Jump to content

இந்தியா Vs ஆஸ்திரேலியா: இந்தியாவின் டெஸ்ட் தொடர் வரலாற்றை மாற்றி எழுதுமா ஆஸ்திரேலியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலிய வேகம் தாங்காமல் 117 ரன்னில் சரிந்த இந்தியா: 11 ஓவரில் அடித்து தூக்கிய ஆஸ்திரேலியா

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

13 ரன்களில் அவுட்டாகி வெளியேறும் ரோகித் சர்மா

19 மார்ச் 2023, 09:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானது.

இதையடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பு ஏதுமின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றிக் கோட்டைத் தொட்டது.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 66 ரன் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இருவருமே அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. அதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. இதன்மூலம் இந்தியா 1-0 என்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்த ஆண்டின் இறுதியில் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் இந்தியா இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், கே.எல்.ராகுல், ஜடேஜா போன்றோருக்கு இந்தத் தொடர் தேர்வர்கள் முன்னிலையில் தகுதி பெறுவதற்கு இந்தத் தொடரில் தங்கள் முழு திறனையும் காட்ட வேண்டியது அவசியமாக இருந்தது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெறும் என்று கணிக்கப்பட்டது.

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், “முந்தைய ஆட்டத்தின்போது நன்றாகத் தொடங்கியிருந்தாலும் ஆட்டத்தின் நடுவே கூட்டணி சரியாக அமையவில்லை. அது மிகவும் முக்கியம்.

உலகக்கோப்பை இங்கு நடக்கவுள்ளதால் இத்தகைய போட்டிகளில் இங்கு விளையாடுவது நல்ல கற்பிதங்களை வழங்குகிறது,” எனக் கூறியவர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக நேதன் எல்லீஸும் அலெக்ஸ் கேரிக்கு பதிலாக ஜோஷ் இங்கிலீஸும் அணியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மைதானம் மிகவும் வறட்சியானது என்றும் நீண்டகாலமாக மறைத்து வைக்கப்பட்டதாகவும் கூறிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, “திறம்பட பேட்டிங் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பிறகு அந்த ஸ்கோரை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நிதானமாகவும் கூட்டுமுயற்சியோடு இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளேன்.

ஆட்டத்தின் நடுவே சரியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்,” எனக் கூறியவர், இஷான் கிஷானுக்கு பதிலாகத் தான் இடம் பெறுவதாகவும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.

இந்திய அணிக்காக முதலில் ரோகித் ஷர்மாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கியுள்ளனர். முந்தைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டியிருந்தாலும் பேட்டிங்கின்போது, இஷான், விராட் கோலி, சூர்யகுமார் ஆகியோர் ஒற்றை இலக்கில் அவுட்டானார்கள். ஷுப்மன் கில் 20 ரன்களில் அவுட்டானார். ஆகவே இன்றைய போட்டியில் தொடக்கம் சரியாக அமைய வேண்டியிருந்தது.

ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஷுப்மன் கில் இரண்டே பந்துகளில் ஒரு ரன்கூட எடுக்காமல் மிட்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 13 ரன்களில் ரோஹித் ஷர்மாவும் ஆட்டமிழந்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

9 ரன்களில் அவுட்டாகி வெளியேறும் கே.எல்.ராகுல்

ரோகித் ஷர்மா, விராட் கோலி கூட்டணியில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஐந்தாவது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சிலேயே 13 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். முந்தைய போட்டியில் இந்திய அணியைத் தூக்கிப் பிடித்த அவர் இந்த முறையும் விழுந்துகொண்டிருக்கும் விக்கெட் மழையைத் தடுத்து நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதேநேரத்தில், இந்தப் பந்தில் அவருடைய விக்கெட்டையும் வீழ்த்தி ஹாட்-டிரிக் விக்கெட்டுகளை வீழ்த்தும் குறிக்கோளோடு மிட்செல் ஸ்டார்க் காத்திருந்தார். ஆனால் அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் எதிர்பாராதவிதமாக 9வது ஓவரில் கே.எல்.ராகுல் வெறும் ஒன்பதே ரன்களில் மிட்செல் பந்துவீச்சில் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும் மூன்றே பந்துகளை எதிர்கொண்டு ஒரேயொரு ரன்னோடு ஷான் ஆப்போட் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித்திற்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தின் 10வது ஓவரில் ஆறாவதாக களமிறங்கிய ஜடேஜாவும் கோலியும் கூட்டணி சேர்ந்து விக்கெட் விழாமல் தக்க வைக்க முயற்சி எடுத்தனர்.

