Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை இல்லாத பிரேரணை!!!!

தனி நபர்களின் விருப்பதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது!! 15 members have voted

  1. 1. உங்கள் அமோக ஆதரவை எதிர்பார்கிறேன்!!

    • தனி நபர்களின் விருப்பதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது சரி!!
      4
    • தனி நபர்களின் விருபதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது பிழை!!
      11

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

அவரின் சிட்னி கோசிப் எல்லாவற்றிலும் அவர் எங்கு செல்வது மாதிரியும் கதைகிற மாதிரியும் இருக்கும் அதை நீங்கள் பார்த்து இருபீர்கள்..........அது அவருடைய ஸ்டைலிலான எழுத்து என்று வைத்து கொள்ளலாம் என்று நினைகிறேன்...உண்மை தெரிந்தும் வைப்பார் என்றா என்பது எனக்கு விளங்கவில்லை ஆனால் அவர் பிரிந்ததன் மூலம் இங்கே வேறு கதைகள் பரவ தொடங்கின அதற்கு எல்லாம் முட்டுகட்டை வைக்கும் விதமாக தான் இதை எழுதினவர் என்று என்னால் குறிபிடமுடியும்...........குறிபிட்

:rolleyes: உதாரணத்தை விட்டுவிடுவோம் என்று நான் எங்கும் சொல்லவில்லையே யமுனா. ஒரு உதாரணத்தை வைத்து அவரவர் வசதிக்கேற்ப வாதிடலாம், எனவே தொடர்ந்து செல்லும் அந்த விவாதத்தை விட்டுவிடுவோம் என்று சொன்னேன்.

எல்லோர் சொல்லும் கருத்திலும் அவரவர் பக்க நியாயங்கள் இருக்கும். அந்த வகையில் தான் உங்கள் கண்ணோட்டமும் ஒருவகையில் நியாயமானதே, ஆனால் இந்த இடத்தில் அந்த ஆக்கத்தை இங்கு இணைப்பதற்கு முதலே யோசித்திருக்கவேண்டும் என்றேன். மற்றும்படி எல்லோரும் தமக்கு சரி என்று படுவதையே எழுதுகிறார்கள். முஸ்லிம் நாடுகளில் மொட்டாக்கு அணிவது (எல்லா இடத்திலும்) சரியானது. அது அவர்களின் நியாயத்திற்குட்பட்டது. அதே யேர்மனியில் வகுப்பில் தொப்பி அணிவதே தவறாகும் போது மொட்டாக்கு அணிவதும் தவறாகிறது. சரி தப்பு, நியாயம் அநியாயம் எல்லாம் அந்தந்த இடம் காலம் சூழல் போன்றவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

அவர் நேராக வந்து விளக்கம் கொடுகிறார் அதே மாதிரி காலங்கள் கனியட்டும் தமிழீழன் மலரட்டும் அவர்களும் வந்து பதில் கூறதான் வேண்டும் அதில் பிழை இருப்பதாக தெரியவில்லை

இதைத் தான் நானும் சொல்கிறேன். இதே உணர்வைத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும், தமிழீழ விடிவிலும் அக்கறையும் நம்பிக்கையும் உள்ளவர்கள் கொண்டிருக்கவேண்டும். தமிழீழம் மலரட்டும். அதுவரை பொறுத்திருப்போம். B)

ஆனால் இந்த சின்ன பிரச்சினையை அவர்களுடன் ஓப்பிடுவது அவ்வளவு அழகல்ல

சின்னப் பிரச்சனை பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. விசயம் எது சம்மந்தப்பட்டது என்பதுதான் பிரச்சனை. அதனால் ஏற்படும் விளைவுகள் தான் பிரச்சனை. தூசு கண்ணுக்குத் தெரியாது. சின்ன விசயம் தான். ஆனால் கண்ணுக்குள்ள விழுந்தால்? எறும்பு சின்னன் தான். ஆனால் அது யானையின் காதுக்குள் புகுந்தால்? சிறு துரும்பும் எமது போராட்டத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் உதிர்க்கிற ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படுது. :)

புத்தன் அமைதியாக இருகிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும் சரி அவர் அமைதியாகவே

புத்தன் கருத்துக்களத்தில் இந்த விடயத்தில் அலட்டிக்கொள்ளாமல் புரிந்துகொண்டு நடப்பதையே அமைதி என்று சொன்னேன். இப்ப அவர் ஒஸ்ரேலியாவில நல்ல குறட்டை விட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது நடுச்சாமத்தில எழும்பி பாட்டுப் பாடிக்கொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியுமப்பா :P

நீங்கள் முதல் குறிபிட்டு இருந்தீர்கள் இரு பிரதிநிதிகள் கதைத்து பயன் இல்லை என்று யாருக்கு தெரியும் நீங்க தான் நிர்வாகம் நான் தான் புத்தனோ என்று.

