Jump to content

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

 

திராய்க்கேணி குமுகாய தலைவரிடம் காவல்துறையினர் உசாவினர்

பெரியதம்பிரான் கோவிலுக்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக திராய்க்கேணியில் இருந்து வந்த செய்திகளைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்தி சபையின் தலைவரான 46 வயதுடைய சின்னத்தம்பி கார்த்திகேசுவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்கரைப்பற்று காவல் நிலையத்தின் காவல்துறை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் எச்சங்கள் நாடியறியப்பட்ட இடத்திற்குச் சென்றதோடு திரு. கார்த்திகேசுவை செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் திராய்க்கேணி வாசிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமையன்று மேலும் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை மீண்டும் பார்வையிட்டதோடு கூடுதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த மேலும் இரு திராய்க்கேணி குடியிருப்பாளர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திர நேரு, ஊர் மக்கள் மற்றும் தலைவர்களை காவல் நிலையத்திற்கு அழைப்பாணை விடுத்து வாக்குமூலம் வழங்குமாறு வற்புறுத்தி துன்புறுத்திய காவல்துறை திணைக்களத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

 

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அம்பாறையில் உள்ள தமிழர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்

மட்டக்களப்பு நகருக்கு தென்மேற்கே 38 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீரமுனையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர், முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரால் 1990 இல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறையில் தமிழ் குமுகாயங்களால் செவ்வாய்க்கிழமை பொது கடையடைப்பு (ஹர்த்தால்) பின்பற்றப்பட்டது என்று அம்பாறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைகள் மூடப்பட்டதுடன் பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்றுக்கான போக்குவரத்து சேவைகளும் தேங்கின. திருக்கோவிலுக்கு போக்குவரத்து சேவை முற்றாக முடங்கியது. தமிழ் பரப்பு முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டதோடு இயல்பு வாழ்க்கையும் சீர்குலைந்தது, அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை, பாடசாலைகள் திறக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் பரப்பெங்கும் கொடிகள் காணப்பட்டதுடன் மேலும் காவல்துறை ஆளணியினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் கேந்திர சந்திகளில் களமிறக்கப்பட்டுள்ளதாக அம்பாறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீரமுனை என்பது சம்மாந்துறைக்கு அருகாமையில் உள்ள ஒரு பண்டைய தமிழ் ஊர் என்பதோடு பல முஸ்லிம் ஊர்களாலும் சூழப்பட்டுள்ளது.

ஜூன் 11, 1990 இல் சிறிலங்கா படையினரிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, இவ்வூரில் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர், சிறிலங்கா அரசாங்கத்தின் தரைப்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றால் மூன்று படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஊரில் உள்ள மனிதவுரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப்படை குறிப்பாக போரின் போது தமிழ் ஊர் மக்களை பல படுகொலைகளை ஊக்குவிப்பதற்கும் நடத்துவதற்கும் பெயர் போனது என்பதோடு பல மனிதவுரிமை மீறல் முறைப்பாடுகளில் சிக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ஜூன் 20 மற்றும் 29 1990 இல், ஊர்காவல் படையினரும் சிறிலங்கா தரைப்படையினரும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை அவர்களின் வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து, அவர்களை கொண்டவெட்டுவானில் உள்ள பாதுகாப்புப் படைமுகாமுக்கும் பின்னர் அடவிகளுக்கும் அழைத்துச் சென்று கொன்றனர். படையினர் பின்னர் இறந்தவர்களின் வீடுகள் மற்றும் பிற சொத்துக்களை எரித்ததாக ஊரிலுள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆகஸ்ட் 12, 1990 அன்று அதிகாலை, சிறப்பு அதிரடிப்படையினர், சில பயங்கரவாத ('ஜிஹாத்') குழுக்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் வீரமுனை ஊர் மக்களை சுற்றி வளைத்தனர். முந்தைய இரண்டு படுகொலைகள் இன்னும் மனதைவிட்டு அகலாத நிலையில், தாங்கள் உயிருக்கு பயந்து, தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து இந்துக் கோயில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையில் சிந்தயாத்திரைப் பிள்ளையார் கோவிலில் தஞ்சம் புகுந்ததாக ஊர் மக்கள் கூறியுள்ளனர். ஆனால் சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கோவிலில் சூட்டு மழை பொழிந்து மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர், அவர்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 56 பேர் உடனடியாக கொல்லப்பட்டனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வூரில் நடந்த இந்த மூன்றாவது படுகொலையைத் தொடர்ந்து, தமிழ் ஊர் மக்கள் அங்கு வாழ முடியாது போனது. ஊர்மக்கள் காரைதீவில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்தனர். ஊர்வாசிகளில் சிலர் 1993 இல் ஊரிற்குத் திரும்பி தொடர்ந்து வாழ்கின்றனர், எனினும் சிலர் திரும்பி வரவில்லை, இன்னும் அகதி முகாம்களில் தான் வாழ்கின்றனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • வலைத்தளம்: வீரகேசரி
  • திகதி: 12/03/2006
  • கொழுவிhttps://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=585
  • மீளெடுக்கப்பட்டது: யாழ் கருத்துக்களம் - 2 வழியாக