ஆனால், அந்த முயற்சியால் கிடைத்த நம்பிக்கையையும் நீண்டநேரம் நீடிக்க விடாத ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் நேதன் எல்லீஸ் பந்துவீச்சில் விராட் கோலி அவுட்டானார்.

16வது ஓவரின் இரண்டாவது பந்தில் விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 6 விக்கெட்களை இழந்து 71 ரன்களை எடுத்திருந்தது.

ரோகித் ஷர்மா 15 பந்துகளில் 13 ரன்கள், ஷுப்மன் கில் 2 பந்துகளில் பூஜ்ஜிய ரன்கள், சூர்யகுமார் யாதவ் ஒரு பந்தில் 0 ரன்கள், கே.எல்.ராகுல் 12 பந்துகளில் 9 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 3 பந்துகளில் 1 ரன், விராட் கோலி 35 பந்துகளில் 31 ரன்கள் என வரிசையாக விழுந்த 6 விக்கெட்களும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ரசிகர்கள் மீது இறங்கியது.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஒரேயொரு ரன் எடுத்து ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார்.

இந்திய அணி 81 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது களத்தில் அக்ஷர் பட்டேலும் ரவீந்திர ஜடேஜாவும் இருந்தார்கள். ஜடேஜா 28 பந்துகளை இதுவரை எதிர்கொண்டு 12 ரன்களை எடுத்து ஆடிக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவரும் நேதன் எல்லீஸ் பந்துவீச்சில் 20வது ஓவரில் அவுட்டானார்.

8வது இடத்தில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 17 பந்துகளில் 4 ரன்களை எடுத்து ஷான் ஆப்போட் பந்துவீச்சில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த முகமது ஷமி, முகமது சிராஜ் இருவருமே ரன் எடுக்காமல் அவுட்டானார்கள்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன், நேதன் எல்லீஸ் ஆகியோரின் பிடியில் சிக்கி இந்திய அணி வரிசையாக மலமலவென சரிந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களை எடுத்து ஆல்-அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

https://www.bbc.com/tamil/articles/cpvqwnqz61ro

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

vasee

ஆசிய வீரர்கள் போல இவர்கள் பந்து சுழலும் திசைக்கு எதிராக விளையாடமாட்டார்கள், மனதளவில் அப்படி ஒரு நிலைப்பாடு எனோ காணப்படுகிறது. https://www.foxsports.com.au/cricket/no-way-back-aussies-torn-to-sh

vasee

கவுதம் கம்ப்பீர் முன்பு நான் இணைத்த காணொளியில் குறிப்பிடுகிறார் கர்பயன் (எறியம்) போலில்லாமல் ஜடேயா, அஸ்வின் பந்துகளை எதிர்கொள்வது கடினம் என கூறுகிறார். பந்தை கிடையாகவும், கோணத்தினை உருவாக்குவ

Eppothum Thamizhan

இவங்களுக்கு வேற வேலையே இல்லை. யாரை யாரோடு ஒப்பிடுவதென்ற அறிவேயில்லை. அக்சாருக்கும் கபிலுக்கும் இடையேயுள்ள தூரம் மலைக்கும் மடுவுக்குமானது! இந்தியாவில் விளையாடிய 4 டெஸ்ட்டிலேயே எடுத்தது 3 விக்கெட்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ப‌டு தோல்வி.............சொந்த‌ ம‌ண்ணில் இப்ப‌டி தோல்வியா

சூரிய‌குமார் யாட‌வ் இர‌ண்டு ம‌ச்சிலும் 0-0 
இப்ப‌டியே போனால் சொந்த‌ ம‌ண்ணில் உல‌க‌ கோப்பைய‌ ப‌றி கொடுப்பினம்😁............... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

இந்தியா ப‌டு தோல்வி.............சொந்த‌ ம‌ண்ணில் இப்ப‌டி தோல்வியா

சூரிய‌குமார் யாட‌வ் இர‌ண்டு ம‌ச்சிலும் 0-0 
இப்ப‌டியே போனால் சொந்த‌ ம‌ண்ணில் உல‌க‌ கோப்பைய‌ ப‌றி கொடுப்பினம்😁............... 

