Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் : மனோ கணேசன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் : மனோ கணேசன்!

ஊடகங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் : மனோ கணேசன்!

ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் எடுக்கவுள்ள சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசாங்கம் தற்போது ஒலிபரப்புத் தொடர்பான சட்டமூலம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது.

குறித்த அரசாங்கத்தின் முயற்சியில் குறித்த ஆணைக்குழுவினைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்த வேளையும் ஒரு ஊடக நிறுவனத்திற்குள் சென்று விசாரணைகளை நடத்தலாம்.

இந்த விடயம் ஊடக சுதந்திரத்தினை வெகுவாகப் பாதிக்கும் என்பதே எமது குற்றச்சாட்டு.

அரசாங்கம் ஏன் தற்போது அவசர அவசரமாக இந்த ஒலிபரப்புத் தொடர்பான சட்டமூலத்தினைக் கொண்டு வருகின்றது என்ற கேள்வி எம் மத்தியில் எழுகின்றது.

அரசாங்கம் முன்னர் கொண்டு வருவதற்;கு எத்தனித்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றினை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை அரசாங்கம் சந்தித்துள்ளது.

இதற்கு ஊடகங்களும் ஒரு காரணமாக இருந்துள்ளன. எனவே முதலில் ஊடகங்களை அடக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் தற்போது இந்த சட்டமூலத்தினைக் கொண்டு வருவதற்கு எத்தனிக்கின்றது.

இது தவறான விடயமாகும். இதற்கு எதிர்க்கட்சி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் நாம் எமது எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.

எனவே தற்போது ஊடகங்களை முதலில் அ;டக்கிவிட்டு பின்னர் தமக்கு ஏற்ற விதத்தில் சட்டமூலங்களைக் கொண்டு வரலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அவ்வாறு செய்யக்கூடாது. இது தவறான விடயமாகும்.

முதலில் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள் என்றே நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

எனவே புதிய சட்டமூலங்களைக் கொண்டு வருவது போன்ற செயற்பாடுகளை மக்களாணை பெற்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னெடுக்கலாம் என அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அதற்கு நிச்சயமாக நாம் ஆதரவு வழங்குவோம்” என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1333263

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயற்சி செய்கின்றது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்துறையைக் கட்டுப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கிட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தெர்டர்பாக கருத்துத் தெரிவித்த அவர், “அரசாங்கமானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தை கொண்டுவர தற்போது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் ஊடாக ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறையை கட்டுப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயல்கின்றது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் 6 மாதங்களுக்கு மட்டுமே அலைவரிசைக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.

வருடாந்திர அனுமதிப்பத்திரம் பெற வேண்டுமெனில், குறித்த அலைவரிசையானது அரசாங்கத்திற்கு சார்பானதா அல்லது மத்தியஸ்தமாக செயற்படுகிறதா என்பது ஆராயப்படும்.

இதனால் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச அனுசரணையுடன் அரசாங்கத்திற்கு சார்பான செய்திகளை மட்டும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றே அரசாங்கம் இந்த சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் இதற்கெதிராக ஒன்றிணைந்து, அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டை தோற்கடிக்க வேண்டும்.

விரைவிலேயே நாம் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையை நீதிமன்றின் ஊடாக தோற்கடிப்போம்.

நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1333270

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of drill press, skateboard, hand drill and text

 

May be a graphic of text that says 'Dimar RICKY TAKES NAVIN TO CHURCH'

 

May be a doodle of text

 

May be an image of text

No photo description available.

May be an illustration of text

May be an illustration of text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : வஜிர அபேவர்தன!

ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : வஜிர அபேவர்தன!

ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரூபவாஹினி அலைவரிசையை 1978 இற்குப் பின்னர் நாட்டில் அறிமுகப்படுத்தியபோது, இது தேச விரோதமான செயற்பாடாகும் என பலரும் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

இதனால் சமூகம் சீரழியும் என்றும் தெரிவித்தார்கள். ஆனால், அதனைக் கருத்திற் கொள்ளாமல்தான் ஜே.ஆர். ஜயவர்த்தன அலைவரிசையை ஆரம்பித்தார்.

