Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆசிரியர் சமூகத்தை மிகவும் பாதித்துள்ளன.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆசிரியர் சமூகத்தை மிகவும் பாதித்துள்ளன.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் செருப்பால் அடித்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் மாணவனை அடித்து ஆபாசமாக பேசி காலில் விழ வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கேட்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் இது போன்று தமிழ்நாட்டில் நடப்பது முதல் முறையல்ல. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் தூங்கிய மாணவனை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் ஆசிரியரை அடிக்க கையை ஓங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே தொடக்கப்பள்ளியில் மாணவனை அடித்தற்காக, மாணவனின் பெற்றோர் ஆசிரியரையும் தலைமை ஆசிரியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் , பிறந்தநாளை பள்ளி வளாகத்தில் கொண்டாடியதற்காக கண்டித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த ஆசிரியரை பள்ளி முடிந்து வரும் வரை காத்திருந்து மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இவை தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்வதில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதிப்பெண் குறைவாக வழங்கிய ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதேபோன்று வேறு மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன.

ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் ஆசிரியர் சமூகத்தை மிகவும் பாதித்துள்ளன. தவறு செய்யும் ஆசிரியர்களை யாரும் நியாயப்படுத்தவில்லை என்றாலும், கல்வி கற்றுக் கொடுப்பரை தரம் தாழ்ந்து வசைப்பாடுவதும், அடிப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான்.
 
படக்குறிப்பு,

மாணவர்களுடன் அரசுப் பள்ளி ஆசிரியர் பகவான்.

பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கும் உரிமையை யார் கொடுத்தது என கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார் திருவள்ளூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜி பகவான்.

தான் பணி செய்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாறும் போது, அவர் செல்லக் கூடாது என மாணவர்கள் தெருவில் நின்று கதறும் அளவு மாணவர்களின் அன்பைப் பெற்றவர் 33 வயதான ஆசிரியர் பகவான்.

இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆசிரியரை செருப்பால் அடித்தது என்னை மிகவும் காயப்படுத்தியது. ஆசிரியர் என்ன தவறு செய்திருந்தாலும் அது குறித்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, பள்ளி வளாகத்துக்குள் புகுந்து ஆசிரியரை தாக்க யார் உரிமை கொடுத்தது? ஆசிரியர்களை அடித்தால் கேட்க யாரும் இல்லை என்ற எண்ணம் சமூகம் முழுவதுமே உள்ளது. இன்று செருப்பால் அடித்தவர்கள் நாளை கத்தி எடுத்து குத்த மாட்டார்கள் என என்ன நிச்சயம்? இப்படி நடந்தால் ஆசிரியர்களுக்கு பயம் அதிகரிக்கும், ஈடுபாடு குறைந்துவிடும்.” என்று வேதனை தெரிவிக்கிறார் அவர்.

ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆசிரியர் சமூகத்தை மிகவும் பாதித்துள்ளன.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பள்ளி வகுப்பறை

சில பத்தாண்டுகளுக்கு முன், ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அந்தப் பள்ளியை சுற்றியுள்ள சமூகத்துக்குமே மிகுந்த மரியாதை இருக்கும். கல்வியே ஒருவரை தங்கள் பொருளாதார சமூக பாகுபாடுகளிலிருந்து காப்பாற்றும் கருவியாக இருக்கும் போது அந்த கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் மீது பக்தியுடன் கலந்த மரியாதை இருந்தது.

இன்றும் கல்வியே ஒருவரின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது என்றாலும் ஆசிரியர் மூலமே கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கற்றலில் ஆசிரியரின் பங்கு மாறி வருகிறது. விரல் நுனியில் இருக்கும் தரவுகளை ஆசிரியரின் வாய்வழி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது இல்லை.

இந்த வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மாறவில்லை என்பது உண்மையே. வீட்டில் பெற்றொருக்கும் பிள்ளைக்கும் இருக்கும் தலைமுறை இடைவெளி வகுப்பறையிலும் நிலவுகிறது. இதன் காரணமாக ஆசிரியர் - மாணவர் உறவு சுமூகமாக இல்லை என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ஆசிரியர்களை அடிக்கும் மனநிலை ஏன்?

எழுத்தாளரும் கல்வியாளருமான 'ஆயிஷா' நடராஜன்
 
படக்குறிப்பு,

ஆசிரியர் - மாணவர் உறவு வெகுவாக மாறிவிட்டது என்று எழுத்தாளரும் ஆசிரியருமான‘ஆயிஷா’ நடராஜன் கூறுகிறார்.