 

அவுஸ்திரேலியா அணி ஆக்கிரோசமாக விளையாடி பட்டையை கிளப்பி உள்ளது போல. முதலாவது தோல்வியில் ஏற்பட்ட ஓர்மம் காரணமாகுமோ?

இலங்கை அணி இம்முறை 50 ஓவர் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

அவுஸ்திரேலியா அணி ஆக்கிரோசமாக விளையாடி பட்டையை கிளப்பி உள்ளது போல. முதலாவது தோல்வியில் ஏற்பட்ட ஓர்மம் காரணமாகுமோ?

இலங்கை அணி இம்முறை 50 ஓவர் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்குமோ?

இல‌ங்கை க‌ல‌ந்து கொள்ளும் அண்ணா............அன்மைக் கால‌மாய் இல‌ங்கை அணி ச‌ர்வ‌தேச போட்டிக‌ளில் விளையாடின‌து மிக‌ குறைவு...............ஒரு நாள் புள்ளி ப‌ட்டிய‌லில் ப‌த்துக்கு உள்ள‌ தான் நிக்கின‌ம்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

இல‌ங்கை க‌ல‌ந்து கொள்ளும் அண்ணா............அன்மைக் கால‌மாய் இல‌ங்கை அணி ச‌ர்வ‌தேச போட்டிக‌ளில் விளையாடின‌து மிக‌ குறைவு...............ஒரு நாள் புள்ளி ப‌ட்டிய‌லில் ப‌த்துக்கு உள்ள‌ தான் நிக்கின‌ம்.....................

தன்னிச்சையாக தெரிவு செய்யப்படாமல் தகுதிப்போட்டிகளின் மூலம் தகுதி பெறவேண்டும் என்பதினைதான் விளங்க நினைப்பவன் கூறுகிறார் என கருதுகிறேன்.

உங்களுக்கு அது பற்றி தெரியுமா? இலங்கை தகுதி போட்டிகளில் வென்றால்தான் உலககோப்பையில் கலந்து கொள்ள முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஸ்டாக் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார், அலவுகூடுதலான பந்துகளை துணிச்சலாக வீசுகிறார், இந்திய அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டிற்கு வெளியில் வீசப்படும் பந்து உள்ளே வரும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள், இந்த காணொளியில் மிகவும் வெய்யில் உள்ள நிலையில் கூட பந்து இறுதி நேரத்தில் திரும்புகிறது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

அவுஸ்திரேலியா அணி ஆக்கிரோசமாக விளையாடி பட்டையை கிளப்பி உள்ளது போல. முதலாவது தோல்வியில் ஏற்பட்ட ஓர்மம் காரணமாகுமோ?

இலங்கை அணி இம்முறை 50 ஓவர் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்குமோ?

 

14 minutes ago, vasee said:

தன்னிச்சையாக தெரிவு செய்யப்படாமல் தகுதிப்போட்டிகளின் மூலம் தகுதி பெறவேண்டும் என்பதினைதான் விளங்க நினைப்பவன் கூறுகிறார் என கருதுகிறேன்.

உங்களுக்கு அது பற்றி தெரியுமா? இலங்கை தகுதி போட்டிகளில் வென்றால்தான் உலககோப்பையில் கலந்து கொள்ள முடியுமா?

Screenshot-20230320-081954-Chrome.jpg

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பர் 1 இடத்தை தக்க வைக்குமா இந்திய அணி? சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகமாக அமையும்?

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஆட்டத்தில் இந்தியாவும் 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரின் வெற்றியை முடிவு செய்யும் ஆட்டமாக இன்றைய ஆட்டம் இருப்பதாலும் சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச போட்டி நடைபெறுவதாலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் மூன்றேகால் ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், கடந்த இரு போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களே முக்கிய பங்காற்றினார். இரு ஆட்டங்களிலுமே 200 ரன்களை இரு அணிகளும் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலவீனமான நிலையில் இந்திய பேட்டிங்

இந்திய அணியை பொறுத்தவரை அதன் பேட்டிங் மிக மோசமான நிலையில் உள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனபோதிலும் அந்த ரன்னை எட்டுவதற்கு இந்திய அணி சிரமத்தை சந்தித்தது. இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் உதவியால் இந்தியா வெற்றி பெற்றது.

