Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவிக்கு ஊதியம் கொடுக்கலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கேள்விதங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூட unpaid work என்று பெண்கள் சொல்கிறார்களேஇது ஏன்நீங்கள் இதை ஏற்கிறீர்களாஇந்த unpaid என்கிற வார்த்தை ஆண்களை வம்புக்கு இழுக்கிறது.

பதில்: ஆம்பெண்ணியவாதிகள் சொல்வது சரி தான்குடும்பம் என்பது ஒரு தொழிற்சாலைஅங்கு பெண்கள் உழைக்கிறார்கள்அதற்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லைமனைவியாக இருப்பதற்கான ஊதியம் கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கை அரசின் முன் இருக்கிறதுஆனால் அரசு இதை சட்டமாக்காமல் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் நான் அதை முழுமையாக ஆதரிப்பேன்.

அதே நேரம் எனக்கு சில நிபந்தனைகள் உண்டு:

1. இதை ஒரு உழைப்பாக அன்றி கடமையாகவும்புனிதமான சேவையாகவும் கண்டுஇதற்கு ஆண்கள் தம் மனசாட்சிக்கு உகந்து ஊதியம் அளிக்க வேண்டும் என்று அரசு கூறக் கூடாதுஇதை ஒரு பணியாக வரையறுக்க வேண்டும்இது மிக முக்கியம்.

2. வீட்டிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவுமனைவியின் உழைப்பால் யாரெல்லாம் பயனடைவார்கள்என்னென்ன பணிகள் குடும்பத்தை நடத்துவதில் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும், அவற்றில் எவையெல்லாம் செய்ய ஒரு மனைவி தயாராக உள்ளார் என்பதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்இந்த பட்டியலை ஒரு ஆவணமாக அரசு நிறுவனம் ஒன்றிற்கு மனைவி சமர்ப்பித்து தன் ஊதியத்தை கோரும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். நியாயமாக கணவனின் ஊதியம் அல்லது வியாபாரம் என்றால் மாத வருமானத்தில் இருந்து 30-35% இருக்க வேண்டும்.

3. உணவை சமைக்கஉணவை விளம்பதுணி துவைத்து காயப்போட, வீட்டை சுத்தம் பண்ணகுழந்தையை பார்த்துக்கொள்ளகுழந்தைக்கு உணவளிக்கஆடை அணிவிக்ககுளிப்பாட்ட ஒரு மனைவி தயாரா என்பதை அறிந்து அதற்கு ஏற்ப ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும். இன்னின்ன பணிக்கு இவ்வளவு சம்பளம் என வரையறுக்க வேண்டும்.

4. நியாயமாக செக்ஸையும் இந்த பட்டியலில் கொண்டு வர வேண்டும். ஆனால் நம்முடையது ஒரு ஒழுக்கவாத சமூகம்இதைப் படிக்கிறவர்கள் என்னை செருப்பால் அடிப்பார்கள் என்பதால் வேண்டாம்.

5. ஆனால் கணவனிடம் பிரியமாக இருப்பதை நிச்சயமாக உழைப்பாக வகைப்படுத்த வேண்டும்ஏனென்றால் (எல்லா கணவர்களுக்கும் இது இன்று கிடைப்பதில்லைஏனென்றால் (பிரியம் இன்று taken for granted ஆக இருப்பதனால்சட்டமும் இதைப் பொருட்படுத்தாதாலே விவாகரத்தின் போது கூட பிரியமின்மையை காரணமாகக் காட்ட முடிவதில்லைகத்துவதுமிரட்டுவது உள்ளிட்டு மனரீதியாக கொடுமைப்படுத்துவது என போலி காரணங்களை நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டி இருக்கிறதுஇன்னொரு விசயம் (இன்றைய கடுமையான வேலைச் சூழலில்நேர நெருக்கடியில் அன்பு காட்டுவதற்கு தனியாக நேரம் ஒதுக்கி அக்கறை காட்டாவிட்டால் உழைக்காவிட்டால் அது நடக்காதுஅன்பு இல்லாமல் போவதும் ஒரு துயரம்ஒரு இழப்புதானேஆகஅன்பு செலுத்த ஒரு மனைவி தயாரா இல்லையா என்பதை அறிந்து அதற்கு எவ்வளவு ஊதியம் என்பதையும் வரையறுக்க வேண்டும்.

