Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 20/07/1992
  • பக்கம்: 1

 

வாழைச்சேனை - பேய்த்தாளை அகதி முகாம் தமிழரை அச்சுறுத்தும் முஸ்லிம் குழு!

யாழ்ப்பாணம், ஜூலை 20 

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, பேய்த்தாளை அகதி முகாமில் தங்கியிருக்கும் அப்பாவித் தமிழர்களைக் கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம் குழுவினர் அச்சுறுத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அகதி முகாமில் இருந்து இரு தமிழர்களை அந்தக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரமும் முஸ்லிம் குழுவினரால் 8 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை- மஞ்சத்தொடுவாய் அகதிமுகாமில் தங்கியுள்ளோரும் கடந்த இரு தினங்களாக அச்சுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

[ஒ- 3]

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 168
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    முன்னுரை     தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் படைத்துறை இயந்திரத்தின் கைகளால் தென் தமிழீழ தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாதவை. 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கை  முஸ்லீம்கள்… ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை ஆவணப் படுத்தும் உங்கள் செயலுக்கு மிக்க நன்றி  நன்னிச்சோழன். 🥰 👍🏽 🙏

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    நிகழ்படங்கள் படுகொலை சாட்சிகள்    முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வீரமுனையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான கண்கண்ட மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு: இதில் தோன்றி நல்லவர் வேடமிட்டு முஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 23/07/1992
  • பக்கம்: 1

 

வாழைச் சேனையில் தமிழர் மீது தாக்குதல்

கொழும்பு. ஜுலை 23

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து நேற்று வாழைச்சேனையில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கலவரத்தை அடக்க பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது இரண்டு முஸ்லிம்கன் கொல்லப்பட்டனர் என்று ஏஜென்சி செய்தி ஒன்று தெரிவித்தது. 

வாழைச்சேனயில் முஸ்லிம்கள் வீதியால் சென்ற தமிழர்களின் வாகனங்களை நோக்கி கற்களை வீசினார்கள் என்றும் அப்போதே தமிழ் சாரதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கல்வீச்சுக்கு உள்ளான இந்த வாகனத்தின் சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த இயலாது முன்னால் சென்று கொண்டிருந்த பொலீஸ் ஜீப்புடன் மோதினார் என்றும் இந்தச் சம்பவத்தில் ஜீப்பில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் சித்தாண்டியில் அனைத்து ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40க்கு அதிகம் என்றும் அவர்களில் பலர் முஸ்லிம்கள் என்றும் தமிழ் கட்சிகளில் ஒன்று தெரிவித்துள்ளது.

[இ-எ- 10]

 


 

  • பக்கம்: 1

 

மேலும் 2 தமிழர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

வாழைச்சேனைப் பகுதியில் மேலும் இரண்டு தமிழர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரையம்பதியைச் சேர்ந்த அருணாசலம், களுவன்கேணியைச் சேர்ந்த தங்கராசா புஸ்பராசா ஆகியோரது சடலங்களே அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாழைச்சேனைப் பகுதியில் அண்மையில் இதே போன்று நான்கு தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

வாழைச்சேனையில் உள்ள தமிழ் அகதி முகாமில் இருந்த எட்டுப்பேர் முஸ்லிம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

(இ- 5)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 27/07/1992
  • பக்கம்: 1

 

மட்டக்களப்பில் ஊர்காவலர் தமிழர் மீது வன்முறைகள்: வீதியில் நடமாட முடியாதவாறு நிலைமை மோசம்

கொழும்பு. ஜுலை 23

யாழ்ப்பாணம். ஜூலை 27 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிக்கின்றன. 

தமிழ் மக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலையில் உள்ளனர்.

ஏறாவூரில் பஸ் ஒன்றில் பயணம் செய்த 3 தமிழர்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கண்டபடி வெட்டப்பட்டு காயப்படுத்தப்பட்டனர் என்றும் -

ஓட்டமாவடியில் 4 தமிழரும் காத்தான்குடிப் பகுதியில் ஒரு தமிழரும் ஊர்காவலர்களால் கத்தியால் வெட்டப்பட்டுக் காயப்படுத்தப்பட்டனர் என்றும் - 

அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் மட்டக்களப்பு, வாழைச்சேனை அகதி முகாமில் உள்ள தமிழ் மக்களை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாக்கியுள்ளனர்.

அகதி முகாமில் உள்ளவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 10/08/1992
  • பக்கம்: 1

 

கிழக்கில் 21 தமிழர் நேற்றுப் படுகொலை!

புதுடில்லி. ஆக. 10 

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் தமிழ்க் கிராமவாசிகள் 21 பேர் படுகொலையுண்டனர். மேலும் 10 தமிழர்கள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து மேல் விவரங்கள் கிடைக்கவில்லை என்று ஏஜென்ஸிச் செய்தி ஒன்று தெரிவித்ததாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது.

(உ- எ)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 11/08/1992
  • பக்கம்: 1

 

வெலிகந்தைச் சம்பவம்: 24 தமிழர் படுகொலை

பொலன்னறுவை - மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் உள்ள வெலிகந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தில் படுகொலையுண்ட தமிழர்களின் எண்ணிக்கை 24 என அறிவிக்கப்படுகிறது. மேலும் 8 தமிழர் படுகாயமடைந்தனர். 

முஸ்லிம் குண்டர்களினால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

(உ- எ- 3)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 02/11/1992
  • பக்கம்: 1

 

ஏறாவூரில் தமிழர்கள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்கு: ஒருவர் பலி; நால்வர் காயம்

கொழும்பு, அக். 2 

ஏறாவூரில் முஸ்லிம் குண்டர் கோஷ்டி ஒன்று கத்திகள், பொல்லுகள் கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 4 பேர் காயமடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பக்கத்துக் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும்- 

பொலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்ததாகவும்-

அதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம்கள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் பி.பி.ஸி. தெரிவித்தது. 