 

இரண்டாவது ஒருநாள் போட்டியிலோ மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டல் பந்துவீச்சில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்மேன்கள் நிலை குலைந்து போனார்கள். இந்த ஆட்டத்தில் இந்தியாவின் 4 பேட்ஸ்மேன்கள் ரன்கள் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக சூர்ய குமார் யாதவின் ஆட்டம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட்டை வெளிப்படுத்தும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். முந்தைய இரு ஆட்டங்களிலும் அவர் ரன்கள் எதுவுமே எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதுவரை ஆடியுள்ள 23 ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே அவர் 50 ரன்களை கடந்துள்ளார். எனவே, இன்றைய ஆட்டத்தில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடி அவருக்கு உள்ளது.

சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ' கடந்த இரு ஆட்டங்களிலும் அதற்கு முன் நடந்த தொடரிலும் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்துள்ளார். ஆனால், அவருக்கு தொடர்ந்து 7-8 ஆட்டங்கள் அல்லது 10 ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் . அப்போதுதான் அவர் சௌகரியமாக உணர்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் ஷுப்மன் கில்லும் சரிவர ரன்களை குவிக்க திணறிவருகிறார். தொடரை முடிவு செய்யும் ஆட்டம் என்பதால் இன்றைய போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

மிரட்டும் மிட்செல் மார்ஸ் - மிட்செல் ஸ்டார்க்

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவின் பேட்டிங்- பௌலிங் இரண்டுமே வலுவான நிலையில் உள்ளது. குறிப்பாக மிட்செல் மார்ஸ் கடந்த இரண்டு ஆட்டங்களிலுமே அரை சதம் கடந்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மற்ற பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மிட்செல் மார்ஸ் 81 ரன்களை எடுத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 36 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்காற்றினார். டிராவிஸ் ஹெட் உட்பட பிற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். இரு ஆட்டங்களிலும் அவர் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக பார்க்கப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ‘வேகம்’ பயமுறுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

மைதானம் யாருக்கு சாதகம்?

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 22 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இந்தியா 13 ஆட்டங்களில் விளையாடி 7ல் வெற்றியும் 5ல் தோல்வியும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா இங்கு 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில், 4ல் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியும் பெற்றுள்ளது. இரு அணிகளும் முதன்முறையாக கடந்த 1987 நடந்த உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் மோதின. இதில் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. தற்போதைய தொடரில் பேட்டிங்கில் மிரட்டி வரும் மிட்செல் மார்ஸின் தந்தை ஜெஃப் மார்ஸ் இந்த ஆட்டத்தில் 110 ரன்கள் அடித்து ஆட்ட நாயகம் விருதை கைப்பற்றி இருந்தார்.

இந்த தொடரின் இரண்டு ஆட்டங்களிலும் 2வது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சென்னை செப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட் செய்த அணிகளே அதிகம் வென்றுள்ளன. 22 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் இடத்தை தக்க வைக்குமா இந்திய அணி?

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி தற்போது 114 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 112 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 115 புள்ளிகள் பெற்று தனது முதலிடத்தை தக்க வைக்கும் அதேவேளையில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் இரு அணிகளுமே 113 புள்ளிகள் பெற்று சமன் ஆகும். தொடரை கைப்பற்றும்பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்கக் கூடும்.

https://www.bbc.com/tamil/articles/c0d4wmnm92do

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அவுஸ்ரேலியா வென்றால் தொட‌ரை 2-1 

ஆனால் இந்தியா இண்டைக்கு வெல்ல‌ பாப்பாங்க‌ள்.................சொந்த‌ ம‌ண்ணில் தோத்தா அவ‌ மான‌ம் தானே.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20230322-164407-ESPNcricinfo.

மூன்று ஒரு நாள் தொட‌ரில் 0-0-0

 இவ‌ருக்கு என்ன‌ ஆச்சு 
இப்ப‌டி ஒரு வீர‌ர் தொட‌ர்ந்து மூன்று விளையாட்டிலும் ர‌ன்ஸ் எதும் அடிக்காம‌ அவுட்😏..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

Screenshot-20230322-164407-ESPNcricinfo.

மூன்று ஒரு நாள் தொட‌ரில் 0-0-0

 இவ‌ருக்கு என்ன‌ ஆச்சு 
இப்ப‌டி ஒரு வீர‌ர் தொட‌ர்ந்து மூன்று விளையாட்டிலும் ர‌ன்ஸ் எதும் அடிக்காம‌ அவுட்😏..............

