Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

குரங்குகள் ஏற்றுமதிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை – சீன அரசாங்கம்

குரங்குகள் ஏற்றுமதிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை – சீன அரசாங்கம்

இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என்றும், எந்தத் தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பத்தை தாம் பெறவில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்த உறுப்பினராகவுள்ள சீனா, 1988 ஆம் ஆண்டின், அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சட்டம் அமுலாக்கத்தில் சிறந்த நாடுகளில் சீனாவும் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1330433

வடை  போச்சா????

  • Replies 85
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுமதி செய்ய வேண்டியது குரங்குகளை அல்ல ! நாட்டை நாசப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களை !

news-03-3.jpg
ஒரு இலட்சம் குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை எடுத்து பச்சையாக சாப்பிடுவதற்காக சீனாவுக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தங்களால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அதிக எண்ணிக்கையிலான வன விலங்குகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சட்ட விதிகள் எதுவும் இல்லை. இந்தச் சட்டத்தின்படி, வனவிலங்குகளை விற்பனை செய்வதில் ஈடுபடக் கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளதால், பணத்திற்காக நம் நாட்டில் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது.

வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வது அன்னிய செலாவணியை கொண்டு வர உதவாது. ஆனால், அரச அதிகாரி ஒருவரின் மனைவி திரைமறைவில் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும், குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை பச்சையாக சாப்பிடும் சிறப்பு உணவு தயாரிக்கும் முறை சீனாவில் நடந்து வருவதாகவும் அமெரிக்காவிலிருந்தும் அதிக அளவில் குரங்குகளுக்கான முன்பதிவு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குரங்குகள் மனிதர்களின் உடல் அமைப்பைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன, எனவே, அவை இறுதி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும். குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ரன்வெல்ல, நாட்டை நாசப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றுமதி செய்ய தீர்மானம் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த குரங்குகளால் பயிர்களில் பெரும் பங்கு அழிந்து வருகிறது. எனினும் அவற்றை ஏற்றுமதி செய்வது அதற்கான தீர்வாகாது. பயிர்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம், ஆனால் அரசாங்கத்தில் யாரும் அவற்றைக் கேட்கத் தயாராக இல்லை. பயிர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியோர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே முதலிடம் பெறுவார். எனவே, அவரையும் எங்காவது ஏற்றுமதி செய்யவேண்டும்” எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/249861

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குரங்குகளை கோரியதா சீனா? சீன தூதரக பதிலில் உள்ள உண்மை என்ன?

இலங்கை குரங்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவது தொடர்பில் தற்போது இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்கு ஒரு லட்சம் குரங்குகள் அனுப்புகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகளிடமிருந்தும் குரங்குகளை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாய அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிற்கு குரங்குகளை அனுப்ப காரணம் என்ன?

இலங்கையில் நகர் பகுதிகள் உள்ளிட்ட மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

விவசாய அமைச்சின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 30 லட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

இவ்வாறு மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலுள்ள குரங்குகள், விளை நிலங்களுக்குள் பிரவேசித்து, பயிர்களை சேதப்படுத்துவதாகவும் அவர் கூறுகின்றார்.

குறிப்பாக தென்னை, சோளம், நெல் உள்ளிட்ட செய்கைகளுக்கு குரங்குகளினால் பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிருகங்களில், குரங்குகளே அதிகளவாக காணப்படுகின்றது என விவசாய அமைச்சர் கூறுகின்றார்.

குரங்குகளுக்கு மேலதிகமாக பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் அணில்கள், மயில்கள் மற்றும் பன்றிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவிலுள்ள 1000 மிருகக்காட்சி சாலைகளுக்கு ஒரு லட்சம் குரங்குகள் கோரப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் கருத்து வெளியிட்டார்.

இந்த கருத்தானது, உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பாரிய பேசுபொருளாக மாறியது.

சீனா, இறைச்சிக்காக குரங்குகளை கோருவதாக சிலர் கூறிய நிலையில், மற்றுமொரு தரப்பினர் ஆராய்ச்சிகளுக்கான குரங்குகளை சீனா கோருவதாகவும் கருத்துரைத்திருந்தார்கள்.

எனினும், அந்த கருத்துக்களை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பிபிசி தமிழிடம் மறுத்திருந்தார்.

