Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது – சீன தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான கடன் தொடர்பில் சீனா சாதகமான பதில்!

தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது – சீன தூதுவர்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது என சீன தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் எரிபொருள் விநியோகத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் 120 முதல் 140 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு சீனாவினால் நாட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பல புதிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறக்கூடும் எனவும்  இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1331014

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் திட்டம் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு சீனா விளக்கம்

Published By: DIGITAL DESK 5

29 APR, 2023 | 03:14 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் எரிபொருள் விநியோக மற்றும் விற்பனை செயற்பாடுகள் வெற்றியளித்தால் , மசகு எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இவ்வாண்டுக்குள் 120 - 140 மில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொள்ள முடியும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹொங் அஸ்கிரிய பீட மகா நாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேரர்களுக்கு மேலும் தெளிவுபடுத்தியுள்ள சீனத் தூதுவர் ,

கடந்த வாரம் சீனாவின் சினொபெக் நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவரால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விரைவில் , சீன எரிபொருளைக் கொண்ட 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்தால் , நாளாந்தம் 4 மெட்ரின் தொன் மசகு எண்ணெண் சுத்தீகரிப்பினை நாட்டில் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றால் , இவ்வாண்டுக்குள் 120 - 140 மில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

நாம் அறிந்த வகையில் இலங்கை ஒரேயொரு எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மாத்திரமே காணப்படுகிறது. அது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். அதன் இயந்திரங்களும் மிகப் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

எனவே புதிய எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையமொன்றை இலங்கை ஸ்தாபிக்க முடிந்தால் அது இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம். இதனை அமைப்பதன் ஊடாக நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களும் உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை தேரர்களுடனான சந்திப்புக்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர் , இலங்கை எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பது சீன பெற்றோலிய நிறுவனத்தின் தீர்மானமாகும். அரசாங்கம் என்ற ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதன் பிரதிபலன் நுகர்வோரையே சென்றடையும் என்றார்.

https://www.virakesari.lk/article/154097

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் அமைத்துக் கொடுத்த நுரைச்சோலை அனல் மின் நிலையம்
கட்டிய செலவை விட, அது கிழமைக்கு ஒரு முறை மாறி மாறி பழுதாக…
சீன பொறியியலாளரை கொண்டு திருத்திய செலவு அதிகம் என்று…
சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அதுதான் நடக்கப் போகுது போலை கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

சீனாக்காரன் அமைத்துக் கொடுத்த நுரைச்சோலை அனல் மின் நிலையம்
கட்டிய செலவை விட, அது கிழமைக்கு ஒரு முறை மாறி மாறி பழுதாக…
சீன பொறியியலாளரை கொண்டு திருத்திய செலவு அதிகம் என்று…
சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அதுதான் நடக்கப் போகுது போலை கிடக்கு.

மானூர் கார்த்திக் விசிக (@karthikambethv4) / Twitter

நாட்டை எழுதி வாங்கப் போறங்களோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

மானூர் கார்த்திக் விசிக (@karthikambethv4) / Twitter

நாட்டை எழுதி வாங்கப் போறங்களோ?!

ஏராளன், அப்படிப் போல் தான் இருக்கு.
150 எரிபொருள் நிரப்பு நிலையம், எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை என்று
மிக விரைவாக கால் பதிக்கின்றார்கள்.

என்ன பிரச்சினை என்றால்…. நாளை இதில் ஏதாவது குறைபாடு நடந்தால்
சீன அரசு… அதனை கட்டிய நிறுவனத்தை கைகாட்டி விட்டு தப்பி விடும்.

இந்தியன் வடக்கில் சினிமா நகரம் உருவாக்க போவதாக ஒரு கதை அடிபடுகுது.
அவன் தமிழனை… சினிமா மோகத்தில் வைக்க திட்டம் போட்டுள்ளான் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஏராளன், அப்படிப் போல் தான் இருக்கு.
150 எரிபொருள் நிரப்பு நிலையம், எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை என்று
மிக விரைவாக கால் பதிக்கின்றார்கள்.

