Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

முத்துராஜா

உந்த யானைக்கு யார் முத்துராஜா எண்டு பேர் வைச்சது சிறித்தம்பி? :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

உந்த யானைக்கு யார் முத்துராஜா எண்டு பேர் வைச்சது சிறித்தம்பி? :face_with_tears_of_joy:

ලක්ෂ්මන් කදිර්ගාමර් - විකිපීඩියා

பெரிய கதிர்காமர்... பெயர் வைத்திருப்பார் என்பது எனது ஊகம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

முத்துராஜாவை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை : தாய்லாந்து அறிவிப்பு!

முத்துராஜாவை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை : தாய்லாந்து அறிவிப்பு!

முத்துராஜா யானைக்கு சிறப்பு சிகிச்சைகளும் விசேட பயிற்சிகளும் தொடர்ச்சியாக அளிக்கப்படுவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த யானையை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்றும் தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தினால் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு இருபத்தி இரண்டு வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானை, கடந்த 2 ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த யானைக்கு கால் எலும்பில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கவே, தாய்லாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இலங்கையில் முத்துராஜா யானை மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மீண்டும் இந்த யானையை இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்று அந்நாட்டு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முத்துராஜா யானையின் ஒரு கண்ணில் வெள்ளை பூ படர்ந்துள்ளமையும், பின்பக்க வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளமையும், முதுகில், நகங்கள் மற்றும் தோல்களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையும் தாய்லாந்து அரசாங்கம் மேற்கொண்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

தற்போது தாய்லாந்தின் லம்பன் பிராந்தியத்தில் அமைந்துள்ள, யானைகள் சரணாலயத்தில், இதற்கான சிகிச்கைகளும் அளிக்கப்படுகின்றன.

அத்தோடு, முத்துராஜாவின் நடவடிக்கைகளின் சிறப்பான மாற்றம் தற்போது தெரிவதாகவும், அந்நாட்டு மொழிக்கு இணங்க செயற்படுவதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பாகவும் தாய்லாந்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட விசேட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://athavannews.com/2023/1337870

அண்ணை முத்துராஜாவை திரும்ப தரவேண்டும் என கூறியே தாய்லாந்திடம் வழங்கியதாக அதனை பராமரித்த விகாரைக்குரிய தேரரின் பேட்டி ஒன்று இருந்ததாக நினைவு.

இவங்கள் அதனுடைய பெரிய தந்தத்துடனான தோரணைக்காகவே அதனை திரும்ப கேட்கிறதாக நினைக்கிறேன்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தின் நன்கொடையான முத்துராஜா யானையை இலங்கை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமை தொடர்பில் அதிருப்தி!

31 JUL, 2023 | 03:38 PM
image
 

யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை, தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமை ஏற்பட்டது.

குறித்த சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தின் மூலம் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக மேற்படி குழுவின் தலைவரான கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அஜித் மன்னப்பெரும சுட்டிக்காட்டினார்.

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் விலங்கியல் திணைக்களம் மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக கடந்த (18) நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற  மேற்பார்வைக் குழு கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161335

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்திலுள்ள "முத்துராஜாவின்" உடல்நிலையில் முன்னேற்றம்

Published By: DIGITAL DESK 3   17 JUL, 2024 | 11:31 AM

image
 

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட முத்துராஜா யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு முத்துராஜா யானை அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

இந்நிலையில், அங்கு அந்த யானை உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயா என்ற விலங்கின நலன்பேண் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் முறைப்பாடளித்தது.

முத்துராஜா யானை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரெயா அமைப்பு இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் முறைப்பாடளித்தது.

அதனை தொடர்ந்து இந்த யானை மீண்டும் தாய்லாந்துக்கு 2023 ஆம் ஆண்டு  ஜூலை 02 ஆம் திகதி  கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், யானை  தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டு ஒரு வருடமாகிய நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வருகிறது.

இது தொடர்பில் தாய்லாந்து தூதர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்துள்ளதாவது, 

யானையின் பின்பகுதியின் இருபுறமும் வீங்கி சீழ் வடிகிறது. யானை நடையின்றி இருப்பதால் வளைக்கப்படாத மற்றும் கடினமான இடது முன்காலுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் யானை ஊனமாகிவிடும்.

இந்நிலையில், காயம் மற்றும் சீழ் வடிதல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் வழக்கமான சிகிச்சைகளினால் இடுப்பின் இருபுறங்களிலும் உள்ள வீக்கம் முழுமையாகக் குணமடைந்துள்ளன, ஆனால் மிகவும் நுட்பமான சிகிச்சையாக நடையை  சரிசெய்வது உள்ளது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188657

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் தீர்மானம்

22 NOV, 2024 | 10:23 AM
image
 

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அதன் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. 

முத்துராஜா நீண்ட தந்தங்களை கொண்டுள்ளமையினால் அதன் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும்போது தந்தங்கள் தரையில் சிக்கி இழுக்கப்படுவதைத் தடுக்க அதன் தலையை தூக்கவேண்டியுள்ளதால் முத்துராஜா பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

இது குறித்து கால்நடை வைத்தியர் வாரங்கனா லங்காபின் வியாழக்கிழமை (21) தெரிவிக்கையில்,

யானையின் தந்தங்களின் எடையைக் குறைப்பது தொடர்பில் நிபுணர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. எனினும், எந்தவொரு தீர்மானத்தையும் முன்னெடுக்க பல அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் அனுமதி தேவைப்படும்.

ப்ளாய் சாக் சுரின் யானையின் முன் இடதுகாலில் காயம் இருப்பதால் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முத்துராஜா இரண்டு தசாப்தங்களாக மத நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு காயங்களுக்கும் உள்ளாகியிருந்தது.

2001ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகளில் முத்துராஜாவும் ஒன்றாகும்.

https://www.virakesari.lk/article/199379

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.