Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2023 | 12:27 PM
image
 
(எம்.மனோசித்ரா)

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகள்  வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை மூலோபாய குறைபாடுகள் கொண்ட நாடாக பட்டியலிடப்படலாம். அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.

தேசிய கொள்கையொன்றின் கீழ் நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டியது அவசியமாகும். தேசிய கொள்கையை வகுப்பதற்கான குழுவை நியமிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

தேசிய கொள்கை வகுப்புச் செயற்பாடுகளின் போது அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

எனினும் மேற்படி விடயங்கள் குறித்து உடன்பாடு ஒன்றை உருவாக்கி அவற்றை அமுல்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

முன்னைய அரசாங்கங்கள் தேசிய கொள்கை ஒன்றை வகுக்கத் தவறியதன் காரணமாகவே இன்றளவில் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156947

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத சட்டம் தான் பயங்கரவாத்தின் உச்சக்கட்டம்.
உண்டியலூடாக அனுப்பும் பணத்தை பற்றி நரி எங்கோ கேள்விப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

பயங்கரவாத சட்டம் தான் பயங்கரவாத்தின் உச்சக்கட்டம்.
உண்டியலூடாக அனுப்பும் பணத்தை பற்றி நரி எங்கோ கேள்விப்பட்டு விட்டது.

நரி தான் தப்ப பயங்கரவாதம் எண்டு கதை விடுது.

அவர்கள் சொல்லும் பயங்கரவாதம் முடிந்து  பத்து வருடங்களுக்கு மேலாகின்றது. அவர்கள் மேற்கோள் காட்டும் பயங்கரவாத்தை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும் வெளிப்படையாகவே கூறுகின்றார்கள்..அப்படியிருந்தும் பொருளாதாரத்தில் இன்றும் தவண்டடிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை இன்னும் அதல பாதாளத்துக்கு கொண்டு போகப்போகிறார், இப்போது, இவரது சுழற்சி முறை. அவர் தன் பங்குக்கு  சுருட்ட வேண்டாமோ? தான் யாரென காட்டவேண்டாமோ? அதுவரை பதவியில் நிலைத்திருந்தால்; நாட்டை சூறையாடுவதற்கும் பதவியை தக்க வைப்பதற்கும் கையிலெடுக்கும் ஆயுதம் பயங்கரவாதம். அவர்கள் முறியடித்த பயங்கரவாதத்தை இனி, இவர் முறியடிக்கப்போகிறாராம். சொல்லவருவதேதென்றால் பேச்சுவார்த்தை எல்லாம் நாடகம், அங்கு ஒன்றுமே பேசப்போவதில்லை, தாங்கள் செய்யும் மதப்பயங்கரவாதத்தை நிஞாயப்படுத்தப்போகிறார்கள், அதை தமிழர் ஆமோதிக்க வேண்டும். இதையே அரைவேக்காட்டு முன்னாள் நீதியரசர் கட்டியம் கூறிவிட்டார். பிரச்சனை எங்கோ இருக்க வேறெங்கோ தேடுகின்றனர்! விடை கிடைக்குமா? உப்பிடியே நாடு அழியும்வரை சுற்றிக்கொண்டு இருப்பார்கள். எதை எதிர்பார்த்து சர்வதேசம் கேட்டுகேள்வியில்லாமல் வாரி வழங்குதோ; அதை அவர்கள் அடையும்வரை!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2023 | 12:27 PM
 
(எம்.மனோசித்ரா)

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை மூலோபாய குறைபாடுகள் கொண்ட நாடாக பட்டியலிடப்படலாம். அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.

தேசிய கொள்கை வகுப்புச் செயற்பாடுகளின் போது அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

முன்னைய அரசாங்கங்கள் தேசிய கொள்கை ஒன்றை வகுக்கத் தவறியதன் காரணமாகவே இன்றளவில் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156947

முன்னைய அரசாங்கங்களை குற்றம் சாட்டும்போது இவர் தன்னை தானே குற்றம் சாட்டுகிறார். இவர் 6  அல்லது 7 தடவைகள் பிரதமராக இருந்திருக்கிறார். அப்போது  எல்லாம் செய்ய முடியாததை இப்போது செய்ய முட்சிக்கிறார். தமிழனை அழிப்பதட்காக மட்டும் இவர்கள் தேசிய கொள்கையில் ஒற்றுமைப்பட்டிருக்கிறார்கள். மற்றப்படி எல்லாம் சுயநலத்துடன் அரசியல் செய்பவர்கள்தான் இவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Cruso said:

தமிழனை அழிப்பதட்காக மட்டும் இவர்கள் தேசிய கொள்கையில் ஒற்றுமைப்பட்டிருக்கிறார்கள்.

