Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ்!

பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிசாருக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த பிரதேச செயலர்கள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள் பல இடங்களில் பொலிஸ் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எனக்கு கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை விடுத்தால் தான் அதனை ஜனாதிபதியுடன் கதைத்து பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் பிரதேச செயலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2023/1333411

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள் பல இடங்களில் பொலிஸ் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

கடவுளே!  இந்த மனிஷனின் அலப்பறை தாங்கமுடியவில்லை. யாரிடம் முறையிடுவது என்று தெரியாத பொலிஸாரா இங்கு கடமையிலுள்ளனர். இவர் தனக்குத்தானே கவுண்டமணி ரேஞ்சில் கதை வசனம் எழுதி வெளியிடுகிறாரா? என்றொரு சந்தேகமெனக்கு.

 

12 minutes ago, தமிழ் சிறி said:

மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எனக்கு கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை விடுத்தால் தான் அதனை ஜனாதிபதியுடன் கதைத்து பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஏன் ஜனாதிபதிக்கும் மாவட்ட பொலிஸ்மா அதிபருக்குமிடையில் அப்படியென்ன பகை இவர் பேசித்தீர்க்குமளவிற்கு. தன்ர படையை சேர்க்கப்போகிறாரோ? இந்தியாவிலிருந்து ஒரு இரவில் சாமான் தருவித்துவிட்டார். இவருக்கே இது கொமெடியாகத்தெரியவில்லையோ? அல்லது இது இவரது வியாதியோ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

கடவுளே!  இந்த மனிஷனின் அலப்பறை தாங்கமுடியவில்லை. யாரிடம் முறையிடுவது என்று தெரியாத பொலிஸாரா இங்கு கடமையிலுள்ளனர். இவர் தனக்குத்தானே கவுண்டமணி ரேஞ்சில் கதை வசனம் எழுதி வெளியிடுகிறாரா? என்றொரு சந்தேகமெனக்கு.

ஏன் ஜனாதிபதிக்கும் மாவட்ட பொலிஸ்மா அதிபருக்குமிடையில் அப்படியென்ன பகை இவர் பேசித்தீர்க்குமளவிற்கு. தன்ர படையை சேர்க்கப்போகிறாரோ? இந்தியாவிலிருந்து ஒரு இரவில் சாமான் தருவித்துவிட்டார். இவருக்கே இது கொமெடியாகத்தெரியவில்லையோ? அல்லது இது இவரது வியாதியோ?

கடற் தொழில் அமைச்சர் இப்போ... பாதுகாப்பு அமைச்சரின் வேலையையும் பார்க்கிறார். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

கடற் தொழில் அமைச்சர் இப்போ... பாதுகாப்பு அமைச்சரின் வேலையையும் பார்க்கிறார். 😂

இருந்து பாருங்கள்! தானே, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதாக எழுதுவார் பின்னொருநாள்.  சிலரது கனவுகள் நிறைவேறா பட்ஷத்தில் திறமை வளமை இல்லாவிட்டால் இப்படி புழுகி விட்டு பிரபல்யம் தேடுவது வழக்கம். இங்கு இவர் தேடுவது பிரபல்யம் வாக்கு சேகரிக்க. அதற்கான காரணம், இனத்தை விற்பதை தவிர வேறு தகுதி, திறமையேதும் இவரிடமில்லை. அரச அதிகாரம் தேவையில்லை அபிவிருத்தி போதும் அதற்காகவே  அரசோடு ஜனநாயகத்தில் இணைந்தோம் என்று அறிக்கை விட்டவர்கள், இப்போ ஜனநாயகமுமில்லை அபிவிருத்தியுமில்லை ஒன்றுமில்லாமல்  மீண்டும் தமிழர் வேண்டும் என்கின்றனர், இன்னும் சிலர் மக்களின் காணிகளையே காப்பாற்ற முடியாமல் உளறுகின்றனர். அரசியல் என்றால் என்ன? மக்களின் பிரச்சனை என்ன? அதற்கு தீர்வு என்ன என்று தெரியாதவர்கள் இப்படி எல்லா அமைச்சும் தங்களுக்கு கீழ்த்தான் இயங்குகிறது என்று கனவு காண்பதும், அறிக்கை விடுவதும் வழமை. இவர் எதிலுமே நிலையாய் இருந்ததில்லை, தானாக உழைத்து வாழவும் தெரியாது. தன் பிழைப்புக்காக இனத்தை விற்பது இவரது தொழில். இவரை ஒரு அரசியல் நகைச்சுவையாளனாகவே கருத முடியும். மிகவும் கஸ்ரப்பட்டு முடிந்தளவு மரியாதையாக எழுதுகிறேன் இல்லையெனில் பலருக்கு இரத்தக்கொதிப்பு வந்துவிடும் என்னால்

2 hours ago, தமிழ் சிறி said:

அதனை ஜனாதிபதியுடன் கதைத்து பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மின்வாரியம், தியேட்டர் உரிமையாளர் எங்கே? விரைந்து நிலுவையை வசூலிக்கவும் இவரிடமிருந்து.      

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.