Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதி தேர்தலை, தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் – ஏன் பயன்படுத்த வேண்டும்? - யதீந்திரா
 

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்திற்கு பின்னர், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். யார் பிரதான வேட்பாளர்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. எனினும் அவற்றை ஊகிப்பது கடினமான காரியமல்ல. ரணில் விக்கிரமசிங்கவே பிரதான வேட்பாளராக இருப்பார். அவரை எதிர்த்து எவர் நிறுத்தப்படுவார் என்பதை இப்போதைக்கு ஊகிப்பது கடினம். ஒன்றில் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளை தோற்கடிக்க வேண்டுமென்னும் வியூகமொன்று, உள்ளுக்குள்ளும் வெளியிலும் வகுக்கப்படுமாக இருந்தால் மட்டும்தான், ஒரு பலமான பொது வேட்பாளரை நாம் காண முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னால் ஒரு பலவீனமான வேட்பாளரே இருப்பார்.

ஒரு வேளை, சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவாராயின், தேர்தல் களம் சற்று சூடுபிடிக்கும். ஏனெனில், ஜனாதிபதி தேர்தலில் எவர் வெல்ல வேண்டுமென்றாலும் கூட, அவருக்கு எண்ணிக்கையில் சிறுபாண்மை மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. ஏனெனில் தற்போதுள்ள சூழலில்;, தனிச்சிங்கள வாக்குகளில் வெற்றிபெறுவதை ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வாறான அரசியல் சூழலும் இல்லை, அதனை உருவாக்குவதற்கான அரசியல் காரணங்களும் இல்லை. ஈஸ்டர் தாக்குதல் கோட்டபாயவிற்கு அவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

எண்ணிக்கையில் சிறுபாண்மை மக்களை பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னால் ஒரு பலமான பொது வேட்டபாளர் இல்லையென்றால், மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் தெரிவு ரணிலாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் மீண்டும் பிரதான இடத்தை பிடிக்கும்.

2005 தேர்தலில், ரணிலை தோற்கடிப்பதில் தமிழ் மக்களின் வாக்குகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. 2015இல், மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில், தமிழ் மக்களின் வாக்குகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் தமிழ் மக்களை நாடிவருகின்றது. இதனை தமிழ் தேசிய தலைமைகள் என்போர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றனர்? முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும், தமிழ் மக்களின் வாக்குகள், ஒரு இலக்கிற்காக கையாளப்பட்டது, அந்த இலக்கு வெற்றியையும் பெற்றது ஆனால் அதன் பயனை தமிழ் மக்களால் அடைய முடிந்ததா? பதில் இல்லை என்பதே! இந்த நிலையில் மீளவும் தமிழ் மக்களின் வாக்குகள், ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கை ஆற்றப் போகின்றது. ஆனால், இதனை தமிழ் மக்களுக்கு நன்மை சேர்பிக்கும் வகையில் எவ்வாறு கையாளுவது?

spacer.png

2005 தேர்தல் பகிஸ்கரிப்பு, ரணில் விக்கிரமசிங்கவை மட்டும் தோற்கடிக்கவில்லை – மாறாக, விடுதலைப் புலிகளையும் அரசியல் அரங்கிலிருந்து அழித்தது. ஏனெனில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான தேர்தல் பகிஸ்கரிப்பு, இந்திய மற்றும் மேற்குலக வியூகங்களுக்கு எதிரான ஒன்றாகவே நோக்கப்பட்டது.

