Jump to content

காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்


Recommended Posts

கப்பல் சேவை தாமதம். விமானச் சேவை தாமதம். சேது சமுத்திரத் திட்டம் தாமதம்.

சீனாவை விட்டால் ஒரு மாதத்தில் செய்து முடிப்பார்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய-இலங்கை படகுச் சேவைக்கு விடுதலைப் புலிகளின் கப்பலைப் பயன்படுத்தவும் தயார் – நிமல்

இந்தியா அனுமதித்தால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பெறுவதற்குத் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவுக்கும் (பாண்டிச்சேரி) காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) எந்த நேரத்திலும் படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்தியா அனுமதி வழங்காததால்தான் இந்தச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2011ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு கூட்டுக் குழு உள்ளது.

“இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் எங்களுக்கு படகு சேவை வேண்டும். KKS துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம். இந்தியாவுடன் எங்களுக்கு கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் படகு சேவையை மட்டுமே தொடங்க முடியும் என சொன்னார்கள். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, வேறு எந்த துறைமுகத்திலிருந்தும் அல்ல” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவுடனான பாதுகாப்பு மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த திட்டத்திற்கு யார் ஒப்புதல் அளித்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்,” என்றார்.

“படகு நடத்துநர்கள் இந்திய அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு, தங்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் உண்மையான தன்மையை நிரூபித்து, நாகப்பட்டினத்திலிருந்து படகு தொடங்குவதற்கு இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும். இந்திய அரசாங்கம் பச்சை கொடி காட்டிய தருணத்திலிருந்து, எந்தவொரு கப்பலையும் அல்லது ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்கு நாங்கள் அனுமதி வழங்குவோம். என்றார்.

படகு நடத்துனர்களை இந்தியாவிற்கு வந்து படகு நடத்துனர்களாக அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

படகு நடத்துனர்களிடம் இருந்து பதினைந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார். இந்தியாவில் சில தெரிவு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/262346

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா – இலங்கை பயணிகள் படகு சேவை இன்னும் 06 மாதங்களில்

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நிலையைப் பொறுத்து கால அளவு மாறலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/264880

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230725-072421.jpg

கடல் வழி பாதையில் அடைப்பு இருப்பதால் தோண்டி தூர்வார நீண்ட நாட்கள் ஆகும் போல கிடக்கு ..😊

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை -  நாகபட்டினம் கப்பல் சேவை விரைவில் - யாழ் இந்திய துணைத்தூதுவர்

Published By: VISHNU

02 AUG, 2023 | 08:58 PM
image
 

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. 

அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161514

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம்

india-sri-lanka-flag.jpg

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் வேலு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை, காங்கேசன்துறைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, நாகப்பட்டினத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை நேற்று(20) நேரில் சென்று பார்வையிட்டார்.

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து 60 கடல் மைல்கள் தொலைவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையிலான விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையை தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India), விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்த பயணியர் கப்பல் சேவை வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு ஒக்டோபர் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாசாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/273941

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

02-10-750x375.jpg

நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது.

அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1380121

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - இலங்கை கப்பல் சேவை இம்மாதம் மீண்டும் ஆரம்பம்

Published By: DIGITAL DESK 3

01 MAY, 2024 | 05:04 PM
image

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

இந்திய - இலங்கை கப்பல் சேவையை  மீண்டும் ஆரம்பிப்பதற்கான பல முயற்சிகள் சீரற்ற கடல் நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா மற்றும்  இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘செரியாபாணி’ எனப்படும் பயணிகள் கப்பல் சேவையின் முதல் பயணத்தில்  கிட்டத்தட்ட 50 பயணிகள் வருகை தந்தனர்.

ஷிப்பிங் கோர்ப்பரேஷன் ஓப் இந்தியாவுக்கு (எஸ்.சி.ஐ.) சொந்தமான 35 மீட்டர் நீளமும், 9.6 மீட்டர் அகலமும் கொண்ட ‘செரியாபாணி’ என்ற அதிவேகக் கப்பல் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு நான்கு மணித்தியாலங்கள் வரை பயணமாகும் இக்கப்பலில் ஒரு சுற்றுப் பயணத்திற்கு இலங்கை ரூபாய் 26,750 மற்றும் இரண்டு சுற்றுப் பயணங்களுக்கு 53,500 கட்டணம் அறவிடப்படும்.

https://www.virakesari.lk/article/182418

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.