(உ- 10)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 04/11/1992
  • பக்கம்: 1

 

ஆயுதப் போருக்கு அரபு நாடுகளிடம் உதவி கோருகிறது முஸ்லிம் அமைப்பு

ஆயுதம் ஏந்திப் போராடு வதற்காக கிழக்கிலங்கை முஸ்லிம் இயக்கம் ஒன்று பலஸ்தீன கெரில்லா இயக்கம் ஒன்றிடம் உதவி கோரியிருக்கிறது.

நம்பத்தகுந்த வட்டாரங்களை ஆதாரமாகக்காட்டி "லங்காதீப" வார இதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டிருக்கிறது. 

யாசீர் அரபாத் தலைமையில் இயங்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு எதிராகச் செயற்படும் கெரில்லா இயக்கம் ஒன்றிடமே இந்த உதவி கோரப்பட்டுள்ளதாகவும் -

இது தொடர்பாக பல கடிதங்கள் கடந்த சில வாரங்களில் பரிமாறப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முஸ்லிம் மக்கள் விடுதலை இயக்கம்" என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த இயக்கம், இப்போராட்டத்துடன் முஸ்லிம் மக்களுக்கென புதிய அரசியல் கட்சி ஒன்றையும் பதிவு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரியவருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல அரபு நாடுகளிடம் உதவி கேட்டு இந்த இயக்கம் எழுதியுள்ள கடிதங்களில் வடக்கு - கிழக்கு யுத்தத்தில் இதுவரையில் சுமார் 2 ஆயிரத்து 500 முஸ்லிம்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்து 500 முஸ்லிம்கள் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

(உ- 10)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 14/11/1992
  • பக்கம்: 1

 

"ஜிகாத்"தை தொடங்க முஸ்லிம்கள் ஆதரவாம்: மாத இதழ் கருத்துக் கணிப்பு

கொழும்பு, நவ 14 

"ஜிகாத்" எனப்படும் புனிதப் போரைத் தொடங்க வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைடீர் கஷ்ரப்பின் கருத்தை முஷ்லிம்களில் பெருபொலானோர் ஆதரிப்பதாக "அல் இஸ்லாம்" என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

தான் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக "ஜிகாத்" நடத்த வேண்டும் என்பதனை பெரும் எண்ணிகையான முஸ்லிகள் ஆதரித்திருப்பதாக இந்தப் பத்திரிகை அறிவித்திருக்கிறது.

தனியான முஸ்லிம் பிரிவு ஆரம்பிக்கப்படுவதையும் கணிசமான முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்றனர் எனவும் "அல் இஸ்லாம்" மாத இதழ் தெரிவித்துள்ளது.

இத்த மாத இதழ் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் அஷ்ரப்பையும் கடுமையாக விமர்சித்து வரும் சஞ்சிகை என்றும் ஆனால் "ஜிகாதி" யோசனையை இது ஆதரித்துள்ளதாகவும் அவதானிகள் சிலர் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஏனைய கொழும்புத் தமிழ்க் குழுக்களை இராணுத்துடன் சேர்த்துப் போராடும் அரசின் நடவடிக்கையையும் இந்த மாத இதழ் கண்டித்திருக்கிறது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 21/02/1993
  • பக்கம்: 1

 

தமிழர் விரட்டியடிப்பு: மட்டு. பொறுப்பாளர் தகவல்

அம்பாறை மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளின் போது தமிழ்க் கிராமங்களில் இருந்து சுமார் 14 ஆயிரம் தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா படையினரின் ஒத்துழைப்போடு சிங்களவரும் முஸ்லிம்களுமே தமிழ் மக்களை விரட்டியடித்துள்ளனர். 

மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல் நிர்வாகப் பொறுப்பாளர் திரு கரிகாலன் புலிகளின்குரலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளளார். 

அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய இரு கிராமங்களில் மட்டுமே தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

ஏனைய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தமது உடைமைகளை இழந்து வேறு இடங்களுக்குச் சென்று அகதிகளாக தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பிலும் எல்லைக் கிராமங்கள் பல சிறிலங்காப் படையினரால் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள மக்களும் உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர் - என்றும் திரு கரிகாலன் தமது பேட்டியில் தெரிவித்துள்ளார். 

(ஓ)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 16/06/1993
  • பக்கம்: 1

 

அம்பாறையில் 2 தமிழர் கொலை

யாழ்ப்பாணம், ஜூன் 16 

அம்பாறை மாவட்டம் தாண்டியடிப் பகுதியில் இரு தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. உமிரி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர்களை முஸ்லிம்களே கொலை செய்தனர் என அங்குள்ள மக்கள் சந்தேகம் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டது.

(த)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 17/12/1993
  • பக்கம்: 1

 

முஸ்லிம் ஊர்காவலர் தமிழர் மீது கெடுபிடி

யாழ்ப்பாணம், டிச. 17 

மூதூர் பகுதியில் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் ஊர்காவல் படையினர் கெடுபிடிகளை பிரயோகித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஊர்காவல் படையினரால் தாக்கப்படுவதுடன், அவர்கள் உடைமைகளும் பறிக்கப்படுகின்றன. 

(இ- 3)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 21/1/1994
  • பக்கம்: 1

 

முஸ்லிம் ஒருவரின் வீட்டிலிருந்து வாழைச்சேனையில் ஆயுதங்கள் மீட்பு

வாழைச்சேனை பகுதியில் முஸ்லிம் ஒருவரின் வீட்டிலிருந்து ஏராளமான ஆயுதங்களை பொலீஸார் கைப்பற்றினர். துப்பாக்கி றவைகள், குண்டுகள், வோக்கிடோக்கிகள், பராகுண்டுகள் என்பனவற்றுடன், பொலீஸாரின் சின்னங்களும் கைப்பற்றப்பட்டன என்றும்-  

வீட்டைச்சுற்றி இவை புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

(இ- 9)  

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 20/4/1994
  • பக்கம்: 1

 

ஏறாவூரில் இரு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் கைது

கொழும்பு.ஏப்.20 

ஏறாவூர்ப் பிரதேச சபையில் தலைவரைச் சுட்டுக் கொலை செய்வதற்கு முயற்சித்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு நபர்களை ஆயுதங்களுடன் ஏறாவூர்ப் பொலீஸார் கைது செய்தனர் என்று அறிவிக்கப்படுகிறது.