இப்படியான ஊகங்கள் தான் பிழையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னேன். ஊகங்களை வைத்துக் கதைப்பதால் எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளையும் எட்டமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நிர்வாகத்திற்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளேன்.எனினும் நாங்கள் ஒழுங்கான கருத்துக்களையும், தரமான படைப்புக்களையும் இங்கு படைக்கின்றோமா என்பதில் தான் சந்தேகம். நிர்வாகத்தினரும் தங்கள் தனிப்பட்ட சிரமங்களின் மத்தியிலும் யாழ்களத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.எனவே அந்த நிர்வாகத்தினருக்கு நாம் என்றுமே கடமைப்பட்டவர்கள்.எங்கும் எதிலும் பிழை பிடிப்பது சுலபம்.

கோபுரத்தின்ரை அழகை கிட்ட நிண்டு பாத்தால் ஒரு நாளும் தெரியாது பாருங்கோ அதுசரி டேய் யமுனன்(செல்லமாய்)உங்கை சிட்னி முருகன் கோயிலிலை சூரன்போரும் நடக்கிறதோ? ஏனெண்டால் அது வேறை நெருங்கிக்கொண்டு வரூதெல்லே! :rolleyes:

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

:D உதாரணத்தை விட்டுவிடுவோம் என்று நான் எங்கும் சொல்லவில்லையே யமுனா. ஒரு உதாரணத்தை வைத்து அவரவர் வசதிக்கேற்ப வாதிடலாம், எனவே தொடர்ந்து செல்லும் அந்த விவாதத்தை விட்டுவிடுவோம் என்று சொன்னேன்.

ஓ அப்ப உதாரணத்தை விடவில்லை உதாரணத்தை வைத்து வாதாடலாம் என்று சொல்கிறீங்களா...........இப்பவாது விளங்கச்சே......சரி அந்த விவாதத்தை விடுவோம்..............என் கண்ணோட்டமும் ஒரு வகையில் நியாயம் என கூறியதிற்கு மிக்க நன்றி............இறுதியா நல்ல கருத்து ஒன்றை சொல்லி இருகிறீங்க எல்லாம் காலம்,இடம் என்பவனவற்றை கொண்டு தீர்மானிக்கபடுகிறது என்று அதை ஒரளவு ஏற்றுகொள்கிறேன்........... :)

இதைத் தான் நானும் சொல்கிறேன். இதே உணர்வைத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும், தமிழீழ விடிவிலும் அக்கறையும் நம்பிக்கையும் உள்ளவர்கள் கொண்டிருக்கவேண்டும். தமிழீழம் மலரட்டும். அதுவரை பொறுத்திருப்போம்.

இதையா நீங்களும் சொல்கிறீங்க நீங்க சொன்ன மாதிரி தெரியவில்லை வலைஞன் அண்ணா இதை சாயலில் ஒரு கருத்தை கொடுத்ததை அவதானித்திருந்தேன் :D ..........அத்துடன் அண்ணா பாருங்கோ தமீழிழ விடுதலையில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் தமிழீழ தலைமைகளுக்கு சிலரின் செயற்பாடுகளினால் அவர்களிற்கு பங்கம் வராம இருக்க சில நடவடிக்கையில் கையில் எடுப்பதும் என்னை பொறுத்த அளவில் சரி என்றே சொல்லுவேன்.........தமீழிழம் மலரட்டும் அதுவரை நானும் பொறுதிருகிறேன்............ஆனால் உங்களுடன் விவாதிபேன்!! :P