ஆசிரியர்கள் இப்போதும் தாங்கள் ‘குரு-சிஷ்யன்’ உறவில் இருப்பது போல எண்ணிக்கொள்வது தவறு என்கிறார் எழுத்தாளரும் ஆசிரியருமான‘ஆயிஷா’ நடராஜன். “ஆசிரியர்கள் முன்பு ஆசிரியராக மட்டுமே இருந்தார்கள். அதுவே அவர்கள் வாழ்க்கையாக இருந்தது. ஆனால் இன்று அது ஒரு அலுவலக வேலை போலாகிவிட்டது. ஆசிரியர் - மாணவர் உறவு என்பது குரு-சிஷ்யன் உறவாக இன்று இல்லை. சேவை வழங்குபவர் - வாடிக்கையாளர் உறவாக மாறியுள்ளது” என்கிறார் அவர்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே பொது சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என்கிறார் பதினைத்து வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் சி எஸ் ஜேக்கப் பிரசன்னா ஸ்டீபன். “சமூகத்தில் சாதிய, மத ரீதியான பிளவுகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. வீடுகளிலும் பணியிடங்களிலும் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. இவை அனைத்தையும் பிள்ளைகள் பார்க்கிறார்கள். இந்த சூழலில் தான் வகுப்பறைக்குள்ளும் சகிப்புத் தன்மை குறைவாக உள்ளதை பார்க்கிறோம்.” என்கிறார்.

மாணவர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லை என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் சிவபாலன். “தற்கால பெற்றோர் தங்களது குழந்தைகளை மிகவும் சௌகரியமாக வளர்க்க விரும்புகிறார்கள். குழந்தையின் பிரச்னைகளை தாங்களே எல்லா இடங்களிலும் தீர்த்து வைக்க நினைக்கிறார்கள். எனவே பிள்ளைகளுக்கு பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை, வீட்டுக்கு வெளியே யாராவது தன்னை விமர்சித்தால் கேள்வி கேட்கிறார்கள், தாங்கிக் கொள்ள முடிவதில்லை, சில நேரங்களில் வன்முறையை கையில் எடுக்கிறார்கள்” என்கிறார் அவர்.

மாணவர்களுக்கு தண்டனைகள் தேவையா?

ஆசிரியர்கள் மீதான தாக்குதலை பேசும் போது, மறுபுறம் மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்கள் குறித்தும் பேச வேண்டும்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் மாணவனை அடித்தால் ஆசிரியரின் பக்கம் நியாயம் இருக்கும் என பெற்றோர்கள் நம்பினர். ஆனால் இன்று அப்படி சொல்வதில்லை. மேலும் வகுப்பறைக்குள் உடலை வருத்தும் தண்டனைகள் குறித்த நம் சமூகத்தின் பார்வையும் மேம்பட்டு உள்ளது. 2009-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் படி, மாணவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவது சட்டத்தை மீறிய செயலாகும்.

நான் ஆசிரியரிடம் அடி வாங்கியதால்தான் முன்னேறினேன் என ஒருவர் கூறுவது மிக அபத்தமானது என சுட்டிக் காட்டுகிறார் எழுத்தாளர் நடராஜன். “வீட்டுப்பாடம் செய்யாத ஒரு மாணவரை முட்டி போட சொல்வதால் அந்த மாணவரிடம் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. முட்டி போட்டு எழுந்து முடித்தவுடன் அதை மறந்து விடுவார். கற்றலுக்கான சூழலுக்கும் அடி உதைக்கும் சம்பந்தமே இல்லை” என்று கூறுகிறார்.

மாணவர்களின் அன்பைப் பெற்றிருந்த ஆசிரியர் பகவான், தனது கண்டிப்பை மாணவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என விளக்குகிறார். “நான் மாணவனாக இருந்த போது எனக்கு ஆசிரியரிடம் பயம் இருந்தது. ஆனால் இன்றைய மாணவர்களுக்கு பயம் இல்லை. நண்பரை போல பழக விரும்புகிறார்கள். அதை நல்ல மாற்றமாக தான் நான் பார்க்கிறேன். தவறு செய்த மாணவரை அடிப்பது எளிது. ஆனால் அது பலனளிக்காது. நான் மாணவர்களை அழைத்து பேசுவேன். ஒரு முறை புரியவில்லை என்றால் பல முறை பேசுவேன். மாணவருக்கு புரியும் வரை பேச வேண்டும். அதற்கு பலன்கள் உடனே கிடைக்காது. அன்பும் அரவணைப்பும் தலை தூக்கி நின்றால் ஆசிரியரின் கண்டிப்பை மாணவர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்றார்.

