Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)
சிறிலங்காவின் முப்படைகளின் சவாலை முறியடித்து 300 போராளிகளை மீட்டெடுத்த கடற்புலிகளின் வீர அத்தியாயம்

 

மட்டக்களப்பிலிருந்து தளபதி ஜெயம் அவர்களோடு 300 க்கு மேற்பட்ட போராளிகள் வன்னியை நோக்கி புறப்பட்டிருந்தனர் நீண்டநாட்களின் பின்னர் காட்டுப்பாதைகளினூடு நகர்ந்து திருகோணமலைக் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த பாஸ்கர்  முகாமிற்கு அவர்கள் வந்துசேர்ந்திருந்தனர். இந்தத் தகவல் எப்படியோ எதிரிக்குத் தெரிந்துவிட வன்னிக்கான காட்டுப்பாதைகளை வழிமறித்து இராணுவம் குவிக்கப்பட்டு 300 விடுதலைப்புலிகளையும்  வன்னி நோக்கி நகர்வதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் அப்படி நகர்ந்தால் அனைவரையும் அழிப்போம் எனவும் சவால் விட்டிருந்தனர்.

அவசர அவசரமாக தலைவர் அவர்களால் கடற்புலிகளின் படகுக்கட்டளை அதிகாரிகளுக்கான இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றது அதில் மட்டக்களப்பிலிருந்து திரியாய் காட்டுப்பகுதியில் வந்துசேர்ந்துள்ள 300 போராளிகளையும் கடலால் படகுகளில் வன்னிக்கு ஏற்றிக்கொண்டுவரும்படி தலைவரால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அடுத்தநாளே அதற்கான நடவடிக்கையில் எமது அணிகள் களமிறங்கியது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான திரியாய் கடற்கரையில் வைத்து 300 போராளிகளையும் ஏற்றியெடுப்பதென முடிவெடுக்கப்பட்டது ஆனால் தீர்மானித்த இடத்திலிருந்து இரண்டு பக்கமும் 1 கிமீ இற்கும் குறைவான தொலைவுகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

கரையோர கடல்ரோந்துகளும் அதேவேளை கரையோரங்களில் கடல்கண்காணிப்பு ரேடார் நிலையங்கள் மூலமும் தொடர்கண்காணிப்புகளில் கடற்படை ஈடுபட்டிருந்தது. 

இந்த எதிர்ப்புகளை முறியடித்தே 300 போராளிகளையும் ஏற்றி எடுக்கவேண்டிய இறுக்கமான களச்சூழலை நாம் எதிர்நோக்கவேண்டியிருந்தது.

2007-09-26ம் நாள் மாலை செம்மலைக் கடற்கரையிலிருந்து எமது வேகப்படகுகள் புறப்படத் தயாரானது. படகுக் கட்டளை அதிகாரிகளாக கார்வண்ணன், சின்னவன், சுதா, நிசாந்தன் ஆகியோர்களின் படகுகளுடன் எமது தொகுதிப் படகுகளும் இணைந்து கொண்டது. 

நள்ளிரவு 11 மணிக்கு செம்மலையிலிருந்து 40 kimii தொலைவில் உள்ள திரியாய் நோக்கி படகுகள் வேகமெடுத்தது. அதேநேரம் காட்டுக்குள்ளிருந்து 300 போராளிகளும் கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்தனர். எமது படகுகள் கொக்குத்தொடுவாயைக் கடந்ததும் எதிரியின் ரேடார் அவதானிப்பு நிலையங்கள் மூலம் கடற்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.

திருகோணமலையில் இருந்து டோறாக்கள் எம்மைத் தடுப்பதற்காக விரைந்துகொண்டிருந்தது.

புல்மோட்டைக்கு உயரே எமது படகுகள் சென்றபோது அதனை வழிமறிக்கமுயன்ற சிங்களக் கடற்படையுடன் பெரும் கடற்சமர் மூண்டது. இழப்புக்களுடன் கடற்படை பின்வாங்கிச் செல்ல மீண்டும் எமது படகுகள் திரியாய் நோக்கிச் சென்றது.