இவர் ஒரு இருபது20 திறமையாளர், ஒரு நாள் போட்டிகளில் கொஞ்சம் தடுமாறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

இவர் ஒரு இருபது20 திறமையாளர், ஒரு நாள் போட்டிகளில் கொஞ்சம் தடுமாறுகிறார்.

20ஓவ‌ரில் வேக‌மாய் வ‌ரும் ப‌ந்தை ம‌ட்டையால் வான‌ வேடிக்கை காட்டுவ‌ர்...............போன‌ ஜ‌பிஎல்ல‌ கோலி மைதான‌த்துக்கு வ‌ருவ‌தும் உட‌ன‌ போவ‌துமாய் இருந்த‌து


இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் இதே நிலை தொட‌ர்ந்தால் மும்பாய் ஜ‌பிஎல்ல‌ போன‌ வ‌ருட‌த்தை போல் ப‌டு தோல்வி அடையும்

வும்ரா இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் விளையாட‌ வில்லை...........ரோகித் ச‌ர்வா எப்ப‌டி அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ப் போகிறார் தெரிய‌ல‌😯.........................
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

இவர் ஒரு இருபது20 திறமையாளர், ஒரு நாள் போட்டிகளில் கொஞ்சம் தடுமாறுகிறார்.

பான்டியா ஜ‌டேயா அவுட்

அவுஸ் இந்தியாவை ம‌ட‌க்க‌ போகுது................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

பான்டியா ஜ‌டேயா அவுட்

அவுஸ் இந்தியாவை ம‌ட‌க்க‌ போகுது................................

முதலிடம் போகப் போகுது அவுசிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

முதலிடம் போகப் போகுது அவுசிற்கு.

Game over bro😁...............

Australia won by 21 runs🙏.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முதலிடம் போகப் போகுது அவுசிற்கு.

 

த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் இந்த‌ மைச் தோத்த‌துக்கு சூர்ய‌குமார் தான் கார‌ண‌ம் என்று அதிக‌ம் அந்த‌ வீர‌ரை க‌ழுவி ஊத்தின‌ம்....................மூன்று விளையாட்டிலும் 0-0-0 என்று அவுட் ஆகினா ம‌க்க‌ளுக்கு இவ‌ர் மேல் வெறுப்பு வ‌ர‌த் தான் செய்யும்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IND Vs AUS: சென்னை ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றியைப் பறித்த 'அந்த ஒரு ஓவர்'

கிரிக்கெட் - ஆஸ்திரேலியா வெற்றி

பட மூலாதாரம்,TWITTER/ICC

22 மார்ச் 2023

சூர்யகுமாரின் டக் அவுட், விராட் கோலி செய்த ஒரு தவறு, அக்சர் படேலின் ரன் அவுட் இவை அனைத்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு ஓவர் இந்திய அணியின் வெற்றியை முற்றிலுமாக பறித்திருக்கிறது.

முக்கியமான தருணங்களில் இந்தியா செய்த சில தவறுகளால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கை நழுவிப் போயிருக்கிறது.

சென்னை மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

தொடர்ந்து 4 முறை சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வந்த இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது ஆஸ்திரேலியா.

 

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய ஹர்திக் பாண்டியா

2019-க்குப் பிறகு முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதுவும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கு முக்கியமான ஆட்டம். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஸ்டீவ் ஸ்மித்தை தவிர்த்து, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருமே இரட்டை இலக்க ரன்களை சேர்த்தனார். டாப் 7 வீரர்கள் அனைவருமே 23 முதல் 47 ரன்கள் வரை விளாசி விடைபெற்றனர். ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தியதில் ஹர்திக்கின் பந்துவீச்சுக்கு பெரும்பங்கு உண்டு.

ஹர்திக் வீசிய அவரது முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், அடுத்த ஓவரில், ஸ்டீவ் ஸ்மித், 3வது ஓவரில் மிட்செல் மார்ஷ் என அச்சுறுத்த காத்திருந்த அனைத்து பேட்டர்களையும் வழியனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா.

2017க்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டியில் டக் அவுட்டாவது இதுவே முதல்முறை.

