Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமன்னார் முதல் மாத்தளை வரை : 'மலையகம் 200' நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஆரம்பமானது நடைபவனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

28 JUL, 2023 | 05:31 PM
image
 

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் 'மலையகம் 200'ஐ முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான  நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை 4.30 மணிக்கு தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமானது. 

தலைமன்னார், புனித லோரன்ஸ் தேவாலய வளாகத்தில் நடைபவனி புறப்பட தயாராக இருந்தவேளை, ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெற்றது. 

அத்தோடு, தலைமன்னாரில் நிறுவப்பட்டிருந்த, மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டு நிறைவின் நினைவுத்தூபிக்கு நடைபவனி பங்கேற்பாளர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

364193953_268877885879064_30188274971895

இந்த நடைபவனி நாளை சனிக்கிழமை (29) 15 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து பேசாலையை அடையும். 

16 நாட்கள் தொடரும் இந்நடைபவனி, இன்று (28) ஆரம்பமாகி, ஆகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையை அடைவதோடு நிறைவுபெறும்

சக சகோதர பிரஜைகளுடனான ஓர் உரையாடலாக அமையும் இந்த ‘மலையக எழுச்சிப் பயணம்’ மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் சமூக அமைப்புகளை கொண்ட பரந்த குழுவினர், மலையக சமூகத்தை சேர்ந்த - அதனோடு இணைந்து பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

363301036_835987124290016_86209666978313

363250568_1433849427413822_3531265226981

364171576_285773507466506_80426798999408

364177529_249543587892446_73553109456445

364183136_282595817701147_13259902198798

364210698_1213392059336064_4070117984474

https://www.virakesari.lk/article/161165

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையக எழுச்சிப் பயணத்தின் இரண்டாம் நாள் நடைபயணம் பேசாலையில் நிறைவு 

Published By: NANTHINI

29 JUL, 2023 | 05:59 PM
image
 

(நா.தனுஜா)

மலையக எழுச்சிப் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (29) தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை சென்றடைந்து நிறைவுற்றது. மூன்றாவது நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை (30) மன்னார் நகரை நோக்கி செல்லவுள்ள பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்புவிடுத்துள்ளது.

மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் 'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' என்ற தொனிப்பொருளில், 'மலையக எழுச்சிப் பயணம்' என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16 நாள் தொடர் நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலம் முன்பாக நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் தலைமன்னார் புனித லோரன்ஸ் திருத்தலத்தில் இருந்து ஆரம்பமான நடைபயணம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு மு.ப. 11.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்தது.

மலையக மக்கள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தலைமன்னார் மற்றும் பேசாலை நகரை அண்மித்து வாழும் மக்கள் என சுமார் 800 பேரின் பங்கேற்புடன் வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்த பேரணியை, அத்தேவாலயத்தின் அருட்தந்தை வரவேற்றதுடன், அதனைத் தொடர்ந்து வழிபாடுகளும் இடம்பெற்றன.

அதன் பின்னர், பி.ப 3 மணியளவில் பேசாலை முருகன் கோயிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள், அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் வாழும் மக்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர். 

இக்கலந்துரையாடல் நிகழ்வில் 'மலையக எழுச்சிப் பயணம்' ஏற்பாடு செய்யப்பட்டமைக்கான காரணம், மலையக மக்களின் வரலாறு மற்றும் வாழ்வியல் பின்னணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டன.

இந்நிலையில், மூன்றாம் நாளான நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) காலை 6.30 மணியளவில் மீண்டும் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பமாகும் நடைபயணம், மன்னார் நகர் வரை சென்றடையும்.

https://www.virakesari.lk/article/161227

  • கருத்துக்கள உறவுகள்

மலையக எழுச்சி பயணத்தின் 3 ஆம் நாள் நடைபயணம் மன்னாரில் நிறைவு !

மலையக எழுச்சி பயணத்தின் 3 ஆம் நாள் நடைபயணம் மன்னாரில் நிறைவு !

மலையக எழுச்சி பயணத்தின் மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான எழுச்சிப் பயணம் மன்னாரை வந்தடைந்தது.

மூன்றாவது நாளான இன்று காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் எழுச்சிப் பயணம் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அங்கு சென்று ஆசி வழங்கிய நிலையில் மன்னார் நகர் நோக்கி அவர்களின் எழுச்சி நடை பயணம் ஆரம்பமானது.

காலை 11 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்து மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தை சென்றடைந்தனர்.

இதன் போது மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் பணியாளர்கள் இணைந்து வரவேற்றனர்.

