Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு

 
FRANCE.jpg

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தீர்மானித்துள்ளார்.

இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மெக்ரான் மேற்கொண்டார்.

இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் வன்முறை சம்பவங்களும் நடந்தது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இத்திட்டத்துக்கு கோர்ட்டு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து அரசு ஊழியர் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் சட்டத்தை ஜனாதிபதி மெக்ரான் அமலுக்கு கொண்டு வந்தார். இச்சட்டத்தை அரசிதழில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் போராட்டங்களை மீறி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வு வயது மசோதாவை திரும்ப பெற கோரி போராட்டங்கள் கடுமையாக நடந்து வரும் நிலையில் தற்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் பிரான்சில் போராட்டங்கள் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.dailyceylon.lk/56692#:~:text=இதையடுத்து அரசு ஊழியர் ஓய்வு வயதை,போராட்டங்களை மீறி சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

If this was in Russia, Iran, or China, western media would go nuts about it for weeks and demand sanctions for "violating human rights". But since it's in France... crickets. Disgusting hypocrisy.

இது ரஷ்யா, ஈரான் அல்லது சீனாவில் இருந்திருந்தால், மேற்கத்திய ஊடகங்கள் வாரக்கணக்கில் அதைப் பற்றி கொச்சைப்படுத்தி, "மனித உரிமைகளை மீறியதற்காக" பொருளாதாரத் தடைகளைக் கோரும். ஆனால் அது பிரான்சில் இருப்பதால்... கிரிக்கெட்டுகள். கேவலமான போலித்தனம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

FRANCE - Macron’s riot police engaged in tyranny & attacking unarmed citizens, even young women. There’s been no condemnation from world leaders, including Rishi ‘Trudeau’, perhaps they are fearful of what’s coming.

 

 

மக்களின் போராட்ட இரத்த வடுக்களின் மேல் ஜனநாயக பிரான்ஸ்சில் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
எந்தவொரு அரசும் தாம் நினைத்தைதை செய்யும்.அதாவது அரச  அதிகாரத்தில் இருப்பவர்கள். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி.....ஐரோப்பாவாக இருந்தாலும் சரி....ஆசியாவாக இருந்தாலும் சரி....

குத்தி முறிபவர்கள் குத்தி முறிய வேண்டியது தான்.....:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ரஷ்யாவிலோ அல்லது சீனாவிலோ அல்ல....
முற்று முழுதான ஜனநாயக நாடு பிரான்ஸ்ல் நடந்தேறிய அவலங்கள்.

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தான் சரியான சந்தர்ப்பவாதிகள், நிலைமைக்கேற்ப ஐனநாயக அரசியல் செய்பவர்கள், இவர்களிடம் இந்திய அரசியல்வாதிகள் பிச்சைவாங்க வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.