Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு மீது அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் - நடந்தது என்ன?

திருச்சி சிவா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.ஐ. காலனியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், இதில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் பெயர் இல்லையெனக் கூறப்படுகிறது. இதனால், சிவாவின் ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்தனர்.

 

இந்த நிகழ்ச்சிக்குப் பங்கேற்பதற்காக சிவாவின் வீடு உள்ள நியூ ராஜா காலனி வழியாக அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட பிரமுகர்களின் வாகனங்கள் சென்றுள்ளன. சிவாவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாத கோபத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் வாகனம் அவ்வழியாகச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டினர்.

இருந்தபோதும் அமைச்சர் உள்ளிட்டோரின் கார்கள் அதனைக் கடந்து சென்றவிட்டன. திறப்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சிவாவின் வீட்டிற்கு வந்த சிலர் அங்கிருந்த காரைத் தாக்கினர். அதற்குப் பிறகு, சிவாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

@KN_NEHRU

பட மூலாதாரம்,@KN_NEHRU/TWITTER

இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பத்துப் பேரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், அங்கு வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கினர்.

இதையடுத்து காவல்நிலையம் முன்பாக பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அமைச்சர் கே.என். நேரு தரப்பிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தரப்பிற்கும் நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cl46l4ezrx3o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"சொல்வதற்கு நிறைய உள்ளன, ஆனால் பேசும் மனநிலையில் இல்லை" - திருச்சி சிவா எம்.பி

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு
6 மணி நேரங்களுக்கு முன்னர்

திருச்சியில் தமது சொந்த வீடு, திமுகவைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச மறுத்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "பேச நிறைய உள்ளன, ஆனால் அதை பேசும் மனநிலையில் நான் இல்லை" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினருள் ஒரு பிரிவினர் அமைச்சர் நேருவின் அணியிலும் மற்றொரு தரப்பினர் திருச்சி சிவா தரப்பிலும் இருந்து கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள புதிய இறகு மைதானத்தை திறப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கட்சியினர் மைதானத்திற்கு சென்றனர். ஆனால் அந்த மைதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தவர் எம்பி சிவா என்பதால் அவர் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு கார் முன்பாக கருப்புக்கொடி காட்டினர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்பி வந்த திமுகவினர் சிவாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அனைவரையும் தாக்கியதுடன், அவர்கள் வீடு புகுந்து கார், பைக் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

 

இதையடுத்து கருப்பு கொடியை காட்டிய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது திமுகவின் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ் மற்றும் சிலர் அங்கு தாக்குதல் நடத்தியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 

இதைத்தொடர்நது திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளரும்,மாமன்ற உறுப்பினருமான முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளரரும் மாமன்ற உறுப்பினருமான ராமதாஸ் மற்றும் திருப்பதி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது திருச்சி சிவா அவரது வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்த சிலர் கல் வீச்சில் காயம் அடைந்தனர். இந்த நிலையில், ஊர் திரும்பிய திருச்சி சிவா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு

அப்போது பேசிய அவர்,” நாடாளுமன்ற குழுவுடன் பஹ்ரைன் சென்றிருந்த நேரத்தில் என் வீட்டை சிலர் தாக்கிய தகவலை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் வாயிலாகவும் அறிந்தேன்.

நடந்த சம்பவம் குறித்து எதையும் பேசும் மனநிலையில் நான் இல்லை. கடந்த காலங்களில் கூட நான் இத்தகைய பல சோதனைகளை சந்தித்தேன். அப்போது கூட யாரிடமும் நான் புகார் சொன்னதில்லை. தனி மனித இயக்கத்தை விட கட்சி பெரியது என கருதுபவன் நான்.

நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் எனது குடும்பத்தினரும் மன வேதனை அடைந்துள்ளனர். வீட்டில் வேலை செய்து வந்த 65 வயது பெண்மணி கூட காயம் அடைந்துள்ளார். நான் இதுவரை மனச்சோர்வில் இருப்பதாக சொன்னதில்லை. ஆனால் இப்போது அப்படித்தான் இருக்கிறேன்” என்றார் திருச்சி சிவா.

https://www.bbc.com/tamil/articles/crgqm7qm8y7o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

’மனவேதனையில் இருக்கிறேன்’ - திருச்சி சிவா எம்.பி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

’மனவேதனையில் இருக்கிறேன்’ - திருச்சி சிவா எம்.பி.

இதுக்கு வந்த 28 பின்னூட்டத்தையும் வாசித்தீர்களா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

இதுக்கு வந்த 28 பின்னூட்டத்தையும் வாசித்தீர்களா? 🤣

இன்னும் வாசிக்கவில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதென்னப்பா, திமுகவுக்குள் நடக்கும் பிரச்சனை குறித்து நடுநிலை ஊடகங்கள் சொல்லும் விசயங்களை இணைத்தாலும் தூக்குபடுது.

பார்த்துத்தான் தூக்குகினமோ, அல்லது பார்க்காமலே, டபெக்கெண்டு தூக்குகினமோ தெரியவில்லை.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎂🎊
    • ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  15 DEC, 2024 | 09:49 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் உள்ளிட்டவர்களை இன்று (15 ) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201373 இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் - ஜனாதிபதியிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு Published By: VISHNU   15 DEC, 2024 | 10:01 PM இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201375
    • நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு மெதுவாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் இரு தினங்களில் அது நாட்டின் வடபகுதிக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கைகள் கடல் பகுதிகளுக்கு, • காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்க கூடும் என்பதுடன் அந்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும். அந்த கடல் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். • காங்கசன்துறையிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது  50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்பதால் சில சமயங்களில் சீற்றமாக காணப்படும். பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மீனவ மற்றும் கடல்வாழ் சமூகத்தினர் இந்த அமைப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலப்பரப்பைப் பொறுத்தவரை, நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த அமைப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197351
    • இனி இந்தப் பூமிக்கு சிறிது ஒய்வு குடுத்துவிட்டு அணுகுண்டு சோதனைகளை செவ்வாயில் நடத்தி கெடுத்து விடலாம் . .........!  😁 நன்றி ஏராளன் ...........! 
    • ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதங்கள் குவிப்பு; பலமான நிலையில் அவுஸ்திரேலியா 15 DEC, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது. ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது. உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 241 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனான அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்தது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் குவித்த சூட்டுடன் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். தனது 112ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் குவித்த 33ஆவது சதம் இதுவாகும். அத்தடன் 18 மாதங்களின் பின்னர் அவர் குவித்த முதலாவது சதமாகும். அவரை விட மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 152 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் சதம் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார். மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த இரண்டாவது 5 விக்கெட் குவியல் இது என்பதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவுசெய்த 12ஆவது 5 விக்கெட் குவியலாகும். https://www.virakesari.lk/article/201358
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.