ஆசிரியர்களாக திணறும் 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ்

டாக்டர் சி எஸ் எஜேக்கப் பிரசன்னா ஸ்டீபன்
 
படக்குறிப்பு,

தலைமுறை இடைவெளியை சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுவதாக டாக்டர் சி எஸ் ஜேக்கப் பிரசன்னா ஸ்டீபன் கூறுகிறார்.

சமூகத்தின் பிற பகுதிகளை போலவே வகுப்பறைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும், அரசின் கல்விக் கொள்கைகள் காரணமாகவும் தலைமுறை இடைவெளி காரணமாகவும் இவை நிகழ்கின்றன. ஆனால் இந்த மாற்றங்களை சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகிறார்கள்.

இன்று வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் என்கிறார் டாக்டர் ஜேக்கப் பிரசன்னா ஸ்டீபன். “70களில் பிறந்தவர்கள் பணிஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள். 90களின் கடைசியில் பிறந்தவர்கள் தற்போது பணிக்கு வந்திருக்கும் புதிய ஆசிரியர்கள். எனவே தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் ஆவர். இவர்கள் தாங்கள் மாணவர்களாக வகுப்பறையில் எப்படி இருந்தார்களோ அதுபோன்று தற்போதைய மாணவர்கள் இல்லை. இந்த தலைமுறை இடைவெளியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்” என்கிறார் அவர்.

மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையிலான மோதல்களை இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான பிரச்னையாக சுருக்கிப் பார்க்கக் கூடாது என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன். “வகுப்பறையில் ஏற்படும் மாற்றங்களை கையாள ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை. சமூக ஊடகத்தால் தவறாக நடக்கும் மாணவரை எப்படி கையாள்வது என ஆசிரியருக்கு சொல்லி தரவில்லை. நகரங்களில் நிறைய பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப் பழக்கம் உள்ளது. அதை ஆசிரியர் எப்படி கையாள வேண்டும்? இதை யார் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்? ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து கல்வி முறை குறித்த கேள்விகளை எழுப்ப வேண்டும். ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்தி நாம் பார்க்கக் கூடாது” என்கிறார்.

கொரோனாவுக்கு பிறகான மாற்றம்

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களை பலிவாங்கியது. ஆனால், தப்பித்து உயிர் வாழ்பவர்களுக்கு பல்வேறு விதமான நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் கல்வித்துறையும் விதிவிலக்கு அல்ல.

கொரோனா ஊரடங்கு காலத்தில் செல்போன் மூலம் பள்ளிப் பாடங்கள் நடத்தப்பட்டன. அப்போது அதிகப்படியான செல்போன் பழக்கத்துக்கு அடிமையான மாணவர்கள் இன்றும் மீளவில்லை என்கிறார் ஆசிரியர் பகவான். “மாணவரின் கவனத்தை வகுப்பறைக்குள் வைப்பது ஆசிரியர்களுக்கான புதிய சவாலாகும். ஆசிரியர்கள் அதற்கு ஏற்றவாறு தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொடுக்கும் பாடத்தில் நமக்கு பாண்டித்தியம் வேண்டும். இல்லை என்றால் மாணவர்கள் நமக்கு மரியாதை தர மாட்டார்கள்” என்கிறார் அவர்.

கொரோனாவுக்கு பிறகு பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீதான ஈர்ப்பும் கவனமும் அதிகரித்துள்ளது என்கிறார் எழுத்தாளர் நடராஜன். குழந்தைகளின் உணர்வு ரீதியான மிரட்டலுக்கு பெற்றோர்கள் ஆளாகிறார்கள் என்கிறார் அவர். “இந்த பொருளை வாங்கிக் கொடுக்கா விட்டால், என குழந்தைகள் மிரட்டுகிறார்கள். பெற்றோர்கள் அதற்கு இணங்கிவிடுகிறார்கள்” என்கிறார் அவர். இதுவும் கூட வகுப்பறை மோதல்களுக்கு காரணமாகிவிடுகிறது.

