Jump to content

Recommended Posts

  • 2 weeks later...
Posted

 

*குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் மதுபிரியர்கள்..*
அதேபோல்,
சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர்
குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர்
குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர்
குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர்
எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர்- மது பங்க்கர் 
குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர்
வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர்
உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர்
குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர்
துணைக் ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங்கர்
இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் - மதுநோன்பர்
வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் - மதுவெம்பர்
எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் - மதுதெம்பர்
குடித்து நிறைய உளறுபவர் - மது ரம்பர்
மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் - மதுபம்பர்
குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மதுதர்மர்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nunavilan said:

 

*குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் மதுபிரியர்கள்..*
அதேபோல்,
சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர்
குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர்
குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர்
குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர்
எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர்- மது பங்க்கர் 
குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர்
வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர்
உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர்
குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர்
துணைக் ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங்கர்
இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் - மதுநோன்பர்
வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் - மதுவெம்பர்
எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் - மதுதெம்பர்
குடித்து நிறைய உளறுபவர் - மது ரம்பர்
மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் - மதுபம்பர்
குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மதுதர்மர்.

குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர்.

குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர்.

குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர்.

குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது டான்சர்.

குடித்துவிட்டு வாந்தி எடுப்பவர் - மது வாமிட்டர். 

😁  😁

  • Haha 4
  • 4 months later...
Posted

கொழும்புப் பகுதி மணப்பெண் ஒருவருக்கு கிராமப்புறத்து மாப்பிள்ளை ஒருவரை பேசித் தீர்ப்பதற்காக கலியாண புரோக்கர் மணப் பெண்ணின் தகப்பனை மாப்பிள்ளையின் வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவாகியது. மாப்பிள்ளையின் தொழில் மாணிக்க ( Diamand ) வியாபாரம் எனவும் வயது 20 எனவும், கார் (Car) இருப்பதாகவும் புரோக்கர் கூறினார். காரின் இலக்கம் என்ன எனக் கேட்டபோது தான் இன்னும் காரைக் காணவில்லை எங்காவது போயிருக்கும் என்றார். நீண்ட நாட்களாக இப்படியே சொல்லிச் சொல்லி புரோக்கர் வீட்டு செலவுக்குப் பணம் வாங்கினார்.
   திடீரென ஒருநாள், ஆட்டோ ஒன்றில் வந்த மணப்பெண்ணின் தகப்பன் புரோக்கரை ஆட்டோவினுள் இழுத்துப் போட்டுக்கொண்டு மாப்பிள்ளை வீட்டை இன்று காட்ட வேண்டும் என்றார். கலியானம் பேசிப் பேசியே வழிச் செலவுக்குப் பணம் தந்து கடனாளியாகிவிட்டேன் என்று குறை கூறினார். கலங்கிய கண்களுடன் சென்ற புரோக்கர் சிறியதொரு வீட்டைக்காட்டி இதுதான் மாப்பிள்ளையின் வீடு என்றார்.
          மாப்பிள்ளையின் தாய் முன்னே வந்தார். இருவரையும் உட்காரச் சொன்னார். பழவர்க்கங்களும், பலகாரங்களும், குளிர்பானமும் இருவரினதும் பசியைப் போக்கின. ” மாப்பிள்ளக்கு கார் ஒன்று இருப்பதாகச் சொன்னீர்களே! அதை இன்று பார்க்க வேண்டும்” இது மணப்பெண்ணின் தகப்பன்.  புரோக்கர் அந்தக் காரைக் காட்டும்படி மாப்பிள்ளையின் தாயைக் கெஞ்சினார்.
        வீட்டு அறையினுள் சென்ற மாப்பிள்ளையின் தாய் தும்புத்தடி ஒன்றை எடுத்து வருவதை கண்டு ” மாப்பிள்ளையின் தாய்க்கு பைத்தியமா?” எனக் கேட்ட்டுக்கொண்டு மாமா தலைதெறிக்க ஓடினார். ஒருவாறு மாமாவை மீண்டும் அழத்துவந்தபோது மாப்பிள்ளையின் தாய் கையில் இருந்த தும்புத்தடியை கட்டிலின் கீழ் போட்டு இழுத்தபோது விளையாட்டு கார் ஒன்று வெளியே வந்தது. 
      புரோக்கரின் முகம் வியர்த்தது. மாப்பிள்ளையின் தாய் ” எனது மகனுக்கு 18 வருடங்களுக்கு முன்னர் வாங்கிக் கொடுத்த கார்” என்றார். புரோக்கர் மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்தார்.

  • Haha 1
  • 3 weeks later...
Posted

இவ தான் A.R.ரஹ்மானுக்கே ரியூன் சொல்லிக்கொடுத்தவ. கோட்டா பெருமிதம்.

245007515_1610087449323288_2592802746789

  • 3 months later...
Posted

 

*திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்*
😭😭😭
👇👇👇👇
"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு
*முதல் மந்திரி*
உங்க மாமனார்தான். அவர்தான் .
*பாதுகாப்புத் துறை,*
*வெளியுறவுத்துறை* எல்லாம் கவனிச்சுக்குவார்.
"இங்க நான்தான்
*துணை முதல்வர்.*
*உள்துறை,*
*நிதித்துறை,*
*ஜவுளித்துறை*
எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.
"என் மகன் அதாவது
உன் வீட்டுக்காரன்தான்
*தொழில் துறை,*
*போக்குவரத்துத் துறை,*
*வீட்டு வசதித்துறை*
எல்லாம் பாத்துக்குவான்.
"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள்
*செயலாக்கத் துறையையும்,*
*விளையாட்டுத் துறையையும்*
பாத்துக்குவா.
*நீ எதைப் பாத்துக்கறே சொல்லு...???*
உனக்கு
*உணவுத்துறை,*
*சுகாதாரத்துறை,*
*குடும்ப நலத்துறை*
எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்;
*சரிதானா...???*
சிரித்துக்கொண்டே
*மருமகள் சொன்னாள்*
"ஐயோ அத்தை;
பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு...???
நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க.
*நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்*
அப்பதான் அடிக்கடி வெளிநடப்பு செய்ய முடியும்...
*கொய்யால யாருகிட்ட*
😂😜🤣😁
May be a cartoon
 