சின்னப் பிரச்சனை பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. விசயம் எது சம்மந்தப்பட்டது என்பதுதான் பிரச்சனை. அதனால் ஏற்படும் விளைவுகள் தான் பிரச்சனை. தூசு கண்ணுக்குத் தெரியாது. சின்ன விசயம் தான். ஆனால் கண்ணுக்குள்ள விழுந்தால்? எறும்பு சின்னன் தான். ஆனால் அது யானையின் காதுக்குள் புகுந்தால்? சிறு துரும்பும் எமது போராட்டத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் உதிர்க்கிற ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படுது. :lol:

பிரச்சினை என்பதும் இடம்,பொருள்,காலம் அத்துடன் சமூகம் இது தான் தீர்மானிகிறது என்று எடுகோளை முன்வைக்கலாம்.........அண்ணா எறும்பு விழுந்தாலும் அது சாதாரணமாக எறும்மா இருந்தால் பிரச்சினை இல்லை கடி எறும்பா இருந்தால் தான் பிரச்சினயே :P அது யானைக்கும் பொருந்தும் ஏன் எங்களின்ட வலைஞன் அண்ணாவின்ட கண்ணுகுள்ள போனாலும் பொருந்தும்..........ஒவ்வொரு வார்த்தையும் எத்தைகைய தொனியில் வருகிறது எனொஅதை மட்டும் தான் கவனிக்கபடுகிறது.........சில விசயங்கள் நல்லெண்ணத்துடனான தொனியில் வரும் போது அது எதிரிகளுக்கு தான் சிக்கல் என்பதனை நீங்கள் புரிய வேண்டும்........... B)

புத்தன் கருத்துக்களத்தில் இந்த விடயத்தில் அலட்டிக்கொள்ளாமல் புரிந்துகொண்டு நடப்பதையே அமைதி என்று சொன்னேன். இப்ப அவர் ஒஸ்ரேலியாவில நல்ல குறட்டை விட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது நடுச்சாமத்தில எழும்பி பாட்டுப் பாடிக்கொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியுமப்பா :P

ஓ புத்தன் அலட்டி கொள்ளாமல் புரிந்து கொண்டு நடப்பதை சொன்னீங்களா............பிறகு அவர் நித்திரையா அல்லது பாட்டு பாடி கொண்டிருகிறார் என்று யாருக்கு தெரியும் என்று கேட்டு இருகிறீங்க...................கீழே நீங்களே சொல்லி இருக்கிறீங்க............ :P

"இப்படியான ஊகங்கள் தான் பிழையான முடிவுகளை ஏற்படுத்தும் என்று"

அப்ப மேலே சொன்னதை பற்றி என்ன நினைகிறீங்க.............அதை மாதிரி தான் சில விசயங்களும்.......

இப்படியான ஊகங்கள் தான் பிழையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னேன். ஊகங்களை வைத்துக் கதைப்பதால் எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளையும் எட்டமுடியாது.

ஊகங்களை வைத்து ஆக்கபூர்வமான முடிவுகளை எட்ட முடியாத என்ற வாதத்தை நான் ஏற்று கொள்ள மாட்டேன்...........எத்தனையோ விசயங்கள் ஊகங்களின் அடிபடையில் தான் நடந்து கொண்டிருகின்றன............எங்கள் கண் முன்னும் நடந்த வண்ணம் இருகிறது ஆகவெ சில ஊகங்கள் மூலம் பல விசயங்களையும் உள்வாங்கி கொள்ளளாம்............. :)

ஜம்மு பேபி பஞ் -ஊகம் இல்லாம வாழ்கை இல்லை ஆனா ஊகமே வாழ்கை ஆகிடாது!!!

இப்படிக்கு யாழ்கள மக்கள் பிரதிநிதி

ஜம்முபேபி.......

"இப்படியான ஊகங்கள் தான் பிழையான முடிவுகளை ஏற்படுத்தும் என்று"

அப்ப மேலே சொன்னதை பற்றி என்ன நினைகிறீங்க.............அதை மாதிரி தான் சில விசயங்களும்.......

