Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாப்பரசரின் பிரதிநிதி தலைமையில் மடு திருத்தல ஆவணி திருவிழா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, satan said:

ஆட்கள், பெயர்கள் மாறலாம் காரணம்; நினைவாற்றல் பாதிப்பு. சம்பவம் உண்மை. புலிகள் மடுத்தேவாலயத்தில் இருப்பதாக தாக்குதல் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டு தேவாலயம் பகுதியளவில் சேதப்பட்டது, மாதா திருச்சுரூபம் பாதுகாப்புக்கருதி வேறு தேவாலயத்துக்கு மாற்றப்பட்டது  ஆனால் பாரிய அளவிலான திட்டமிடப்பட்டு காலக் கெடு கொடுக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படவில்லை. காரணம் அப்போதைய புலிகளின் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் பாதிக்கப்பட்டதால்.

இப்படி இறந்தது டென்சில் கொப்பேகடுவவாக இருக்கலாம். அப்படி என்றால் அது 90-92 காலமாய் இருக்கும். யாழில் இருந்து இல்லை, ஆனால் மன்னார் நகர், பாலத்துக்கு அப்பால் வசித்த மக்கள் பலர் மடுவில் அகதிகளாய் இருந்தார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இப்படி இறந்தது டென்சில் கொப்பேகடுவவாக இருக்கலாம். அப்படி என்றால் அது 90-92 காலமாய் இருக்கும். யாழில் இருந்து இல்லை, ஆனால் மன்னார் நகர், பாலத்துக்கு அப்பால் வசித்த மக்கள் பலர் மடுவில் அகதிகளாய் இருந்தார்கள் என நினைக்கிறேன்.

காலம், ஆ ட்கள், பெயர்களை  ஒருவேளை மாற்றி சொல்கிறேனோ தெரியவில்லை, யாழிலிருந்து வனிப்பிரதேசம் இடம்பெயர்ந்து பின்னர் பெரும்பாலோனோர் மடுப்பிரதேசம் பாதுகாப்பென இடம்பெயர்ந்தனர். மடு அகதிகளால் நிரம்பி வழிந்தது. அப்போ இந்த நிலை ஏற்பட்டது. மாறி மாறி வந்த சிங்கள தலைவர்கள், தமிழ் மக்களை அழிப்பதில் இருந்து மாறவில்லை நிறுத்தவுமில்லை தங்கள் கொள்கைகளை. அவர்களது இலட்சியம் தமிழரை நாட்டிலிருந்து அழிப்பதாகவே இருந்தது. ஒருவருக்கொருவர் தாம் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துக்கொண்டனர். நாம் தான் தலைவர்ளை நம்பி ஏற்று ஏமாந்தோம். அவர்கள் தங்கள் கொள்கைகளில் குறியாக, நிலையாக இருந்தனர். நாங்களும் மாறி மாறி சளைக்காமல் அலைந்து கொண்டே இருந்தோம். அதானல காலங்கள், பெயர்கள் குழப்பமாக உள்ளது. இப்படி நீங்கள் மறுதலித்து கேள்வி கேட்கும்போது சிலவற்றை நினைவு படுத்திக்கொள்ள முடிகிறது. மடுத்தேவாலயம் பகுதியளவில் சேதமாக்கப்பட்டபோது வவுனியா அதை அண்டிய பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். இவ்வாறு எல்லாவற்றையும் இழந்து, நாளைய நாளை வறுமையோடும், வெறுமையோடும், ஏமாற்றத்தோடும், நிட்சயமற்ற நிலையிலும் உறவுகளையும் உயிரையும் மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வந்து இறுதியில் அதையும் இழந்ததே சோகம். இவ்வளவு கஸ்ரப்பட்டும் அவற்றை பாதுகாக்க முடியவில்லையே என்கிற இயலாமை ஏக்கம் மீள முடியாதது. அந்த நேரத்திலும் நாம் சொல்லி சிரித்துக்கொண்டது அத்துலத் முதலி காயப்பட்ட இடம் குறித்து. அவர் பிரேமதாச ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருக்கலாம். இன் னும் சிலகாலம் போனால், எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் அல்லது மறக்கடிக்கப்பட்டு விடுவோம். அதற்கான செயற்பாடுகள் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன.  