அந்த இரு நபர்களும் முஸ்லிம் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

[ஒ-எ- 6]

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 11/5/1994
  • பக்கம்: 1

 

தமிழர்களை தாக்கும் முஸ்லிம் பொலிஸார்

யாழ்ப்பாணம், மே 11 

அம்பாறையில் அகற்றப்பட்ட பொலீஸ் அதிரடிப்படை முகாம்களில் புதிதாக முகாம் அமைத்துள்ள பொலீஸார் தமிழ் மக்கள் மீது கெடு பிடிகளை பிரயேகித்து வருகின்றனர்.

இவர்களின் கெடுபிடிகள் அதிரடிப் படையினரை விட மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ தே. கட்சியில் ஆதரவுடன் அமைச்சர் மன்சூரினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் பொலீஸாரே அம்பாறையின் தற்போது அதிகளவில் பணிபுரிகின்றனர்.

மன்றாட தேவைகளுக்காகவும், தொழிலின் நிமித்தமும் கல்முனை, மருதானை போன்ற இடங்களுக்குச் செல்லும் தமிழர்கள் வயது வேறுபாடின்றி முஸ்லிம் பொலீஸாரால் தாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 27/6/1995
  • பக்கம்: 1, 6

 

"ஜிகாத் " இயக்கம் மீண்டும் தமிழர் விரோத நடவடிக்கை

கொழும்பு, ஜூன் 27 

மட்டக்களப்பில் "ஜிகாத் இயக்கம்" புத்துயிர் பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் ஐ. தே . கட்சி அமைத்த ஊர்காவல் படைகளில் பணிபுரிந்து இப்போது தொழில் இல்லாமல் இருக்கும் முஸ்லிம் இளைஞர் சிலர் சேர்ந்து "ஜிகாத் இயக்கம்" என்ற அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்துள்ளதாக அறிவிகப்படுகிறது.

இவர்கள் தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகள் மற்றும் உடைமைகளுகும் தீவைத்து நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு செய்வதன் மூலம் மட்டக்களப்பின் இயல்பு வாழ்க்கையைக் குழப்பி தமிழ் முஸ்லிம் மக்களிடையே பதற்றத்தை உண்டாக்குவதாக காத்தான்குடி பல் நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம். ஐ. எம். உசனார் ''சண்டே லீடருக்கு''த் தெரிவித்திருக்கிறார்.

கிழக்கில் இதற்கு முன்னரும் ''ஜிகாத் இயக்கம்" என்ற பெயரில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு ஒன்று இயங்கி வந்தது.

'ஜிகாத் '' என்ற அரபுச் சொல்லுக்கு புனிதப்போர் என்பது பொருளாகும். 

(அ)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

கிழக்கு தமிழ் கிராமத்தில் படுகொலை: 8 பேர் பலி

ஒரு தமிழ் கிராமத்தில் முஸ்லீம் காவல்துறையினரும் ஊர்காவல் படையினரும் கட்டுக்கடங்காமல் செயற்பட்டு குறைந்தது 8 பொதுமக்களைக் கொன்றனர். அம்பாறை மாவட்டம், "4ஆம் கொலனி" ஊரில் எஞ்சியிருந்த மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இரண்டு முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. படுகொலை நடந்த பகுதியைக் கட்டுப்படுத்தும் காவல்துறை அதிரடிப்படையான சிறப்பு பணிக்கடப் படையின் உறுப்பினர்களால் 4வது காலனி முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

முஸ்லீம் ஊர்க்காவல் படையின் பாரிய சேர்படையினர் 4வது கொலனி கிராமத்தில் புயலெனப் புகுந்து, வீடுகளுக்கு தீவைத்து, தமிழ் குடியிருப்பாளர்களைத் தாக்கினர். குறைந்தது 8 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் சில அறிக்கைகள் குறைந்தது 15 பேர் இறந்ததாகவும் கூறுகின்றன.

செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புலிகளால் ஒரு காவலர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், உள்ளூர்வாசிகள் இதை மறுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் துணைப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இடையேயான வன்முறை படுகொலைக்கு முன்னதாக நடந்ததாகக் கூறுகின்றனர்.

குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, மத்திய முகாம் (சென்ரல் காம்ப்) நகரில் வீதியொன்றில் நடந்து சென்ற தமிழ் இளைஞன் ஒருவரை முஸ்லிம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். முஸ்லீம் காவல்துறையினருக்கும் சிறப்பு அதிரடிப்படையின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் வாக்குவாதத்தை அருகிலிருந்த சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஆராய்ந்தனர். பின்னர் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.

சிறிது நேரம் கழித்து, சிறப்பு அதிரடிப்படையினர் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் ஊர்காவலர்கள் மீது சுடுகலச் சூடு நடத்தினர். அதில் இரண்டு ஊர்காவலர் கொல்லப்பட்டனர்.

ஊர்க்காவல் படையினர் தமிழ்ப் புலிப் போராளிகளால் கொல்லப்பட்டதாகக் கருதி, காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், குண்டர்கள் என கடுஞ்சினத்துடன் செறிவான முஸ்லீம்கள் அப்பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழும் முக்கிய பரப்பான 4வது கொலனி மீது தாக்குதல் நடத்தினர். பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதில் இருந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஊரில் எஞ்சியிருந்தவர்கள் அருகிலுள்ள சேனைக்குடியிருப்பு என்ற ஊரிற்கு ஓடிவிட்டனர், அங்கு அவர்கள் ஒரு பாடசாலையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சேனைக்குடியிருப்பில் வசிப்பவர்களும் முக்கியமாக தமிழர்களாவர்.

