Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

இந்திய ராஜதந்திரத்தினை ஆட்டம் காண வைக்கும் சிங்கள ராஜதந்திரம்

இலங்கை, இந்திய ராஜதந்திர போரில், இலங்கை என்னும் சிறு வண்டு, இந்தியா என்னும் யானையின் ஒரு காதில் புகுந்து மறு காதால், வெளியேறும் பலே விளையாட்டினை பல முறை செய்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் இந்தியா ஏமாறுவது வழக்கமாகி வருகிறது.

முதலில் உலகம் எங்கும் இல்லாத வழக்கமாக, இலங்கையில் இருந்து பிரிட்டிஷ் காலத்தில் வந்த தோட்ட தொழிலாளர்கள் 5 லட்ச்சம் பேரை திருப்பி பெற வைத்தது. அதே இந்தியா பின்னர், உகாண்டாவில் இருந்து வெளியேற்றி டெல்லிக்கு அனுப்பப்பட்ட, இந்தியர்களை, பிரிட்டனுக்கு அனுப்பி விட்டிருந்த்தும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் இயக்கங்களை வளர்த்து ஆயுதம் கொடுத்த இந்தியாவினை படைகளை அனுப்ப வைத்து, அவர்களுடன், முக்கியமாக புலிகளுடன் மோத விட்டது சிங்களம்.

இறுதியில், இந்தியாவிடம் பெரும் உதவி வாங்கி, அவர்களுடன் சேர்ந்து முடித்து வைத்தது. இலங்கை வடக்கே, விமானம் பறக்கவும், கப்பல் ஓடவும் வைக்கிறது. இது தொடர்பில், விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன் துறைமுக மீள் கட்டுமானம் இந்தியாவின் தலையில் கட்டி விட்டது சிங்களம்.

இந்திய சீன போரில், சீனாவுக்கு ஆதரவு தந்துகொண்டே, ராஜதந்திர பேச்சில் வென்று, கச்சதீவினை இலங்கைக்கு சொந்தமாக்கிக் கொண்டது சிங்களம். 

சீனாவினை கொண்டுவந்து இறக்கி, அதனை காண்பித்துக் கொண்டே, இந்தியாவிடம் இருந்து கடன் முதலிய பல உதவிகளை பெறுகின்றது. முக்கியமாக, யுத்த விசாரணைகளில் இருந்து, தப்ப, இந்திய உதவிகளை பயன்படுத்துகிறது.

மேலைநாடுகளின் சார்பான ரணில், இப்போது அமெரிக்காவினை உள்ளே கொண்டு வந்து, சீனாவினையும் சமாளித்து, இந்தியாவுக்கு டிமிக்கா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

13 குறித்து பேசிக்கொண்டே, அதுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி, அதனை காட்டியே இழுக்கிறது. 36 வருசமாக. 

மூன்று பெண்டாட்டிகளை வெற்றிகரமாக சமாளிக்கும் கணவன் போல, இந்தியா, சீனா, அமெரிக்கா என சமாளிக்கிறது சிங்களம்.

சிங்களத்தின் ராஜதந்திரத்துடன் எந்த காலத்திலும், இந்திய ராஜ தந்திரம் வெல்லப்போவது இல்லை போலவே தெரிகிறது.

சிறப்பாக செயல் படுகிறது.

Edited by Nathamuni
  • Like 2
  • Nathamuni changed the title to சிங்கள ராஜதந்திரம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

மூன்று பெண்டாட்டிகளை வெற்றிகரமாக சமாளிக்கும் கணவன் போல, இந்தியா, சீனா, அமெரிக்கா என சமாளிக்கிறது சிங்களம்.

ஹா ஹா ஹா

நல்ல உவமை 

இலங்கையை, ஈழத்தமிழனை, சிங்களவனை உருபடாமல் வைத்துக்கொள்வதில் இலங்கையின் முதல் பொஞ்சாதி இந்தியா வெற்றி பெற்றே வருகின்றது 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் அவர்கள் தாக்கப்பட்டார் Published By: Vishnu 16 Dec, 2024 | 02:21 AM   கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை.ம.லூக். சனிக்கிழமை (14) மாலை வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி முறிகண்டியை சேர்ந்த தன்னை சுயாதீன ஊடகவியலாளர் என அழைத்துக் கொள்ளும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தி அருட்தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும். இத் தாக்குதல் தொடர்பாக கிளிநொச்சி பொலிசில் அருட்தந்தையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.    
    • மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் -  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி Published By: Vishnu 16 Dec, 2024 | 02:25 AM   மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி இவ்வாறு தெரிவித்தார்.  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14.12.2024 முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்திய மக்கள் சார்பாக மிஸ்பா ஜெப மிஷனரி ஆலய மாணவர்களுக்கு இந்திய மக்கள் சார்பாக கலந்து கொண்டு உதவித்திட்டங்களை வழங்குவதில் பெருமையடைகிறேன். இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆதரவாக மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தமான திட்டங்களும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது  இன்றையதினம் இலங்கை ஜனாதிபதி இந்தியா பயணிக்கின்றார். அங்கு தங்கியிருந்து இலங்கை சம்பந்தமான பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அதில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சேர்ந்த பல திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.  நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற அனைவரோடும் மாணவர்கள், இளைஞர்கள், இங்கே இருக்கின்ற மக்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டது போல இது ஒரு ஆரம்பம்தான் எதிர்காலத்தில் பல விடயங்களோடு சேர்ந்து பயணிப்போம்.  ஒக்டோபர் மாதம் இறுதியில் பெரியளவிலான கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை தொடர்பான அதிகாரிகள் சந்தித்திருக்கிறார்கள் ஆனால் மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மேலும் தெரிவித்தார்.    
    • வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உள்ளாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் Published By: Vishnu 16 Dec, 2024    (எம்.ஆர்.எம்.வசீம்) 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்ளாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் வரி பணம் செலுத்த தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதுவரை செலுத்தாத சுய மதிப்பீட்டு வரி மற்றும் எஞ்சிய வரி பணத்தை அறவிடுவதற்காக கள ஆய்வு மற்றும் உள்நாட்டு இறைவரி கட்டளை சட்டங்களின் பிரகாரம் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு எதிராக 2025 ஜனவரி மாதத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் எஞ்சிய வருமான வரி பணம் செலுத்தாத நபர்களுக்கு முன் அறிவிப்பின்றி அவர்களின்  வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலதிகமாக அவர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள வரி பணத்தின் அளவுக்கமைய குற்றவியல் வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.    
    • இல்லை என்பதை எப்படி ஆணித்தரமாக கூறுகின்றீர்கள்?  
    • சில்ல முடியாது. எங்கள் டமில் தேசிய வியாதியஸ்தர்கள் கருணாநிதியைக் கொப்பியடிப்பதில் வல்லவர்கள்.  😁
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.