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2023 at 05:36, goshan_che said:

மத வேறுபாடின்றி போரின் போது எம்மக்களை காத்து நின்ற இடம். எமக்காக ஓங்கி ஒலித்து அதனாலேயே நஞ்சூட்டப்பட்டர் என சந்தேகிக்கும் ராயப்பு ஜோசேப் ஐயா வாழ்ந்த இடம்.

98 காலப்பகுதியில், வன்னியிலிருந்து கொழும்பு சென்று திரும்பும் வழியில் மூன்று கத்தோலிக்க பாதிரிமார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அருட் திரு ஜெபநேசன் அடிகளாரும் ஒருவர். அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு; (தமிழருக்கென்று) தடை செய்யப்பட்ட தமிழருக்கென்றுதடை செய்யப்பட்ட பொருட்களை தம் வசம் வைத்திருந்தனரென்று. (எனது தனிப்பட்ட கருத்து இடம்பெயர்ந்திருந்த மக்களின் உணவு, உறையுள், மற்றும் அத்தியாவசிய தேவைகளை அவர்கள் நிறைவேற்றி வந்ததனால் அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதை அவர்கள் கொண்டு வந்திருக்கலாம், அந்த காரணத்தை தெரிவித்தால் வன்னியில் அரசினால் நடத்தப்படும் அவலங்கள் வெளிவந்துவிடும் என்பதை தவிர்ப்பதற்காக அல்லது அவர்களின் உதவித்திட்டங்களை தடுப்பதற்காக இல்லை தங்கள் அவலங்களை வெளியுலகிற்கு கொண்டு செல்கிறார்கள் என்கிற கோபத்தினால் செய்திருக்கலாம்).  காரணம் எதுவாக இருந்த போதிலும் (தமிழருக்கென்று) தடைசெய்யப்பட்ட பொருட்களை தம்வசம் வைத்திருந்தார்கள் என்பதே குற்றச்சாட்டு. வெடி பொருட்களோ, போதைப்பொருட்களோ, அபாயகரமான வேறெதுவுமோ அவர்களிடம் இருந்ததாக சாட்சியப்படுத்தப்படவில்லை. (வயர்)  கம்பி, உலர் மின்கலம் வைத்திருந்தார்கள் என்பதே பெரிய குற்றச்சாட்டு அவர்களை கைது செய்வதற்கு. அன்றைய தமிழர்மேல் அரசு திணித்த கெடுபிடிகள் சட்டங்கள் பாதிரிமாருக்கு  தெரியாததல்ல அதை அவர்கள் மீறுபவர்களுமல்ல. வேண்டுமென்றே அவர்களை பழிவாங்கியது இராணுவம். எப்படியோ பல இழுபறிகளுக்குப்பின் அவர்கள் வெளியே வந்தார்கள். வந்த சில  மாதங்களாக இருக்கலாம் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது இடையில் சரிந்த ஜெபநேசன் அடிகளார் மீண்டும் எழுந்திருக்கவில்லை. கைது செய்யப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தத்திலிருந்து மீளமுடியாத ஒரு நிலையும் காரணமாக இருக்கலாம், ஏதோ ஒன்று நடந்திருக்கிறது அவர்களை பாதிக்குமளவிற்கு. ஒருவேளை அவர்கள் கொண்டுவந்த பணத்தை இ ராணுவம் பறிமுதல் செய்திருக்கலாம். அவர் அன்றைய குரு முதல்வராக இருந்ததினால் அந்தச்சம்பவம் அவரை வெகுவாக பாதித்ததிருக்க கூடிய வாய்ப்பு அதிகமிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அந்த நேரத்திலும் நாம் சொல்லி சிரித்துக்கொண்டது அத்துலத் முதலி காயப்பட்ட இடம் குறித்து. அவர் பிரேமதாச ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருக்கலாம்.

நீங்கள் சொன்ன விடயங்கள் நடந்திருக்கலாம் ஆனால் ஆட்கள், காலங்கள் பிழைக்கிறது என நினைக்கிறேன்.

முதலி - ஒப்பரேசன் லிபரேசன் (87) க்கு பின் பாராளுமன்றத்தில் வைத்து கைகுண்டால் தாக்கப்பட்டார். இதன் போதுதான் அவருக்கு படக்கூடாத இடத்தில் காயம்பட்டது என மக்கள் பேசி கொண்டாட்கள்( இதே போல் பின்பு பொன்சேக்காவுக்கும் நடந்தது) .

