Jump to content

ரணிலுக்கு, தமிழ் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?- யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு, தமிழ் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?யதீந்திரா
 

இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வரவேண்டுமென்று, ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அண்மையில் இங்கிலாந்திற்கு சென்றிருந்த, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு தலைவர், அண்ணாமலையும் இவ்வாறானதொரு கருத்தையே அங்கு வலியுறுத்தியிருக்கின்றார். தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒன்றாகச் செல்ல வேண்டுமென்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

ரணில் இந்த வேளையில் இவ்வாறு கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக குறிப்பிட்ட, ரணில் விக்கிரமசிங்க, இப்போது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டுமென்று கூறுகின்றார். ரணிலின் கூற்றுக்கு பின்னால், காலத்தை இழுத்தடிக்கும் நோக்கம் இருக்கலாம். அரசியலமைபிலுள்ள 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருப்பதை புரிந்துகொண்டு, இவ்வாறானதொரு கருத்தை ரணில் தெரிவித்திருக்கலாம்.

உங்கள் பக்கத்தில் ஒற்றுமையில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் யாருடன் பேசுவதென்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இப்படியான கருத்து கொழும்பிலுள்ள தூதரக மட்டங்களிலும் உண்டு. மேற்கு நாட்டு தூதுவர் ஒருவர் என்னிடம் ஒரு முறை இப்படிக் கேட்டார். உங்கள் பக்கத்திலுள்ள கட்சிகள் மத்தியில் குழப்பங்கள் காணப்படுகின்றதே. இந்;த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் யாருடன் பேசுவது? எனது பதில், நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனால் தமிழ் கட்சிகள் மத்தியிலிருக்கும் குழப்பங்களுக்காக, நீங்கள், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை புறம்தள்ளமுடியாது.

தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவர்கள் தங்களுக்குள் பிளவுபடக் கூடாது. ஒரு ஜக்கிய முன்னணியாக செயற்பட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் கடந்த பத்து வருடங்களாக பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் தமிழ் கட்சிகள் ஒன்றுபடவில்லை. மேலும், மேலும் பிளவுபட்டே சென்றனர்.

இந்த நிலையில், உள்ளுராட்சி தேர்தலை காரணம் காண்பித்து, வீட்டுச் சின்னத்தின் கீழிருந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிளவுற்றது. தமிழரசு கட்சி, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணியிலிருந்த மூன்று கட்சிகளும் இணைந்து, குத்துவிளக்கு சின்னத்தில் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்கிவருகின்றனர். அவர்களுடன் இணைந்து பயணிப்பாரென்று எதிர்பார்க்கப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரனோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய மணிவண்ணணையும் இணைத்துக் கொண்டு, தனியாக செயற்பட்டுவருகின்றார். மறுபுறம், (சைக்கிள் சின்னம்) இந்திய எதிர்ப்பு அரசியல் கட்சியான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி) தொடர்ந்தும் ஏனை கட்சிகளை இந்திய முகவரென்று கூறிக்கொண்டு, தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். அந்த வகையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர், தென்னிலங்கையின், சரத்வீசசேகர, விமல்வீரவன்ச, உதய கம்பன்பில ஆகியோரின் இந்திய எதிர்ப்பு வரிசையில் இருக்கின்றார்.

தமிழர் அரசியல் இவ்வாறு பல அணிகளாக பிளவுற்றிருக்கும் சூழலில்தான், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டுமாயின், தமிழ் கட்சிகள் ஒன்றாக வரவேண்டுமென்று ரணில் கூறுகின்றார். குறிப்பாக 13வது திருத்தச்சட்ட விடயத்தில், சிங்கள கடும்போக்காளர்கள் மட்டுமல்ல, மறுபுறம், தமிழ் தேசிய தரப்புக்களுக்குள்ளும் பிளவுகள் உண்டு என்பதை நன்றாக புரிந்து கொண்டே, தமிழ் கட்சிகளை ஒன்றாக வருமாறு ரணில் அழைக்கின்றார். விரைவில் இந்தியாவிற்கு செல்லவுள்ள நிலையிலேயே ரணில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இவ்வாறான அப்பிராயம் புதுடில்லியிலும் உண்டு. இந்தியா 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தெளிவாக கூறிய பின்னரும் கூட, இந்தியாவிடம் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைப்பதை புதுடில்லி எவ்வாறு நோக்குமென்பதும் முக்கியமானது.

spacer.png

இறுதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கர், இந்த விடயம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். 13வது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் உங்களோடு நிற்கும் அதற்கப்பால் செல்வதை கூடாதென்று இந்தியா கூறவில்லை, ஆனால், அந்த விடயத்திற்கு இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாதென்பதையே அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இதற்கு பின்னரும் கூட, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், சமஸ்டி தொடர்பில் குறிப்பிட்டதை நிச்சயம் புதுடில்லி ரசித்திருக்காது.