4வது கொலனிக்கு சிறப்பு அதிரடிப்படை முத்திரையிட்டு மூடி வைத்துள்ளது. மத்திய முகாம், 4வது கொலனி, சேனைக்குடியிருப்பு மற்றும் பல ஊர்களை உள்ளடக்கிய முழுக் கோட்டமும் சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியில் முஸ்லீம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சில கொலனிகள் பெரும்பான்மையில் முஸ்லீம்களாகவும் மற்றவை பெரும்பான்மையில் சிங்களவர்களாகவும் உள்ளன. சிலது தமிழர்களினதாகும்.

தமிழ் ஊர்க்காவல் படையினர் இல்லாததோடு மேலும் அப்பரப்பில் வசிக்கும் தமிழர்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் துணைப்படையினரின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. இம்முறை தமிழர்கள் சார்பாக சிறப்பு அதிரடிப்படை தலையிட்டதாகவும், இப்போது பாதுகாப்பு வழங்குவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.

இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு தமிழர்களுக்கு எதிரான பரவலான அட்டூழியங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பொறுப்பேற்றுள்ளது. குறைந்தபட்சம் 5000 தமிழ் பொதுமக்கள் சிறப்பு அதிரடிப்படை படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், அவர்கள் நூற்றுக்கணக்கான சித்திரவதை, தாக்குதல் மற்றும் வன்புணர்ச்சி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 25/9/1997
  • பக்கம்: 1,8

 

அம்பாறை சென்றல் முகாம் பகுதியில் 30 தமிழர் கொலை, 40 வீடுகள் எரிப்பு: துப்பாக்கி, வாள்கள் சகிதம் தமிழ்க்கிராமம் மீது தாக்குதல்

கொழும்பு, செப். 25 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சென்றல் முகாம் பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 40 வீடுகள் வரை எரிக்கப்பட்டன. சுமார் 500 தமிழ்க் குடும்பங்கள் அருகாமையில் உள்ள பாடசாலை ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளன.

50 அல்லது 60 பேர் அடங்கிய குழு ஒன்று துப்பாக்கிகள் மற்றும் வாள்களுடன் வந்து இத்தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் சீருடை அணிந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது.

இச்சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த அதிரடிப் படையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

வீட்டை விட்டு வெளியேறியோரும், வீடு தீக்கிரையாக்கப்பட்டவர்களும் அகதிகளாக அங்குள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என பி. பி. ஸி. கொழும்புச் செய்தியாளர் புளோரா பொஸ்வோட் கூறினார்.

நேற்று முன்தினம் ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள், புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதற்கு பழிவாங்கும் நோக்குடன் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது எனவும் - 

கொழும்பில் தமிழ் வட்டாரங்கள் தெரி விப்பதாக பி. பி.ஸி. மேலும் தெரிவித்தது.

அதே சமயம் சென்றல் முகாமில் உள்ள நிலையம் மீது பொலீஸ் செவ்வாய் 10-30 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலைப் பொலீஸார் மோட்டார் தாக்குதலை நடத்தி முறியடித்து விட்டதாகவும் -

பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்ததாகவும் - 

பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 

(இ-6-3)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 26/9/1997

 

  • பக்கம்: 1,8

 

சென்றல் முகாமிலிருந்து வெளியேறிய தமிழ்மக்கள் திரும்பிச் செல்ல அச்சம்!
தாக்குதல் குறித்து முழு விசாரணை நடத்தப்படுமாம்

மட்டக்களப்பு, செப். 26 

தாக்குதல் சம்பவத்தை அடுத்து அம்பாறை சென்றல் முகாம் பகுதியில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரும்பிச் செல்வதற்கு அச்சம் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் சென்றல் முகாம் தாக்குதல் சம்பவம் குறித்து அம்பாறை பொலீஸ் அத்தியட்சகர் ஏ. எஸ். பி. பெரேரா விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சென்றல் முகாம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அங்கு பணியாற்றிய சகல பொலீஸாரின் சாட்சியங்களையும் அவர் பதிவு செய்து வருகிறார்.

அத்துடன் அவர்களின் ஆயுதங்களை 

பரிசீலனை செய்து வருவதுடன் அவற்றை இரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்-

அந்தப்பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களின் ஆயுதங்கள் சம்பவம் நடந்த நேரத்தில் பாவிக்கப்பட்டவை எனக்கண்டறியப்பட்டால் அவர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒரு தமிழர், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காட்ட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 என முன்னர் செய்திகள் வெளிவந்த போதும் -

காணாமற் போயிருந்த 25 பேர் நேற்று திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் மூன்று குழுக்கள் ஈடுபட்டிருந்தனர் என்றும் -

அவர்கள் கறுப்பு ரீசேர்ட் அணிந்து இருந்தனர் என்றும் -

சிலர் பொலீஸ் சீருடையில் இருந்தனர் என்றும்- தற்போது தகவல்கள் வெளியாயாகியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து 565 குடும்பங்களைச் சேர்ந்த 1800 பேர் இடம் பெயர்ந்து சேனைக்குடியிருப்பு ம.வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர். இவர்களே தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அஞ்சுகின்றனர்.

மட்டக்களப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராசா கிழக்குப்பிராந்திய பொலீஸ் மா அதிபர் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்குசென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

இந்த கிராமத்தில் இதே போன்ற தாக்குதல் ஏழாவது தடைவையாக தற்போது நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

(இ- 21- 3)

 


 

  • பக்கம்: 8

 

சென்றல் முகாம் சம்பவத்துக்கு பொலீஸ் பொறுப்பதிகாரி காரணம்

கொழும்பு, செப். 26 
"அம்பாறை சென்றல் முகாம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தண்டனை யுடன் இடமாற்றம் பெற்றே அங்கு பணியாற்றுகிறார்.