எமது படகுகளை கரைக்கு கொண்டுசெல்லும்போது எதிரிகளின் கரையோர முகாம்கள் இரண்டிலிருந்தும் சரமாரியான துப்பாக்கி வேட்டுக்கள் எம்மை நோக்கி சீறிப்பாய்ந்தது. எனவே தாக்குதல் வரும் திசைகளைக் கண்டறிந்து அவைமீது எமது படகுகளில் பூட்டப்பட்டிருந்த கனரகத் துப்பாக்கிகளால் தாக்குதலைத் தொடுத்தபடி கரையை நோக்கிச் சென்றோம். ஆனால் முதல்தடவை எம்மால் கரையை நெருங்கமுடியாதவாறு தாக்குதல் மிக மூர்க்கமாக மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தது.

மீண்டும் கடற்தாக்குதல் வியூகம் அமைத்துக்கொண்டு இரண்டாவது தடவையாக களமிறங்கினோம்.

இம்முறை எமது படகுகள் மூர்க்கமான தாக்குலைத் தொடுத்தபடி கரையை நெருங்க முயற்சித்தது. இரண்டு பக்கங்களிலிருந்தும் வந்துகொண்டிருந்த எதிரியின் கனரகவேட்டுக்களைத் தடுத்து நிறுத்த விரைந்த எமது படகுகள் அதனைக் கட்டுப்படுத்த வேட்டுக்களைப் பொழிந்தது. அவ்வேளை கரையை அடைந்த நிசாந்தனின் படகில் வெடிபிடிக்க நிசாந்தன் கடலில் தூக்கி வீசப்பட்டான். சுதாவின் படகில் ஒரு போராளி வீரச்சாவடைய, எமக்கு ஏற்பட்ட காயங்களூடு இரத்தம் பெருக்கெடுக்காதிருக்க துணிகளால் கட்டிக்கொண்டு நாம் கரைக்கு படகுகளைக் கொண்டுசென்று போராளிகளை ஏற்றியெடுத்துக்கொண்டிருந்தோம்.

27ம் திகதி அதிகாலை 300 போராளிகளையும் பாதுகாப்பாக வன்னிக்கு ஏற்றிக் கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டு எமது படகுகள் கரையடைந்தது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவான லெப் கேணல் நிசாந்தனுடன் ஐந்து கடற்புலி வீரர்களை இழந்துவிட்ட அந்த நாள் இன்றுடன் 13 ஆண்டுகளைக் கடந்தும் நெஞ்சத்தில் நீங்காத நினைவாகச் சுழல்கின்றது.

லெப்.கேணல் நிசாந்தன் அவர்களி்ன் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்! - Tamilarul.Net -  24மணி நேரச் செய்திகள்

அந்தச் சண்டையில் எனது கைகளைத் துளைத்த குண்டுகளின் தழும்புகளில் இன்றும் வலிகளால் ஏற்படும் வேதனைகளை, நிசாந்தனின் வீரச்சாவும் அவனது தியாகமும் தணித்துவிடுகின்றது.

கனத்த நினைவுகளுடன்....
புலவர்,
கடற்புலிகள்.

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
Just now, ஈழப்பிரியன் said:

வன்னி.

😅🫡

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பதிவுக்கு நன்றி வன்னி.

Ohhh Sorry @நன்னிச் சோழன்

15 minutes ago, நன்னிச் சோழன் said:

😅🫡

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தகவல்களுக்கு நன்றி நன்னி. 🙏

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

தகவல்களுக்கு நன்றி நன்னி. 🙏

🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர் படைத்துறைப் பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
5 hours ago, nochchi said:

தமிழர் படைத்துறைப் பதிவுக்கு நன்றி.

🙏



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.