Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேறு கண்டத்து பிறவி....

Featured Replies

மதமதை மதமதை நீயிழிப்பாய்

மடமையில் இன்றதை நீ செய்வாய்

ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய்

உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்...

அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்

ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க

வேறென்ன வேறென்ன நீயுரைப்பாய்...

இரும்பது மீதிலே ரயிலோடும்

இல்லென இல்லென நீயுரைத்தால்

உன்னிலை உன்னிலை என்னவென்போம்

ஊழ்வினையதுவே மேலே என்போம்...

பார்வையிழந்தவர் குருடராவார்- நீ

பார்வையுள்ள குருடனானாய்

எத்திசை எத்திசை பார்த்திடினும்

எல்லாம் உனக்கு இருளதுவே...

மெய்யது பொருளது என்னதுவோ

மெய்யென நீயானால் சொல்லிடுவாய்

வேரது இல்லா மரமேயென்றால்- நீ

வேறு கண்டத்து பிறவியாவாய்...

Edited by vanni mainthan

  • Replies 95
  • Views 10.5k
  • Created
  • Last Reply

சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாமா ஐயா?

"அறிவினையதிலே" என்றால் என்ன பொருள்?

"இல்லென இல்லென" என்றால் என்ன பொருள்?

"உள்கணக்க" என்றால் என்ன பொருள்?

மெய்யது பொருளது என்னதுவோ

மெய்யென நீயானால் சொல்லிடுவாய்

வேரது இல்லா மரமேயென்றால்- நீ

வேறு கண்டத்து பிறவியாவாய்...

எல்லாக் கண்டத்திலயும் மரத்துக்கு வேர் இருக்குத்தானே ஐயா? அப்படியென்றால் ஏன் தாங்கள் வேறு கண்டத்து பிறவியென்றீர்கள் என்பதைத் தெளிவுபடுத்திச் சொல்வீர்களா?

விளக்கமற்ற இந்த சிறியோனுக்கு தாங்கள் விளக்கம் தந்தால், என் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும். செய்வீர்களா ஐயா?

வன்னிமைந்தன் அண்ணா கவிதையை பற்றி நாளைக்கு சொல்லுறன் பாவம் ஒரு சிஷ்யன் எவ்வளவு ஏங்குகிறான் அறிவுபசியை தீர்க்க கொஞ்சம் கவனம் ஏன் என்று நான் சொல்ல தேவையில்லை எதற்கும் பார்த்து அறிவுபசியை தீர்த்து வையுங்கோ............ :P :P :lol::lol:

  • தொடங்கியவர்

சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாமா ஐயா?

"அறிவினையதிலே" என்றால் என்ன பொருள்?

"இல்லென இல்லென" என்றால் என்ன பொருள்?

"உள்கணக்க" என்றால் என்ன பொருள்?

எல்லாக் கண்டத்திலயும் மரத்துக்கு வேர் இருக்குத்தானே ஐயா? அப்படியென்றால் ஏன் தாங்கள் வேறு கண்டத்து பிறவியென்றீர்கள் என்பதைத் தெளிவுபடுத்திச் சொல்வீர்களா?

விளக்கமற்ற இந்த சிறியோனுக்கு தாங்கள் விளக்கம் தந்தால், என் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும். செய்வீர்களா ஐயா?

போதனை பொழிந்திட வந்தவரே

பொருளது உமக்கு புரியலயோ..??

ஆதியந்தம் மறந்ததினால்

ஜயனே உனக்கு இன்னிலையோ...??

குன்றிலலமர்ந்த குழந்தையெல்லாம்

குமரனெனவே எண்ணவிட்டால்

விந்தையுலகில் என் செய்வோம்

விளையாட்டெனவே விட்டிடுவோம்..

புட்டி பாலை ஊட்டும் பிள்ளை

முட்டி பாலை அது கேட்டால்

பிள்ளையவரை கடிவாயா- இல்லை

பிரியமாய் அவரை அணைப்பாயா...??

விடையது விடையது நீ புரிந்தால்

விடையதை விடையதை நீயளிப்பாய்..

அதுவரை உன்னிடை விடைபெற்றேன்

அன்புடன உனையே வரவேற்பேன்...