இலங்கை குரங்கு

சீனாவின் பதில்

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

இலங்கையிலிருந்து ஒரு லட்சம் குரங்குகளை கோரியதாக வெளியான தகவல் தொடர்பில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து குரங்குகளை பெற்றுக்கொள்கின்றமை தொடர்பில் தமக்கு எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கோரிக்கை தொடர்பில் தமது நிறுவனம் எந்தவொரு வகையிலும் அறிந்திருக்கவில்லை என சீனாவிலுள்ள வல விலங்குகள், தாவரவியல் இறக்குமதி, ஏற்றுமதிக்கான அரச திணைக்களமாக விளங்கும் சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அழிந்துவரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் 1988ம் ஆண்டு ஒரு பங்காளி நாடாக தாம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பிற்கு சீனா, அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக தமது நாடு நிறைவேற்றும் எனவும் கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் பதில்

தாம் குரங்குகளை இலங்கையிடமிருந்து கோரவில்லை என சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில், விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க பதிலளித்தார்.

சீன அரசாங்கத்திடமிருந்து தமக்கு இந்த கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும், சீனாவில் மிருகக்காட்சிசாலைகளை நடத்தும் தனியார் நிறுவனமொன்றிடமிருந்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவிக்கின்றார்.

மிருகங்களினால் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் விதத்திலும், விவசாய அமைச்சு என்ற விதத்திலும் தாம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியதாக அவர் கூறுகின்றார்.

சீனாவிலுள்ள தனியார் நிறுவனம் தம்மிடம் கோரிக்கை விடுத்தமைக்கான எழுத்துமூல ஆவணங்கள் தம்வசம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சீன அரசாங்கத்தின் நேரடி தொடர்புகள் எதுவும் இந்த விடயத்தில் காணப்படவில்லை என கூறிய அவர், குறித்த தனியார் நிறுவனத்துடனேயே தொடர்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை குரங்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் அடுத்து, இந்த நிறுவனத்தின் கோரிக்கை குறித்து ஆராய வேண்டிய கட்டாயம் தமக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

சீனாவிலுள்ள இந்த நிறுவனம், தமது அமைச்சின் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு லட்சம் குரங்குகளை ஒரே தடவையில் அவர்கள் கோரவில்லை என குறிப்பிட்ட அவர், கட்டம் கட்டமாகவே குரங்குகளை அவர்கள் கோரியதாகவும் தெரிவிக்கின்றார்.

குரங்குகளினால் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

வனப் பகுதியிலுள்ள குரங்குகளை பிடித்து, சீனாவிற்கு அனுப்பும் எண்ணம் தமக்கு கிடையாது எனவும், விளை நிலங்களுக்கு சேதம் விளைவிக்கும் பகுதிகளிலுள்ள குரங்குகளை மாத்திரமே அனுப்புவதற்கான எண்ணம் உள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c721vv6ym1jo

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2023 at 00:55, ஏராளன் said:

குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ரன்வெல்ல, நாட்டை நாசப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றுமதி செய்ய தீர்மானம் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

விளங்குதலிலும் தவறா? அவர்கள் குரங்குகளைத்தானே கேட்டார்கள்?

On 21/4/2023 at 00:55, ஏராளன் said:

பயிர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியோர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே முதலிடம் பெறுவார். எனவே, அவரையும் எங்காவது ஏற்றுமதி செய்யவேண்டும்”

அவரே போய் இறங்கி நின்று தன்னை ஏலமிட்டார் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையே சொந்தநாட்டிலும் கூட. குரங்குகள் தான் வேண்டுமென்று அடம்பிடிக்கிறார்களே! 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீன நிறுவனம் குறித்து பலத்த சந்தேகம்- விபரங்களை பெற அரசாங்கம் முயற்சி

Published By: RAJEEBAN

23 APR, 2023 | 10:55 AM
image

சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து  குரங்குகளை பெற முயன்ற சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய சீன நிறுவனத்தின் விபரங்களை தருமாறு சீன தூதரகத்தை கேட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை  குரங்குகளைஏற்றுமதி செய்வது சாத்தியமா என்பது குறித்து ஆராய்வதற்காக  குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மகிந்த அமரவீர மூன்று தடவை சந்தித்துள்ளார்.

