Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கறுப்பு-கருப்பு எது சரி? | பிழையுடன் பயன்படுத்தும் சொற்கள்

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ல்,ள்,ழ் எது எங்கே வரும்? | ல ள ழ எழுத்துப் பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைப்பிலேயே எழுத்துப்பிழை இருக்கின்றது! 🤪

காணோளி - தவறு

`காணொளி` என்பதுதான் சரியானது. அச் சொல்லே நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. அண்மையில்தான் `காணொலி` என மிகைத் திருத்தம் செய்துள்ளார்கள். `Video` என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லாகவே `காணொளி` என்ற சொல்லாக்கம் செய்யப்பட்டது. `Video` என்ற சொல்லின் வேர்ச்சொல்லும் காண் (videre > see ) என்ற பொருளிலேயே வந்துள்ளது. பின்னர் இச் சொல்லிருந்தே பல ஆங்கிலச் சொற்கள் உருவாகின.

அந்த வகையில் காணொளி எனச் சரியாகவே எழுதி வந்த எம்மைச் சிலர் Video இல் காண்பதுடன் கேட்கவும் செய்கின்றோமே என்று சொல்லி, `காணொலி`என மிகைத் திருத்தம் செய்துவிட்டார்கள். இதற்கு இவர்கள் `வானொலி` என்ற எடுத்துக்காட்டினைக் காட்டுவார்கள். வானிலிருந்து வந்த ஒலி என்ற வகையிலும், அதில் கேட்டலே முதன்மை என்பதாலும் அச் சொல் சரியானதே. இங்கு காணொளியில் காட்சியே முதன்மையானது. தமிழில் இரு சொற்கள் சேரும் போது இரண்டாவது சொல்லின் பொருளே முதன்மை பெறும் (எ.கா = பேருந்து ). இதற்கமைய `காணொலி` என்றால் அங்கு ஒலியே முதன்மையாகிவிடுமல்லவா! அது தவறு. காட்சியே முதன்மை. எனவே காணொளி தான் சரியானது.

தமிழில் `எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே` என்கின்றது தொல்காப்பியம். அந்த விதிக்கமையச் சொல்லாக்கினால்; ஒளியினைத் தான் காண முடியும், காணும் ஒளி (காண் + ஒளி = காணொளி) என்ற பொருளில் காணொளி என்பதே சரியாகும்.

"காண் ஒளி என்பது கண்ட ஒளி, காண்கின்ற ஒளி, காணும் ஒளி என்று வினைத்தொகையாய் அமைந்து தெளிந்த பொருள் தருகிறது" என்பார் கவிஞர் மகுடேசுவரன். "காண்+ஒலி=காண்கின்ற ஒலியாகி, பொருளே மாறி விடும்" என்பார் முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான்.

எனவே முடிவாகக் கூறினால் `காணொளி` என்பதே சரியான தமிழ்ச்சொல்லாகும்.

ஆதாரம்: குவேரா

https://qr.ae/prMaay

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, கிருபன் said:

கிருபன் அண்ணை மேலே காணொளி பிழை என்று எழுதிவிட்டு, அது தான் சரி என கீழே குவேரா சுட்டியை போட்டிருக்கிறீர்களே! 
காணோளியா? காணொலியா? சரி?
சரி போட்ட இணைப்புகளில் குற்றம் இல்லை தானே? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஏராளன் said:

கிருபன் அண்ணை மேலே காணொளி பிழை என்று எழுதிவிட்டு, அது தான் சரி என கீழே குவேரா சுட்டியை போட்டிருக்கிறீர்களே! 
காணோளியா? காணொலியா? சரி?
சரி போட்ட இணைப்புகளில் குற்றம் இல்லை தானே? 

9 hours ago, கிருபன் said:

காணோளி - தவறு

நான் போட்ட பதிவை பொறுமையா வாசிக்கவேண்டும் @ஏராளன்😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

நான் போட்ட பதிவை பொறுமையா வாசிக்கவேண்டும் @ஏராளன்😎

மன்னிச்சு அண்ணை. மிகத் தவறு எனப் புரிந்தது. நன்றி.

நிர்வாகத்திற்கு திருத்தச் சொல்லி முறையிட்டுள்ளேன்.

  • Thanks 1
  • இணையவன் changed the title to தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணொளி என்று முன்பு எழுதினேன். காணொளி தவறு காணொலி சரி என கூறப்பட்டது. காணொலி எனக்கு சரியாக தென்படுகின்றது. ஒளி + ஒலி = காணொலி

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பசும்பாலா பசுப்பாலா சரி?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தவறானவை        சரியானது  

பசும் பால்  .....>    பசுப்பால் (பசுவின் பால்)

தேனீர்       ..........>   தேநீர் ( தேயிலை நீர் )

எண்ணை   .........> எண்ணெய்   ( எள் = நெய் )

  • Like 1
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வல்லினம் மெல்லினம் இடையினத்தை மிகமிகத் தவறாகச் சொல்லிக் கொடுக்கின்றனர். ண, ன, ந என சொல்லிக் கொடுக்ககூடாது. ண், ன், ந் என சொல்லிக் கொடுக்க வேண்டும்.

https://web.facebook.com/reel/470398872640559

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழுத்துப் பிழைக்கான காரணம் இது தான்! | மின்னம்பலம் தமிழ்

படிமுறைத் தமிழின் நிறுவனர் சு.இராசரத்தினம் ஐயா அவர்களின் தெளிவுபடுத்தல். தமிழ் என்பது எளிமையான மொழி, எளிமையாகக் கற்கலாம் என "மொழியியலும் பயன்பாடும்" எனும் நூல் வழியாக தமிழர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.