:D:D:D:D:lol::lol:

ஐயா நாம் கேட்ட வினாக்களுக்கு விளக்கமளிக்காது தாங்கள் குழந்தை, குமரன், குன்று, பால் என்று சொன்னால் மேலும் நான் குழப்பமடைந்துவிடுவேன். தளைகூர்ந்து அடியேனின் வினாக்களுக்கு விடையளிக்கவும் ஐயா. :lol:

வன்னிமைந்தன்!

உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் திறமை யாருக்கும் வராது.

ஒரு பத்துச் சொற்களை வைத்துக் கொண்டு, அந்தச் சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு, ஒரு கருத்தையே திரும்பி திரும்பி எழுதி, அதையும் நெடுக்காக எழுதி, கவிதை என்று தருகின்ற திறமை(!) யாருக்கு வரும்?

நான் உங்கள் கவிதையை வைத்தே சொல்கிறேன்.

கடவுள் என்கின்ற ஒன்று இருக்க முடியாது. அதுவும் நிச்சயமாக தமிழைப் போற்றுகின்ற கடவுள் இருக்கவே முடியாது.

இந்து மதம் சொல்வது போன்று தமிழ் தெரியாத கடவுள்கள்தான் இருக்கின்றன.

சைவம் சொல்வது போன்ற சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த கடவுள்கள் இல்லை.

அப்படி இருந்தால், நீங்கள் செய்கின்ற தமிழ் கொலைகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.

உங்களுடைய கவிதைகளின்(!) மூலம் தமிழை போற்றுகின்ற கடவுள்கள் இல்லை என்று நிரூபித்ததற்கு நன்றி

(ஐயோ!!!!...இதற்கும் ஒரு கவிதை(!) வரப் போகிறது)

ஐரோப்பிய பெரியாரிஸ்ற் சபேசன்... தமிழ் தெரியாது என்று வன்னி மைந்தனை நீங்கள் நக்கல் செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எல்லோரும் உங்களைப் போன்று தமிழ் அறிவாளிகளாக இருக்க முடியாது. ஆதலால் பிழைகள் விடும்போது திருத்தி உற்சாகப்படுத்தவேண்டுமேயொழ

இளைஞன்!

பிழைகளை திருத்த முயன்ற உங்களுக்கு கிடைத்த பதில் என்ன?

இங்கே கலைஞன் வழிந்து வழிந்து "வன்னிமைந்தன்! உங்கள கவிதைகள் நன்றாக இருக்கின்றன, அற்புதம், ஆஹா! ஓஹோ!, ஆனால் எழுத்துப் பிழை விடுகிறீர்களே" என்று நயமாகக் கேட்டார். அவருக்காவது ஒழுங்கான பதில் கிடைத்ததா?

இல்லையே! கலைஞனுக்கும் பதில் ஒரு கவிதைதான்(!).

வன்னிமைந்தன் திருந்துவதற்கு தயாராக இல்லாதபோது என்ன செய்வது?

எழுத்துப் பிழை விடுவதையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் தமிழ் சொற்களை தான் நினைத்தபடி வளைப்பதற்கு இவர் யார்? வன்னிமைந்தன் எழுதுகின்ற சில சொற்கள் உலகின் எந்த மூலையிலும் இல்லாத சொற்கள்.

"பலு நோய்" என்ற சொல்லை இவர் பயன்படுத்தினார்.

அது ஒன்று பல்லு நோயாக இருக்க வேண்டும், அல்லது பால் நோயாக இருக்க வேண்டும்.

பல் என்ற சொல்லை பல்லு என்று வட்டார மொழிகளில் பேசுவது வழக்கம்.

ஆனால் பால்நோய் என்பதை பாலுநோய் என்று எங்குமே பேசுவதில்லை.

அத்தோடு விட்டாரா? "இலுநோய்" என்றும் ஒன்றை எழுதினார். இது என்ன கர்மம் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒவ்வொரு கவிதையிலும் எதுகைமோனை வரவேண்டும் என்பதற்காக இவர் தமிழை உடைக்கிறார். யாராவது தமிழ் பற்றாளர்கள் இவருடைய கவிதைகளைப் பார்த்தால் கண்ணீர் வடிப்பார்கள்.

வன்னிமைந்தன் தமிழை கொலை செய்கிறார் என்பதற்கு அவருடைய கவிதைகளே சான்று.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிமைந்தன் தமிழை கொலை செய்கிறார் என்பதற்கு அவருடைய கவிதைகளே சான்று.