ஊகங்களை வைத்துக் கொண்டு நான் எந்த முடிவுகளுக்கும் வரவில்லையே? "யாருக்குத் தெரியும்" என்ற கேள்வியுடன் தானே முடித்திருக்கிறேன். :P

ஊகங்களை வைத்து ஆக்கபூர்வமான முடிவுகளை எட்ட முடியாத என்ற வாதத்தை நான் ஏற்று கொள்ள மாட்டேன்...........எத்தனையோ விசயங்கள் ஊகங்களின் அடிபடையில் தான் நடந்து கொண்டிருகின்றன............எங்கள் கண் முன்னும் நடந்த வண்ணம் இருகிறது ஆகவெ சில ஊகங்கள் மூலம் பல விசயங்களையும் உள்வாங்கி கொள்ளளாம்.............

நீங்கள் ஏற்றுக்கொள்வில்லையென்றால் நான் என்ன செய்யமுடியும். ஆனால் ஊகம், சந்தேகம் என்று இரண்டு சொற்கள் தமிழில் உள்ளன என்பதை புரிந்துகொள்ளுதல் நல்லது. கணிதத்தில் கூட விடையை ஊகித்தல் என்பது இருக்கிறது. ஆனால், அந்த ஊகத்தை பரீட்சைத் தாளில் எழுதினால் :D

கேள்வி1: என்னென்ன விடயங்கள் ஊகத்தின் அடிப்படையில் நடந்துகொண்டிருக்கின்றன?

கேள்வி2: ஊகங்களின் அடிப்படையில் என்ன விடயங்களை உள்வாங்கிக்கொள்ளலாம்?

இதையா நீங்களும் சொல்கிறீங்க நீங்க சொன்ன மாதிரி தெரியவில்லை வலைஞன் அண்ணா இதை சாயலில் ஒரு கருத்தை கொடுத்ததை அவதானித்திருந்தேன்

"இதைத் தான் நானும் சொல்கிறேன்" என்பது இப்போது நிகழ்வது தானே? ஏற்கனவே நான் சொன்னதாகச் சொல்லவில்லையே. பிறகெப்படி "நீங்க சொன்ன மாதிரி தெரியவில்லை" என்று சொல்வீர்கள்?

வலைஞன் அண்ணா இதே மாதிரி சொன்னதை எடுத்து இணையுங்களேன் பார்ப்போம். நானும் அவர் சொன்ன கருத்தையே கொண்டிருக்கிறேன் என்றால் மகிழ்ச்சியான விடயம்.

எழுதுவதை அமைதியாக இருந்து வாசிக்கவேண்டும். அதன் பின் பொறுமையாக யோசிக்கவேண்டும். அதன் பின் கருத்துக்களை எழுதவேண்டும். :D

  • தொடங்கியவர்

ஊகங்களை வைத்துக் கொண்டு நான் எந்த முடிவுகளுக்கும் வரவில்லையே? "யாருக்குத் தெரியும்" என்ற கேள்வியுடன் தானே முடித்திருக்கிறேன்.

ஊகங்களை கூறிவிட்டு யாருக்கு தெரியும் என்று போட்டா அப்ப சரி என்று கூறுகிறீர்களா அப்ப எனி அதையே நானும் பின்பற்றுகிறேன்.............. :P

நீங்கள் ஏற்றுக்கொள்வில்லையென்றால் நான் என்ன செய்யமுடியும். ஆனால் ஊகம், சந்தேகம் என்று இரண்டு சொற்கள் தமிழில் உள்ளன என்பதை புரிந்துகொள்ளுதல் நல்லது. கணிதத்தில் கூட விடையை ஊகித்தல் என்பது இருக்கிறது. ஆனால், அந்த ஊகத்தை பரீட்சைத் தாளில் எழுதினால்

கேள்வி1: என்னென்ன விடயங்கள் ஊகத்தின் அடிப்படையில் நடந்துகொண்டிருக்கின்றன?

கேள்வி2: ஊகங்களின் அடிப்படையில் என்ன விடயங்களை உள்வாங்கிக்கொள்ளலாம்?

நான் ஏற்றுகொள்ளாவிட்டால் நீங்கள் ஒன்றும் செய்யவேண்டிய அவசியமில்லை,ஊகம்,சந்தேகம் என இரு சொற்கள் இருகின்றதை எனக்கு சொல்லி தந்த உங்களுக்கு பலகோடி நன்றிகள் :D ஆனால் ஊகதிற்கும் அதனுடன் நீங்க கூறிய சந்தேகதிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று நினைகிறேன்.............கணிதத்தில் ஊகம் என்று இருகிறது அதை பரிட்சை தாளில் எழுதினால் பிழை அதையே ஒரு பொருளியல் பரிட்சையில் வரும் பல் தேர்வு வினாவிற்கு ஊகித்தல் மூலம் போட்டு சித்தியடையவும் முடியுமல்லவா.......... :P

என்ன அண்ணா ஊகத்தின் அடிபடையில் என்ன நடந்து கொன்டிருகின்றது என்று சிம்பிளா கேட்டு போட்டீங்க....