இதேவேளை கிடைத்த தகவல்களை ஆராய்ந்தவேளை குறிப்பிட்ட சீன நிறுவனம் 2021 இல் சிறிய முதலீட்டுடன் பதியப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு  சமூகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சீன நிறுவனம் இலங்கையின் விவசாய அமைச்சிற்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள இலங்கை அமைப்பு அந்த கடிதத்தில் கையெழுத்து எதுவுமில்லை  தொடர்புகொள்ளவேண்டிய நபரின் பெயர்கள் இல்லை நிறுவனத்தின் இலச்சினை தலைகீழாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதுசீன மொழி தெரியாத நபர் ஒருவரின் மோசடி நடவடிக்கை போல தோன்றுகின்றது எனவும் இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சீன நிறுவனம் இன்னமும் செயற்படத்தொடங்கவில்லை என எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு  சமூகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீன நிறுவனத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மகிந்த அமரவீர மூன்று தடவை சந்தித்துள்ளார்.

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் ரொசான் பெரேரா இந்த சந்திப்புகளிற்கு ஏற்பாடு செய்தார் என தெரிவித்துள்ள அமைச்சர் விவசாய அமைச்சின் கீழ் உள்ள தேசிய உணவு ஊக்குவிப்பு சபைக்கு சீன நிறுவனம் கடிதம் அனுப்பியதை தொடர்ந்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தான் இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை என பேராசிரியர் ரொசான் பெரேரா தெரிவித்துள்ளார்.

sunday times

https://www.virakesari.lk/article/153519

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அந்த கடிதத்தில் கையெழுத்து எதுவுமில்லை  தொடர்புகொள்ளவேண்டிய நபரின் பெயர்கள் இல்லை நிறுவனத்தின் இலச்சினை தலைகீழாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஹிஹி..... மனநலம் குன்றியவர் யாராவது செய்திருப்பார்களா அல்லது இவர்களது மனநிலையை சோதித்துப்பார்த்தார்களோ தெரியவில்லை? விபரம் இல்லாத கோரிக்கையை வைத்தே இவ்வளவு ஆலாவட்டம்? இவ்வளவுதான் நம்மஅமைச்சர்களின் அறிவு!

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்களை சீன நிறுவனம் கையளிப்பு

monkey-300x159.jpg

சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளில் கண்காட்சிக்காக இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளது.

இந்த சீன நிறுவனம் முதலில் 500 குரங்குகளை வழங்குமாறு விவசாய அமைச்சிடம் கோரியிருந்த போதிலும், குறித்த நிறுவனத்தினால் தற்போது 1500 குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 100,000 குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் இந்த நிறுவனத்தின் முன்மொழிவை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பார் மற்றும் பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படவுள்ளது.

இந்த அமைச்சரவை உபகுழு வழங்கிய இறுதித் தீர்மானத்தின் அடிப்படையில் குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான இந்தப் பிரேரணை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/251143

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகளை ஏற்றுமதி செய்வதில் சீன நிறுவனம் இன்னும் ஆர்வமாக உள்ளது – விவசாய அமைச்சு

இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை பெற்றுக்கொள்ள சீன நிறுவனமொன்று விடுத்த கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கண்காட்சி நோக்கங்களுக்காக சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு 100,000 குரங்குகளை ஏற்றுமதி செய்யுமாறு சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதேவேளை,இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் .

“இருப்பினும், பல சுற்றுச்சூழல் அமைப்புகள் குரங்குகள் சீனாவிற்கு உணவாக ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி இந்த விடயத்தில் கவலைகளை எழுப்பியுள்ளன.. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள சீன தூதரகமும் கடும் பின்னடைவை எதிர்கொண்டது,” என்றார்.

இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் சீன நிறுவனம் தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளதால், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உத்தேச திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் ஆர்வலர்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

“நாட்டில் எதிர்கொள்ளும் பாரிய அளவிலான பயிர் அழிவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதே சாத்தியமான தீர்வாக அதிகாரிகள் கருதுகின்றனர். இது ஒரு முழுமையான தீர்வு அல்ல, ஆனால் ஒரு விருப்பம், ”என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/257592

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகளை பயங்கரவாதிகளாக கருத வேண்டும் - நிமல் பியதிஸ்ஸ

Published By: VISHNU

09 JUN, 2023 | 08:12 PM
image
 

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

பயிர்செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்குகளின் செயற்பாட்டை பயங்கரவாத செயற்பாடாக கருத வேண்டும். நகரம்,கிராமம்,விளை நிலங்கள் அனைத்தையும் குரங்குகள் பயங்கரவாதிகளை போல் ஆக்கிரமித்துள்ளன.