அவர் கையில் அகப்பட்டால் தமிழுக்குண்டான கதிதான் உங்களுக்கும். எனவே அவதானமாக இருங்கள்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மதமதை மதமதை நீயிழிப்பாய்

மடமையில் இன்றதை நீ செய்வாய்

ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய்

உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்...

(மமதை கொண்டு மதத்தை அழிப்பதாய் மொழிவது உங்கள் மீது நீங்களே உமிழ்வது போன்றது என்கிறார் வன்னி மைந்தன்)

அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்

ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க

வேறென்ன வேறென்ன நீயுரைப்பாய்...

( அறிவுரை என்று ஏதோதோ சொல்கிறீர்கள்.. இறுதில் நீங்களே அதனை உணர மறக்கிறீர்கள். அது உங்கள் ஊழ்வினையா என்று கேட்கிறார் வன்னி மைந்தன். - அடுத்தவரைப் பார்த்து அறிவுரை சொல்ல உங்களுக்கென்ன தகுதி என்பதுதான் பொருள் என்று நினைக்கிறேன். அப்படியா மைந்தன்.)

இரும்பது மீதிலே ரயிலோடும்

இல்லென இல்லென நீயுரைத்தால்

உன்னிலை உன்னிலை என்னவென்போம்

ஊழ்வினையதுவே மேலே என்போம்...

(உண்மையில் இதை நான் ரசித்தேன். இரும்பது மீதுதான் இரயில் ஓட முடியும் என்று கூறுபவர்களிடம் அப்படி இல்லை என்று மட்டும் உரைக்கிறீர்கள். அங்கு உங்கள் விளக்கத்தைத் தான் காணவில்லையே. இதுதான் உங்கள் நிலையா.. இந்த அர்த்தமற்ற உளறலின் விளைவை ஊழ்வினையிலும் கொடியது என்போம் எங்கிறார். அர்த்தமற்ற சொற்சோடினைகள்.. தெளிவைத் தரவில்லை எங்கிறார் போல் இருக்கிறது- உண்மைதான் பிராமணனை கொழுத்தடா என்பதும்.. கல்லுக்கு கல்லால் அடி என்பதும்... என்ன பயனோ..??!)

பார்வையிழந்தவர் குருடராவார்- நீ

பார்வையுள்ள குருடனானாய்

எத்திசை எத்திசை பார்த்திடினும்

எல்லாம் உனக்கு இருளதுவே...

(இதையும் ரசித்தேன். உண்மைகளைத் தேடும் அறிவிழந்து.. பார்வை இழந்தவரை விட கண்மூடிக் கொண்டு.. உங்கள் கருத்துக்களை அறிவற்ற இருள் சூழ்ந்த நிலையில் இருந்து சொல்கிறீர்கள் எங்கிறார். அதாவது உங்களின் கருத்துக்கள் தெளிவைத் தரக்கூடிய அளவுக்கு பலமானவை அல்ல என்பது அவர் கருத்து.)

மெய்யது பொருளது என்னதுவோ

மெய்யென நீயானால் சொல்லிடுவாய்

வேரது இல்லா மரமேயென்றால்- நீ

வேறு கண்டத்து பிறவியாவாய்...

(மெய்யை மெய்யெனச் சொல்லுங்கள். திரிபுகள் வேண்டாம். வேரில்லாத மரம் இருக்கிறது என்று சொல்வீர்கள் என்றால்.. நிச்சயம் நீங்கள் வேற்றுக் கண்டம் ( கிரகப்) பிறவிகள் என்பதாகத்தான் இருக்க வேண்டும். உண்மைதான்.. சில நீர்த்தாவரங்களை தவிர தாவரங்களுக்கு வேர்தான் முக்கியம். அதையே இல்லை என்பவர்கள் வேற்றுக்கிரக வாசிகளாக.. அல்லது சமுத்திரத்தில் வாழ்பவர்களாக இருக்கலாமோ எங்கின்ற ஐயம் வன்னி மைந்தனுக்கு..!)