89 இல் ஜே ஆர் பதவி விலகிய பின் அத்துலத்முதலி எந்த பாதுகாப்பு சம்பந்தபட்ட பதவியிலும் இருக்கவில்லை. 91 வரை கல்வி அமைச்சராக இருந்து பின்னர் பிரேமதாசாவை இம்பீச் பண்ணும் சர்ச்சையில் அரசை/யு என் பி யை விட்டு வெளியேறிவிட்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மடுதிருவிழாவில் தமிழர்களோடு ரணிலும் கலந்து கும்பிட்டாராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் - மடு அன்னையின் ஆவணித் திருவிழா ஆரம்பம்! 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு (Video)

1 மணி நேரம் முன்

 

மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15.08.2023) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.

இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெக்ஸ்வேல் சில்வா ஆண்டகை ஆகியோர் திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.

திருவிழா திருப்பலியையொட்டி மடு திருத்தலத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15.08.2023) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் திகதி இடம்பெறுகிறது.

பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி

 

இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றனர்.

இந்த திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மடு திருத்தலத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/avani-festival-of-mother-madu-begins-1692069162

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டங்கள்! மடு திருவிழாவில் ஜனாதிபதியின் அறிவிப்பு(Video)

1 மணி நேரம் முன்

 

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திகான் மற்றும் கத்தோலிக்க சபையின் ஆசீர்வாதம் மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் இன்று (15.08.2023) கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

மடு தேவாலய வருடாந்த திருவிழா

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும்.

இந்த திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனை பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது.

தமிழர் பகுதியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டங்கள்! மடு திருவிழாவில் ஜனாதிபதியின் அறிவிப்பு(Video) | Presidential At The Madu Mata Church Festival

அத்தோடு வருடாந்த மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும் அரசாங்கம் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மடுமாதாவிடம் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெருமளவான மக்கள் இங்கு வந்து மடு மாதாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நாடினர். அந்த கடினமான நிலைமையில் மடு மாதாவின் ஆசீர்வாதமும் எமக்கு பலமாக அமைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை வலுசக்தி மையமாக உருவாக்க முடியும்.

தமிழர் பகுதியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டங்கள்! மடு திருவிழாவில் ஜனாதிபதியின் அறிவிப்பு(Video) | Presidential At The Madu Mata Church Festival

மேலும், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

தமிழர் பகுதியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டங்கள்! மடு திருவிழாவில் ஜனாதிபதியின் அறிவிப்பு(Video) | Presidential At The Madu Mata Church Festival

இதேவேளை செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மன்னார் ஆயர் கலாநிதி அதி வண.இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி மன்றத் தலைவர் கலாநிதி சந்ரா பெர்ணான்டோ உள்ளிட்ட அருட்தந்தையர்கள், கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.   

GalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/presidential-at-the-madu-mata-church-festival-1692091463

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.   

மடுத்திருத்தலத்திலும் அரசியல் ஆரம்பிக்கப்போவதாக கட்டியம் கூறுகிறதே இவர்களின் வருகை. ஒருகாலமும் இல்லாதவாறு இவர்களின் வருகை இந்தமுறை, ஆனால் வரவேண்டியவர் வந்ததாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, satan said:

மடுத்திருத்தலத்திலும் அரசியல் ஆரம்பிக்கப்போவதாக கட்டியம் கூறுகிறதே இவர்களின் வருகை. ஒருகாலமும் இல்லாதவாறு இவர்களின் வருகை இந்தமுறை, ஆனால் வரவேண்டியவர் வந்ததாக தெரியவில்லை. 

அவர் வர மாடடார். இன்றைக்கும் இலங்கை ஒரு சிங்கள பவுத்த தேசம் என்பதில் உறுதியாக இருக்கிறார். சிங்கள பவுத்தர்களை விட இவருக்குத்தான் அந்த தேச பக்தி  அதிகம்.  அவர் சார்ந்த மதமும், அவரது அதி உத்தம நிலையும் அவருக்கு இரண்டாம் பட்ச்சமே. எனவே அவர் வர மாடடார். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கத்தோலிக்கர்களை அதிகாரம் செய்து கட்டுப்படுத்த, கத்தோலிக்க கர்தினால் போர்த்த பௌத்தன் என்கிறீர்கள்? அதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.