 
  • Like 2
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of outdoors

தலைப்புக்கு பொருத்தமான கடற்குதிரை........!  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’குஜராத்தில் கிட்னி கல்லுக்கு பதிலாக கிட்னியை எடுத்த டாக்டர்- செய்தி JUDE THAT DOCTOR தம்ழு கொய்யால கிட்னி இருந்தா தானேடா கல்லு வரும்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாய்களின் பாசம் .......!   🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’(PEN CHILLI GARLIC BARLIC’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’ஃபேஸ்புக்லதான் ஆளாளுக்கு உருட்டிட்டு இருக்காங்கனு பார்த்தா ஃபேஸ்புக் ஓனரே அங்க உருட்டிட்டுதான்யா இருக்கான்....!!! ....!!!’

பேஸ்புக் ஓனரே உருட்டிக்கொண்டிருக்கிறார் ........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’SORRY SIR. No BAGGAGE ALLOWED! @successpictures ተተ Jnl 土 THE REALITY OF LIFE’

  • Like 1
Posted

 

 
273386836_4576342505827255_6232002760307
தன் வீட்டுக்கு செல்லும் மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு...
நான் எங்க அம்மா வீட்டுக்கு
குழந்தைகளோட போறேன்.
நான் திரும்பி வர 10 நாளாகும்.
நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை
சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன்.
பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க இருந்து கண்டு எடுத்தேன்.
மூக்குக்கண்ணாடியை அதன் பாக்சில் வைக்கவும். போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
வேலைக்காரிக்கு சம்பளம் கொடுத்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம்.
காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு டெய்லி
அவங்ககிட்ட கேட்டு வழிய வேண்டாம்.
நம்ம பேப்பர்காரன் வேற.
சமையல் கட்டு பக்கம் போக வேணாம்.
ஸிங்க்கை காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன்.
சாமி படத்துக்கு விளக்கேத்தி ரெண்டு ஸ்லோகம் சொல்லுங்க.
வாக்கிங் போறப்போ டீ ஷர்ட் போட்டுக்கோங்க. ஜிப்பா வேணாம்.
உங்க ஜிப்பா கலர்ல எனக்கு Free size சுடிதார் டாப்ஸ் இருக்கு. அன்னைக்கு தெரியாம நீங்க போட்டு போனதைப் பார்த்து அனிதா சிரிச்சா.
Food coupon க்ரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு... பீரோவ உருட்ட வேணாம்.
ரெண்டு Securityக்கும் நூறு நூறு ரூபா
கொடுத்திருக்கேன். நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க மாட்டாங்க.
பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன். அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம வெளில போய் சாப்பிடுங்க.
உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும் குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு
Uncomfortable லா இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க.
அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு காயப்போடுங்க.
தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு பல் தேய்காதீங்க...
A.M. மா... P.M. மா... Confirm பண்ணிட்டு
பால்கனிக்கு வாங்க.
உங்க medical report பர்ஃபெக்ட்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை.
என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே முடிஞ்சிடுச்சு. நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு வழிய வேணாம்.
பத்து நாள் wi-fi cut password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
அப்றம் என் தோழிகள் எல்லாமே Out of station.
கட்டக் கடேசியா ஒண்ணு.
ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம...
இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்.
என்னா ஒரு வில்லத்தனம்.
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

என் பேத்தி 

 

Edited by suvy
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் பேத்தி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

என் பேத்தி 

 

தாத்தாவும் பேத்தியும் நல்ல கொண்டாடடம் போல . மூளைக்கு வேலை தரும் விளையாட்டு. ஆங்கிலப்   புலமையுடன்  . 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un dessin animé de debout

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de plein air

இந்த பிரபஞ்சத்தில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது. அதனை உணருங்கள்! அதனை கிரகியுங்கள்! அதனிடம் திறந்திடுங்கள்!
முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவே பறவைகள் கூடுகளை கட்டத் தொடங்குகின்றன. ஆனால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பறவை செய்து கொண்டிருக்கிறது. யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள். அல்லது ஏதோ ஒன்று அதற்கு உணர்த்துகிறது. அதனைஇயற்கை என்று அழையுங்கள்.
கடவுள் என்ற வார்த்தை ஒரு வேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதனை இயற்கை என்று அழையுங்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஏதுவுமில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி! பிரபஞ்சத்தில் நடப்பவை அனைத்தும் கவனிக்கப்
படுகின்றன. பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை! எதற்காக இந்த சந்தேகம்? எதற்காக இந்த பரபரப்பு? பொறுமையாக இருங்கள் ! காத்திருங்கள்! நம்புங்கள்! உணருங்கள்! பார்வைக்குப் புலப்படாத சக்தி ஒன்று உங்களைச் சுற்றிலும் வியாபித்திருக்கிறது. அந்த சக்தியை கடவுள் என்றாலும் சரி! இயற்கை என்றாலும் சரி! ஆனால், ஒன்று மனிதனை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. அதை இன்று உணராமல் போகலாம். ஆனால் என்றாவது ஒருநாள் உணர்ந்தே தீர்வீர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de plein air et texte qui dit ’350 Million Years in One Picture’




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.