நாளை திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து நான்காவது நாள் பயணமாக முருங்கன் நோக்கி பயணிக்க உள்ளனர்.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவு கூறும் வகையிலும்,மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளில் இந்த நடைபயணம் இடமபெருகின்றது.

DSC_1046-600x400.jpg

DSC_1069-600x400.jpg

DSC_1103-600x400.jpg

https://athavannews.com/2023/1342387

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மலையகம் 200' மூன்றாம் நாள் எழுச்சி நடைபவனிக்கு மன்னாரில் ஆதரவு 

Published By: NANTHINI

31 JUL, 2023 | 10:16 AM
image
 

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' மாண்புமிகு மலையக மக்களின் நடைபவனிக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மலையக மக்களின் 200வது வருட வருகை பூர்த்தியை முன்னிட்டு தலைமன்னாரில் ஆரம்பமான நடைபவனி பேசாலை ஊடாக  நேற்று முற்பகல் மன்னாரை அடைந்தது.

அங்கே நடைபவனியில் கலந்துகொண்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக ஒரு தரப்பினரால் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நான்கு மத தலைவர்கள், மலையக மக்கள், சமூக ஆர்வலர்கள், மன்னார் வாழ்மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மலையக மக்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதன்போது, 'மலையக மக்களை சமமான பிரஜைகளாக அங்கீகரியுங்கள்', 'மலையக மக்களின் உணர்வுகளை மதித்து நடங்கள்', 'மலையக மக்களின் பிள்ளைகளுக்கு உரிய கல்வியை கொடுங்கள்', 'மலையக அரசியல் தலைவர்களே, மலையக மக்கள் தலை நிமிர வழி செய்யுங்கள்', 'மலையக மக்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளை அமைத்துக்  கொடு' போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தி  மலையக மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

IMG_4028.jpg

IMG_4036.jpg

IMG_4052.jpg

IMG_4056.jpg

IMG_4058.jpg

IMG_4062.jpg

IMG_4075.jpg

IMG_4084.jpg

IMG_4088.jpg

IMG_4077.jpg

https://www.virakesari.lk/article/161302

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருங்கனை சென்றடைந்த “மாண்புமிகு மலையக மக்கள்” உணர்வுபூர்வ நடைபவனி 4 ஆம் நாளான இன்று மடுவை நோக்கி பயணிக்கும் !

01 AUG, 2023 | 10:53 AM
image
 

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மாண்பு மிகு மலையகம்-200 நடைபவணி  செவ்வாய்க்கிழமை (31) முருங்கனை சென்றடைந்தது.

இந்நிலையில் 4 ஆம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (1) மடுத்தேவாலயம் நோக்கி பயணிக்கின்றது. 

அந்த வகையில் இன்று முருங்கனில் இருந்து 26 கிலோ மீற்றர் தூரம் வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி மடுத்தேவாலயத்தில் நிறைவடையும்.

நாளை 2 ஆம் திகதி ஓய்வுதினம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றையதினம் நடைபவனி இடம்பெறாது. 3 ஆம் திகதி மடுவில் இருந்து 23 கிலோமீற்றர் தூரமுள்ள செட்டிக்குளம் வரை சென்று புனித அந்தோனியார் ஆலயத்தில் பேரணி நிறைவடையும்.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை (31) காலை 6 மணியளவில் பேசாலையில் ஆரம்பமான நடைபவனி ஓலைத்தொடுவாய், எருக்கலம்பிட்டி ஊடாக காலை 11 மணியளவில் மன்னாரை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் நிகழ்வு மன்னார் வாழ் மக்களின் பங்குபற்றுதலுடன் மதியம் 3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் மூன்றாம் நாள் நிகழ்வு நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து நேற்று காலை 5 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி தள்ளாடி ,உயிலங்குளம்  ஊடாக முருங்கனை சென்றடைந்தது.

நேற்றய தினம் நடைபவனியிலும் மலையக மக்கள் பிரதிநிதிகள்,மத குருக்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மன்னார் மாவட்ட இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நடைபவனியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு ஆதரவை வழங்கும் விதமாக மன்னார் வாழ் மக்களால் பல்வேறு இடங்களில் தாக சாந்தி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

364213788_3488238574772430_2605452828851

WhatsApp_Image_2023-08-01_at_10.37.37.jp

WhatsApp_Image_2023-08-01_at_10.37.38.jp

WhatsApp_Image_2023-08-01_at_10.37.35__1

WhatsApp_Image_2023-08-01_at_10.37.33.jp

WhatsApp_Image_2023-08-01_at_10.37.35.jp

WhatsApp_Image_2023-08-01_at_10.37.36.jp

WhatsApp_Image_2023-08-01_at_10.37.32.jp

WhatsApp_Image_2023-08-01_at_10.37.32__1

https://www.virakesari.lk/article/161379

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு திரட்ட புதுக்குடியிருப்பிலும் தொடரும் நடைபவனி!