சில சொற்பிழைகள் இருப்பினும் வன்னி மைந்தனின் கவி வரிகள் வெறும் அர்த்தமற்ற சொல்லாடல்கள் என்று கூறுவது நகைப்புக்கிடமானது. அவர் தான் சொல்ல வருவதை சொல்லிவிடுகிறார். ஆனால் புரிய வேண்டியவர்கள் மறுக்கிறார்கள் என்பதுதான் நிஜம் போல இருக்கிறது. :lol:

Edited by nedukkalapoovan

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

பாம்பின் கால் பாம்பறியும் :lol:

விளக்கத்துக்கு நன்றி. வன்னி மைந்தன் எவ்வளவு பிழைவிட்டு எழுதினாலும் அவர் என்ன சொல்வார் அல்லது சொல்லவருகிறார் என்பது விளங்கும் :D ஆனால் சில சொற்களை ஏன் பயன்படுத்தினார் அந்தச் சொற்களின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கவில்லை. அதனை அவர் விளங்கப்படுத்தியிருந்தால் அந்தச் சொற்களைத் திருத்து அவரது கவிதையை முழுமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அடம்பிடிக்கிறார். என்ன செய்ய :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

பாம்பின் கால் பாம்பறியும் :lol:

கருத்துக் களத்துக்கு அதன் கருத்து எல்லாம் பொன் கருத்து.

தமிழின் பொருள் தமிழறியும்.

இப்படிச் சொல்வதே சிறந்தது. நக்கல் நளினமற்ற அணுகுமுறையாக இருக்கும். :lol:

கருத்துக் களத்துக்கு அதன் கருத்து எல்லாம் பொன் கருத்து.

தமிழின் பொருள் தமிழறியும்.

இப்படிச் சொல்வதே சிறந்தது. நக்கல் நளினமற்ற அணுகுமுறையாக இருக்கும். :D

நக்கலுமில்ல நளினமுமில்ல. புதுமொழி சொல்லத் தெரியல அதான் பழமொழிய சொல்லிப்போட்டன். :D

கருத்தியல் தளத்தில் கிட்டக் கிட்ட இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். கருத்தியல் தளத்தில் தூரத் தூர இருப்பவர்கள் என்னதான் விளங்கினாலும் விளங்காத மாதிரி நடிப்பம். அதைத்தான் சொல்ல வந்தேன் :lol: கருத்துக்களத்துக்கு அதன் கருத்தெல்லாம் பொன் கருத்துத் தான். ஆனால் கருத்தாளர்களுக்கு? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நக்கலுமில்ல நளினமுமில்ல. புதுமொழி சொல்லத் தெரியல அதான் பழமொழிய சொல்லிப்போட்டன். :D

கருத்தியல் தளத்தில் கிட்டக் கிட்ட இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். கருத்தியல் தளத்தில் தூரத் தூர இருப்பவர்கள் என்னதான் விளங்கினாலும் விளங்காத மாதிரி நடிப்பம். அதைத்தான் சொல்ல வந்தேன் :lol: கருத்துக்களத்துக்கு அதன் கருத்தெல்லாம் பொன் கருத்துத் தான். ஆனால் கருத்தாளர்களுக்கு? :lol:

அதாலதான் அவையும் தூரத்தில வைச்சிட்டு நடிப்பை ரசிக்கினம் போல..! :D

கருத்துக்களத்துக்கு பொன் கருத்து.. சில... கருத்தாளர்களுக்கு வாத்து முட்டை..! :D

நெடுக்காலபோவான்!

நீங்கள் மேற்கொண்டிருக்கும் பணி மிக உயர்ந்தது. தமிழ்த் தாய் உங்களை வாழ்த்தட்டும்.

இந்தப் பணியை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

அப்படியே இந்த "பலு நோய், இலு நோய்" இவைகளுக்கும் விளக்கம் தந்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்

  • தொடங்கியவர்

சில சொற்பிழைகள் இருப்பினும் வன்னி மைந்தனின் கவி வரிகள் வெறும் அர்த்தமற்ற சொல்லாடல்கள் என்று கூறுவது நகைப்புக்கிடமானது. அவர் தான் சொல்ல வருவதை சொல்லிவிடுகிறார். ஆனால் புரிய வேண்டியவர்கள் மறுக்கிறார்கள் என்பதுதான் நிஜம் போல இருக்கிறது. :)

செந்தமிழ் செல்வனே

நெடுக்கால போவனே

அர்த்தங்கள் அர்த்தங்கள்

ஆயிரம் கொடுப்பினும்...

சிந்தை யிழந்தவர்

சிந்தையில் ஏறுமோ...??