1)ஒரு வாணிபத்தை எடுத்து கொண்டா நீண்டநாளிள் இந்த துறை எவ்வாறு நிலைத்திருகிற போகிறது என்பது ஊகம் தான்..........

2)நாட்டில் பொருளாதாரவளர்ச்சி இன்னும் 10 ஆண்டுகளின் பின் இந்தளவு என்று கணிபீடு செய்வதும் ஊகம் தான்........

3)ஏன் அமெரிக்கா புலனாய்வுதுறை மோப்பம் பிடித்து செல்வது ஊகத்தின் அடிபடையில் தான் ஆனால் கடைசியாக சில நல்ல முடிவுகளையும் பெற்றார்கள் என்று கூறலாம்......

ஊகங்களிள் அடிபடையில் உள்வாங்கி கொள்ளும் விடயங்கள்...........

1)நாட்டின் பொருளாதாரம் இன்னும் 10 வருடதிற்கு சீராக பேணபடும் என்பதை முன்கூட்டியே அறியலாம்.........

2)பங்கு சந்தையில் பங்குகளின் ஏற்றதாழ்வுகளை கணகிலிட்டு பங்காளார்கள் அதில் முதலீடுவதும் ஒரு ஊகம் தான்...........

3)எதிர்காலத்தில் நடைபெற போகும் நிகழ்வுகளை எதிர்வுகூறுவது ஊகம் தான்........

"இதைத் தான் நானும் சொல்கிறேன்" என்பது இப்போது நிகழ்வது தானே? ஏற்கனவே நான் சொன்னதாகச் சொல்லவில்லையே. பிறகெப்படி "நீங்க சொன்ன மாதிரி தெரியவில்லை" என்று சொல்வீர்கள்?

இதை தான் நானும் சொல்கிறேன் என்றா ஏற்கனவே என்னிடம் சொல்லி இருந்தால் தானே இதை நான் சொன்னேன் என்ற வார்த்தையை பிரயோகிக்கலாம் இல்லாவிடில் அந்த வார்த்தையை பிரயோகிப்பது அவ்வளவு நல்லது அல்ல!! :D

வலைஞன் அண்ணா தங்களுக்கும் அண்ணணோ மிகவும் ஒரு நல்ல அண்ணா கேட்டதாக சொல்லிவிடுங்கோ!! :P

தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அதற்கேற்ப பொறுப்புணர்வுடனேயே நாமும் நடந்துகொள்ளமுடியும்.

அவர் இந்த கூறிய இந்த கருத்து நான் சொன்ன கருத்துடன் ஒத்து போய் இருந்தது...........அதை தாக் குறிபிட்டு இருந்தேன் இருவரும் ஒரே கருத்தை கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி உங்களுடன் நானும் ஒணைந்து கொள்கிறேன்....... :P

எழுதுவதை அமைதியாக இருந்து வாசிக்கவேண்டும். அதன் பின் பொறுமையாக யோசிக்கவேண்டும். அதன் பின் கருத்துக்களை எழுதவேண்டும்.

எழுதுவதை அமைதியாக இருந்து வாசிப்பது முடியாத காரியம்..........எழுதுவது எனக்கு சரியா இருப்பதானல் தானே எழுதுகிறென் அதானால் பொறுமையாக இருந்து வாசிப்பது இல்லை...........அது தான் கருத்துகளை இட்டுவிடுவேன்...தங்களை மாதிரி அறிவாளிகள் எது பிழை என்பதனை சுட்டிகாட்டுவார்கள் தானே.........எனக்காக இது கூட செய்யமாட்டீங்களோ அண்ணா!!! :P

  • தொடங்கியவர்

நானும் நிர்வாகத்திற்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளேன்.எனினும் நாங்கள் ஒழுங்கான கருத்துக்களையும், தரமான படைப்புக்களையும் இங்கு படைக்கின்றோமா என்பதில் தான் சந்தேகம். நிர்வாகத்தினரும் தங்கள் தனிப்பட்ட சிரமங்களின் மத்தியிலும் யாழ்களத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.எனவே அந்த நிர்வாகத்தினருக்கு நாம் என்றுமே கடமைப்பட்டவர்கள்.எங்கும் எதிலும் பிழை பிடிப்பது சுலபம்.