49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 269 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக், குல்தீப் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

கிரிக்கெட் - ஆஸ்திரேலியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறிய அந்த ஒரு ஓவர்

270 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, வெறும் 248 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ரோஹித் 30, கில் 37, ராகுல் 32 ரன்கள் எடுத்து விடைபெற்றார்.

களத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை நடந்தது.

ஆஷ்டன் அகர் தனது கடைசி ஓவரை வீச வந்தார். அது ஆட்டத்தின் 36வது ஓவர். முதல் பந்தை விராட் கோலி எதிர்கொண்டார்.

அந்த ஷாட் அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை. அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி, வார்னரிடம் அகப்பட்டார்.

72 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து விடைபெற்றார். விராட் கோலிக்கும் சென்னைக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உண்டு.

சென்னை மண்ணில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் ஒன்று சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றுவார். இல்லை எனில், அரைசதத்தையும் கடந்து எதிரணியை திணறடிப்பார். இன்று நடந்தது 2வது பாணி. ஆனாலும் கோலியின் ஆட்டம் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

சூர்யகுமார் முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்

முக்கியமான தருணத்தில் இறங்குவதற்காக 5வது இடத்தில் களமிறங்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ், கோலியின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கினார்.

முதல் பந்திலேயே சூர்யகுமார் க்ளீன் போல்ட். அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்கள் சரிந்தது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை அளித்தது. தொடர்ந்து 3வது முறையாக சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டப்லியூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்த சூர்யா, இந்த முறை அகரிடம் க்ளீன் போல்டானார்.

கிரிக்கெட் - ஆஸ்திரேலியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸி. வெற்றி - ஐசிசி தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் - ஜடேஜா ஜோடி, வெற்றிக்கான கடைசி நம்பிக்கையாக திகழ்ந்தது.

ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அவ்வளவு சுலபமாக அவர்கள் இருவரையும் களத்தில் இருக்கச் செய்யவில்லை. ஹர்திக் 40, ஜடேஜா 18 ரன்களில் விடைபெற்றார்.

கடைசி வரை போராடிய டெயில் எண்டர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாமல் போனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது ஆஸ்திரேலியா.

https://www.bbc.com/tamil/articles/cpvq1yl5e0vo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி சொதப்பியது எங்கே? தோல்விக்கு என்ன காரணம்?

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்

பட மூலாதாரம்,ANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விமல் குமார்
  • பதவி,விளையாட்டு செய்தியாளர்- பிபிசி இந்தி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வேறு ஒரு அணியால் தோற்கடிக்க முடியும் என்றால் அது நிச்சயம் ஆஸ்திரேலியாவாக தான் இருக்க முடியும்.

0-1 என்ற நிலையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-1 என்று தொடரை வென்றுள்ளது ரசிகர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியை தரலாம். ஆனால், இந்த வெற்றி தற்செயலானது அல்ல.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய மண்ணில் நடைபெற்ற 27 ஒருநாள் தொடர்களில் 3 தொடர்களில் மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியிடமும் ஒரு முறை பாகிஸ்தான் அணியிடமும் தோல்வியடைந்துள்ளது.

தங்களது சொந்த மண்ணில் வலுவாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் மட்டுமே தோற்கடிக்க முடியும். நடந்து முடிந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது மூலம் இதை மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியா நிரூபித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணி என்ற இடத்தையும் ஆஸ்திரேலியா பிடித்துள்ளது.

 

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா எங்கு தவறியது?

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோகித் ஷ்ர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகியோர் உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் சதம் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இரண்டில் ஒரு ஆட்டத்தில் இவர்களில் யாராவது ஒருவர் சதம் அடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், ஒருநாள் அணியில் இருந்து தவான் நீக்கப்பட்ட நிலையில், விராட் கோலியும், ரோகித் ஷர்மாவின் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாமல் இருக்கிறார்கள்.