அவரே சென்றல் முகாம் தமிழ்க் கிராமம் மீதான தாக்குதலை முன்னின்று நடத்தினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் எம். சிவ சிதம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவர் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

3 ஆவது தொடர் தாக்குதலாக நடந்த இத்தாக்குதலில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்; 45 தமிழர் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் சடலங்களை சம்பவ இடத்தில் இருந்து எடுத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் இப்படி நடப்பது நியாயமா?

சிரேஷ்ட பொலீஸ் அதிகாரி தலைமையில் பூரண விசாரணை நடத்தவேண் டும். குற்றவாளிகள் நீதிமன்றம் முன் நிறுத்தப்படவேண்டும்.

இடம் பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும்.

பொலீஸ் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலீஸார் உடன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இப்படி அவர் தமது கடிதத்தில் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். 

(இ-21-3)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 6/1/1998
  • பக்கம்: 1,8

 

அம்பாறையில் இரு தமிழர் கொலை: 7 முஸ்லிம் ஊர்காவலர்கள் கைது!

அம்பாறை வீரமுனையில் இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு முஸ்லிம் ஊர்காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அவர்களை நாளை மறு தினம்வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்ட நீதிவான் மேற்படி இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக அன்றையதினம் நடைபெறும் அடையாள அணிவகுப்பில் அவர்களையும் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவிட்டார்.

மேற்படி இரட்டைக் கொலைக் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது - சம்மாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றிகளுக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டிருந்த ஊர்காவலர் மீது விடுதலைப் புலிகள் கடந்த சனியிரவு 9.30 மணியளவின் மேற்கொண்ட தாக்குதலில் ஓர் உயிரிழந்தார். 

முகமது அலி பாறூக் (21 வயது) என்ற ஊர்காவலரே உயிரிழந்தவராவார்.

அதைத் தொடர்ந்து இரவு 10.30 - மணியளவில் சம்மாந்துறையிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தொலைவில் உள்ள வீரமுனையில் உள்ள வீடொன்றினுள் புகுந்து ஊர்காவலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு தமிழர் உயிரிழந்தனர்.

முத்தம்பி நித்தியானந்தன் (வயது 23), இராசையா நவநாதன் (வயது 17) ஆகிய தமிழரே உயிரிழந்தவராவர். மேற்படி மரணம் தொடர்பாக பொலீஸார் ஏழு ஊர் காவலர்களைக் கைது செய்து நேற்று கல்முனை மாஜிஸ்திரேட் அன்ரன் பாலசிங்கம் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

அப்போது சந்தேக நபர்களை எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.

(உ - 3- 21)

 

 



 

 

 

மேலும் பழிவாங்கப்படுமோ என குடியிருப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர்

ஜனவரி 3ஆம் தேதி, மின்மாற்றி அருகே பணியில் இருந்த ஊர்க்காவல் படையினர், விடுதலைப் புலிகள் நடத்திய சூட்டில் கொல்லப்பட்டார். அதற்குப் பகரடியாக, சிறிது நேரம் கழித்து, வீரமுனை வாசிகள் மீது மற்ற ஊர்க்காவல் படையினர் தாக்குதல் நடத்தி இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

சம்மாந்துறை ஊரின் எல்லையில் வாழும் தமிழர்கள், ஊர்க்காவல் படையினரால் மேலும் பழிவாங்கப்படுவார்களோ என்ற அச்சத்தில் நேற்றிரவு மேலும் உட்பகுதிகளுக்குச் சென்றனர்.

ஊர்க்காவல் படையினர் என்போர் கிழக்கு மாகாணத்தில் தகராறான சில பரப்புகளில் ஆட்பற்றாக்குறையுள்ள பாதுகாப்புப் படைகளுக்கு துணையாக, தாக்குதல் துமுக்கி ஏந்தி சிறிலங்கா காவல்துறையுடன் நெருக்கமாகச் செயற்படும் துணைப்படை, துணை படைத்துறைப் படையாகும்.

கிழக்கின் பல சிங்கள எல்லை ஊர்களில் சிறிலங்கா தரைப்படையுடன் சிங்கள ஊர்க்காவல் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கில் உள்ள முஸ்லீம் நகரங்களில் குறிப்பாக தமிழ் ஊர்களுக்கு இடையில் அல்லது அதற்கு அடுத்ததாக அமைந்துள்ள ஊர்களில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக வளர்க்கப்பட்ட ஊர்காவல் படையினர், கடந்த காலங்களில் தமிழர் எதிர்ப்பு வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் ஜிஹாத் குழு ஆயுததாரிகள் என்று தமிழ் மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். 

எண்பதுகளின் முற்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் ஈரானியப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு, தங்களை ஜிஹாத் என்றும் (சம்மாந்துறையில்) ஒரு சந்தர்ப்பத்தில் ஹிஸ்புல்லா என்றும் காட்டிக் கொண்டனர்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

வீரமுனையின் முடிவில்லாத அச்சம்

ஜனவரி 3 ஆம் திகதி இரவு, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் தொடர்ச்சியான சுடுகல வேட்டொலி அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை ஊர்வாசிகளால் செவிமடுக்கப்பட்டது.

இது சுமார் மாலை 9:15 மணியளவில் தொடங்கி மறுநாள் வைகறை 3:00 மணி வரை நீடித்தது.

"நவநாதன், நித்தியானந்தன் இருவரும் எங்களுடன் வசித்து வந்தனர். நாங்கள் வெருண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தோம். அதிகாலை 4 மணியளவில் முன்பக்கக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. நான் அதைத் திறந்தபோது ஆயுதம் ஏந்திய இரு ஊர்காவலர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டினுள்ளே நுழைந்து சிறுவர்களை உலுக்கி எழுப்பி வெளியே கொணர்ந்தனர். பின்னர், சிறுவர்கள் எங்கள் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டனர்.” என்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தமது தோழர்களில் ஒருவரின் சாவிற்குப் பகரடியாக முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த மாத தொடக்கத்தில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களில் ஒருவரான நவநாதனின் தந்தை திரு. இராசையா தெரிவித்தார்.

