Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
coltkn-05-13-fr-03130350080_11188219_120

அண்டத்தில் இதுவரை அவதானிக்கப்பட்ட மிகப்பெரிய வெடிப்பை அடையாளம் கண்டதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தை விட 100 மடங்கு அளவுள்ள ஒரு தீப்பந்தம், மூன்று ஆண்டுகளுக்கு முன் தொலைதூரப் பிரபஞ்சத்தில் திடீரென எரிய ஆரம்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பெரும்பாலும் ஒரு வெடிப்பாக இருக்கும் என்று விளக்கியுள்ள வானியலாளர்கள் இந்த புதிர்மிக்க நிகழ்வை புரிந்துகொண்ட மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

AT2021lwx என்ற இந்த வெடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிப்பதோடு பெரும்பாலான சுப்பர்நோவாக்களுடன் ஒப்பிடுகையில் அந்த வெடிப்புகள் சில மாதங்களே ஒளிர்வதாக இருக்கும் என்று ரோயல் வானியலாளர் சமூகத்தின் மாதாந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெடிப்பு என்பது ஒரு இராட்சத வாயு மேகத்தின் விளைவாகும் என்றும் இது நமது சூரியனை விட ஆயிரக்கணக்கான மடங்கு பெரியது என்றும் இது ஒரு மிகப்பெரிய கருந்துளையால் சீர்குலைந்திருப்பதாகவும் செளதம்டன் பல்கலையை தலைமையாகக் கொண்டு வானியலாளர்கள் நம்புகின்றனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்த வெடிப்பு பார்ப்பதற்கு பிரபஞ்சம் சுமார் 6 பில்லியன் வயதாக இருக்கும்போது சுமார் 8 பில்லியன் ஒலியாண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்திருப்பதாகவும், தொலைநோக்கி வலைப்பின்னல் மூலம் தொடர்ந்தும் அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.thinakaran.lk/2023/05/14/வெளிநாடு/98512/இதுவரையில்-காணாத-பாரிய-அண்ட-வெடிப்பு-அவதானிப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி இணைப்புக்கு..

இதுக்கெல்லாம் அணுங்கப்படாது ஓணாண்டியர்... 😁

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.