02 AUG, 2023 | 12:34 PM
image
 

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையக மக்களின் எழுச்சிப் பயண நிகழ்வின் 6ஆம் நாளான இன்று புதன்கிழமை (02) குறித்த மலையக பேரணிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் முல்லைத்தீவிலும் ஒரு நடைபவனி இடம்பெறுகிறது. 

குறித்த பேரணியின் நடைபயணம் இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரிலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி நோக்கி தொடர்கிறது. 

IMG_20230802_094816.jpg

364052464_1027072778458392_3360772198505

இலங்கைவாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டுச் சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மாண்புமிகு மலையகம்-200 நடைபயணத்தின் 5ஆம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (01) குறித்த பேரணியின் நடைபவனியானது முருங்கனிலிருந்து ஆரம்பமாகி மடுவை அடைந்தது.  

அதனை தொடர்ந்து, இன்றைய தினம் அந்த மலையக மக்கள் பேரணிக்கு வலுசேர்க்கும் வகையிலேயே முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையிலான மற்றுமொரு நடைபவனியில் இப்பேரணி இணைந்து ஈடுபடுகிறது. 

'மன்னார் முதல் மாத்தளை வரை' என்கிற இந்த ஆதரவுப் பயணம் 'இருப்பை உறுதிப்படுத்துவோம்; தோழமையை வலுப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நடைபவனி காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகி, தற்போது கிளிநொச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.  

IMG_20230802_093841.jpg

360031031_286450430781254_92054362567201

இந்த நடைபயணத்தில், மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் பங்குபற்றுதலோடு, மத குருக்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊழியர்கள் மற்றும் A.C.G. இளைஞர் அணியினர், வர்த்தக சங்கத்தினர், விழுது நிறுவன ஊழியர்கள், அமரா, சமாசம், யுகசக்தி மகளிர் சம்மேளன அங்கத்தவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பேரணியினருக்கு தாய்த்தமிழ் பேரவையினால் தாக சாந்தி வழங்கிவைக்கப்பட்டு ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. 

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடையணமானது இந்த ஆதரவுப் பேரணிக்கான சந்தர்ப்பமாக அமைகிறது. 

IMG_20230802_094734.jpg

359704601_629578422291161_74117009534012

மேலும், முல்லைத்தீவில் நடைபெறும் ஆதரவுப் பயணமானது மலையக மக்களின் சார்பான பேரணியினரின் கோரிக்கைகளுக்கு குறித்த மாவட்டத்தை சார்ந்த மக்கள் ஆதரவளிக்கும் விதமாகவும் மற்றும் அவர்களது ஆதரவினை திரட்டும் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலும் இடம்பெறுகிறது.

359660716_674325001407114_24133421967202

இதன்போது இலங்கையின் அர்த்தமுள்ள பிரஜைகளாவதற்கு மலையகத் தமிழ் மக்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்...

எமது வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல், ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல்.

தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச்சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை.

வாழ்வுக்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் / பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம், வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்ப பாதுகாப்பான காணி உரிமை, தமிழ்மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து.

அரசாங்க சேவைககளை சமமாக அணுகுவதற்கான வாய்ப்பு.

பெருந்தோட்டங்களில் உள்ள மனித குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல், வீட்டுப் பணியாளர்களின் முழுமையான பாதுகாப்பு, மலையக கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்தல், அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்பனவாகும். 

IMG_20230802_093859.jpg

364086034_810737190651465_17504381113668

360037306_214772674513769_33496956529128

360029103_6549289715132794_5889610716601

364177643_897192071827817_70737844555343

https://www.virakesari.lk/article/161470

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையக எழுச்சிப் பயணத்துக்கு நாளை யாழிலும் ஆதரவுப் பேரணி ! 

02 AUG, 2023 | 02:57 PM
image
 

மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண பேரணியொன்றும் நாளை வியாழக்கிழமை (03) காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இடம்பெறவுள்ளது. 