தமிழ்நெட் ஊடகவியலாளர் இந்த கிழமை அப்பரப்பிற்குச் சென்று பல குடியிருப்பாளர்களிடம் பேசினார்.

நிகழ்வின் பின்னர் சம்மாந்துறை காவல்துறையினர் இரு சிறுவர்களின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என ஐயப்படும் ஏழு ஊர்க்காவல் படையினரை கைது செய்தனர். அடையாள அணிவகுப்பு நடந்தது. கொலையாளிகளை அடையாளம் காணுமாறு நித்தியாந்தனின் தந்தை கே.மூத்தம்பியிடம் கோரப்பட்டது.

"எங்கள் குழந்தைகளை சுட்டுக் கொன்றவர்கள் இந்த ஏழு பேரில் இல்லை என்றால், நாங்கள் என்ன செய்வது?" என்று திரு மூத்தம்பி கேட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு குழுவினர் வீட்டிற்கு வந்து திரு.மூத்தத்தம்பியிடம், கைது செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு அவர் மிகவும் வருந்த வேண்டியதாக இருக்குமென்று கூறினார்கள்.

ஆனால், ஜன.3ம் தேதி இரவு நவநாதன் மற்றும் அவரது முதல் மச்சான் நித்தியானந்தன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அந்த ஊரில் வசிப்பவர்களுக்கு புதிதல்ல.

கடந்த 15 ஆண்டுகளில், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தரைப்படையினரும் வீரமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள தமிழ் ஊர்களைச் சேர்ந்த போகூழான அப்பாவி மக்களைக் கொன்று கடத்துவதற்கு பேர்போனவர்களாவர்.

இருப்பினும் 1990ல் இந்த துன்புறுத்தல் தீவிரமடையத் தொடங்கியது. உள்ளூர் பாடசாலை ஆசிரியரான டி. சபாநாயகம் 1990ல் நடந்த நிகழ்வுகளை நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் ஈழப்போர் வெடித்தவுடன் கிழக்கிற்குச் சென்ற சிறிலங்கா தரைப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள எல்லைக்கு அருகாமையில் உள்ள தமிழர் பரப்புகளில் வெறியாட்டத்தில் ஈடுபட்டபோது, முதலில் துயருற்றவர்கள் அண்டை ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து வீரமுனைக்கு வந்த தமிழர்களேயாவர்.

"வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, புதுநகரம், கந்தபுரம் ஆகிய பரப்புகளைச் சேர்ந்த 17,500 அகதிகள் வீரமுனையில் உள்ள சிந்தயாத்திரைப் பிள்ளையார் கோவிலுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இடப்பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள ராமகிருஷ்ணா வித்தியாலயத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. "

ஜூலை 12, 1990க்குப் பிறகு ஒரு மாதத்திற்கு, தரைப்படையைச் சேர்ந்த "கிளியரிங்க் பாட்டி" ஐந்து முறை முகாமைச் சுற்றி வளைத்து, 280 இளைஞர்களைக் கைது செய்தது.

"இந்த சிறுவர் சிறுமிகள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கூட யாருக்கும் தெரியாது" என்றார் திரு.சபாநாயகம்.

இந்த அச்சுறுத்துகிற நிகழ்வுகளின் தொடர்ச்சி 1990 ஆகஸ்ட் 12 அன்று உச்சக்கட்டத்தை எட்டியது. அன்று காலை 9.15 மணியளவில் சம்மாந்துறை ஊர்காவல்படையின் பிரிவொன்றின் ஐந்து ஆயுததாரிகள் முகாமுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர்.

"சுமார் 40 நிமிடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து சுட்டுத் தள்ளினர். வேட்டு நிறுத்தப்பட்டதும், 21 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்து கிடந்ததோடு 140 பேர் காயமடைந்தனர்." என்று திரு. சபாநாயகம் கூறினார்.

காயமடைந்தவர்களில் வீரமுனை ஊரின் குமுகாயத் தலைவராக இருந்த ஊரின் பிள்ளையார் கோவில் முகாமையாளர் (வண்ணாக்கர்) சிந்தாத்துரையும் அடங்குவார்.

அவர்கள் அனைவரும் பண்டுவத்திற்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் காயத்திற்கு இழிவுபண்ணுவது போல், திரு.சிந்தத்துரை உட்பட மேலும் பத்து பேர் மறுநாள் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்டனர்.

ஆலய முகாமையாளர் திரு.சிந்தத்துரை வீரமுனையில் தமிழர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய முஸ்லிம் ஊர்க்காவல் படையினருக்கு கீழ்ப்படியாத அஞ்சாதவராவார்.

அவர் ஊர்க்காவல் படையினரால் தான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக திரு. சபாரத்தினம் நம்புகிறார்.

இந்த மாதிரியான நிலைமையால் வீரமுனையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.

அகதிகளை உடமைகளை பொதி செய்யுமாறு உள்ளுராட்சி அலுவலர்களால் உத்தரவிடப்பட்டு, அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய தமிழ் ஊரான தம்பிலுவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, அகதி முகாம்களில் இரண்டு ஆண்டுகள் வசித்த பின்னர், ஊர் மக்கள் வீரமுனையில் மீள்குடியேற்றப்பட்டனர். ஆனால் ஓராண்டு கூட ஆகாத நிலையில், மேகநாதன் என்ற இளைஞன் அருகில் உள்ள கடையில் சாமான்களை வாங்கச் சென்றபோது காணாமல் போனான்.

"அடுத்த கிழமையில் மேகநாதனின் சட்டையும் சரமும் ஊரின் முஸ்லீம் குடியிருப்பில் உள்ள அலவாக்கரையில் உள்ள வாழைத்தோட்டத்தில் ஒரு குழியினுள் காணப்பட்டன. அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர் கொலை செய்யப்பட்டார் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று திரு. சபாரத்தினம் கூறினார்.