என்ன பிரச்சினை என்றால்…. நாளை இதில் ஏதாவது குறைபாடு நடந்தால்
சீன அரசு… அதனை கட்டிய நிறுவனத்தை கைகாட்டி விட்டு தப்பி விடும்.

இந்தியன் வடக்கில் சினிமா நகரம் உருவாக்க போவதாக ஒரு கதை அடிபடுகுது.
அவன் தமிழனை… சினிமா மோகத்தில் வைக்க திட்டம் போட்டுள்ளான் போலுள்ளது.

அறிவியல் நகரங்கள், கணனி மையங்கள் அமைத்து மாணவர்களை கற்பிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இது தொடர்பில் தேரர்களுக்கு மேலும் தெளிவுபடுத்தியுள்ள சீனத் தூதுவர் ,

சீனனுக்கு தெரிந்தளவு நாட்டின் மைந்தருக்கு தெரியவில்லை. யாரை காக்கா பிடிக்க வேணுமோ அவர்களை நேரடியாக பிடித்துள்ளார்கள்.

19 hours ago, ஏராளன் said:

இதனை அமைப்பதன் ஊடாக நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களும் உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாருக்கு என்று சொல்லவில்லை. நமது வேலைவாய்ப்புகளை சிங்களம் பறிக்க சீனன் வந்திறங்கப்போறான் வேலைக்கு.

19 hours ago, ஏராளன் said:

இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இவ்வாண்டுக்குள் 120 - 140 மில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொள்ள முடியும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் ஒரு அமைச்சர் வெளியிட்ட தகவல்; அதிக மூலதனம் தரும் நிறுவனங்களை வெளிநாட்டு முதலீட்டாளர் வாங்க விருப்பு கொண்டுள்ளதாக, இதைத்தான் கூறினாரோ? நல்லது நமக்கு செய்யும் கெடுபிடிகளை வெகுவிரைவில் சிங்களம் அனுபவிக்கும். சீனா கால் வைத்தால் சொந்தமாக்காது விடாது. ஆசியாவின் வல்லரசுக்கு வந்தது சோதனை! சீனபிக்குகள் வருவார்கள், போலிபவுத்தத்துக்கும் சீனப்பவுத்தத்துக்கும் போர் வெடிக்கலாம். அவர்களும் பவுத்த தொல்பொருட்களை தோண்டலாம். முன்பே சீனா ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்த தொடர்பு சம்பந்தமாக சில தொல்லியல் பொருட்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக. இவர்கள் ஒரு வரலாறு எழுதினால் சீனனும் எழுதுவான். வரலாறு இல்லாமல் திரிப்பவர்களுக்கு எதிராக வரலாறு எப்படியும் திரியலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

போலிபவுத்தத்துக்கும் சீனப்பவுத்தத்துக்கும் போர் வெடிக்கலாம். அவர்களும் பவுத்த தொல்பொருட்களை தோண்டலாம். முன்பே சீனா ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்த தொடர்பு சம்பந்தமாக சில தொல்லியல் பொருட்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக. இவர்கள் ஒரு வரலாறு எழுதினால் சீனனும் எழுதுவான். வரலாறு இல்லாமல் திரிப்பவர்களுக்கு எதிராக வரலாறு எப்படியும் திரியலாம்.

முற்  குறிப்பு:  23.10.2018 வந்த செய்தி. 

main photo

சீனாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொடர்பு இருந்தாகக் கூறி அல்லைப்பிட்டி கப்பல் துறையில் சீன நிபுணர்கள் ஆய்வு

தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில், சில அபிவிருத்தித் திட்டங்களை ஒப்படைந்த மைத்திரி- ரணில் அரசாங்கம், தற்போது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கப்பல்த்துறைப் பகுதியில் சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆய்வு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான வர்த்தகத் தொடர்புகள் ஆயிரத்தி இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாகக் கூறி, இந்த ஆய்வில் கடந்த ஐந்து நாட்களாக ஆராய்ச்சியில் சீன ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கைத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் அவர்களோடு இணைந்துள்ளனர்.
 
யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்துள்ளபோதும், அவர்கள் இந்த ஆராய்ச்சி குறித்துக் கருத்து வெளியிட விரும்பவில்லை.

 

ஆரம்ப ஆய்வின்போது சீன நாட்டு நாணங்கள், கப்பல் பாகங்கள், மட்பாண்டங்கள், வழிபாட்டுக்கான பொருட்கள் சிலவற்றையும் மீட்டதாக சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்- ஆனால் யாழ் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை.

 

சீன அரசின் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சிலர் யாழ் அல்லைப்பிட்டி கப்பல்த்துறை பிரதேசத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளதை யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் புஸ்பரட்ணம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், சீன ஆய்வாளர்கள் கூறுவது போன்று யாழ்ப்பாணத்திற்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பாரம்பரியத் தொடர்புகள் இருந்தமை குறித்து அவர் எதுவுமே கூற விரும்பவில்லை.

ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அனுமதியுடன் 1980ம் ஆண்டு அல்லைப்பிட்டி கப்பல்த்துறைப் பிரதேசத்தில் ஆரம்ப ஆய்வு இடம்பெற்றது என்றும் அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் சீனத் தொல்பொருள் திணைக்கள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆய்வில் கப்பல் பாகங்கள், நாணயங்கள், சமய வழிபாட்டுக்கான பொருட்கள் உள்ளிட்ட பல சான்றுகள் மீட்கப்பட்டிருந்தன.

ஆனால், இலங்கையில் அப்போது போர் ஆரம்பிக்கப்பட்டதால் அந்த ஆரம்ப ஆய்வுகள் நிறுத்தப்பட்டது என்றும் தற்போது ஜனநாயக சூழல் நிலவுவதால் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசிடம், சீன அரசு அதிகாரபூர்வமாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளது.

இந்த அனுமதியின் பின்னர் சீன- இலங்கை அரசுகள் உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளதாகவும் அதன் பிரகாரம் யாழ் அல்லைப்பிட்டி கப்பற்துறைப் பிரதேசத்தில் தங்கியிருந்து ஆய்வுகளைச் செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் சீன தொல்பொருள் திணைக்கள ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ் பொது நுலகத்திற்கு அருகில் இந்திய மத்திய அரசு எட்டுமாடியில் கலாச்சார மண்டபம் ஒன்றை நிர்மாணித்து வருகின்றது.

இந்த நிலையில், சுமார் எட்டுக்கிலோ மீற்றர் தொலைவில் உள்ள யாழ் அல்லைப்பிட்டி கப்பல்த்துறை பிரதேசத்தில் சீ்னா, ஈழத் தமிழர்களுடன் தொடர்புகள் இருந்ததாகக் கூறி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

main photo

main photo

main photo

main photo

https://koormai.com/pathivu.html?vakai=1&therivu=227

யாழில் சீன மட்பாண்டத் துண்டுகள் ...

யாழில் சீன மட்பாண்டத் துண்டுகள் ; பண்டைய கடல்சார் பட்டுப் பாதையை எடுத்துக்  காட்டுகின்றது | Virakesari.lk

https://www.virakesari.lk/article/43023

👉  பிற்  குறிப்பு: 23.10.2018 வந்த செய்தி. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2023 at 12:25, தமிழ் சிறி said:

இலங்கைக்கான கடன் தொடர்பில் சீனா சாதகமான பதில்!

 

இலங்கையில் தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது என சீன தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஆடு நனையுதென்று ஓநாய் கவலைப்பட்டுதாம். மற்றப்படி சீனாவின் தந்திரம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

சீனன் ஒருபுறம் தோண்ட, சிங்களவன் மறுபுறம் தோண்ட புத்தர் பயத்தில இந்தியாவுக்கு ஓடப்போறார். இல்லாத வரலாறும் தொல்லியலும் உள்ளதை மறைத்து புனையுது புது வரலாறு. போத்துக்கல், டச்சு என்று தொடரும் வரலாறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.