Jump to content

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி

adminJune 3, 2023
jaffna-municipal-council.jpg?fit=648%2C3

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என பல்கலை தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவி வழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்கான இறுதித் தினம் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமையாகும். அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில்  தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில்  முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.
 
https://globaltamilnews.net/2023/191516/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ளஅதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவுசெய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்."

யாழ் பல்கலைக்கழக மூதவையின் உறுப்பினர்கள் யார் யார்? அவர்கள் பின்ணனி என்ன? 

யாழ் சைவ, வேளாளர் தவிர்ந்த வேறு யாரையேனும், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்க முடியுமா? அது சாத்தியமா? 

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணை வேந்தர்.. யாழ் மாநகர சபைக்கா.. பல்கலைக்கழகத்துக்கா..??!

செய்து யாப்பவர்கள்.. குடு அடிச்சிட்டா.. யாக்கிறார்கள்..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்குடன் சிந்திப்பவர்கள்கூட சாதி, சமயம் என வந்தவுடன் கோபமடைகிறார்கள். 

"தமிழ்ப் பெளத்தர் ஒருவர், அல்லது தமிழ்க் கிறீத்துவர் ஒருவர், அல்லது முஸ்லிம் கல்விமான் ஒருவர் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் யாழ்ப்பாணச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா ? "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

முற்போக்குடன் சிந்திப்பவர்கள்கூட சாதி, சமயம் என வந்தவுடன் கோபமடைகிறார்கள். 

"தமிழ்ப் பெளத்தர் ஒருவர், அல்லது தமிழ்க் கிறீத்துவர் ஒருவர், அல்லது முஸ்லிம் கல்விமான் ஒருவர் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் யாழ்ப்பாணச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா ? "

இதற்குள் சாதி.. மத.. இன.. வகுப்புவாதங்களுக்கு அப்பால்.. சொறீலங்கா சனாதிபதி தான் எல்லாமே. முதலில் இந்தச் சர்வாதிகாரத்தை ஒழிக்கனும்.

அப்புறம் கல்வித் தகுதி அடிப்படையில்.. தனிமனித ஒழுக்கம் உட்பட பல விடயங்களை கருத்தில் கொண்டு.. யாழ் பல்கலைக்கழக.. மற்றும் அந்த பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் சூழல்.. சமூகத்தை நன்கு அறிந்த ஒருவர் துணை வேந்தராவதே பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு சிறப்பாகும். அவரை கல்விச் சமூகம் தேர்வு செய்ய வேண்டுமே.. தவிர.. நாட்டின் சனாதிபதி.. அரசியல்வாதி.. மத இன..சாதி அடையாளங்கள்.. தெரிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. 

தமக்கான தமது எதிர்கால மாணவ சமூகத்தின்.. தம் பிராந்திய சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள ஒருவரை துணைவேந்தராக்குவதில் மாணவர்களின் உரிமையும் பாதுகாக்கப்படனும். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழக.. மற்றும் அந்த பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் சூழல்.. சமூகத்தை நன்கு அறிந்த ஒருவர் துணை வேந்தராவதே பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு சிறப்பாகும். அவரை கல்விச் சமூகம் தேர்வு செய்ய வேண்டுமே.. தவிர.. நாட்டின் சனாதிபதி.. அரசியல்வாதி.. மத இன..சாதி அடையாளங்கள்.. தெரிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. 

தமக்கான தமது எதிர்கால மாணவ சமூகத்தின்.. தம் பிராந்திய சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள ஒருவரை துணைவேந்தராக்குவதில் மாணவர்களின் உரிமையும் பாதுகாக்கப்படனும். 

வெளிநாடுவாழ் தாங்கள் இப்படிக் கூறுவது வியப்பாக இருக்கிறது. 

துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர். 

அவர், தான் வழும் சமூகம்+சூழலுக்கு(இதற்குள் சாதியும் சமூகம் மதமும்  உள்ளடங்கும்) மட்டும் உரித்துடையவர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வெளிநாடுவாழ் தாங்கள் இப்படிக் கூறுவது வியப்பாக இருக்கிறது. 

துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர். 