ஆசிரியர்களுக்கு மன அழுத்தம்

மனநல மருத்துவர் சிவபாலன்
 
படக்குறிப்பு,

ஆசிரியர் பணி ஆபத்தானதாக இருப்பதாக மனநல மருத்துவர் சிவபாலன் கூறுகிறார்.

ஒரு காலத்தில் பாதுகாப்பான, நிம்மதியான பணியாக கருதப்பட்ட ஆசிரியர் பணி தற்போது மன அழுத்தம் நிறைந்ததாக மாறியிருக்கிறது என பல தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆசிரியர் பணியில் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக, இன்று அந்த பணியை ஆபத்தானது என்று கூறுகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கற்பித்தல் தவிர நிறைய பணிகள் கொடுக்கப்படுகின்றன. இன்றைய பெற்றோர்கள் எல்லாவற்றுக்கும் ஆசிரியர்களிடம் புகார் செய்கிறார்கள். இவை எல்லாம் ஆசிரியர் மீதான பொறுப்புகளை பல மடங்கு அதிகரிக்கிறது” என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.

கல்வி நிலையத்துக்கான மாணவர் சேர்க்கை பொறுப்பும் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதாக டாக்டர் ஜேக்கப் கூறுகிறார். “ குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்த்தால் தான், ஆசிரியருக்கு அந்த கல்வியாண்டில் வேலை நிச்சயம். இப்படியான சூழலில் ஆசிரியர்கள் எப்படி மாணவர்கள் நலன் பற்றி கவலைப்படுவார்கள்?” என கேள்வி எழுப்புகிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cy0pmz200g2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவர்களுக்கு ஆசிரியர் மீது பயம் தேவையில்லை. ஆனால் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது சிநேகித பூர்வமாக பாடம் நடத்தினாலே பல பிரச்சனைகள் பறந்து போகும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/8/2023 at 03:55, ஏராளன் said:

ஒரு காலத்தில் பாதுகாப்பான, நிம்மதியான பணியாக கருதப்பட்ட ஆசிரியர் பணி தற்போது மன அழுத்தம் நிறைந்ததாக மாறியிருக்கிறது என பல தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த நிலை இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல அவுஸ்ரேலியாவிலும் தான். இங்கே அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை. அத்துடன் இன்றைய சமூக ஊடகங்களின் வளர்ச்சியினால்  மாணவர்களின் பழக்க வழக்கங்கள் விரும்பத்தக்கவையாக இல்லை. வகுப்பில் படிக்கிற பிள்ளை அக்கறையாக படித்துவிட்டுப் போக, ஆசிரியரை கடுப்பேத்தவே வருகின்றவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வகுப்பிற்கு வெளியேயும் அனுப்ப முடியாது..வகுப்பிலும் வைத்திருக்க முடியாது.. பல்வேறு விதமான குடும்பப் பிண்ணனிகளுடன் வருவதால் ஓரளவிற்கு மேல் திருத்த முடியாது. இதனால் ஆசிரியராக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு இன்னுமொரு காரணம் இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான சம்பளம் இல்லை என்பதும் தான். 

அதே நேரம் நான் பார்த்த அளவில் ஊரில் ஆசிரியர்களின் மனப்பாங்கும் மாற வேண்டும். இங்கே நாங்கள் மாணவர்களுடன் கதைக்கும் அதிலும் பொதுவாக ஆரம்பப்பாடசாலைகளில் உள்ள மாணவர்களுடன் கதைக்கும் பொழுது கடுமையான தொனியில் கதைப்பதில்லை அதனால் மாணவர்கள் எந்தவிதப் பயமும் இன்றி தங்களது சந்தேகங்களை அனுபவங்களை பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வார்கள். 

ஆனால் ஊரில் உள்ள ஆசிரியர்களுடன் இன்னமும் இந்த மாதிரி பழகு முடிவதில்லை. மாணவர்களை தண்டிப்பது என்பதும் இன்னமும் மாறவில்லை. இதனால் இப்பொழுது  வேறு வகையான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

ஆக மொத்தத்தில் கற்பித்தல் என்பது இன்றைய காலத்தில் கொஞ்சம் சவாலானது என்றுதான் கூறவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னொரு திரில வாத்தி அடிச்ச அடீல பொடி ஆஸ்பத்தீரிலயாம் 😩



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.