இந்த நிகழ்வுகள் குறித்து செல்வாக்கு மிக்க ஆட்களுக்கு தகவல் தெரிவித்தும் ஊர் மக்களுக்கு எந்த இடர்தணிப்பும் கிடைக்கவில்லை. அவர்களை புத்திசாலிகளாக மாற்றிய மோசமான பட்டறிவுகளால் இன்று வீரமுனை மக்கள் முன்பு போல வடுப்படத்தக்கவர்களாகவே உள்ளனர்.

"நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் வீரமுனை - சம்மாந்துறை எல்லையில் அமைந்துள்ள ஊர்காவல் படையினர் முகாம் அகற்றப்பட வேண்டும்" என மூத்தம்பி தெரிவித்தார்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

ஆயுததாரி இஸ்லாமியக் குழு வெளிப்பட்டது

அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் உள்ள அக்கரைப்பற்றில் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதற்கு பி.எல்.ஓ என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் ஆயுததாரி அமைப்பு முயற்சித்து வருவதாக அங்கிருக்கும் வட்டாரங்கள் தெரிவித்தன.

பி.எல்.ஓ தமிழர்களை அச்சுறுத்தும் துண்டுக் காகிதங்களை வெளியிட்டதோடு தமிழர்களை முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நகரத்தின் பகுதிக்குள் நுழைவதைத் தடையும் செய்தது. அக்கரைப்பற்று நகரின் தமிழ் பகுதியிலுள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய ஆயுததாரிகளின் அச்சுறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு நகரவாசிகள் இன்று மாலை தெரிவித்தனர்.

1985 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் அக்கரைப்பற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு, இதில் பத்திரகாளியம்மன் கோவில் உட்பட, நகரின் தமிழ் பகுதியின் பெரும் பகுதி எரிந்து நாசமானது, பின்னால் இருந்த ஆயுதமேந்திய இஸ்லாமிய ஜிஹாத்தின் (புனிதப் போர்) கூறுகளால் உருவாக்கப்பட்ட ஒரு குழுதான் பி.எல்.ஓ.  என்று அக்கரைப்பற்றில் உள்ள தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

விடுதலைப் புலிகள் அப்பரப்பில் தங்களது அனைத்து நடவடிக்கைகளையும், குறிப்பாக ஊருக்கு தெற்கே உள்ள நெல் வயல்களில் இருந்து நெல்லை சேகரிப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பி.எல்.ஓ. (சுருக்கம் எதைக் குறிக்கிறது என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை) ஒரு துண்டுக் காகிதத்தில் கோரியுள்ளது.

இன்று பிற்பகலில் இங்கு வசிக்கும் தமிழர்கள், பி.எல்.ஓ.க்கு உள்ளூர் சிறிலங்கா காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளின் மறைமுக ஆதரவு இருப்பதாகத் தோன்றுகிறது என்று கூறினர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அண்மையில் அப்பரப்பில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தியதைத் தொடர்ந்து பி.எல்.ஓ. வளர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அக்கரைப்பற்று நகருக்கு தென்மேற்கே 15 கிலோமீற்றர் தொலைவில் தொடங்கும் கஞ்சிக்குடிச்சாறு காடுகளில் புரட்சியாளர்கள் தங்கள் தளத்தை அடைய பயன்படுத்திய கேந்திர போக்குவரத்துப் புள்ளியை அறிந்த புலிகளின் ஆதரவாளர் ஒருவரை சில கிழமைகளுக்கு முன்பு சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தது.

இந்த முன்னேற்றத்தின் வலுவால், சிறப்பு அதிரடிப்படையினர், தகவலறிந்த ஆதாரங்களின்படி, ஒரே கிழமையில் இந்த வழித்தடத்தில் புலிகளின் உறுப்பினர்கள் இருபது பேரை பதுங்கியிருந்து கொன்று சில ஏந்தனங்களை மீட்டனர்.

இந்த முன்னேற்றத்தையடுத்து அக்கரைப்பற்றில் புலிகள் தமது செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர்.

இதுவே இதுவரை செயலற்ற நிலையில் இருந்த இஸ்லாமிய ஆயுததாரிகளை மீண்டும் அக்கரைப்பற்றில் குரல் எழுப்புவதற்கு ஊக்கமளித்ததாக இந்த கிழக்கு நகர தமிழர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இருப்பினும், பி.எல்.ஓ. உடன் நன்கு அறிமுகமான உள்ளூர் முஸ்லீம் வட்டாரம் இன்று இந்தக் குற்றச்சாட்டுகளை தற்செயலாக நிராகரித்துள்ளார். பி.எல்.ஓ. க்கு சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் ஆதரவு அளித்தனர் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் கூறினார்.

 "பி.எல்.ஓ. என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பாகும், இது இங்கு இஸ்லாத்தின் நோக்கத்தில் மட்டுமே ஆர்வமாக உள்ளதோடு ஒசாமா பின்லேடனின் வீரச் செயல்களால் தங்கள் புனித பணியில் மீண்டும் ஈர்க்கப்பட்ட உறுதியான இளைஞர்களை உள்ளடக்கியது." என்று அவர் கூறினார்,

அக்கரைப்பற்று பி.எல்.ஓ. இன் அழைப்பாளரின் அடையாளத்தை அவர் வெளிப்படுத்த மறுத்துவிட்டார், ஆனால் விடுதலைப் புலிகள் சி.ஐ.ஏ. ஆதரவு பயங்கரவாதக் குழு என்று குற்றம் சாட்டினார்.

இதேவேளை, அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.வினால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கலைப்பதற்கான வழிமுறைகளை கிழக்கு நகர முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத் தலைவர்கள் ஆராய்ந்து வருவதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட தமிழ் FM வானொலி நிலையமான 'சூரியன்' தனது மாலைச் செய்தியில் இன்று தெரிவித்துள்ளது.