அன்று எதிர்ப்பினை வெளியிட்டவர்களின் பிள்ளைகள், இன்று தொலைக்காட்சிகளின் பிரதானிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் காணப்படும் ஒளிபரப்பு ஒழுங்குச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முதலில் தெளிவடைய வேண்டும்.

சிங்கப்பூரில் பத்திரிகைச் செய்திகளை காலையில் வாசிக்கலாம். ஆனால், பத்திரிகையில் உள்ளதைத் தவிர வேறு ஏதேனும் கருத்துக்களை குறித்த தொகுப்பாளர் கூறினால் 100 சிங்கப்பூர் டொலரளவில் அபராதம் விதிக்கப்படும்.

ஊடக நிறுவனங்களுக்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது. அதேநேரம், வெறுப்புப் பேச்சுக்களை வெளிப்படுத்தவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றும் சீனாவை போன்று மாற்ற வேண்டும் என்றும் ஐரோப்பா போல மாற்ற வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.

அப்படியானால், சில சட்டங்களை நாம் கொண்டுவரத்தான் வேண்டியுள்ளது.

இது தொடர்பாக நாம் மக்களுக்கு மெதுவாக தெரியப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1333273

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தப் போவதில்லை : பொதுஜன பெரமுன தெரிவிப்பு

ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தப் போவதில்லை : பொதுஜன பெரமுன தெரிவிப்பு

ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித் அவர், “மக்களுக்கான தகவலறியும் சட்டத்தினை இல்லாது செய்யும் வகையில், ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நாம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் நாம் நிச்சயமாக குரல் கொடுப்போம்.

சட்டமூலம் தொடர்பாக பெரிதாக விவாதிக்கத் தேவையில்லை. ஏனெனில், இது தொடர்பாக நீதிமன்றுக்குச் செல்லலாம்.

நாம் முதலில் இதுதொடர்பாக ஆராய வேண்டும். அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவும் நாம் தயாராகவே உள்ளோம்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உள்நாட்டு ஊடகங்களுக்கு மட்டுமன்றி, சர்வதேச ஊடகங்களுக்கும் நாட்டில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

டிஜிட்டல் ஊடகத்தின் பலம் சமூகத்தில் அதிகரித்துள்ளது. மக்களும் இவற்றை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிரபலமான தீர்மானங்கள் இல்லாவிட்டாலும், நாட்டின் நன்மைக்கான சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.

இந்த சட்டம் கொண்டுவரப்படுவதால் ஊடகவியலாளர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்று அர்த்தம் கிடையாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1333280

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்கள்மீது அடக்குமுறை பிரயோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை முறியடியுங்கள் - மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு

Published By: DIGITAL DESK 5

03 JUN, 2023 | 07:24 PM
image
 

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் ஓரங்கமாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளனர். 

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவருவதாகவும், எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறும் அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் சானக பண்டார, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஓர் உறுப்புநாடு எனவும், ஆகவே மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்குத் தயாராகிவரும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் ஐ.நா உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

'பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்குத் தாம் கொண்டிருக்கும் உரிமையை ஊடகங்களின் வாயிலாகவே அனுபவிக்கின்றனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு முற்படுகின்றனர்' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 'ஊடகங்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் பொதுவானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் சர்வாதிகாரிகளால் எப்போதும் நாட்டை ஆளமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்துவிடுவார்கள்' என்றும் சானக பண்டார எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/156861

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2023 at 16:29, தமிழ் சிறி said:

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உள்நாட்டு ஊடகங்களுக்கு மட்டுமன்றி, சர்வதேச ஊடகங்களுக்கும் நாட்டில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

பிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்ரமதுங்க பட்டப்பகலில், நடுவீதியில் வைத்து கொல்லப்பட்டதும் காணாமல் ஆக்கப்பட்டதும் மஹிந்த காலத்தில் என்று சொல்கிறார்கள் உண்மைதானோ மாத்தையா? நீங்கள் செய்தது உங்களுக்கு எதிராக பாயுமோ என்று அஞ்சுகிறீர்கள் போலுள்ளதே! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.