இந்த பேரணியை மாண்புமிகு மலையக மக்கள் மற்றும் யாழ். சிவில் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 

WhatsApp_Image_2023-08-01_at_18.43.01.jp

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் தலைமன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமான மலையகம் 200ஐ முன்னிட்ட இந்நடைப்பயண நிகழ்வின் ஆறாம் நாளாக இன்றைய தினம் புதன்கிழமை (02) கருதப்படுகிறது. 

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான இந்த நடைபயண பேரணியினர், எழுச்சிப் பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (01) மடுவை அடைந்தனர். 

அதனை தொடர்ந்து, 6ஆம் நாளான இன்று  முழுவதும் மடுவில் ஓய்வெடுத்துவிட்டு, 7ஆம் நாளான நாளை வியாழக்கிழமை (03) மடு சந்தியிலிருந்து மீண்டும் பயணத்தை ஆரம்பித்து செட்டிக்குளம் நோக்கி செல்லவுள்ளனர். 

இந்நிலையில், இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மலையக மக்களின் ஒன்றுதிரண்ட முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையிலும் இன்றும் நாளையும் பேரணிகள் மற்றும் நடைபவனிகள் ஏற்பாடாகியுள்ளன. 

அதன்படி, இன்று (02) முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு முதல் கிளிநொச்சி வரை பிறதொரு பேரணியின் நடைபவனியொன்று இடம்பெறுகிறது. 

அதனை தொடர்ந்து நாளை (03) மேற்கூறப்பட்ட யாழ்ப்பாண பேரணியும், கிளிநொச்சியில் பேரணியொன்றின் நடைபவனி மற்றும் வாகன பவனியும் இடம்பெறவுள்ளன. 

இந்த பேரணிகள் மற்றும் வாகன - நடைபவனிகளை வட மாகாண அமைப்புகளோடு மாண்புமிகு மலையக மக்கள் அமைப்பும் கூட்டிணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161484

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னார் முதல் மாத்தளை வரை : மலையக எழுச்சிப் பேரணியின் நடைபவனி செட்டிக்குளம் நோக்கி...!

03 AUG, 2023 | 04:02 PM
image
 

'மலையகம் 200'ஐ முன்னிட்டு 'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' தொனிப்பொருளிலான மலையக மக்களின் எழுச்சிப் பயணத்தின் 7ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (03) பேரணியின் நடைபவனியானது மடு சந்தியில் இருந்து ஆரம்பமாகி செட்டிக்குளம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 

ஒன்றுகூடல் நிகழ்வோடு மடுவில் இருந்து பயணத்தை தொடங்கிய இந்த பேரணி 23 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து வவுனியா, செட்டிக்குளத்தை அடையும். 

அதனை தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் வவுனியா நகர சபை மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

364221609_671476731108299_64640169161091

மாண்புமிகு மலையக மக்கள் அமைப்பின் கூட்டிணைவில் இடம்பெறும் இந்நடைபவனி நிகழ்வின் 6ஆம் நாளான நேற்று தமது பயணத்தை சற்றே நிறுத்தி ஓய்வெடுத்துக்கொண்ட மலையக பேரணியினர், இன்று மீண்டும் தமது பயணத்தை மடு சந்தியிலிருந்து ஆரம்பித்துள்ளனர். 

இவர்களது இப்பயண நெடுகிலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணியினரும் இணைந்து நடைபவனிக்கு ஆதரவளித்து வருகின்றனர். 

திருகோணமலை, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, மன்னார், வவுனியா போன்ற பகுதிகளை‍ சேர்ந்தவர்களும் இந்த நடைபவனியில் பங்கேற்று மலையக மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றமை முக்கியமான விடயமாகிறது. 

அதற்கான தனித்தனி பேரணிகளும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், நடைபயணங்களும் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன. 

தமிழர்களின்  ஒருமைப்பாட்டை பறைசாற்றும் வகையில் இந்த தனித்தனி பேரணிகள் 'மலையகம் 200' நடைபவனி அணியினரோடு இணைந்து பயணத்தை தொடர்கின்றமை முக்கிய விடயமாகிறது. 

364231551_286251524055441_13053961305880

364115055_1440354913486663_6418194860469

363964148_3847419525535007_7102440074243

364229963_1958640324513006_5420266529405

363397860_120498484457495_15810743655828

 

363361362_120482844459059_75168079045771

363380919_120498317790845_25249602851310

363863424_120498687790808_14263039651624

DSC_0394.JPG

https://www.virakesari.lk/article/161540

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மலையகம் 200' எழுச்சிப் பயணத்தின் 8ஆம் நாள் நடைபவனி மதவாச்சி நோக்கி...