அது தான் தேசிய கொள்கை என  பண்டாரநாயக்க  வழி வகுத்து சென்றார் அல்லவா. ஜே ஆர் என்ன , மகிந்த என்ன , ரனில்  என்ன ஒரே சூத்திரம் தமது பதவியை காக்க வல்லது என்பது. 
வாக்களிக்கும் சிங்களவர்கள் மாறாத வரை சூத்திரம் செல்லுபடியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

சிங்களவனுக்கு யுத்த வெற்றியையும் (??) சிங்கள பவுத்தம் என்பதையும் தூக்கி காண்பித்தால் போதும். இப்போதும் என்ன, தெடகிலே சிங்கள பவுத்தம் எண்டு போட்டி போட்டுகொண்டு கூவ ஆரம்பித்து விடடார்கள். இதுதான் இயலாமையினால் தூக்கப்படும் கடைசி ஆயுதம். நாடு எக்கேடு கேடடாலும் கலைப்படாத *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்கள். மக்கள் மடையர்களாக இருக்கும் வரிக்கும் இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Cruso said:

குரூசோ உங்களிடம் ஒரு கேள்வி. தற்போதைய பொருளாதார சிக்கலில் இனவாதம் எவ்வளவு காலத்துக்கு சிங்கள மக்களிடம் எடுபடும்?

நீங்கள் சிறிலங்காவில் இருந்து கருத்து எழுதுவதாக எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

குரூசோ உங்களிடம் ஒரு கேள்வி. தற்போதைய பொருளாதார சிக்கலில் இனவாதம் எவ்வளவு காலத்துக்கு சிங்கள மக்களிடம் எடுபடும்?

அடுத்த தேர்தலுக்குமுன்னர் எப்படியோ நிலைமையை வழமைக்குக்கொண்டு வருவார்கள். இப்போது இலங்கையின் ரூபாவின் பெறுமதியை இன்னும் வலுப்படுத்துவார்கள். அதாவது இறக்குமதி , கடன் திருப்பி செலுத்துதல் போன்றவற்றை இன்னும் தாமதப்படுத்துவார்கள். அப்போது மக்களுக்கு பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கக்கூடிய நிலைமை உருவாகும். இன்றைக்கு செய்தியின்படி கம்பிகளின் (Reinforcement ) விலை அரைவாசியாக குறைத்திருக்கிறார்கள். சீமெந்தின் விலை குறையும். அப்போது நிர்மாண வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்போகின்றது. மக்களுக்கு வேலைகிடைக்கும் பணமும் கிடைக்கும்.

பொதுவாக பொருளாதார நெருக்கடி என்பது நடுத்தர மக்களுக்குத்தான். கிராமங்களில் பாதிப்புபெரிதாக இல்லை. இப்போது விவசாயம், மீன்பிடி எல்லாம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மக்கள் பழையது  எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். 

இப்போது மக்கள் வேறு திசைக்கு மாறி விடடார்கள். வடக்கு கிழக்கில் பவுத்த ஆலயம் அமைக்க முடியாது , பவுத்தத்துக்கு ஆபத்து வந்து விட்ட்து, புத்தரை அவமதித்து விடடார்கள் என்பதுதான் பேச்சு.

அத்துடன் சில தொலைக்காட்சிகளும் இதனை ஊக்குவிக்கின்றது. பதுங்கி இருந்த ஞான சாரார், இன்னும் சில சிங்கள தீவிரவாதிகளும் வெளியே வந்து விடடார்கள்.

எனவே இனவாதமானது எந்த காலத்திலும் இலங்கையில் ஈடுபடும். பொதுவாக கிராமப்புறங்களில் நன்றாகவே எடு படும். 

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதம் களைத்து மதவாதம் மேலோங்கி நிக்கிறது. தேர்தலுக்கான முதலீடு அது. அரசியலுக்கான திறமையோ, வலுவோ இல்லாதவர்கள் தமிழரின் இரத்தத்தையும் வாழ்வையும் முதலீடாக வைத்து சூதாடி ஜெஜிக்கிறார்கள்.. ராஜபக்க்ஷ கூட்டம் பின்னணியில் செயற்பட்டு பௌத்த சிங்களவரை உசுப்பேத்தி மீண்டும் இழந்த அரசியலில் நுழைய முயற்சிக்கின்றனர், இதை எதிர்த்தால்  சிங்களவாக்கு கிடையாது, ஆதரித்தால் தமிழர்வாக்கு கிடையாது ஆகவே நரியார் தந்திரமாக மௌனமாக தலையசைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் பௌத்தமும் இராணுவமும் இல்லாமல் அல்லது எதிர்த்து இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  இவற்றை மட்டும் நம்பி கனகாலம் ஏமாற்ற ஏலாது. நீண்டகாலம் ஏமாற்றுவதற்கு இது உதவியிருந்தாலும் இனிமேல் கஸ்ரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.