Jump to content

ஆணுறுப்பு முறிவு: விறைக்கும் போது நிகழும் இந்த பிரச்னைக்கு சிகிச்சைகள் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
விறைத்திருக்கும்போது நிகழும் பாலுறுப்பு முறிவு: இதற்கான சிகிச்சைகள் என்ன? எப்படித் தவிர்ப்பது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலுறுப்பு முறிவுகளைக் கண்டறிய பொதுவான முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதை அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியலாம். ஆனால், அதைச் செய்வதற்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவை.

ஆகவே, இந்த முறை சரியானது தானா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் உள்ளன. பாலுறுப்பு முறிவு நிகழ்ந்தால், அதற்கு அறுவை சிகிச்சை செய்வது நல்ல தீர்வு. சிடி ஸ்கேன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய சரியான இடத்தைக் கண்டறிய முடியும்.

பாலுறுப்பு முறிவு ஏற்பட்டவுடன் உடனடியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசிய டாக்டர் காத்ரே, “இதுபோல் ஏதாவது நடந்தால், பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். முறிவு காணப்பட்டவுடன், சிறுநீரக மருத்துவரிடம் செல்வதற்கு முன்பாக, காயமடைந்த பகுதியில் ஐஸ் பயன்படுத்த வேண்டும்.”

மேலும், காயமடைந்த பாலுறுப்பைச் சுற்றி கட்டு போட்டுக் கொள்வதும் சிறந்த முதலுதவி எனக் கூறும் டாக்டர் காத்ரே, “வீட்டில் சானிட்டரி பேட் அல்லது நாப்கின் இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டும். அதோடு, தலைகீழாக நிற்பதும் நல்ல முதலுதவியாக இருக்கும். அதற்குப் பிறகு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதுதான் முழு தீர்வாக இருக்கும்,” என்கிறார்.

அறுவை சிகிச்சையும் அதற்குப் பிறகும்

பாலுறுப்பு முறிவு காரணமாகப் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்தக் காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலத்திற்கு அதன் விளைவுகளை அனுபவிக்கிறார்கள். சிலருக்கு அந்த விளைவுகள் குறுகிய காலத்திற்கே இருப்பதுண்டு.

பாலுறுப்பு முறிவுக்குப் பிறகு உடலுறவின்போது பலர் மனச்சோர்வு மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இந்தக் காயத்தால் ஏற்படும் பயம் உடலுறவு கொள்ளும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பலருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

சிறு கட்டிகள், பாலுறுப்பின் வடிவத்தில் மாற்றம், விறைப்புத்தன்மையின்மை, வலி, வீக்கம், சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள் ஏற்படும்.

விறைத்திருக்கும்போது நிகழும் பாலுறுப்பு முறிவு: இதற்கான சிகிச்சைகள் என்ன? எப்படித் தவிர்ப்பது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலுறுப்பின் வடிவம் மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதைப் போலவே, விறைப்பின்போது வலி ஏற்படுவது, பாலுறுப்பின் நீளம் முனைவிடக் குறைவது போன்றவையும் நடக்கலாம்.

ஆகவே, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக, நோயாளிகளோடு மருத்துவர்கள் இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் விவாதிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நோயாளிகளிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுநீர் நீக்கக் குழாய் மிகவும் முக்கியமானது என்று நோயாளிகளுக்குச் சொல்ல வேண்டும்.

அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு அதை வைத்திருக்க அறிவுறுத்துவது கட்டாயம். கூடவே, காயமடைந்த இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். அதேவேளையில், காயத்தைச் சுற்றியிருக்கும் முடிகளை அகற்றுவதற்கு முயலக்கூடாது.

https://www.bbc.com/tamil/articles/ceqgy0ew434o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறிக்கிற அளவுக்கு எல்லாம் ஏன் நீங்கள் அதை அவ்வளவு அகோரமாக பாவிக்கின்றீர்கள்?

