Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும். எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும்.

ஒரு சொல்லில் ஒரு எழுத்து இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்து(கள்) வந்து பொருளை வேறுபடுத்தாமல் இருக்குமானால் அந்த எழுத்துப் போலி எழுத்து எனப்படுகிறது.

 

ஐயா’ என்று எழுதுவது மிகச் சரியானது.

 

https://oomaikkanavugal.blogspot.com/2015/04/3.html

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சரீங்கக்கா 😁

பேச்சுத்தமிழ் வேறு, இலக்கணத் தமிழ் வேறு.

மிளகுத் தண்ணீர் என்றால் இலக்கணத் தமிழ்,

மிளகுத் தண்ணீ என்றால் பரவாயில்லை.

மொளவுத்தண்ணி என்றால் பேச்சுத்தமிழ்.

ஆனால் ஆங்கிலத்தில் அப்படியே உள்ளது.

பிரிட்டிஸ் காலத்தில் தாம் உருவாக்கி மேசைக்கு கொண்டாந்த அருமையான சூப்பாம்.

அப்ப ஏண்டா, Black Pepper Soup எண்டு வைக்கேல்ல எண்டா, பதில் இல்லை, திருட்டுப் பயல்களிடம்!

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  மீளக்குத் தண்ணீ   ...........அப்படி என்றால் என்ன ? மிளகு  தண்ணீர் ?
ஒரு வகை காரமான ரசம் .

 

https://tamil.news18.com/photogallery/lifestyle/food-know-the-health-benefits-of-drinking-pepper-powd

வெயில் காலத்தில் உடல் நீர்ச்சத்து குறைவது அதிகரிக்கும். இதற்கு மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம். இந்த தண்ணீர் உங்கள் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை விரைவாக கரைக்க உதவும்.Aug 23, 2021

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்படி வினாவை நான் 8/ April இல்  chatbox கேட்டிருந்தேன். சில உறவுகள் பதிலளித்திருந்தார்கள். ஐ என ஒரு தனியான எழுத்து இருக்கும் போது அய் என இரு எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவது  வலிந்து கட்டாயப்படுத்தி சேர்ப்பது போல் உணர்கிறேன். இது போலவேதான் மையம்-மய்யம்.எழுத்துச் சீர்திருத்தத்திற்காக, எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக என்ற கருத்துக்கள் காரணங்களாக க் கூறப்பட்டாலும் இவ்வாறு எழுதுவதன் மூலம் அவ் எழுத்துக்களை இல்லாமல் செய்ய முடியதுதானே, அவை வேறு சொல்லாக்கத்திற்கு தேவைதானே.

மையத்தை மய்யம் என எழுதலாம் என்றால் தை என்பதனை தய் என எழுதலாம்தானே.

 

 

 

 

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நந்தி said:

மேற்படி வினாவை நான் 8/ April இல்  chatbox கேட்டிருந்தேன். சில உறவுகள் பதிலளித்திருந்தார்கள். ஐ என ஒரு தனியான எழுத்து இருக்கும் போது அய் என இரு எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவது  வலிந்து கட்டாயப்படுத்தி சேர்ப்பது போல் உணர்கிறேன். இது போலவேதான் மையம்-மய்யம்.எழுத்துச் சீர்திருத்தத்திற்காக, எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக என்ற கருத்துக்கள் காரணங்களாக க் கூறப்பட்டாலும் இவ்வாறு எழுதுவதன் மூலம் அவ் எழுத்துக்களை இல்லாமல் செய்ய முடியதுதானே, அவை வேறு சொல்லாக்கத்திற்கு தேவைதானே.

மையத்தை மய்யம் என எழுதலாம் என்றால் தை என்பதனை தய் என எழுதலாம்தானே.

 

 

 

 

 

 

தமிழில், பல எழுத்து சீர்திருத்தங்கள் வந்துள்ளன.

இத்தாலிய மதகுருவும் வீரமாமுனிவர் என்ற தமிழ் பெயரை சூடிக் கொண்டவர் கூட பல சீர்திருத்தங்களை பிரேரிக்க, தமிழ் உலகு ஏற்றுக் கொண்டது.

கடந்த நூறாண்டில், உதாரணமாக, ன வுக்கு சுழியிடுவதை விடுத்து 'னை' என எழுதும் சீர்திருத்தம் வந்தது. 

தமிழ் உலகு ஏற்றுக் கொண்டது.

நான் அதிகமாக பேச்சுத் தமிழை ரசிப்பேன். அதுவே அய்யா, ஐயா  வித்தியாச காரணம்.

 வடிவேலு பகிடிகள் பேச்சுத் தமிழின் உதாரணம்.

இந்த தளத்தில், குமாரசாமி, தமிழ்சிறி பேசசுத் தமிழ் ரசிக்கக் கூடியது.

@நிலாமதி 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.