அவர், தான் வழும் சமூகம்+சூழலுக்கு(இதற்குள் சாதியும் சமூகம் மதமும்  உள்ளடங்கும்) மட்டும் உரித்துடையவர் அல்ல.

சொறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகச் சூழலை மேற்கு நாடுகளில் உள்ள சூழலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் சொறீலங்காவில்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே பல்கலைக்கழக துணை வேந்தர்கள்.. பல்கலைக்கழகங்களை இயக்க வேண்டிய சூழல்.. இருக்கிறது. சனாதிபதி நியமிக்கும் அரச பிரதிநிதி போலவே உபவேந்தர் செயற்படுகிறார். இந்தச் சூழலில்.. தமிழர் பகுதிகளில்.. சிங்களவர் ஒருவர் துணைவேந்தரானால்.. நிகழக்கூடிய சம்பவங்கள் அப்பிராந்திய மாணவர்களின்.. சமூக மக்களின் நலனில் எவ்வளவு அக்கறையோடிருக்கும் என்பதை போர்காலத்தில் தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுப் பெற்ற அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். எங்களின் பாதுகாப்பை நாமே தீர்மானிக்கும் வகையில்.. ஆபத்தான சூழல்களுக்குள் தள்ளிவிடப்பட்ட எத்தனையோ சம்பவங்களை தாண்டி வந்தவர்கள்.. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களால்.. தமிழ் மாணவர்கள் என்பதற்காகவே அனாதைகளாக விடப்பட்டவர்கள் என்ற வகையில்.. வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு இணையாக.. சொறீலங்கா பல்கலைக்கழக சூழல்களை எதிர்பார்க்க முடியாது.

அதுவும் சுதந்திர தாயக வேட்கை கொண்ட மக்களின் இயங்கு சக்தியாக இருந்த பல்கலைக்கழகங்களில்.. சுதந்திர கல்வி சமூகச் செயற்பாட்டை சிங்கள பெளத்த ஆளும் வர்க்கமும் ஆக்கிரமிப்பு இராணுவ இயந்திரமும் மனமுவந்து அங்கீகரிக்கும் என்று.

இதற்குள் நீங்கள்.. சாதிய.. மத.. இன வகுப்புவாதங்களை வேறு திணித்து சூழலை சிக்கலாக்குகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதற்காகச் சொல்கிறேன்.. யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள் தரத்தில்.. பல வகுப்புவாத பின்னணி கொண்டவர்களும் இருந்தே உள்ளனர். நாங்கள் கல்விச் சூழலில் எந்த வகையான வகுப்புவாதங்களையும் அங்கீகரிப்பதில்லை என்பதால்.. எல்லாரும் மாணவர்களே.. கல்விச் சமூகத்தவர்களே என்ற சிந்தனையை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பதாலும்.... சொறீலங்காவில் உள்ள சிங்கள பெளத்த தேசிய வாத ஆதிக்கத்தின் தாக்கம் எவ்வளவு தீவிரமான ஊடுருவல்களை பலகலைக்கழகச் சூழலுக்குள் கொண்டுள்ளது என்பதை உணர்ந்திருப்பதாலும்.. இதனை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு : விசேட பேரவை அமர்வு ஜூலை 12 ஆம் திகதி

Published By: Vishnu

26 Jun, 2023 | 08:32 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நால்வரில், மூவரைத் திறமைப் புள்ளி ஒழுங்கில் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டபட்டுள்ளது.  

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தனர்.

எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் வைத்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் கண்காணிப்புடன் விண்ணப்பித்திருக்கும் மூவரினதும் கல்வித் தகைமை, அனுபவம், மற்றும் ஆளுமைத் திறன்களை மையப்படுத்தி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட 7 வகைப் புள்ளித் திட்டத்தின் படி பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் புள்ளிகளையிடுவர்.

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெறும் மொத்தப் புள்ளிகளின் படி - திறமை அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து அவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/158647

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 19:09, Kapithan said:

முற்போக்குடன் சிந்திப்பவர்கள்கூட சாதி, சமயம் என வந்தவுடன் கோபமடைகிறார்கள். 