6. அடுத்து முக்கியமாக குழந்தைப் பேறு. (ஒரு பெண் குழந்தைப் பேறில்வளர்ப்பில் பங்கேற்றால் அதையும் உழைப்பாக கருதி ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும்பின்னர் மணவிலக்கின் போது ஒரு ஆண் தன் குழந்தையை வளர்ப்பதற்கான உரிமையை இதை வைத்து கோர வேண்டும்அதை சட்டம் அனுமதிக்க வேண்டும்ஏனென்றால் அவன் ஊதியம் செலுத்தாவிடில் அவள் குழந்தையைப் பெற்றிருக்கவோ வளர்த்திருக்கவோ மாட்டாள் தானே? அவ்விடத்தில் சட்டம் தாய்மையை மிகைப்படுத்தி புனிதப்படுத்தாமல் அதை ஒரு உழைப்பாக கருதுவதே நியாயமாகவும் இருக்கும்ஆணுக்கும் தன் தந்தைமையை ஒரு உரிமையாக முன்வைக்க உதவும். (பத்து மாசம் சுமந்து பெறுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணுவதை நிறுத்த உதவும்அதற்கு ஒரு கட்டணத்தை கொடுத்து விட வேண்டும்.

7. அடுத்து மிக முக்கியமாககுழந்தை வளர்ப்புகுழந்தையைப் பார்த்துக் கொள்ளவும்உணவளித்து குளிப்பாட்டி வளர்க்கவும் வேறு ஆட்கள் இருந்தால் இதற்கு ஊதியம் இல்லை.

8. இப்போது மிக முக்கியமான நிபந்தனை வருகிறது - சம்பளம் கொடுப்பதால் இது ஒரு வேலை என்பதால் கணவன் ஒரு வேலை கொடுக்கிற முதலாளி ஆகிறான்இதை சட்டம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்நடைமுறையில் உள்ள விதிகள் குடும்பத்துக்கும் பொருந்தவேண்டும்வருடத்திற்கு ஒரு முறை performance review meeting நடத்தி மனைவியால் தன் பணியை கணவனுக்கு திருப்தியளிக்கும் விதம் பண்ண முடிந்திருக்கிறதா என விசாரித்தறியஉறுதிப்படுத்த வேண்டும்இல்லையென்றால் அவர் தன் பணியையும் ஊதியத்தையும் இழக்கிறார் (ஆனால் மனைவியின் அந்தஸ்து போவதில்லை.) குறைகள் இருந்தால் அவற்றை களைவதாக அவர் உத்தரவாதம் அளித்து வேலையில் தொடரலாம்கணவன் தன் எதிர்கால எதிர்பார்ப்புகளை முன்வைக்கலாம்இதை ஆவணப்படுத்தி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

9. எந்த வேலையிலும் உள்ளதைப் போல மனைவிக்கு விடுப்பெடுக்க உரிமை உண்டுஇத்தனை நாட்களுக்கு இன்னின்ன விடுப்புகள் என்பதை ஆவணப்படுத்தி மனைவியின் ஒப்புதல் பெற வேண்டும்விடுப்பை முன்கூடியே சொல்லி கணவனின் ஒப்புதலுடன் பெற வேண்டும்எந்த வேலையிலும் உள்ளதைப் போல வேலை நீக்கம் செய்யும் ஒரு மாதத்திற்கு முன் கணவன்  அவரிடம் தெரிவிக்க வேண்டும்.

10. இதில் பாலின பாகுபாடு கூடாது மனைவி வேலைக்கு செல்கிறவர் எனும் பட்சத்தில்கணவன் வேலைக்கு சென்றாலும் இல்லாவிடினும் இந்த பணிகளை அவன் எடுத்து நடத்த முன்வந்தால் அதையும் மேற்சொன்ன நடைமுறைகளின் படி ஆவணப்படுத்திஅவனுக்கு ஊதியம் வழங்க வேண்டும்அங்கு மனைவி முதலாளியாகவும்கணவன் ஊழியனும் ஆவான்.