கோபுரத்தின்ரை அழகை கிட்ட நிண்டு பாத்தால் ஒரு நாளும் தெரியாது பாருங்கோ அதுசரி டேய் யமுனன்(செல்லமாய்)உங்கை சிட்னி முருகன் கோயிலிலை சூரன்போரும் நடக்கிறதோ? ஏனெண்டால் அது வேறை நெருங்கிக்கொண்டு வரூதெல்லே! :D

கு.சா தாத்தா!!

நீங்களும் எதிராகவா வாக்களித்து இருகிறீங்க உங்க சேவைக்கு மிக்க நன்றி.........தரமான படைப்புகள்,ஒழுங்கான படைப்புகள் படைக்கிறோமோ என்பது பிரச்சினை இல்லை ஆனா படைக்கிறது தான் முக்கியம் :P ..............நல்லா இருக்கே இந்த டயலக்கும்.......தாத்தா சொல்கிற மாதிரி நிர்வாகதிற்கு கடமைபட்டிருகிறோம் அவர்களிற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் சில நேரங்களில் பல வேலை பளு படிப்பு என்பவற்றிற்கிடையே எழுதும் ஆக்கங்களை அப்புறபடுத்துவது உடனே பொறுப்பது கொஞ்சம் கடினம் தானே தாத்தா :) .........அதுவும் நான் பேபி அதற்காக ஆக்கம் எழுதினது நானோ என்று கேட்க கூடாது நான் தானே மக்கள் பிரதிநிதி :lol: .........எப்படி இருக்கிறது தாத்தா பட்டம்.........பிழை பிடிப்பது இரண்டுபக்கமும் சுலபம் தாத்தா அதை மறந்து போயிட்டீங்க!! :)

கோபுரத்தை அழகை நின்று பார்க்காம உட்கார்ந்து பார்த்தாலோ தெரியும் தாத்தா எனக்கு இது தெரியாம போச்சு...........இப்ப நான் பஞ் சொல்லுறன் கோபுரதிற்குல்ல இருப்பதால தான் சிலைக்கு மதிப்பு வெளியால வந்தா அதுவும் கல்லு தான்......இளைஞன் அண்ணா உந்த டயலக் எப்படி இருக்கு............. :P .

என்ன தாத்தா செல்லமாய் வேற கூப்பிடுறீங்க...........ஆமாம் தாத்தா சூரன் போர் எல்லாம் நடக்கிறது ஏன் தாத்தா நீங்களும் வரபோறீங்களா......யார் வராட்டியும் நான் கண்டிப்பா போவேன் ஏன் என்றா பார்க்கிற இடம் எல்லாம் கலர் கலராக இருக்கும் தாத்தா :P .....தாத்தா அது நெருங்கிறதிற்கும் இந்த மாட்டருக்கும் என்ன சம்மந்தம்.............தாத்தா சிட்னி வாறீங்களோ........ :D

தாத்தா சூரன் அதில எத்தனையோ கெட்டப்பில வருவார்........ஆனா எல்லா கெட்டபிலையும் முருகன் போட்டிடுவார்............ :)

பி.கு- இளைஞன் அண்ணா உங்களுக்கு இந்த கதை தெரியுமோ நீங்கள் தானே இந்துமததின் மீது தீவிர பக்தர் அது தானே கேட்டேன் வேறோன்றும் இல்லை........

Edited by Jamuna

ஊகங்களை கூறிவிட்டு யாருக்கு தெரியும் என்று போட்டா அப்ப சரி என்று கூறுகிறீர்களா அப்ப எனி அதையே நானும் பின்பற்றுகிறேன்.