இது தொடர்பில் எனது முன்னைய பத்திகளில் சிலவற்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடனான இணைப்புக்கான திட்டங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருந்தார். அதே வேளை, அமெரிக்காவோ, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான, ஜக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவருவதில் ஆர்வம் காட்டியது. இவ்வாறானதொரு நிலையிலேயே, விடுதலைப் புலிகளின் தலைமை, ரணில் விக்கிரமசிங்கவை தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம், அதிகாரத்திலிருந்து அகற்றும் முடிவை எடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைமையை பொறுத்தவரையில், சமாதான முன்னெடுப்பு ஒரு அரசியல் பொறி, அதிலிருந்து தப்ப வேண்டுமாயின், ரணிலை அரங்கிலிருந்து, அகற்ற வேண்டும், அதன் மூலம், மீண்டும் யுத்தத்ததை ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கலாம். ஏனெனில் சமாதானத்தை முன்னெடுக்கும் நோக்கம் இருந்திருந்தால், ரணிலுடன்தான், புலிகள் காலத்தை செலவிட்டிருக்க வேண்டும். அதனை முழுமூச்சுடன் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் மேற்குலகத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த, மகிந்த ராஜபக்சவை, தென்னிலங்கையின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்கு ஒத்துழைத்தால், நோர்வே தலைமையிலான மேற்குலகின் சமாதான முன்னெடுப்புக்களை தொடர முடியாத சூழலை ஏற்படுத்தலாமென்றே புலிகள் கணக்குப் போட்டனர். அவர்களது கணக்கு சரி, ஏனெனில், அவர்கள் எதிர்பார்த்தது போன்றே, மகிந்த ராஜபக்ச நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்களை தொடர்வதை விரும்பவில்லையென்று அறிவித்தார். நாங்களே பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றார்.

spacer.png

எவ்வாறு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த பிரேமதாச, இந்திய படைகளை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டாரோ, அவ்வாறானதொரு சூழல்தான், மகிந்த ராஜபக்ச விடயத்திலும் ஏற்படுத்தப்பட்டது. பிரேமதாச – புலிகள் உடன்பாட்டின் மூலம், இந்திய படைகளை வெளியேற்றும், அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறியது. புலிகள்; தப்பித்துக் கொண்டனர். அதே போன்று, ரணிலை அகற்றும் அவர்களது இலக்கும் நிறைவேறியது. அவர்கள் எதிர்பார்த்தது போன்று, நோர்வேயின் சமாதான முன்னெப்புக்களிலிருந்து வெளியேறுவதற்கான சூழல் உருவாகியது. ஆனால் இம்முறை சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி மரணமுற்றார் – என்னும் நிலைமையே புலிகளுக்கு ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், முழு வேகத்துடன் இராணுவரீதியில் புலிகளுக்கு எதிராக திரும்பிய போது, ஒட்டுமொத்த உலகும் புலிகளுக்கு எதிராக இருந்தது. முன்னர் இந்தியா மட்டுமே இருந்தது. இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமையால், புலிகளால் தப்பித்துக் கொள்ள முடிந்தது ஆனால் இம்முறை ஒட்டுமொத்த மேற்குலகும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்தமையால், புலிகளால், யுத்தப் பொறியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியவில்லை. சமாதான பொறியிலிருந்து தப்பித்துக் கொள்ளவதற்காக புலிகள் வகுத்த யுத்தப் பொறிக்குள், புலிகளே அகப்பட்டுக் கொண்டனர்.

இந்த பின்புலத்தில் நோக்கினால், ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் தேர்தல் பகிஸ்கரிப்பு தந்திரோபாயம் இறுதியில், தமிழ் மக்களுக்கு மோசமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது. 2015இல் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் தந்திரோபாய நகர்விலும், தமிழ் மக்களின் வாக்குகள் பிரதான பங்கை வகித்திருந்தது. இந்த இடத்தில், சிலர், ஒரு வாதத்தை முன்வைக்கலாம். அதாவது, மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும்தானே அவ்வாறு பயன்படுத்தப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளுக்கு மட்டும் அப்படியென்ன விசேட தகுதியுண்டு?