04 AUG, 2023 | 11:05 AM
image
 

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையக மக்கள் பேரணியின் பங்கேற்பில் இடம்பெற்றுவரும் நடைப்பவனியின் 8ஆம் நாள் பயணம் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை வவுனியா கந்தசாமி கோவிலில் ஆரம்பமாகி மதவாச்சி நோக்கி தொடர்கிறது.

இப்பேரணியினர் இன்று பிற்பகல் 3 மணியளவில் மதவாச்சி பிரதேச செயலக வளாகத்தை சென்றடைவதாக கூறப்படுகிறது. 

இப்பயணத்தில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்தவர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

மேலும், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் இருந்தும் மலையக பேரணியோடு இணைந்து பயணிக்கின்றமை முக்கிய விடயமாகும்.

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நடைபவனி கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் கலை நிகழ்வுகளோடு ஆரம்பமாகி, 29ஆம் திகதி சனிக்கிழமை தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி இன்று 8ஆம் நாளாக தொடர்ந்து வருகிறது. 

இப்பயணத்தின் 16வது நாளான எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி மலையக எழுச்சிப் பேரணி மாத்தளையை சென்றடைவதோடு 'மலையகம் 200' நடைபயண நிகழ்வுகள் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

364540349_823864849048141_32272377733832

364648401_671045874918691_76540683766644

364632113_720982896502741_65824809922556

w.jpg

364545927_857279915822830_88089094557013

https://www.virakesari.lk/article/161590

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மலையகம் 200' எழுச்சி நடைபவனி மதவாச்சியை அடைந்தது!

04 AUG, 2023 | 05:22 PM
image
 

மலையக மக்களின் பங்குபற்றலில் இன்று (04) காலை வவுனியா, செட்டிக்குளத்தில் ஆரம்பமான நடைபவனிப் பேரணிகள் பிற்பகல் வேளையில் மதவாச்சியை சென்றடைந்தன. 

இதில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்தவர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

இதன்போது முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து திரண்டு வந்த மக்களின் பேரணிகளும் 'மலையகம் 200' பேரணியோடு இணைந்து பயணித்துள்ளன.

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நடைபவனி கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் கலை நிகழ்வுகளோடு ஆரம்பமாகி, 29ஆம் திகதி சனிக்கிழமை தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி இன்று 8ஆம் நாளாக தொடர்ந்து வருகிறது. 

இப்பயணத்தின் 16வது நாளான எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி மலையக எழுச்சிப் பேரணி மாத்தளையை சென்றடைவதோடு 'மலையகம் 200' நடைபயண நிகழ்வுகள் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161644

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மலையகம் 200' நடைபவனி : ஆடல், பாடலோடு ஆரவாரமாக திரப்பனை நோக்கி செல்லும் மலையக எழுச்சிப் பேரணியினர்

07 AUG, 2023 | 01:15 PM
image
 

மலையகம் 200 நிகழ்வை முன்னிட்டு மலையக மக்கள் முன்னெடுத்து வரும் நடைபவனி இன்று (07) மிகிந்தலையில் இருந்து ஆரம்பித்து திரப்பனை நோக்கி செல்கிறது. 

இதன்போது உடுக்கை போன்ற இசைக்கருவிகளை இசைத்தும் பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும் மலையக மக்கள் ஆரவாரத்தோடு நடைபயணம் மேற்கொள்கின்றனர். 

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெற்று வரும் இந்நடைபயண நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் ஆரம்பமாகி, இன்று 11ஆம் நாளாக திரப்பனை நோக்கியதாக நடைபெற்று வருகிறது. 

இந்த நடைபவனி எதிர்வரும் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

364131569_123323304175013_30774851027261

366272127_123323054175038_89499055116150

366274658_123323104175033_64626520288182

364408599_1315353955729762_2151915906457

364235267_1004117734058195_7976110445955

364239070_1348035852804130_2713555355874

364221973_664223658984331_91284410254400

364221956_110305985474362_61749700222901

363863176_149436608186672_89224678141071

360032056_674599960794515_10419330534076

359718073_1002977727569457_7174687947525

366274658_123323104175033_64626520288182

https://www.virakesari.lk/article/161782

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு மலையகம் 200 நடை பயணம் : மட்டக்களப்பில் ஆதரவுப் பேரணி

Published By: DIGITAL DESK 3

08 AUG, 2023 | 10:19 AM
image
 

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் ஆதரவுப் பேரணி இடம்பெறுகின்றது. 