சுடுகின்ற நெஞ்சதில்

சுடு தண்ணி வைக்கலாம்...

பாவம் பிள்ளாய்

பரவச மிழந்தார்

உடுக்கை அடித்தின்று

உருவை ஏற்றுங்கள்...

கிண்டல்கள் பொழிந்திட

கிளிபிள்ளை வந்தாரோ..??

ஆதி யந்தங்கள்

அதையின்று மறந்தாரோ...??

அச்சொட்டான கருத்தை பகிர்ந்த செந்தமிழ் செல்வன் நெ. போவானுக்கு எனது நன்றிகள்..

Edited by vanni mainthan

நெடுக்கால போவான்!

நீங்கள் வன்னிமைந்தனின் எழுத்துக்கள் குறித்து விளக்கம் தந்துள்ளீர்கள்.

அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்

அறிவுரை சொல்பவர்கள், இறுதியில் அந்த அறிவுரையை உணர மறுக்கிறார்கள் என்பது இதன் அர்த்தம் என்று சொல்கிறீர்கள். இப்படி ஒரு அர்த்தத்தை இதற்குள் எதைக் கொண்டு கண்டுபிடித்தீர்கள். இதைச் சற்று விரிவாக விளக்க முடியுமா?

வன்னிமைந்தன் நிறையச் சொற்களை அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்துகிறார் என்பது உங்களுக்கும் தெரியும்.

வன்னிமைந்தனின் கவிதை எதைச் சொல்ல வருகிறது என்று இங்கு எல்லோருக்கும் விளங்கும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் சில சொற்களும், தமிழில் இல்லாத சில சொற்களும் வருகின்ற பொழுதுதான், அதைப் பற்றி கேள்வி வருகிறது.

அடம்பிடிக்காமல் வன்னிமைந்தன் தன்னுடைய பக்கம் உள்ள தவறுகளை உணர வேண்டும்.

"வன்னிமைந்தனை எல்லோரும் வறுத்தெடுக்கிறார்களே, நானாவது துணையாக நிற்போம்" என்ற உங்களுடைய நல்ல எண்ணம் எனக்குப் புரிகிறது, நெடுக்காலபோவான்!

வேண்டுமென்றால் நான் சில காலத்திற்கு வன்னிமைந்தனின் கவிதைகள் பற்றிய விமர்சனத்தை வைப்பதை தவிர்த்துக் கொள்கிறேன்.

நீங்கள் அன்பான முறையில் வன்னிமைந்தனுக்கு அவர் கவிதையில் செய்கின்ற தவறுகளை சொல்லிக் கொடுங்கள்.

வன்னிமைந்தன் ஒரு சிறந்த கவிஞராக வந்தால், அது தமிழுக்கு நல்லதுதானே!

வேரது இல்லா மரமேயென்றால்- நீ

வேறு கண்டத்து பிறவியாவாய்...

ஐயா வன்னியின் மைந்தரே

வளர்பெரும் அறிவாற்றலே

பெய்யா மழையிலும் நின்றே

பொய்யாய் நனைந்திடும் குன்றே!

தங்கள் சிந்தைக்கு நானடிமை!

தங்கள் விந்தைக்கு நானடிமை!

அறிவிலா எந்தைக்கு பொருளருளி

அறிவுச் சந்தைக்கு வழியனுப்புவீராக! :lol:

நெடுக்ஸ்

"கண்டம்" என்பதற்கு கிரகம் என்று பொருள் கூறியுள்ளீர்கள். இது எங்கிருந்து வந்தது? கண்டம் என்பது கழுத்து எனவும் பெருநிலப் பரப்பு என்றும் பொருள்படும் எனவே இதுவரை நினைத்திருந்தேன். கிரகம் என எங்கிருந்து பெற்றீர்கள்?