கேள்வியில் தவறில்லை ஆனால் தர்க்கரீதியில் தமிழ் மக்களின் வாக்குகள் ஆற்றும் பங்கை, ஏனையவர்களது வாக்குகள் வழங்காது. ஏனெனில், ஏனையவர்கள் எந்தவொரு சந்தர்பத்திலும், தேர்தல் பகிஸ்கரிப்பு அல்லது, குறிப்பிட்ட நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தேர்தலை பயன்படுத்தும் தீர்மானங்களை எடுக்கவே மாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் அவ்வாறான அரசியல் நிலைப்பாடு இல்லை. மத்தியிலுள்ள அரசாங்கத்துடன் பேரம்பேசி, அமைச்சுப் பொறுப்புக்களை பெறுவதன் மூலம், அரசியலை முன்னெடுப்பதே அவர்களிடமுள்ள அரசியல் உபாயமாகும். இந்த பின்புலத்தில் நோக்கினால், 2005இல் ரணிலை தோற்கடிப்பதில் ஈழத் தமிழ் வாக்குகளே பயன்பட்டது. அதே போன்று, 2015இல், மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில் ஈழத் தமிழ் வாக்குகளே பிரதான பங்கை வகித்தது. அதே போன்று, 2024 தேர்தலிலும் ஈழத் தமிழ் வாக்குகளே பிரதான பங்கை வகிக்கப் போகின்றன. இந்த இடத்தை தமிழ் தலைமைகள் என்போர் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகின்றனர்? இதனை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு தமிழ் மக்களை ஒரு அரசியல் சமூகமாக நிறுவப் போகின்றனர்?

spacer.png

தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் முக்கியமாக ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித்பிரேமதாச அல்லது பிறிதொருவர், எவராக இருப்பினும், அவர்கள் தமிழ் மக்களை நோக்கித் திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். வேறு வழியில்லாமல், தமிழ் மக்கள் தங்களுக்குத்தானே வாக்களிப்பார்களென்னும் எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கக் கூடாது. ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு எண்ணுவதற்கான வாய்ப்புண்டு. ஏனெனில் இன்றைய நிலையில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாற்றான ஒருவரை முன்னிலைப்படுத்தக் கூடிய நிலையில் தென்னிலங்கையில் எந்தவொரு கட்சியும் இல்லை. இல்லாவிட்டால் அனைவருமாக பொது வேட்பாளர் ஒருரையே நிறுத்த வேண்டும். இந்தச் சூழலை தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், தமிழ் மக்களின் வாக்குகளை ஒரு பலமான ராஜதந்திர ஆயுதமாக பயன்படுத்துவதற்கான தந்திரேபாயம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் அவருக்கு வாக்களிக்கும் தீர்மானத்தை எடுக்கலாம். இதன் மூலம் வேறு வழியின்றி, தமிழர் தரப்போடு பேரம் பேச வேண்டிய நிர்பந்தம் தென்னிலங்கைக்கு உருவாகும்.

ஆனால் கடந்த காலத்தில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை கோமாளித்தனமாக்கியது போன்று, இம்முறை நடந்துகொள்ளக் கூடாது. இன்றைய நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கு மிகவும் பொருத்தமானவர் இரா.சம்பந்தன் மட்டுமே. தேர்தல் பகிஸ்கரிப்பு உசிதமான அணுகுமுறையல்ல. அது ஜனநாயக விரோதமானதாகவே நோக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை அறிவித்தாலே, தென்னிலங்கை பதட்டமடையும். முக்கியமாக ரணில் பதட்டமடைவார். இதனை தேர்தலுக்கு முன்பாகவே, ஒரு பேரம் பேசுவதற்கான உக்தியாக கையாளலாம். சில விடயங்களை செய்து காண்பிக்குமாறு கூறலாம் அதே வேளை, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கலாம். காற்றுள்ள போது தூற்றிக்கொள்ளும் உபாயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய தரப்புக்கள் சிந்திக்க முன்வர வேண்டும்.
 

 

http://www.samakalam.com/ஜனாதிபதி-தேர்தலை-தமிழ்-ம-2/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த ஜனாதிபதி தேர்தலை, தமிழர்கள், ஒரு குடியொப்ப தேர்தலாக்க வேண்டும்.

ஒன்று தமிழர் ஒருவர் போட்டி இட்டு, அவருக்கு விழுவது, தமிழர் பிரிந்து செல்வதட்கான வாக்கு எனலாம். அல்லது, போட்டியிடும் சிங்கள வேட்ப்பாளர்களில், இருவருக்கு போட்டு, வாக்கினை செல்லாததாக்கியும், காட்டமுடியும்.

அவ்வாறு செய்யப்போகிறோம் என்பதை இப்பவே அறிவிக்க வேண்டும். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
    • ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.   சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
    • இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது, உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.