"தமிழ்ப் பெளத்தர் ஒருவர், அல்லது தமிழ்க் கிறீத்துவர் ஒருவர், அல்லது முஸ்லிம் கல்விமான் ஒருவர் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் யாழ்ப்பாணச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா ? "

தென் பகுதியில் அப்படி நடந்தால் நடக்கலாம். அங்கு அப்படி நடப்பதட்கு சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் துரைராஜா பொறியியல் பீட டீன் ஆக வருவதட்கு சிங்கள பேராசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவர் அங்கு உப வேந்தராக போட்டியிடடாள் கூட தெரிவு செய்யப்பட்டிருப்பார்.

யாழில் பிற மாவட்த்தை சேர்ந்த ஒருவர் பேராசிரியராக இருக்கிறார். அப்படியான நிலைமைக்கு வர தான் சந்திக்க வேண்டிய போராட்டத்தை கூறும்போது கவலையாக இருந்தது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 23:20, nedukkalapoovan said:

சொறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகச் சூழலை மேற்கு நாடுகளில் உள்ள சூழலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் சொறீலங்காவில்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே பல்கலைக்கழக துணை வேந்தர்கள்.. பல்கலைக்கழகங்களை இயக்க வேண்டிய சூழல்.. இருக்கிறது. சனாதிபதி நியமிக்கும் அரச பிரதிநிதி போலவே உபவேந்தர் செயற்படுகிறார். இந்தச் சூழலில்.. தமிழர் பகுதிகளில்.. சிங்களவர் ஒருவர் துணைவேந்தரானால்.. நிகழக்கூடிய சம்பவங்கள் அப்பிராந்திய மாணவர்களின்.. சமூக மக்களின் நலனில் எவ்வளவு அக்கறையோடிருக்கும் என்பதை போர்காலத்தில் தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுப் பெற்ற அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். எங்களின் பாதுகாப்பை நாமே தீர்மானிக்கும் வகையில்.. ஆபத்தான சூழல்களுக்குள் தள்ளிவிடப்பட்ட எத்தனையோ சம்பவங்களை தாண்டி வந்தவர்கள்.. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களால்.. தமிழ் மாணவர்கள் என்பதற்காகவே அனாதைகளாக விடப்பட்டவர்கள் என்ற வகையில்.. வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு இணையாக.. சொறீலங்கா பல்கலைக்கழக சூழல்களை எதிர்பார்க்க முடியாது.

அதுவும் சுதந்திர தாயக வேட்கை கொண்ட மக்களின் இயங்கு சக்தியாக இருந்த பல்கலைக்கழகங்களில்.. சுதந்திர கல்வி சமூகச் செயற்பாட்டை சிங்கள பெளத்த ஆளும் வர்க்கமும் ஆக்கிரமிப்பு இராணுவ இயந்திரமும் மனமுவந்து அங்கீகரிக்கும் என்று.

இதற்குள் நீங்கள்.. சாதிய.. மத.. இன வகுப்புவாதங்களை வேறு திணித்து சூழலை சிக்கலாக்குகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதற்காகச் சொல்கிறேன்.. யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள் தரத்தில்.. பல வகுப்புவாத பின்னணி கொண்டவர்களும் இருந்தே உள்ளனர். நாங்கள் கல்விச் சூழலில் எந்த வகையான வகுப்புவாதங்களையும் அங்கீகரிப்பதில்லை என்பதால்.. எல்லாரும் மாணவர்களே.. கல்விச் சமூகத்தவர்களே என்ற சிந்தனையை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பதாலும்.... சொறீலங்காவில் உள்ள சிங்கள பெளத்த தேசிய வாத ஆதிக்கத்தின் தாக்கம் எவ்வளவு தீவிரமான ஊடுருவல்களை பலகலைக்கழகச் சூழலுக்குள் கொண்டுள்ளது என்பதை உணர்ந்திருப்பதாலும்.. இதனை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

நெடுக்ஸ், 

இந்த வாயால வடை சுடும் கதைகள் எல்லாம் வேண்டாம். 

நான் எழுதியதற்கு நேரடியான பதிலைத் தரலாமே ? 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  பல்கலை பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு Inbox

adminJuly 6, 2023

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, “நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து (எஸ். ஐ. எஸ் ) அழைக்கிறோம். யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் கேக்கிறோம்” என்று பேசப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தெரிவுக்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என்றும் இதனால் பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.
 
https://globaltamilnews.net/2023/192732/

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.