ஒருவர் சொல்வதை எதுவித ஆய்வும், விளக்கமும் இல்லாமல் அப்படியே பின்பற்றத் துணிகிற உங்கள் அறியாமையை மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் ஊகதிற்கும் அதனுடன் நீங்க கூறிய சந்தேகதிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று நினைகிறேன்

அப்பாடா. இப்பயாவது விளங்கியிருக்கு. வாழ்த்துக்கள்.

ஒரு பொருளியல் பரிட்சையில் வரும் பல் தேர்வு வினாவிற்கு ஊகித்தல் மூலம் போட்டு சித்தியடையவும் முடியுமல்லவா

ஊகம் பிழையாக இருந்தால் எப்படி சித்தியடைவீர்கள்? ஊகம் சரியாகத்தான் இருக்கும் என்று எப்படி தீர்மானிப்பீர்கள்? ஆக, ஊகத்தின் அடிப்படையில் தான் உங்கள் வாழ்க்கையே நகர்கிறது? மிகவும் நல்ல விசயம்.

1)ஒரு வாணிபத்தை எடுத்து கொண்டா நீண்டநாளிள் இந்த துறை எவ்வாறு நிலைத்திருகிற போகிறது என்பது ஊகம் தான்..........

2)நாட்டில் பொருளாதாரவளர்ச்சி இன்னும் 10 ஆண்டுகளின் பின் இந்தளவு என்று கணிபீடு செய்வதும் ஊகம் தான்........

3)ஏன் அமெரிக்கா புலனாய்வுதுறை மோப்பம் பிடித்து செல்வது ஊகத்தின் அடிபடையில் தான் ஆனால் கடைசியாக சில நல்ல முடிவுகளையும் பெற்றார்கள் என்று கூறலாம்......

மிக நன்றாக வாணிபம், பொருளாதாரம், புலனாய்வு ஆகியவற்றை புரிந்து வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எனக்கு கண்ணீரே வந்துவிடும் போல உள்ளது. அப்படியொரு சந்தோசம், பெருமிதம்.

3)எதிர்காலத்தில் நடைபெற போகும் நிகழ்வுகளை எதிர்வுகூறுவது ஊகம் தான்.

தமிழீழம் மலரப் போகிறது என்பதும் ஊகம் போல? :) ஊகம் என்றால் என்ன என்பதில் இப்போது எனக்கு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஊகம் என்றால் என்ன?

இதை தான் நானும் சொல்கிறேன் என்றா ஏற்கனவே என்னிடம் சொல்லி இருந்தால் தானே இதை நான் சொன்னேன் என்ற வார்த்தையை பிரயோகிக்கலாம் இல்லாவிடில் அந்த வார்த்தையை பிரயோகிப்பது அவ்வளவு நல்லது அல்ல!!

"இதைத் தான் நானும் சொன்னேன்" என்றால் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்று பொருள். இறந்தகாலம்!

"இதைத் தான் நானும் சொல்வேன்" என்றால் இனிச் சொல்லப்போகிறேன் என்று பொருள். எதிர்காலம்!

"இதைத் தான் நானும் சொல்கிறேன்" என்றால் இப்போது சொல்கிறேன் என்று பொருள். நிகழ்காலம்!

அப்படியில்லையா? சிலவேளை படித்த தமிழ் எனக்கு மறந்துபோட்டுதோ தெரியவில்லை. :(

வலைஞன் அண்ணா தங்களுக்கும் அண்ணணோ மிகவும் ஒரு நல்ல அண்ணா கேட்டதாக சொல்லிவிடுங்கோ!!

வலைஞன் அண்ணாக்கு நீங்களே தனிமடல் போட்டு சுகம் கேளுங்களேன். (நிர்வாகத்தினர் இன்னும் தூங்குவது மிகவும் மகி்ழ்ச்சியளிக்கிறது <_< )

