Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

190 போா்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்

ரஷ்யாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.

போரை கைவிட பல நாடுகள் வலியுறுத்தியும் போர் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்தது.

இது குறித்து ரண்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா்” என்று தெரிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310917

  • 2 weeks later...
  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரெய்னின் முக்கிய இரு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல்: ஒருவர் பலி; 40 இற்கும் மேற்பட்டோர் பலி

உக்ரெய்னின் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்களை சேதமடைந்துள்ளதாக கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் 40 இற்கும் மேட்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வசேத செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் பொதுமக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கிவ் நகரத்தின் மீது இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தொடர்மாடி குடியிருப்பு மற்றும் பல தனியார் வீடுகளை சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://thinakkural.lk/article/311448

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் குறித்த தனது இலக்குகளை அடையும் நிலையில் ரஸ்யா - புலனாய்வு பிரிவு

11 DEC, 2024 | 07:41 AM
image

ரஸ்யா உக்ரைன் குறித்த தனது இலக்குகளை  அடையும் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளிநாட்டு  புலனாய்வின் தலைவர் சேர்கேய் நரிஸ்கின் தெரிவித்துள்ளார்.

அனைத்து பகுதிகளிலும் மூலோபாயரீதியிலான முன்முயற்சி எங்களிற்கு சாதகமாக உள்ளது, எங்கள் இலக்குகளை அடையும் நிலையில் உள்ளோம் என  தெரிவித்துள்ள அவர் உக்ரைன் படையினர் வீழும் நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவை பொறுத்தவரை உக்ரைன் ஜனாதிபதி தனது நியாயபூர்வ தன்மையையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான திறiனையும் இழந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாவின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவின் தலைவரின் கருத்துக்கள் கிரெம்ளினின் சிந்தனைகளை வெளிப்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது

https://www.virakesari.lk/article/200947




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.