற்றக்கூட வழியின்றி
திரும்பியது வேரறுந்த வாழ்வு!

--> நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கவிதை நன்னி.

நாம் நின்ற மண், கடல்-தாய் தின்ற மண்ணாகி போன நாள். 

அன்றறுந்த வேர்கள் இன்றளவும் தளைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  On 27/12/2022 at 11:22, goshan_che said:

அருமையான கவிதை நன்னி.

நாம் நின்ற மண், கடல்-தாய் தின்ற மண்ணாகி போன நாள். 

அன்றறுந்த வேர்கள் இன்றளவும் தளைக்கவில்லை.

Expand  

நன்றி ஐயனே...

இதில் அந்த பனை மர வட்டில் தொங்கியவர் எனது தொலைதூர உறவினர் ஆவார்; நிறைமாதத் தாய். அவரது நெடிய கூந்தல் இடுக்குக்குள் சிக்கியதால் அவரது உடல் கிடைத்தது. சிலருக்கு உடல்கூட மிஞ்சவில்லை! 

அவரது குழந்தை கூட இறந்தே பிறந்தது. 

  • ஒரு செவிவழித் தகவல்: 

ஆழிப்பேரலையன்று மட்டக்களப்பில் நடந்தவொரு "அமானுஸ்யம்" சம்பவம் இது. பலர் அந்தக் காலத்தில் கதைத்தனர்; பொதுமக்கள் தொட்டு இயக்கக்காரர் வரை. நானும் கேட்டுள்ளேன்.

சம்பவம் யாதெனில், மட்டக்களப்பின் சில பரப்புகளில், ஆழிப்பேரலை நேரத்தில் அதிலிருந்து மீண்டவர்கள் அருகிலிருந்த புலிகளின் தளங்களிற்குச் சென்று ஆழிப்பேரலையோடு தாம் ஒரு உருவத்தைக் கண்டதாகவும் அது கடலோடு வருவதாகவும் கூற இயக்கம் அதை நோக்கி எறிகணைவீச்சு நடத்தியதாகவும் பலர் கூறக்கேட்டிருக்கிறேன். மக்கள் அவ்வாறு கொண்ட அச்சத்தைப் போக்க இயக்கம் அவ்வாறு செய்ததா இல்லை ஏதேனும் அவ்வாறு மெய்யிலையே வந்து இயக்கமும் அப்படிச் செய்ததா என்பது பற்றி எனக்கு நேரடிப் பட்டறிவு இல்லை.

Edited by நன்னிச் சோழன்
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 27/12/2022 at 15:36, நன்னிச் சோழன் said:

நன்றி ஐயனே...

இதில் அந்த பனை மர வட்டில் தொங்கியவர் எனது தொலைதூர உறவினர் ஆவார்; நிறைமாதத் தாய். அவரது நெடிய கூந்தல் இடுக்குக்குள் சிக்கியதால் அவரது உடல் கிடைத்தது. சிலருக்கு உடல்கூட மிஞ்சவில்லை! 

அவரது குழந்தை கூட இறந்தே பிறந்தது. 

  • ஒரு செவிவழித் தகவல்: 

ஆழிப்பேரலையன்று மட்டக்களப்பில் நடந்தவொரு "அமானுஸ்யம்" சம்பவம் இது. பலர் அந்தக் காலத்தில் கதைத்தனர்; பொதுமக்கள் தொட்டு இயக்கக்காரர் வரை. நானும் கேட்டுள்ளேன்.

சம்பவம் யாதெனில், மட்டக்களப்பின் சில பரப்புகளில், ஆழிப்பேரலை நேரத்தில் அதிலிருந்து மீண்டவர்கள் அருகிலிருந்த புலிகளின் தளங்களிற்குச் சென்று ஆழிப்பேரலையோடு தாம் ஒரு உருவத்தைக் கண்டதாகவும் அது கடலோடு வருவதாகவும் கூற இயக்கம் அதை நோக்கி எறிகணைவீச்சு நடத்தியதாகவும் பலர் கூறக்கேட்டிருக்கிறேன். மக்கள் அவ்வாறு கொண்ட அச்சத்தைப் போக்க இயக்கம் அவ்வாறு செய்ததா இல்லை ஏதேனும் அவ்வாறு மெய்யிலையே வந்து இயக்கமும் அப்படிச் செய்ததா என்பது பற்றி எனக்கு நேரடிப் பட்டறிவு இல்லை.

Expand  

அனுதாபங்கள்.

நான் இதை அறியவில்லை. ஆனால் கடலினுள் விஸ்ணு ஆகிசேச சயனத்தை கண்டதாக முஸ்லிம் மீனவர்கள் கிழக்கில் கூறியதாக கேள்வி.

தெய்வேந்திர முனையில் இருந்து ஒல்லாந்தர் உடைத்த பாரிய விஸ்ணு கோவில் எச்சமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
  On 27/12/2022 at 15:42, goshan_che said:

அனுதாபங்கள்.

நான் இதை அறியவில்லை. ஆனால் கடலினுள் விஸ்ணு ஆகிசேச சயனத்தை கண்டதாக முஸ்லிம் மீனவர்கள் கிழக்கில் கூறியதாக கேள்வி.

தெய்வேந்திர முனையில் இருந்து ஒல்லாந்தர் உடைத்த பாரிய விஸ்ணு கோவில் எச்சமாக இருக்கலாம்.

Expand  

😥

ஓம் அந்த நாராயணர் சம்பவத்தை நானும் கேள்விப்பட்டுள்ளேன். அது சிங்களத் தொலைக்காட்சியிலேயே நேர்காணலாக கொடுத்திருந்தவர்கள் மீனவர்கள். மீனவர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களை நேரடியாக கோவிலுக்கு அழைத்துச்சென்று தாம் கண்ட உருவம் இதுதானெனக் கூறினவர்கள். 

அது பற்றி எனக்குத் தெரியவில்லை.

  • நன்னிச் சோழன் changed the title to திரும்பியது வேரறுந்த வாழ்வு! | ஆழிப்பேரலைக் கவிதை

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.