எழுதுவதை அமைதியாக இருந்து வாசிப்பது முடியாத காரியம்

எழுதுவதை அமைதியாக இருந்து வாசிப்பது முடியவில்லை என்றால், தொடர்ந்து கருத்தாடுவதிலும் பயனில்லை. ஏனென்றால் ஒரு விடயம் சரியாக உள்வாங்கப்பட்டா கருத்தாடலை செய்ய அல்லது தொடர முடியும். சரியான முறையில் உள்வாங்காத ஒரு விடயம் பற்றி மேலோட்டமாக எழுதுவது அல்லது கதைப்பது என்பது வீண் விதண்டாவாதமே. நாம் இறக்கும் வரை இதைத் தொடரலாம். ஆனால், எந்த தீர்வுக்கும் வராது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளத் தான் முடியும். உதாரணமாக புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு என்று தெரிந்தும், தொடர்ந்தும் புகைப்பிடித்து சுகமனுபவிப்பது (?) போல். யார் முடிப்பது என்பதில் தான் சிக்கல் என்றால், நீங்களே முடித்து வைக்கலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் எழுதிய அதாவது நான் எழுதிய சிட்னி கோசிப் 29 நிர்வகத்தால் எடுக்கபட்டதை இட்டு யம்முபேபி இந்த தலையங்கத்தை போட்டிருக்கா,இந்த தலையங்கத்தில் வாக்கு போட்ட வாக்காள பெருமக்களிற்கும் தலையங்கத்தை தொடங்கிய ஜம்மு பேபிக்கும் நன்றிகள்.

ஜனநாயகத்தில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை இருந்தும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து வாக்கு போட்ட உங்களிற்கு மீண்டும் ஒரு முறை நன்றிகளும் சரணங்களும்,

சிட்னி கோசிப்29 தேசியத்திற்கு பாத்திப்பு ஏற்படும் என்று ஒரு நபர் கூறியதால் அது நீக்கபட்டதாக நிர்வாகம் பதில் அளித்தது,எவ்வளவோ வேலை பளுவிற்கு மத்தியிலும் நிர்வாகத்தினர் தேசியத்தின் பால் இவ்வளவு விழிப்புணர்வுடன் தற்போது உள்ளனர் என்று நினைக்கும் போது உண்மையாகவே சந்தோசமாக உள்ளது ஏன் எனில் ஒரு வருடதிற்கு முதல் இதே யாழில் தேசியதிற்கு எதிராக பல கருத்துகளை வேண்டும் என்றே உருவாக்கி அதை விவாதித்து போன பல சம்பவங்கள் உண்டு,இதனால் புகழடைந்த மேதாவிகளும் உண்டு.

தற்போது விழிபடைந்து புலத்தில் தமிழ் சமுதாயத்தில் நடைபெற்ற விடயம் தேசியத்தை பாதிக்கும் என்று உடனடியாகவே தூக்கிய நிர்வாகதிற்கு நன்றிகள்,தனிமடலிலும் அறிய தந்த நிர்வாகதிற்கும் நன்றிகள்.

புலத்தி பொழுதுபோகிற்காக கிறுக்கும் புத்தனின் எழுத்தால் அல்லது கருத்தால் ஆலமரம் போல் விழுது விட்டு விருட்சமாக தலைத்து நிற்கும் எமது போராட்டம் ஆட்டம் காண போவதில்லை,ஊர் பாசையில் சொல்ல போனால் காகம் திட்டி மாடு சாகுமா??ஆனால் புத்தன் எந்தவிதத்திலும் தேசியதிற்கு எதிராக கருத்தை வைத்ததும் இல்லை இனி மேலும் வைக்கபோவதும் இல்லை......

கோபுரத்தை அழகை நின்று பார்க்காம உட்கார்ந்து பார்த்தாலோ தெரியும் தாத்தா எனக்கு இது தெரியாம போச்சு...........இப்ப நான் பஞ் சொல்லுறன் கோபுரதிற்குல்ல இருப்பதால தான் சிலைக்கு மதிப்பு வெளியால வந்தா அதுவும் கல்லு தான்......இளைஞன் அண்ணா உந்த டயலக் எப்படி இருக்கு.............

"கோயிலுக்குள் இருப்பதால் தான் சிலைக்கு மதிப்பு, வெளியால் வந்தால் அதுவும் கல்லுத் தான்" என்று வரவேண்டும். :)

"கோயிலுக்குள் இருந்தாலும் சிலைக்கு மதிப்புத்தான். ஆலமரத்துக்கு கீழ இருந்தாலும் சிலைக்கு மதிப்புத்தான். தெருவோரத்தில் இருந்தாலும் அந்த சிலைக்கு மதிப்புத்தான்" அந்த சிலைக்கென்று ஒரு தனித்துவம் இருக்கும் வரையிலும், சிலை எங்கிருந்தாலும் மதிப்புத்தான். <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.