Jump to content

ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நிதின் ஸ்ரீவஸ்தவா
  • பதவி,பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்துகொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள்
 
படக்குறிப்பு,

சின்ஹா(நடுவில்) மற்றும் இதர மக்கள் ஒன்றிணைைந்து தண்ணீர் பிரச்னை குறித்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்

இந்தியாவின் இமயமலை நகரமான ஜோஷிமட், கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், கண்முடித்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சியது போன்ற காரணங்களால் புதைந்துகொண்டிருப்பதாகத் தொடர்ந்து செய்திகளில் பார்க்கிறோம். நாட்டின் பல நகரங்கள் இந்தக் கதியை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியிலுள்ள ஒரு பகுதி நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதைக் குறைத்ததன் மூலம் தங்களுடைய பகுதி நிலத்தில் புதைந்து போகாமல் தடுத்து நிலைமையை மாற்றியுள்ளனர்.

54 வயதான சுதா சின்ஹாவும் அவரது குடும்பத்தினரும் 1998இல் துவாரகாவிற்கு இடம் பெயர்ந்து வந்தனர். அவர்கள் பசுமையான சூழலை விரும்பியதும் இந்தியாவின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்ததுமே அவர்கள் இடம் பெயர்ந்து வருவதற்குக் காரணம்.

ஆனால் விரைவிலேயே, அக்கம்பக்கத்தில் குழாய் தண்ணீர் இல்லையென்பதைக் கண்டனர். அதற்கு மாறாக, ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீராகவும் குளிக்க மற்றும் பிற அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டியிருந்தது.

 

பல ஆண்டுகலாக துவாரகாவிற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்ததால், நூற்றுக்கணக்கான ஆழ்துனை கிணறுகள் தோண்டப்பட்டன. சில இடங்களில் 196 அடி ஆழம் வரைக்கும், மக்களும் பில்டர்களும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆழ்துளை கிணறுகளைத் தோண்டினர்.

“அடுக்குமாடி குடியிருப்புகள், சந்தைகள், பள்ளிகள் என்று அனைத்தும் காளான்களைப் போல் வளர்ந்தன. அனைவரும் நிலத்தடி நீரையே பயன்படுத்தினார்கள்,” என்று சின்ஹா நினைவு கூர்ந்தார்.

நிலத்தடி நீரை எடுக்கும்போது, அதற்கு மேலே இருக்கும் நிலம் கீழே போகும். இது நிலம் மண்ணுக்குள் புதைவதற்கு வழி வகுக்கிறது. துவாரகாவிலும் அப்படித்தான் நடப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.

நிலத்தடி நீர் குறைந்ததால், துவாரகாவின் நிலம் புதையத் தொடங்கியதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அறிக்கை 2014இல் மட்டும் அந்தச் சுற்றுப்புறம் சுமார் 3.5 செ.மீ குறைந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுப்பதற்கு குடியிருப்புவாசிகளும் அரசாங்கமும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்காக, அரசாங்கம் மக்களுக்கு குழாய் மூலம் தண்ணீரை வழங்கத் தொடங்கியது. அதையும் மீறி அவற்றைப் பயன்படுத்தும் கட்டடங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு மக்கள் அந்தப் பகுதியின் நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காக மழைநீரைச் சேமிக்கத் தொடங்கினார்கள்.

ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்துகொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லியின் நிலத்தடி நீர்மட்டத்தை செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் ஷாகுன் கர்க், “தலைநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சிலவற்றில் நிலம் கீழே புதைந்து வரும் நிலையில், துவாரகாவில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நிலம் மேலே எழுந்து வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன,” எனக் கூறினார்.

துவாரகாவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போகத் தொடங்கியபோது, டெல்லி அரசு அந்தப் பகுதிக்கு லாரியில் தண்ணீரை அனுப்பத் தொடங்கியது.

ஆனால், அந்தத் தண்ணீர் போதுமானதாக இருக்கவில்லை, விலையும் உயர்ந்தது. 2004ஆம் ஆண்டில், சின்ஹாவும் சக குடியிருப்புவாசிகளும், குழாய் மூலம் தண்ணீர் வழங்க வேண்டுமெனக் கோரி தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக மனுக்களில் கையெழுத்திட்டு, ஊர்வலம் சென்று மிரட்டினார்கள்.

அதிர்ஷ்டவசமாக, 2000ஆம் ஆண்டில் இருந்தே துவாரகாவிற்கு குழாய் நீர் வழங்குவதற்கான திட்டத்தை அரசு திட்டமிட்டு வந்தது. அந்தத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு, 2011ஆம் ஆண்டு வாக்கில், ஒவ்வோர் அடுக்குமாடி கட்டடமும் குழாய் மூலம் தண்ணீரைப் பெறத் தொடங்கியது.

ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்துகொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2016ஆம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட அனைத்து வீட்டு வசதி சங்கங்களும் ஆழ்துளை கிணறுகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. அதோடு, நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதும் கணிசமாகக் குறைந்தது.

வல்லுநர்களின் கூற்றுப்படி, 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள இரண்டு உள்ளூர் ஏரிகளும் இதனால் புத்துயிர் பெற்றன. அவை நிலத்தடி நீரை மீள்நிரப்புவதிலும் உதவின.

கழிவுநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் பொது பூங்காக்கள், மைதானங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது.

நிலத்தடி நீரின் அளவை அதிகரிப்பதற்கு 200 ஆண்டுகள் பழைமையான ‘நயா ஜோட்’ என்ற உள்ளூர் நீர்த்தேக்கத்தைப் புதுப்பிக்க மக்கள் ஒன்று கூடினார்கள். ஏரி கிட்டத்தட்ட முற்றிலுமாக வறண்டிருந்ததால், மழை பெய்யும்போது தண்ணீர் தேங்குவதற்கு உதவுவதற்காக அதிலிருந்த களைகளையும் வண்டல் மண்ணையும் அகற்றினார்கள்.

டெல்லி போன்ற குறைந்த மழைப்பொழிவைக் கொண்ட வறண்ட நகரங்களில், வண்டல் மண் நிறைய உள்ளது. இதனால், நிலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்குச் சிறந்த வழி என்கின்றனர் வல்லுநர்கள்.

துவாரகாவுக்கு தண்ணீர் விநியோகம் செய்த லாரிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

துவாரகாவுக்கு தண்ணீர் விநியோகம் செய்த லாரிகள்

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும் மும்பை ஐஐடியை சேர்ந்த ஆய்வாளர்களும் அடங்கிய குழு, சமீபத்தில் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் தலைநகரின் சுமார் 100 சதுர கி.மீ பரப்பளவு மண்ணில் புதைந்து வருகிறது என்றும் அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான் அதற்கு முதன்மையான காரணம் என்றும் தெரிய வந்தது.

நகர திட்டமிடுதல் வல்லுநரான விகாஸ் கனோஜியா, “பழைய நீர்த்தேக்கங்களுக்குப் புத்தியிர் அளிப்பது, மழைநீரைச் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகள் நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க துவாரகாவுக்கு உதவியது. அது புதைந்துகொண்டிருந்த நிலத்தின் போக்கையே மாற்றியது.

இது டெல்லிக்கு மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் ஒரு முன்மாதிரி,” என்று கூறுகிறார்.

வேளாண் பொருளாதாரமாக இருப்பதால், அமெரிக்காவும் சீனாவும் இணைந்து பயன்படுத்தும் நீரின் அளவைவிட இந்தியா அதிகமான நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடாக உள்ளது.

“இந்தியாவில் நிலத்தடி நீரை எடுக்கும் விகிதம் மழையால் நிரப்பப்படும் விகிதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால் நாட்டில் நிலம் மண்ணுக்குள் புதைவது அதிகரித்து வருகிறது,” என்கிறார் மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் கிருஷ்ணசாமி.

https://www.bbc.com/tamil/articles/cn06qx64dw6o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலுள்ள மலைகளுடன் ஒப்பிடும்போது இமயமலை உருவாகியது பூமியின் ஆயுளில் மிக மிக பிந்திய காலகட்டதிலே  என்பதையும் அதன் உயரம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மலையின் கீழ் பூமிக்கடியில் தொடர்ந்து  மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே உள்ளதும் அறியப்பட்டிருக்கிறது. எனவே இமயமலையை அண்டிய பிரதேசங்களில் நிலம் உயர்வதும், தாழ்வதும், நதிகள் நீர் வற்றி மறைந்துபோவதும், நில நடுக்கம், நிலச்சரிவு, வரட்சி என்பன எல்லாமே சாத்தியம். இவற்றின் பலாபலன்கள் அனைத்தும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தில் உணரப்படாவிடினும் படிப்படியாக ஒரு நூற்றாண்டிலோ அல்லது ஆயிரம் வருடத்திலோ நிகழ்வது சாத்தியம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி.  கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.  
    • 🤣............... கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.
    • முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   https://akkinikkunchu.com/?p=298467
    • தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை. தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.   https://akkinikkunchu.com/?p=298489
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.