இந்த விடயத்தை ரணில் நிச்சயம் தனகுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார். ரணில் மிகவும் தந்திரமான அரசியல்வாதி. ஏனையவர்கள் போன்று ரணிலை கையாளுவது கடினம். ரணில் ஆரம்பத்திலேயே 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தென்னிலங்கையில் பௌத்த பிக்குகள், 13இன் பிரதியை கொழுத்தி தங்களின் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 13வது திருத்தச்சட்டத்தை தான் உச்சரித்தால், தென்னிலங்கையில் எதிர்ப்புக்கள் வெளிவரும் என்பதை தெரிந்து கொண்டுதான், ரணில் அவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் பௌத்த பிக்குகள் வெளியில் வருவதற்கு முன்பாகவே, வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (முன்னணி) 13வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வடக்கின் வீதிகளில் இறங்கியிருந்தது. பௌத்த பிக்குகள் 13இன் பிரதியை கொழுத்தியது போன்று, அவர் செய்யவில்லை. அது ஒன்றுதான் பௌத்த பிக்குகளுக்கும், காங்கிரசுக்குமுள்ள வித்தியாசம். ஆறு கட்சிகள் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கில் வீதிகளில் ஊர்திப்பவணியை முன்னெடுத்தது. இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய கட்சிகளை இந்திய முகவர்களென்று கஜேந்திர குமார் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் 13வது திருத்தச்சட்டத்தை மட்டும் தாங்கள் எதிர்க்கவில்லை மாறாக, அதனை வலியுறுத்தும் இந்தியாவையும் எதிர்க்கின்றோம் என்பதையே அவர்கள் குறிப்பிட்டனர். அதே வேளை, பூபதி கணபதிப்பிள்ளை நினைவு தினத்தின் போது, இந்திய படைகள் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாகவும், தமிழ் இளைஞர்களை கொன்றதாகவும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இப்போது மீண்டும் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ் கட்சிகளை நிர்பந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் (முன்னணி) வெளிப்படையாகவே இந்திய எதிர்ப்பை மக்கள் மத்தியில் விதைத்துவரும் ஒரு கட்சி என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. அவர்கள் முன்னெடுத்துவரும் 13 எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பின் நீட்சிதான். மறுபுறம், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கும் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சியும், 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. தொடர்ந்தும் சமஸ்டியை, உச்சரித்துக் கொண்டிருப்பதுடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் பேசிவருகின்றது. ஆனால் அவ்வாறானதொரு புதிய அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான சூழல் நாட்டில் இல்லை. பொருளாதார நெருக்கடியை ஒரு சாதகமான விடயமாக பலரும் சுட்டிக்காட்டினாலும் கூட. 13வது திருத்தச்சட்டத்தையே, அதிகமென்று வாதிடும் தென்னிலங்கை கடும்போக்கு தரப்புக்கள், 13இற்கும் அதிகமான விடயங்களை தமிழ் மக்களுக்கு வழங்குவதை எவ்வாறு ஆதிரிக்கும்? இதற்கு என்ன பதில்? புதிய அரசியல் யாப்பு தொடர்பில் வாதிடுபவர்கள் எவரிடமும் இந்தக் கேள்விக்கான தெளிவான பதில் இல்லை. அவ்வாறாயின் 13இற்கும் குறைவான அதிகாரங்களை முன்வைக்கும் யாப்பாகவே அது இருக்க முடியும்.

இந்த விடயங்கள் அனைத்தையும் நன்கு குறித்து வைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவிற்கு செல்லும் போது, இந்த விடயங்களை அங்கு நிச்சயம் முன்வைப்பார். அதாவது, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதில் தான் அக்கறையுடன் இருந்தாலும் கூட, அதற்கு இரண்டு பக்கத்திலும் தடைகள் இருப்பதாக அவர் குறிப்பிடுவார். இந்த நிலையில் விடயங்களை படிப்படியாகத்தான் செய்ய முடியுமென்று வாதிடுவார். இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழ் கட்சிகள் ஒரணியாக என்ன செய்ய வேண்டும்?

spacer.png

13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் நாம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றோம், பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது சுட்டிக்காட்டிய, ஒத்துழைப்புடன் கூடிய சமஸ்டிதான் எங்களின் நிலைப்பாடு, எனினும், 13வது திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துவதையே இன்றைய சூழலில் ஒரேயொரு சாத்தியமான தீர்வாக நாங்கள் கருதுகின்றோம். இதற்காக இந்தியாவின் ஆதரவை வலுவாக கோருவதுடன், ரணில் விக்கிரமசிங்க கூறியது போன்று, 13வது திருத்தச்சட்டத்தை அவர் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்தில், இந்தியா ஒரு மூன்றாம்தரப்பு மேற்பார்வையாளராக செயலாற்ற வேண்டும். இந்தியா பங்குபற்றும் மூன்றாம் தரப்பொன்றே இலங்கைக்கு பயன்படும். வேறு எந்த நாடுகளது பங்களிப்பும் இந்த விடயத்தில் பயன்படாது. இதனையே தமிழ் மக்கள் கோருகின்றார்கள். இதுவே கட்சிகளின் ஒன்றுபட்ட உறுதியான நிலைப்பாடாகும். மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தில் இந்த விடயங்களை குறிப்பிட வேண்டும். தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் மதில் மேல் பூனை நிலைப்பாட்டை முன்வப்பதன் மூலம் இந்தியாவின் ஆதரவை கோர முடியாது. தமிழ் கட்சிகளை ஒன்றாக வாருங்கள் என்னும் ரணிலின் அழைப்பிற்கு, இவ்வாறுதான் தமிழ் கட்சிகள் பதிலளிக்க வேண்டும்.

 


 

http://www.samakalam.com/ரணிலுக்கு-தமிழ்-கட்சிகள/

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    • என்ன செய்வது ... குறிப்பிட்ட காலம் வரை தமிழராக அறியப்பட்ட மிஸ்டர் சின்னமேளம் வசவுக்காக M.G.R ஐ மலையாளி என்று கூப்பிட, ஆரம்பித்தது 7 1/2. நதி மூலம் ரிசி மூலம் அலசி அவரது சின்னமேள வரலாறை கொண்டு வந்து மேசையில் போட்டது அதிமுக. அன்று முதல் M.G.R ஐ மலையாளி என்று அழைப்பதை விட்டாலும் சொந்த செலவில் அவர் வைத்த சூனியம் இன்றும் தொடர்கிறது
    • என்ன??   இப்படி சொல்லுகிறீர்கள்.??   தமிழ் சிறி. குமாரசாமி அணணை  சமாதனப்புறா பறக்கும் என்றார்கள்     🤣
    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.