இப்படி ஊதியத்தை அரசு முறைப்படுத்தி ஆவணப்படுத்தாமல் பொத்தாம் பொதுவாக ஒரு தொகையை சொல்லி அதை ஊதியமாக கொடுக்க சொன்னால் அது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்முக்கியமாக இன்று தமிழில் ஆண் பெண்ணியவாதிகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் பெண் பெண்ணியவாதிகளை விட அதிகம்இவர்கள் கதி அதோகதியாகும்அது மட்டுமல்ல ஆண்கள் திருமண அமைப்பில் இருந்தே தப்பி ஓடிவிடுவார்கள்அல்லது சம்பளத்தில் இருந்து 25% என குறைந்த பட்ச தொகையை ஊதியமாக அறிவித்தால் அது வீட்டு செலவிக்கான பணத்தில் ஒரு முக்கியமான பகுதியை எடுத்துவிடும் என்பதால் அப்பணமும் மனைவியிடம் இருந்து பறிக்கப்படும்மனைவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கணவர்களுக்கு அது பெரும் தொந்தரவாகும்அவர்கள் கொடுக்க மறுப்பார்கள்மனைவி நீதிமன்றத்துக்கு சென்றால் அது குடும்பத்தை உடைக்கும்ஆக மனைவிகள் தமக்கு அளிக்கப்படும் பணத்தை திரும்பக் கொடுப்பார்கள். இப்படி இந்த சம்பளம் ஒரு சடங்காக மட்டும் சுருங்கும். 10% என்றால் அது இப்பெண்களுக்கு நியாயமான ஊதியமாக இருக்காது. வங்கிக்கடன் போன்ற சிக்கல்களில் உள்ள குடும்பங்களில் 10% கூட பெரியஓட்டையை ஏற்படுத்தும்மனைவி மீது கசப்பு அதிகமாகும்ஆனால் இதற்கு ஒரு விருப்பத்தேர்வை தந்துஅதை ஒழுங்காக ஆவணப்படுத்தினால் அது கணவனுக்கோ மனைவிக்கோ நெருக்கடியாக மாறாது. அதனாலே மேற்சொன்ன முறைமையை பரிந்துரைக்கிறேன்.  

Posted 1 week ago by ஆர். அபிலாஷ்

Edited by ஏராளன்
பந்தி ஒழுங்கு

  • கருத்துக்கள உறவுகள்

"மனைவிக்கு ஊத்திக் கொடுக்கலாமா..?" என கண்ணாடி போடாமல் தலைப்பை வாசித்துவிட்டு மலைத்தேன். 😜

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அபிலாஷ், விடிஞ்சிட்டுது எழும்பி பல் தேய்த்து விட்டு குளியுங்கோ........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவை பாதிக்கு மேல் வாசிக்க மனமில்லை, ஏனெனில் குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத அல்லது தெரிந்தும்  வாழ  வக்கற்ற ஒரு மனநலமில்லாத நோயாளியின் புலம்பல்களாகவே அனைத்தும் உள்ளன. 

அபிலாஷ் ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையெனில் இப்படி புலம்பியே  பரலோகம் செல்ல வேண்டியதுதான்.

இம்மாதிரி “குப்பைகளை” பதியும் ஏறாளனுக்கு என் கண்டனங்கள்! 😜😎😡

  • கருத்துக்கள உறவுகள்

கணவன்,  மனைவி வீட்டு வேலைகளில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையுடன் நடந்து கொள்ள வேண்டும்.  இருவருமே சிறந்த நண்பர்கள் என்ற ரீதியில், இணையாக  பரஸ்பரம் சம மரியாதையுடன் குடும்ப விடயங்களில் நடந்து கொள்ள வேண்டும் 

இது  ஒருவர் மீது மற்றவர் கொண்ட அன்பின் வெளிப்பாடாக இருப்பதே  நல்லதொரு குடும்பம் பலகலைக்கழகமாக இருக்கும்.  

அதை விடுத்து,  வீட்டை தொழிற்சாலையாக பார்ப்பது என்பது அபத்தம்.   ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது ஒவ்வொருவர் மனதிலும்  ஏற்படும் அந்த அளப்பரிய மகிழ்சசி  காணாமல் போய்விடும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

இந்த பதிவை பாதிக்கு மேல் வாசிக்க மனமில்லை, ஏனெனில் குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத அல்லது தெரிந்தும்  வாழ  வக்கற்ற ஒரு மனநலமில்லாத நோயாளியின் புலம்பல்களாகவே அனைத்தும் உள்ளன. 

அபிலாஷ் ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையெனில் இப்படி புலம்பியே  பரலோகம் செல்ல வேண்டியதுதான்.

இம்மாதிரி “குப்பைகளை” பதியும் ஏறாளனுக்கு என் கண்டனங்கள்! 😜😎😡

அவர் ஒரு ஆசிரியர். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது, அந்த கடுப்பை இவ்வாறு எழுத்தில் எழுதுகிறாரோ தெரியவில்லை.

ஆனாலும் எந்த வருமானமும் இல்லாமல் குடும்பத்திற்காக ஓடாக தேயும் பெண்ணுக்கு ஏதேனும் வருவாய்க்கு வழிபண்ணவேணும் என்பது சரியானதே என்பது எனது எண்ணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.