364212157_828273699007393_55475614532650

மலையக மக்கள் எதிர் நோக்கி உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களிடையே விழிப்புணர்வையும் தெளிவினையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சார்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்  மலையக  மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் ஆர்வம் உள்ள தனி நபர்கள் சர்வ மத தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஓர் கவன ஈர்ப்பு நடை பயணத்தை மட்டக்களப்பில் மேற்கொண்டுள்ளனர்.

365403865_1247813439257833_4048262346499

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவின் 11 அம்ச கோரிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாக இந்த நடை பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161852

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாண்பு மிகு மலையகம் 200 நடை பயணம் கெக்கிராவையை சென்றடைந்தது..

08 AUG, 2023 | 07:57 PM
image
 

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை  வரையிலான நடை பயணத்தின் இன்றைய பயணம் கெக்கிரவையை சென்றடைந்துள்ளது.

இன்று திறப்பனை முதல் கெக்கிராவ வரை நடைப் பயணம் இடம்பெற்றது.

சகோதர சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் அமோக வரவேற்புடன் இந்தப் பயணம் அமைந்தது.

கத்தோலிக்க குருமார்களும் ஆயரும் இணைந்து நடைபயணத்தை வரவேற்றனர்.

கெக்கிராவ  பிரதேச செயலகத்தில் வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.

பள்ளி வாசலில் மலையகம் 200 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கெக்கிராவ கலாசார நிலைய விரிவுரை மண்டபத்தில்  சிரேஷ்ட பாடகர் ஜயதிலக்க பண்டாரவினால் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

WhatsApp_Image_2023-08-08_at_17.10.12.jp

WhatsApp_Image_2023-08-08_at_17.10.12__1

WhatsApp_Image_2023-08-08_at_17.10.13.jp

WhatsApp_Image_2023-08-08_at_17.10.13__1

WhatsApp_Image_2023-08-08_at_17.10.13__2

https://www.virakesari.lk/article/161918

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளை நோக்கிச் செல்லும் மலையக எழுச்சிப் பேரணி 

09 AUG, 2023 | 10:51 AM
image
 

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' தொனிப்பொருளிலான 'மலையகம் 200' எழுச்சி நடைபயணம் இன்று (09) கெக்கிராவயில் ஆரம்பமாகி தம்புள்ளை நோக்கி செல்கிறது. 

மேலும், இந்த நடைபயண பேரணியினருக்கு கெக்கிராவை ஜும்மா பள்ளிவாசலை சேர்ந்தோர் ஆசி வழங்கி, இறை பிரார்த்தனையில் ஈடுபட்டு, விருந்துபசார நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். 

தலைமன்னார் முதல் மாத்தளை வரை மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெற்று வரும் இந்த நடைபவனி கடந்த ஜூலை 28ஆம் திகதி ஆரமபமானது. 

எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியினர் மாத்தளையை அடைவதோடு நடைபவனி நிறைவுறும் என கூறப்படுகிறது. 

365773908_744262441042578_74980647295637

365751390_744262601042562_84526921225828

366386272_744262494375906_25414577530336

365769415_744262537709235_28053862383328

7.jpg

https://www.virakesari.lk/article/161933

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2023 at 18:00, ஏராளன் said:

வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் 'மலையகம் 200'ஐ முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான  நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை 4.30 மணிக்கு தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமானது. 

IMG-4337.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவாக கிழக்கு முஸ்லிம் சமூகம் மிஹிந்தலை வரையான நடைபவனியில் பங்கேற்பு

09 AUG, 2023 | 01:11 PM
image
 

தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை இடம்பெறும் மலையக மக்களின் பேரணிக்கு கிழக்கிலும் வாழ்விட வாழ்வாதார உரிமை இழந்த முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளதாக காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.

மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்தியத் தமிழ் மக்களின் இருநூறு வருட பூர்த்தியை அனுஷ்டிக்கும் முகமாக இப்பேரணி இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பித்த இப்பேரணி எதிர்வரும் சனிக்கிழமை (12) மாத்தளை நகரில் முடிவடைகிறது.

மலையக மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்துக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணம் கிழக்கு மாகாணத்திலும் தமது வாழ்விட காணி உரிமைகளை இழந்த முஸ்லிம் சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மிஹிந்தலை வரை சென்று பேரணியில் பங்குபற்றியிருப்பதாக நிஹால் அஹமட் தெரிவித்தார்.