"கண்டம்" என்பதை "கிரகம்" என வைத்து பாடிய ஏதாவது தமிழ்ப்பாடல்களோ அல்லது இலக்கிய பொருட்குறிப்போ இருக்கிறதா? அறியத்தரவும். தெரிந்துகொண்டால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ஈழத்திருமகன்... "உங்களுக்கு வன்னி மைந்தனின் கவிதையில் கண்டம் இருக்கிறது" என்று சொன்னால் அதற்கு இன்னொரு பொருளும் வரும் அல்லவா? நீரில் கண்டம், நெருப்பில் கண்டம் என்று சொல்வது ஆபத்து என்பதாகப் பொருள்படவே. ஆனால் கண்டம் என்பதற்கு கிரகம் என்று பொருள் இருப்பதாக நானும் அறியவில்லை. தமிழ் மொழி அகண்டு விரிந்து பல பொருட்களை உள்ளடக்கியது தானே. நமக்கேற்றாற் போல் வளைத்துத் திரித்துக் கொள்ளலாம். அதோட இது கவிதை வேறு. கவித்துவமாய் பொருள் கூறலாம். எதற்கும் கவனம் :lol:

  • தொடங்கியவர்

வேத மறையது காட்டின்

வேரை பிடுங்கிட நினைத்தால்

கொல்லர்கள் கூடியே வந்து- உனை

கொல்லாமல் விட்டிடுவாரோ..?

நானிலம் போற்றும் வேதம்- அதை

நாவால் இழித்தல் முறையோ..?

வேட்டையாடிட விலங்கு

இல்லென இங்கோடி வந்தாய்...??

தீட்டை கழித்தவர் மேலார்- நீ

தீட்டை குடித்த கீழாம்

வாந்தியெடுப்பதாலோ- எம்மில்

வாந்தியெடுக்க வந்தாய்...??

கட்டு கதைகளை காவி- யாரை

கட்டியடிக்க வந்தாய்..??

நீதி நெறியது ஒழுக

நாட்டிட வந்ததே மதமே...

தெய்வங்கள் செய்தவன் மனிதன்- அந்த

தெய்வங்கள் இழிப்பவன் மனிதன்

கூட்டியே கூட்டியே பார்த்தால்-அவர்

குப்பை மேட்டின் அறிவாளி...

மறையது கழன்ற குலமோ- இங்கேறி

பறையது அடிப்பது முறையோ...?

ஆதியந்தங்கள் மறந்த

அறிவிலி கூட்டமே நீவீர்...

சாதி மதங்களை மேலாய்

சந்தியில்இழிப்பவன் கீழான்

இத்தனை கீழாரிங்கு

பகுத்தறி உரைப்பது முறையோ...??

வட்டத்தில் நின்றது சுற்றி

வட்டத்தை நீயது அடித்தால்

எக்கரை எக்கரை போவாய்

எக்கரை நீதான் போவாய்...??

கறையது படிந்த ஆடை

கழுவுதல் இங்கது முறையே

அதுபோல நீயுமுந்தன்

அகமது கழுவுதல் முறையே...

நாடு நலமது செழிக்க

நன்மைகள் செய்பவன் கோமான்

ஏற்பதவனை முறையே- நாம்

ஏற்பதனை முறையே...

கள்ள நரியது கூட்டம்- பகுத்தறி

ஊளையில் இங்கது வந்தால்

தூக்கியவரை அடிக்கமால்

துன்பத்தை ஏற்பதோ நாமோ...??

கட்சிக்கு வாலது பிடிக்கும் -பிறர்

கட்சிக்கு வாலது பிடிக்கும்

கூட்டங்கள் பொருதிட வந்தால்

கூட்டு மாறதையெடுப்போம்- நாம்

கூட்டு மாறதையெடுப்போம்...

வேளான் பயிரை மேய- மாடு

வேலி பிரித்தது வந்தால்

கட்டி கையதை நிற்பாயா-இல்லை

கட்டிவைத்து உதைப்பாயா...?

கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளை பேச்சதுவே

கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளை வேண்டாமே

மனித வரலாறு ஓடியே

மனிதா மனிதா படிப்பாயே...

வெட்டு கிளியது என்றால்- நீ

வேட்டையாடிட வருவாய்- பகுத்தறி

பட்டை கழண்டு- நீ

பார்பணவாதம் மறப்பாய்..

முற்றிய ஞானியென்ற

முறுக்கதை நீயும் களைவாய்

பகுத்தறிவாள மனிதமென்ற

பக்குவமதை நீ கற்பாய்.....!!

B) B) B)

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

நெடுக்கால போவான்!

நீங்கள் வன்னிமைந்தனின் எழுத்துக்கள் குறித்து விளக்கம் தந்துள்ளீர்கள்.

அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்

அறிவுரை சொல்பவர்கள், இறுதியில் அந்த அறிவுரையை உணர மறுக்கிறார்கள் என்பது இதன் அர்த்தம் என்று சொல்கிறீர்கள். இப்படி ஒரு அர்த்தத்தை இதற்குள் எதைக் கொண்டு கண்டுபிடித்தீர்கள். இதைச் சற்று விரிவாக விளக்க முடியுமா?

வன்னிமைந்தன் நிறையச் சொற்களை அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்துகிறார் என்பது உங்களுக்கும் தெரியும்.

வன்னிமைந்தனின் கவிதை எதைச் சொல்ல வருகிறது என்று இங்கு எல்லோருக்கும் விளங்கும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் சில சொற்களும், தமிழில் இல்லாத சில சொற்களும் வருகின்ற பொழுதுதான், அதைப் பற்றி கேள்வி வருகிறது.

அடம்பிடிக்காமல் வன்னிமைந்தன் தன்னுடைய பக்கம் உள்ள தவறுகளை உணர வேண்டும்.

"வன்னிமைந்தனை எல்லோரும் வறுத்தெடுக்கிறார்களே, நானாவது துணையாக நிற்போம்" என்ற உங்களுடைய நல்ல எண்ணம் எனக்குப் புரிகிறது, நெடுக்காலபோவான்!

வேண்டுமென்றால் நான் சில காலத்திற்கு வன்னிமைந்தனின் கவிதைகள் பற்றிய விமர்சனத்தை வைப்பதை தவிர்த்துக் கொள்கிறேன்.

நீங்கள் அன்பான முறையில் வன்னிமைந்தனுக்கு அவர் கவிதையில் செய்கின்ற தவறுகளை சொல்லிக் கொடுங்கள்.

வன்னிமைந்தன் ஒரு சிறந்த கவிஞராக வந்தால், அது தமிழுக்கு நல்லதுதானே!

விமர்சனம் நீயெடுத்து வீசு- அது

கறை படிந்த தூசு

உன் புத்தி போச்சு

வறுமை கோடு

அதில் இருக்குமா

கவியந்த தேன்கூடு....???

:lol::lol::lol: :P :P

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

"கண்டம்" என்பதற்கு கிரகம் என்று பொருள் கூறியுள்ளீர்கள். இது எங்கிருந்து வந்தது? கண்டம் என்பது கழுத்து எனவும் பெருநிலப் பரப்பு என்றும் பொருள்படும் எனவே இதுவரை நினைத்திருந்தேன். கிரகம் என எங்கிருந்து பெற்றீர்கள்?

"கண்டம்" என்பதை "கிரகம்" என வைத்து பாடிய ஏதாவது தமிழ்ப்பாடல்களோ அல்லது இலக்கிய பொருட்குறிப்போ இருக்கிறதா? அறியத்தரவும். தெரிந்துகொண்டால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

கவித்துவத்தோடு பார்த்து சொல் இனங்காணப்பட்டுள்ளது.கண்டம் என்பதற்கு கிரகம் என்பது தான் பொருள் என்பதாக அங்கு குறிப்பிடப்படவில்லை. வன்னி மைந்தன் எழுதிய அந்த பகுதிக்குரிய கவி வரிகளில் இருந்து அவர் எதைச் சொல்ல முனைகிறார் என்ற வகையில் கிரகம் என்பது அடைப்புக்குள் போடப்பட்டு.. பின்னர் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வேற்றுக் கண்டம் என்று உச்சரிப்பது குறைவு. வேற்றுக் கிரகம் என்றுதான் உச்சரிப்பது வழமை. அந்த வகையில் அது இலகுவாக இனங்காணப்படக் கூடியதாக இருந்தது. வன்னி மைந்தனும் அதை மறுதலிக்கவில்லை. விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். சில பதங்களுக்கு அது அமையும் இடத்தைப் பொறுத்து பொருள் மாற்றி எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. வேணும் என்றால் ஆகுபெயராக்கிப் பாருங்கள். கண்டம் என்பது கிரகமாகி இருக்கிறதாகக் கொள்ளுங்கள். கொழும்பு பேசுகிறது என்றால்.. கொழும்பு எப்படிப் பேசும் என்று கேட்காதீர்கள். முட்டையில மயிர் பிடிக்கிறது என்று தீர்மானிச்சிட்டா.. பதிலுக்கு பிடுக்க நாங்களும் முயற்சிக்க வேண்டிய சூழ்நிலைதான் எழும். :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"வன்னிமைந்தனை எல்லோரும் வறுத்தெடுக்கிறார்களே, நானாவது துணையாக நிற்போம்" என்ற உங்களுடைய நல்ல எண்ணம் எனக்குப் புரிகிறது, நெடுக்காலபோவான்!