 



 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 05/9/1998
  • பக்கம்: 1

 

சுவரொட்டிகளால் அம்பாறையில் பதற்றம்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுவரும் அநாமேதய சுவரொட்டிகளினால் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

"தமிழ்த்தொழிலாளர்கள் முஸ்லிம் பிரதேசத்துக்குள் வரக்கூடாது" என்று பி. எல். ஒ- சிறிலங்கா' என்ற அமைப்பாலும்-

தமிழ்த் தொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை முஸ்லிம் பிரதேசங்களுக்குள் செல்லக் கூடாது. முஸ்லிம்களுக்கு சலவை, சவரத்தொழில்கள் செய்யக்கூடாது. முஸ்லிம் வர்த்தகர்களிடம் பொருள்கள் வாங்கக் கூடாது." - என்று ஏ.டி. ரி எஸ். என்ற அமைப்பின் பெயராலும் -

சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தச் சுவரொட்டிகளால் இரு சமூகங்களையும் சேர்ந்த அன்றாட உழைப்பாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. 

(உ- 21)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 2/10/2001
  • பக்கம்: 1,10

 

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்காக தனியாக ஊர்காவல்படை அமைப்பு; ஐநூறு இளைஞர் திரட்டப்படுவராம்

மட்டக்களப்பு, ஒக்ரோபர் 2 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச மக்களின் பாதுகாப் புக்காக ஐநூறு முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னாள் பிரதி அமைச்சர் எம் .எல் .ஏ.எம்.ஹிஸ்புல்லா மேற்கொண்டுள்ளார் என்று செய்தி ஏஜென்ஸி ஒன்று அறிவித்தது.

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்புக்காகவே இந்த ஊர்காவல்படை அமைக்கப்பட விருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலங்களில் விடுதலைப் புலிகளால் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மையைக் கருத்திற்கொண்டே இது அமைக்கப்படுவதாகவும் -

இந்தக் கிராமங்களில் மேலதிக பொலீஸ் மற்றும் இராணுவ நிலைகளை அமைப்பது தொடர்பாகவும் தாம் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் -

அவர் மேலும் தெரிவித்ததாக அந்தச் செய்தி ஏஜென்ஸி குறிப்பிட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்ட பின்னர், அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் அணியில் ஹிஸ்புல்லா இடம்பெற்றிருப்பது தெரிந்ததே.

இதற்கிடையில் இந்த ஊர்காவல் படையை அமைக்கும் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸீர் சேகு தாவூத், ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா ஆகியோர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊர்காவல்படை அமைப்பது தமிழர் - முஸ்லிம்கள் உறவில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் -

தனது அரசியல் சுயலாபத்துக்காக முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட ஆயுதக்குழு ஒன்றை உருவாக்குவதற்கே ஹிஸ்புல்லா முயற்சி செய்கிறார் எனவும் -

நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலான தெரிவித்தார்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

மூதூர் ஊடகவியலாளர் வீட்டின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்!

மூதூர் நகரில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் திரு. பி. சத்சிவானந்தத்தின் வீட்டின் மீது தீவிரவாத இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஆயுததாரிகள் புதன்கிழமை பிற்பகல் தாக்குதல் நடத்தியதில் ஏந்தனங்கள் (equipments) மற்றும் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 'ஒசாமா முன்னணி' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியக் குழுவின் ஆயுதக் கும்பல் புதன்கிழமை காலை கிழக்கு நகரம் வழியாக வெறித்தனமாகச் சென்று, கிழக்கு நகரத்தின் தமிழ் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளைத் தாக்கியது. இதனால் மூதூரில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் உள்ளூர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர்.

செய்தியாளர் நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இங்குள்ள குழந்தைகள் புனித அந்தோனியார் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக வண. சாந்தன் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

திரு.சசிவானந்தம் மீதான தாக்குதல், செவ்வாய்கிழமை இரவு ஒளிபரப்பான பிபிசியின் தமிழ்ச் சேவைக்கு ஊடகவியலாளர் வழங்கிய அறிக்கையுடன் தொடர்புபட்டது என கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.ஏ.நடேசன் தெரிவித்தார். "மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் திரு. எஸ். ஜெயானந்தமூர்த்தியும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம்." என்று திரு நடேசன் மேலும் கூறினார். திரு. சத்சிவானந்தம் தமிழ் நாளிதழான வீரகேசரியின் மூதூர் செய்தியாளராகவும் பல பன்னாட்டு ஊடகங்களில் பங்களிப்பாளராகவும் உள்ளார்.

புதன்கிழமை காலை காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நீக்கியவுடன் ஒசாமா முன்னணி (அணி) ஆயுதக் கும்பல்கள் தமிழர் வீடுகளைத் தாக்கத் தொடங்கின. மதியம் மீண்டும் நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை காவல்துறையினர் விதித்தனர்.

வன்முறையைக் அடக்க மூதூர் நகருக்கு மேலதிக காவலர்களும் படையினரும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் உள்ள இலங்கை கண்காணிப்புப் பணியகத்தின் நோர்வேத் தலைவர் திருமதி விக்டோரியா லுண்ட் புதன்கிழமை காலை ஜோர்டானிய கண்காணிப்பாளர் அப்துல் பத்தாவுடன் நிலைமையைக் காண மூதூருக்கு விரைந்தார் என்று கண்காணிப்புக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு ஊரின் தெற்கே உள்ள மூதூரில் வன்முறை வெடித்தபோது, செவ்வாய்க்கிழமை இரவும் பகலும் ஊரடங்குச் சட்டம் மூதூரில் காவல்துறையால் போடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டம் வேலணையில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் தெற்கில் உள்ள பச்சனூர் சிற்றூரிலிருந்து தமிழர்கள் நடத்திய பேரணியும், மூதூரில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் தாக்கப்பட்டமையும் வன்முறையைத் தூண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட நேற்றைய தாக்குதல்களில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.