மலையக எழுச்சிப் பயணம் என்பது சக சகோதர பிரஜைகளுடனான ஓர் உரையாடல் என்றும் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சக சகோதர பிரஜைகள் மத்தியில் மலையகத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு, போராட்டங்கள், சாதனைகள், பங்களிப்பு, தற்போதைய சமூக பொருளாதார, அரசியல் அந்தஸ்து மற்றும் மலையக மக்களின் அபிலாஷைகள் ஆகியவை பற்றிய அடிப்படை மட்டத்திலான புரிதலை ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் இலக்கு என்றும் பயண ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.PNG

DSC_9017.JPG

DSC_9023.JPG

DSC_9041.JPG

DSC_9086.JPG

DSC_9066.JPG

https://www.virakesari.lk/article/161952

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனி : இன்று மாத்தளை நோக்கி பயணிக்கும் பேரணி! 

Published By: NANTHINI

12 AUG, 2023 | 10:31 AM
image
 

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெறும் தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சிப் பயணத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை (12) நாலந்தாவில் ஆரம்பமான நடைபவனி பயண இலக்கான  மாத்தளையை நோக்கி செல்கிறது. 

இன்று காலை 5 மணிக்கு இப்பேரணியினர் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். 

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' என்கிற தொனிப்பொருளில் இந்த நடைபவனி நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் ஆரம்பமானது. 

363943291_1015171439925906_4972710737578

தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்தில் கலை நிகழ்வுகள் மற்றும் நினைவுத்தூபி அஞ்சலி இடம்பெற்றதோடு, மறுநாள் 29ஆம் திகதி சனிக்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபவனி புறப்பட தொடங்கியது. 

இந்த 16 நாள் நடைபவனி நிகழ்வில் பல பிரதேசங்களின் வழியாக மலையக மக்கள் பேரணியினர் பயணித்தனர். அவர்கள் செல்கிற இடங்களில் அந்தந்த பகுதிகளி வசிக்கும் மக்கள் மலையக மக்களின் நடைபவனிக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கும் முழு ஆதரவினை வழங்கியிருந்தனர். 

சர்வ மத தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அந்தந்த பிரதேசங்களில் இயங்கும் பல அமைப்புகளும் பொது மக்களும் மலையக பேரணியினரை வரவேற்று உபசரித்து ஒத்துழைத்திருந்தனர். பலர் இந்த நடைபவனியில் இணைந்து நடந்தனர். பல இடங்களில் வெவ்வேறு அணியினர் போராட்டங்களையும் தனித்தனியான ஊர்வலங்களையும் நடத்தியிருந்தனர். 

இவ்வாறு தொடர்ந்த 'மலையகம் 200' நடைபவனி, இன்றைய தினம் பயணத்தின் இறுதி நாளை (16ஆம் நாள்) தொட்டிருக்கிறது. 

இன்று பகல் வேளையில் இப்பேரணி மாத்தளையை அடைந்த பின்னர், அங்கே பயணத்தின் இலக்கு, கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

363915055_183126521445843_67443967274195

363898807_664817541928948_46452054232394

363893408_829561558889046_56792595956781

363874529_3555617908021117_3065701960020

363855801_306978511807181_21561509080526

363855801_3148342365309951_4145691118414

363806471_663401192378560_16264212082647

363829702_607869521519498_49983630211105

https://www.virakesari.lk/article/162182

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னாரில் ஆரம்பமான மலையக எழுச்சி நடைபவனி மாத்தளையில் நிறைவு! 

Published By: NANTHINI

12 AUG, 2023 | 04:48 PM
image
 

1823ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மலையகத்தில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல் தொகுதி மக்கள் பயணித்த பாதையை மீட்டெடுக்கும் மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் மலைய எழுச்சி பேரணி இன்று சனிக்கிழமை (12) மாத்தளையில் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாளான இன்று சனிக்கிழமை (12) பிற்பகல் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவிலான பேரணி மாத்தளையை அடைந்தது.

365739454_966430644634670_78842456766739

மலையகம் 200ஐ முன்னிட்டு கடந்த 16 நாட்களாக இடம்பெற்றுவந்த மலையக எழுச்சி நடைபவனி இன்று மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைந்ததோடு நிறைவுபெற்றது. 

அதனை தொடர்ந்து, பயணத்தின் இலக்கு, மலையக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான நடைபவனி நிறைவு நிகழ்வு மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

மேலும், மலையக மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மாத்தளை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' என்கிற தொனிப்பொருளில் இந்த நடைபவனி நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் ஆரம்பமானது. 