இந்த ஆணுறுப்பு முறிவுக்கு ஈடான ஆங்கில பதம் என்ன என்று யாராவது கூறுங்கள் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

முறிக்கிற அளவுக்கு எல்லாம் ஏன் நீங்கள் அதை அவ்வளவு அகோரமாக பாவிக்கின்றீர்கள்?

இந்த ஆணுறுப்பு முறிவுக்கு ஈடான ஆங்கில பதம் என்ன என்று யாராவது கூறுங்கள் பார்க்கலாம். 

🤣 penile fracture or  penis fracture.

இது ஒரு அரிதான விடயம் என்றாலும் நடக்கக் கூடியது. அனேகமாக பெண் இணை மேலேயும், ஆண் கீழேயுமாக உறவு கொள்ளும் போது ஒத்திசைவு பிசகினால் இது நடக்கும். முறிவு என்பதால் எலும்பு முறிவு போல இருக்காது.

ஆணுறுப்பின் பெரும்பகுதியை ஆட்கொண்டிருக்கும் corpus cavernosum என்ற பகுதியினுள் இரத்தம் நிரம்புவதால் தான் ஆணுறுப்பு விறைப்படைகிறது. இந்த பஞ்சு போன்ற கண்ணறையான அமைப்பை ஒரு மெல்லிய, ஆனால் உறுதியான மென்சவ்வு (tunica albugninea) மூடியிருக்கும். அந்த சவ்வு உடைவதையே ஆணுறுப்பு முறிவென்பர். இதனால் இரத்தம் வெளிவந்து சவ்வுக்கும் தோலுக்குமிடையே கட்டியாகி விடும். வலியும் எக்கச்சக்கமாக இருக்கும். சத்திர சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டியிருக்கும்!  

  • Like 6
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

🤣 penile fracture or  penis fracture.

இது ஒரு அரிதான விடயம் என்றாலும் நடக்கக் கூடியது. அனேகமாக பெண் இணை மேலேயும், ஆண் கீழேயுமாக உறவு கொள்ளும் போது ஒத்திசைவு பிசகினால் இது நடக்கும். முறிவு என்பதால் எலும்பு முறிவு போல இருக்காது.

ஆணுறுப்பின் பெரும்பகுதியை ஆட்கொண்டிருக்கும் corpus cavernosum என்ற பகுதியினுள் இரத்தம் நிரம்புவதால் தான் ஆணுறுப்பு விறைப்படைகிறது. இந்த பஞ்சு போன்ற கண்ணறையான அமைப்பை ஒரு மெல்லிய, ஆனால் உறுதியான மென்சவ்வு (tunica albugninea) மூடியிருக்கும். அந்த சவ்வு உடைவதையே ஆணுறுப்பு முறிவென்பர். இதனால் இரத்தம் வெளிவந்து சவ்வுக்கும் தோலுக்குமிடையே கட்டியாகி விடும். வலியும் எக்கச்சக்கமாக இருக்கும். சத்திர சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டியிருக்கும்!  

உண்மையில் நீங்க‌ள் ம‌ருத்துவ‌ டாக்ட‌ரா வ‌ர‌ வேண்டிய‌வ‌ர்................நான் க‌வ‌னித்த‌ ம‌ட்டில் ப‌ல‌த‌ ச‌ரியா எழுதுறீங்க‌ள் வாழ்த்துக்க‌ள் அண்ணா.............🙏🙏🙏

என‌க்கும் ம‌ருந்துவ‌ம் ப‌ற்றி கொஞ்ச‌ம் தெரியும் உங்க‌ள் அள‌வுக்கு இல்லை...........கொடிய‌ நோய் என்னை தாக்கின‌து😢😔.............அதில் இருந்து ம‌ருத்துவ‌ர்க‌ளுட‌ன் க‌தைத்த‌தில் இருந்து ஒரு சில‌தை தெரிந்து கொண்டேன்.................

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.