ஆகவே குரங்குகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

குரங்கு, மயில் உட்பட காட்டு விலங்குகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் சேதம் பாரதூரமான பிரச்சினையாக காணப்படுகிறது.

விவசாயத்துறை வீழ்ச்சியடைவதற்கு இந்த காட்டு விலங்குகள் பிரதான பங்கு வகிக்கின்றன.நகரம்,கிராமம்,உட்பட ஒட்டுமொத்த விளை நிலங்களையும் குரங்குகள் பயங்கரவாதிகளை போல் ஆக்கிரமித்து நாசம் செய்கின்றன.

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள்,காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது புலம் பெயர் அமைப்புக்களிடமிருந்து டொலர் பெறும் சுற்றாடல் துறை நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரித்துள்ளார்கள். நாட்டில் 70 சதவீதமான விவசாயிகள் உள்ளார்கள்.

குரங்குகளை ஏதாவதொரு வழிமுறையில் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.ஆகவே டொலருக்காக செயற்படும் சுற்றாடல் நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவையில்லை.

கிராமப்புறங்களில் உள்ள தென்னை மரங்கள் உட்பட வீட்டு சுற்றத்தில் உள்ள மரங்களை கூட குரங்குகள் விட்டு வைப்பது இல்லை.கிராம புறங்களில் வாழும் மக்கள் இந்த பாரதூர தன்மையை அறிவார்கள்.கொழும்பில் குளிர் அறையில் இருந்துக் கொண்டு கருத்து உரைப்பவர்களுக்கு நடைமுறையில் இருக்கும் பிரச்சினை ஏதும் தெரியாது.

ஆகவே குரங்குகளின் செயற்பாட்டை பயங்கரவாத செயற்பாடாக கருதி கடுமையான நடவடிக்கைளை வெகுவிரைவில் எடுக்க வேண்டும்.இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/157356

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2023 at 17:01, ஏராளன் said:

சீன நிறுவனம் முதலில் 500 குரங்குகளை வழங்குமாறு விவசாய அமைச்சிடம் கோரியிருந்த போதிலும், குறித்த நிறுவனத்தினால் தற்போது 1500 குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

 

On 28/4/2023 at 17:01, ஏராளன் said:

குறித்த நிறுவனம் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 100,000 குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்த  குரங்குகளின் எண்ணிக்கைக்கும்,  இவர்கள் ஏற்றுமதி செய்ய இருக்கும் குரங்குகளின் எண்ணிக்கைக்கும்  இடையில் பாரிய வித்தியாசமிருக்கிறதே. எணிக்கையிலும் பிழையோ? 

6 hours ago, ஏராளன் said:

பயிர்செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்குகளின் செயற்பாட்டை பயங்கரவாத செயற்பாடாக கருத வேண்டும். நகரம்,கிராமம்,விளை நிலங்கள் அனைத்தையும் குரங்குகள் பயங்கரவாதிகளை போல் ஆக்கிரமித்துள்ளன.

 

6 hours ago, ஏராளன் said:

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள்,காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது புலம் பெயர் அமைப்புக்களிடமிருந்து டொலர் பெறும் சுற்றாடல் துறை நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரித்துள்ளார்கள்.

முன்பு வேறு விதமாக பிரச்சாரம் செய்ததாக நினைவிருக்கிறதே! தமிழருக்கெதிரான  தமது பயங்கரவாதத்தை மறைத்து அவர்களை பயங்கரவாதியாக சித்திரித்து டொலர்களை பெற்று வசதியனுபவித்ததை மறக்க முடியவில்லை இவர்களால். இது ஓர் போதை. இதை தவிர்த்து இவர்களால் செயற்பட முடியாது. எதற்கெடுத்தாலும் பயங்கரவாதம், புலம்பெயர்ந்தோர், டொலர் என்று அலட்டுகிறார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியில் வரமுடியவில்லை. எதற்கு எதை உவமானப்படுத்துவது என்று தெரியவில்லை. எல்லாம் பயங்கரவாதமாய் தெரிகிறது. "அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்." 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படாது : நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Published By: VISHNU

26 JUN, 2023 | 05:09 PM
image
 

இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாதென வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு தாக்கல் செய்த ரிட் மனு  திங்கட்கிழமை (26) விசாரணைக்கு வந்தபோது, வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 27 பிரிவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/158643

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.