வன்னி மைந்தன் என்ன நிலக் கடலையா வறுத்தெடுக்க. அவர் தமிழின் மைந்தன். எனக்கு அவரின் கவிதைகளையும் பாகுபாடின்றி படிக்க விமர்சிக்க விருப்பம் உண்டு. யாழ் களத்திற்கு வெளியே ஈழப்பாடல்கள் இணையத்தளத்திலும் வன்னி மைந்தனின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். புதுவையின் கவிதைகளோடு. அந்த வகையில் புறக்கணிப்பு என்ற நிலைக்கு அப்பால்.. ஒரு எழுத்தாளனின் திறமையை மழுங்கடிக்கும் வகையில் தொடர் தாக்குதலை நடத்துவதை நான் வன்முறையாகவே கருதுகின்றேன்.

http://www.eelasongs.com/content/category/8/16/33/50/50/

வன்னி மைந்தன் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார் சில எழுத்துப் பிழைகள்.. நேரப்பிரச்சனையால் திருத்தபடாமல் இருக்கிறது என்று. இருந்தும்.. அவர் மீது வேண்டும் என்று சீண்டலாக.. எழுதப்படும் சில விடயங்களை இட்டு விசனப்படவே முடிகிறது. விமர்சிக்க முடியவில்லை.

*** தணிக்கை

ஆனால் ஆண் கவிஞன் தனது எண்ணத்தைக் கவி வடிவில் கொடுக்க அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி.. திருத்துவதை விட்டிட்டு.. நக்கல் நளினத்தனமான அணுகுமுறை தவறானது. இதையே பெண்களுக்குச் செய்திருந்தால்.. அதுவும் புதிதா வந்தவர்களுக்குச் செய்திருந்தா.. என்னாகும்.. யாழ் களம்....???! இரத்தக் கண்ணீர் வடிச்சிருக்கும்...! :):lol:

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

கவித்துவத்தோடு பார்த்து சொல் இனங்காணப்பட்டுள்ளது.கண்டம் என்பதற்கு கிரகம் என்பது தான் பொருள் என்பதாக அங்கு குறிப்பிடப்படவில்லை. வன்னி மைந்தன் எழுதிய அந்த பகுதிக்குரிய கவி வரிகளில் இருந்து அவர் எதைச் சொல்ல முனைகிறார் என்ற வகையில் கிரகம் என்பது அடைப்புக்குள் போடப்பட்டு.. பின்னர் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வேற்றுக் கண்டம் என்று உச்சரிப்பது குறைவு. வேற்றுக் கிரகம் என்றுதான் உச்சரிப்பது வழமை. அந்த வகையில் அது இலகுவாக இனங்காணப்படக் கூடியதாக இருந்தது. வன்னி மைந்தனும் அதை மறுதலிக்கவில்லை. விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். சில பதங்களுக்கு அது அமையும் இடத்தைப் பொறுத்து பொருள் மாற்றி எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. வேணும் என்றால் ஆகுபெயராக்கிப் பாருங்கள். கண்டம் என்பது கிரகமாகி இருக்கிறதாகக் கொள்ளுங்கள். கொழும்பு பேசுகிறது என்றால்.. கொழும்பு எப்படிப் பேசும் என்று கேட்காதீர்கள். முட்டையில மயிர் பிடிக்கிறது என்று தீர்மானிச்சிட்டா.. பதிலுக்கு பிடுக்க நாங்களும் முயற்சிக்க வேண்டிய சூழ்நிலைதான் எழும். :lol::)

நெடுக்ஸ்,

இது ஒரு பொறுப்பற்ற பேச்சு. தமிழில் சொற்பிழை நேரலாம். ஏன் எழுத்துக்கள் கூட மாறலாம். இல்லாத ஒன்றை "வசதிக்கேற்ப எடுத்தல்" என்பது நேர்மையற்றது. இது தமிழ்க்களத்துக்கு அழகல்ல. B) B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.