முதன் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா விளையாடவில்லை. அதை தவிர்த்து இந்த இருவரும் விளையாடிய 5 இன்னிங்ஸிலும் சேர்த்து 150 ரன்களை கூட அவர்கள் எடுக்கவில்லை என்பது இந்த தொடரின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர்

ஷுப்மன் கில், ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் ஒட்டுமொத்தமாக அணிக்கு ஏமாற்றம் அளித்திருக்கின்றனர். கில்லுக்கு 2023ஆம் ஆண்டு தன்னை நிரூபிக்க வேண்டிய ஆண்டாக உள்ளது. எப்படியே இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 50 ரன்களை அவர் கடந்துவிட்டார். இந்த தொடரில் ஜடேஜா 79 ரன்களும் பாண்டியா 66 ரன்களும் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களுக்காக பொறுப்பு என்பது இன்னும் கூடுதலாகவே உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் இருந்து வெளியேறியதைத் கருத்தில் கொண்டு சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த தொடர் அவருக்கு கெட்ட கனவாக அமைந்தது. மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட் ஆகியது அவர் மோசமான ஃபார்மில் இருப்பதை அப்பட்டமாக காட்டியுள்ளது.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டரின் பழைய பலவீனங்களை மீண்டும் அம்பலப்படுத்தினார். அதேபோல், தரமான லெக் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக, அனுபவமிக்க இந்திய பேட்டிங் வரிசையும் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட்டது என்பதை ஆடம் ஜம்பா காட்டினார்.

சமீப ஆண்டுகளாக ட்ரெண்ட் போல்ட், ஷாகின் ஷா அஃப்ரிடி, ஸ்டார்க் என இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறி வருகின்றனர். இந்த பலவீனத்தை இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியா அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்

பட மூலாதாரம்,ANI

பெரிய போட்டிகளில் சொதப்பும் இந்திய அணி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 2023 உலகக் கோப்பை தொடருக்கு 17-18 ஆட்டக்காரர்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை மனதில் வைத்து வெவ்வேறு ஆடுகளங்களில் வெவ்வேறு இணைகளை கண்டறிவதே தங்களது அணியின் அடிப்படை நோக்கமாக இருந்ததால் கடைசிப் போட்டியின் முடிவு ஒரு பொருட்டல்ல என்றும் அவர் கூறினார்.

டிராவிட்டின் வாதம் ஏற்கக்கூடியதுதான். ஏனென்றால், ஒரு அணிகளுக்கு எதிரான தொடரில் சிங்கமாக இருக்கும் இந்திய அணி பெரிய போட்டிகளின் நாக்- அவுட் போட்டிகளிலேயே தோல்வியடைகிறது.

இதற்கு மத்தியில், சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடைந்துள்ள தோல்வியை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சில முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவும் இந்தத் தொடரில் விளையாடுவதால், டெஸ்ட் போட்டிகளைப் போலவே ஒருநாள் தொடரிலும் வெற்றி சாத்தியம் என்று டிராவிட் கூறியது எவ்வித பலனையும் அளிக்கவில்லை.

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்

பட மூலாதாரம்,ANI

ஏமாற்றமளிக்கும் முகமது ஷமி

ஜஸ்பிரிட் பும்ரா உடல் தகுதி இல்லாமல் உள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் என்பதால் முகமது சமியை இந்திய அணி அதிகம் நம்பி இருந்தது. ஆனால், 3 போட்டிகளிலும் மொத்தமே மூன்று விக்கெட்களை மட்டுமே அவர் வீழ்த்தியுள்ளார். அவரது எக்னாமியும் 5.5க்கு அதிகமாக இருந்தது.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு புவனேஷ்வர் குமாரை மறந்துவிட்டது, தற்போது விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் ஷர்துல் தாக்கூர் ஆல் ரவுண்டராக மட்டுமே இருக்க முடியும் போன்றவைதான் தற்போது இந்திய அணியின் பிரச்சனையாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக, சென்னை ஆட்டத்தில் பெற்ற ஒரே ஒரு தோல்வி இந்திய ஒருநாள் அணியில் திடீரென பல குறைபாடுகளை வெளிவர செய்துள்ளது.

இந்த மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனைவரும் அதில் மும்முரமாக இருப்பார்கள். அதன்பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கவுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரை இந்திய அணி எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதன்பின்னர், ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் போன்ற சவால்கள் காத்திருக்கின்றன.

மீண்டும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை தோற்கடித்தால், தற்போது அடைந்த இந்த தோல்வி 6 மாதங்களுக்குப் பிறகு மேலும் சிக்கலைத் தரும்.

https://www.bbc.com/tamil/articles/cleq1x532q4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை : ஆரம்ப வீரராக வோர்னர், ஹெட் வரிசையில் மார்ஷ்

Published By: DIGITAL DESK 5

24 MAR, 2023 | 09:21 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலிய அணியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களுக்கு பஞ்சம் இல்லை என்பதை மிச்செல் மார்ஷ் இப்போது நிரூபித்துள்ளார்.

டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட் ஆகியோருடன் இப்போது மிச்செல் மார்ஷ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இணைந்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின்போது டேவிட் வோர்னர் உபாதைக்குள்ளானதால் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் ஸ்தானத்தை மிச்செல் மார்ஷ் வெற்றிகரமாக நிரப்பியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள இந்த வருடத்தில் ஆரம்ப வீரராக விளையாடும் முதல் சந்தர்ப்பத்திலேயே மிச்செல் மார்ஷ் 2 அரைச் சதங்களைக் குவித்து அசித்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக வான்கடேயில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 81 ஓட்டங்களை விளாசிய மிச்செல் மார்ஷ், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சென்னையில் நடைபெற்ற கடைசிப் போட்டியிலும் திறமையை வெளிப்படுத்திய அவர் 47 ஓட்டங்களைப் பெற்று ஆரம்ப வீரராக தன்னால் ஜமாய்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

துபாயில் 2021இல் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை உலக சம்பியனாக்கியதுடன் ஆட்டநாயகன் விருதையும் மிச்செல் மார்ஷ் வென்றிருந்தார்.

இந்தியாவுடனான தற்போதைய தொடரில் அபார ஆற்றல்களை துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு 2 - 1 என்ற தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுத்த மிச்செல் மார்ஷ் தொடர்நாயகன் விருதையும் வென்றெடுததார்.

சென்னையில் புதன்கிழமை (22) நடைபெற்ற போட்டியில் மீள் வருகை தந்த டேவிட் வோர்னர் ஆரம்ப வீரர் ஸ்தானத்திற்கு பதிலாக 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடினார். 142 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டேவிட் வோர்னர் ஆரம்ப வீரராக அல்லாமல் விளையாடியது இதுவே இரண்டாவது தடவையாகும்.

இந்தியாவில் அக்டோபர் மாதம் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது துடுப்பாட்ட வரிசையைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் சில பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடப்போவதாக அவுஸ்திரேலியா கூறிவந்தது.

எவ்வாறாயினும் டேவிட் வொர்னர் வழமையான ஆரம்ப வீரராக இந்த வருட பிற்பகுதியல் விளையாடுவார் என கருதப்படும் அதேவேளை, பவர் ப்ளேயின்போது களத்தடுப்பு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி விளாசி அடிக்கக்கூடிய வல்லமை மிச்செல் மார்ஷிடம் தாராளமாக இருக்கிறது என்பதை ஆஸி. அணி முகாமைத்துவம் அறிறயாமல் இல்லை. 

அதேவேளை ட்ரவிஸ் ஹெட்டும் ஆரம்ப வீரராக அதிரடி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவர். எனவே டேவிட் வோர்னர் ஓய்வு பெறும்வரை அவுஸ்திரேலியாவின் ஆரம்பத்துடுப்பாட்டத்திற்கு பஞ்சம் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

மூன்றாவது போட்டியில் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றியது ஆஸி.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான சர்வசேத ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமமான நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி சென்னையில் புதன்கிழமை (22) நடைபெற்றது.

அப் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 269 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் மிச்செல் மார்ஷ் (47), ட்ரவிஸ் ஹெட் (33), அலெக்ஸ் கேரி (38), மானுஸ் லபுஸ்சான் (28), சோன் அபொட் (26), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (25) ஆகியோர் 25 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணியைப் பலப்படுத்தினர்.

இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

270 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

விராத் கோஹ்லி (52), ஹார்திக் பாண்டியா (40), ஷுப்மான் கில் (37), கே.எல். ராகுல் (32), ரோஹித் ஷர்மா (30) ஆகியோர் முன்வரிசை மற்றும் மத்திய முன்வரிசையில் பிரகாசித்த போதிலும் மத்திய பின்வரிசை மற்றும் பின்வரிசையில் யாரும் பிரகாசிக்காததால் இந்தியா தோல்வியைத் தழுவ நேரிட்டது.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அஷடன் அகார் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

572561-01-02.jpg

572540-01-02.jpg

https://www.virakesari.lk/article/151285

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.