Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

No photo description available.

கடற்புலிகளின் முதலாவது தரைத்தாக்குதல் படையணியின் பொறுப்பாளராக லெப் கேணல் அருச்சுனா அண்ணை நியமிக்கப்பட்டபோது அது அருச்சுனா படையணியாகவே 1995 யூலை முற்பகுதிவரை அழைக்கப்பட்டு வந்தது. லெப் கேணல் சூட்டியண்ணையின் வீரச்சாவிற்கு (மண்டைதீவுத் தரையிறக்கம் மற்றும் தாக்குதலில்)  பின்னர் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி “சூட்டி படையணி”என 1995/யூலை 5 கரும்புலிகள் நாளன்று சிறப்புத்தளபதி சூசை அவர்களால் பெயர் சூட்டப்பட்டு தரைத்தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தது.

  1. யாழ்தேவி எதிர்ச்சமர், 
  2. பூநகரி வெற்றிச்சமர்,
  3. உடுத்துறை நாகர்கோவில் முன்னரங்க தடுப்பு.
  4. மண்டைதீவு முகாம் தாக்குதல்,
  5. சூரியக்கதிர்-1 எதிர்ச்சமர்,
  6. சூரியக்கதிர்-2 எதிர்ச்சமர்,
  7. யாழ்/தொண்டமனாறு முன்னரங்க தடுப்பு,
  8. யாழ்/வடமராட்சித் தாக்குதல்கள்,
  9. ஓயாத அலைகள்-1 நடவடிக்கை,
  10. சத்ஜெய எதிர்ச்சமர்,
  11. ஓயாத அலைகள்-2 நடவடிக்கை,
  12. கிளிநொச்சி-பரந்தன் நிலமீட்பு நடவடிக்கை,
  13. ஜெயசிக்குறு எதிர்ச்சமர்,
  14. ஓயாத அலைகள்-3 நடவடிக்கை மற்றும் ஆனையிறவு வெற்றிச்சமர், யாழ் அரியாலை, தனங்கிளப்பு, நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி நோக்கிய முன்னேற்ற நடவடிக்கை,
  15. மன்னார் முன்னரங்கத் தடுப்பு,
  16. மணலாறு முன்னரங்கத் தடுப்பு,
  17. தண்ணிமுறிப்பு முன்னரங்கத் தடுப்பு,
  18. வட்டுவாகல் முன்னரங்கத் தடுப்பு,
  19. சாலை முன்னரங்கத் தடுப்பு, 
  20. முள்ளிவாய்க்கால் சமர்கள்

என இறுதிப்போர் வரை சூட்டி படையணி களமாடியிருந்தது. அதன் தளபதிகளில்,

  • லெப் கேணல் அருச்சுனா,
  • லெப் கேணல் சூட்டி,
  • லெப் கேணல் சுதர்சன்,
  • லெப் கேணல் விடுதலை, 

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.

1993 காலப்பகுதியில் கடற்புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக செயற்பட்டு பின்னர் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் தளபதியாகச் செயற்பட்டு 1995 இல் இதே நாளில் யாழ்/மண்டைதீவில் அமைந்துள்ள சிங்களப் படைமுகாம் தகர்ப்பில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட லெப். கேணல் சூட்டி அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.

 

நினைவுகளுடன்...
புலவர்
கடற்புலிகள்

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்னிச்சோழன், உங்கள் தகவல் திரட்டல்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

நன்னிச்சோழன், உங்கள் தகவல் திரட்டல்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். 🙏

நன்றி ஐயனே.

(தெளிவிற்காக, இது எதுவும் நான் எழுதவில்லை. இது புலவர் என்ற முன்னால் கடற்புலிகளின் கட்டளையாளர் எழுதியவையே.)



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.