363712666_6022633731175954_1255620954364

365817546_598846919086908_82300048324466

தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்தில் கலை நிகழ்வுகள் மற்றும் நினைவுத்தூபி அஞ்சலி இடம்பெற்றதோடு, மறுநாள் 29ஆம் திகதி சனிக்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபவனி புறப்பட தொடங்கியது. 

இந்த 16 நாள் நடைபவனி நிகழ்வில் பல பிரதேசங்களின் வழியாக மலையக மக்கள் பேரணியினர் பயணித்தனர். அவர்கள் செல்கிற இடங்களில் அந்தந்த பகுதிகளி வசிக்கும் மக்கள் மலையக மக்களின் நடைபவனிக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கும் முழு ஆதரவினை வழங்கியிருந்தனர். 

365644896_251284627730316_50289750695005

366046997_966920721041410_47813262920572

சர்வ மத தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அந்தந்த பிரதேசங்களில் இயங்கும் பல அமைப்புகளும் பொது மக்களும் மலையக பேரணியினரை வரவேற்று உபசரித்து ஒத்துழைத்திருந்தனர். பலர் இந்த நடைபவனியில் இணைந்து நடந்தனர். பல இடங்களில் வெவ்வேறு அணியினர் போராட்டங்களையும் தனித்தனியான ஊர்வலங்களையும் நடத்தியிருந்தனர். 

இவ்வாறு தொடர்ந்த 'மலையகம் 200' நடைபவனியின் 16ஆம் நாளான இன்றைய தினம்மாத்தளையில் இப்பேரணி தமது பயணத்தை நிறைவு செய்துகொண்டது. 

365693094_3212841785683128_4865383220154

365699051_830830015329026_71993224272263

https://www.virakesari.lk/article/162215

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையகத் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க கைகோர்ப்போம்! - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

Published By: NANTHINI

12 AUG, 2023 | 06:00 PM
image
 

 

எங்கள் மலையக தமிழ் மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவுகூரும் வகையில் இந்த வருடம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. 200 வருட நிகழ்வுகள் வெறுமனே நிகழ்வுகளாக முடிந்துவிடாமல் மலையக தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தினை அனைத்து தரப்பினரிடமும் வலியுறுத்துகிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (12) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள ஒன்றியம் அதனூடாக மேலும் தெரிவிக்கையில், 

1980களின் பின்னர் மலையக மக்களுக்கான குடியுரிமை படிப்படியாக வழங்கப்பட்டதன் பின்னரே இச்சமூகத்தில் சில மாற்றங்கள் உருவாகின. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் எத்தனையோ பேர் வறுமை, சமூக நெருக்கடிகள், துன்பங்களின் மத்தியிலும் கல்வியில் முன்னிலை வகிக்கின்றனர். அதற்கு சான்றாக எமது பல்கலைக்கழகத்தில் மலையக தமிழ் மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்து வருகின்றார்கள். படிப்படியாக அவர்கள் தமது சுய முயற்சியிலேயே முன்னேறி வந்துள்ளார்கள். 

ஆனால், தேசிய ரீதியான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இன்று வரை அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கடந்த 200 வருடங்களில் அடைந்தவை சில, அடைய வேண்டியவை பல என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

இருப்பினும், 200 வருட வரலாற்றை நினைவுகூரும் இந்த வருடத்தில் எம் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேசத்திலும் அரசியல் மற்றும் சிவில் சமூக மட்டத்திலும் பேசுபொருளாக உள்ளது. அந்த முன்னேற்றத்தை மலையக தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை பற்றிப் பேசும்போது எங்கள் மலையகத் தமிழ் மக்களின் தேசிய அடையாளம் மற்றும் சுயநிர்ணயம் பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தி அழுத்தம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. 

எங்கள் மலையகத் தமிழ் மக்கள் மீது அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் என்றும் தொடர்ந்து போராடுவோம். எங்கள் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் வரை நாம் தோளோடு தோள் நின்று களமாடுவோம் என குறிப்பிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/162228

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் சிரத்தையோடு இந்த பதிவுகளை இங்கே ஏற்றிவந்த ஏராளன் மற்றும் ஊக்கப்படுத்தி பதிவுகள் இட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sasi_varnam said:

ஒவ்வொரு நாளும் சிரத்தையோடு இந்த பதிவுகளை இங்கே ஏற்றிவந்த ஏராளன் மற்றும் ஊக்கப்படுத்தி பதிவுகள் இட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். 🙏

அறம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒடுக்கப்பட்டவர்களுக்காக நிற்பது என எழுத்தாளர் இராமகிருஸ்ணனின்(எஸ்.ரா) பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.