 

புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு

திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகாத் குழுவில் அங்கம் பெறும் குறிப்பிடத்தக்க ஆயுததாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினர் ஆதரவுடன் இஸ்லாமிய சமயக் கல்வி என்ற போர்வையில் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிகாத் குழு அங்கத்தவர்கள் பாகிஸ்தானின் மலையோரங்களில் உள்ள லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் பாசறைகளில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜதந்திரியாக தற்போது கடமையாற்றும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் ஜிகாத் ஆயுத் குழுவினருக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான இந்த ராஜதந்திரி அண்மையில் யாழ். குடாநாட்டிற்கு பாகிஸ்தான் உளவாளிகள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத இறுதியில் பாகிஸ்தான் செல்வதன் பின்னணியில் இந்த ராஜதந்திரி செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

லண்டனில் முன்னர் பணியாற்றிய இந்த ராஜதந்திரி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவ் இணையத்தள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

 

முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் 'பவ்ரல்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை

- அஜாதசத்ரு -

கிழக்கில் அண்மைய காலங்களில் மிக மோசமாக அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதான நோக்காகக் கொண்டுள்ள முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் மிகவும் மோசமானதோர் நிலைமைக்கு வழிவகுத்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.

கடந்தமுறை ஜெனீவாவில் இடம்பெற்ற அரசு - விடுதலைப்புலிகள் சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- வரதர் அணி மற்றும் கருணா குழு என்பவற்றின் மாவட்டப் பொறுப்பாளர்கள் அவர்களுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் அவர்கள் செயற்படும் மறைவிடங்கள் என்பனவும் எழுத்துமூலம் வழங்கப்பட்டது.

இதெல்லாவற்றிற்குமப்பால் அரசுக்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட விபரத்தில் மிகவும் கவனிக்க வேண்டியதொரு விடயம் 'கிழக்கில் ஜிகாத்' என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பானதாகும்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழு- ஆயுதக்குழுவின் முழு விபரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறான சிறுசிறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் பல்வேறு மோதல்களுக்கும் விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

இவற்றின் பிரதான தளங்களாக கிழக்கில் மூதூர், கிண்ணியா, தோப்பூர், ஓட்டமாவடி ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இயங்குவதும் கவனிக்கத்தக்கது.

கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற மார்க்கப் பிரச்சினை சம்பந்தமான இரு தரப்பினருக்குமிடையிலான மோதல்களின் போதும் கூட கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் என்பனவும் இடம்பெற்றது கவனிக்கத்தக்கது.

இவை நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகும் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் பின்னர் அறியவந்தது.

இதனைவிட ஓட்டமாவடி, ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஜிகாத் என்ற பெயரில் செயற்பட்ட ஒரு முஸ்லிம் ஆயுதக் குழு அப்பகுதியில் உள்ள வீடியோக் கடைகளை மூடுமாறும் சூதாட்டம் மதுபாவனையில் ஈடுபட வேண்டாமென்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தது.

கடந்த வருடம் ஆரம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வீடியோக்கடைகளை மூடுமாறும் அச்சுறுத்தியது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

இதெல்லாவற்றிற்குமப்பால் கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான மோதல்களுக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றே பின்னணியிலிருந்து செயற்பட்டதாகவும் அறியவருகிறது.

இதெல்லாவற்றிற்குமப்பால் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் பின்னணியிலேயே இந்த ஆயுதக் குழு செயற்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மேலும், கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் முக்கிய அரசியல்வாதிகளுக்கிடையேயான மோதல் சம்பவங்களின் போது கூட இவ்வாறான ஆயுதக் குழுக்களின் பின்னணியும் தொடர்புபட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பினராலேயே குற்றஞ்சாட்டப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழ் இளைஞர்களைப் போன்று முஸ்லிம் இளைஞர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகிய தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்று தியாகம் செய்த வரலாறும் ஒன்று உள்ளது.

இதனைவிட தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரின் வருகை உள்வாங்கப்பட்ட போது அதற்கெதிராக கிழக்கில் வீதிகளில் இறங்கி முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் மறக்க முடியாது.

இந்த நிலைமையை மாற்றியமைக்கவே சிங்களப் பேரினவாதம் அப்போதிருந்த கிழக்கின் முஸ்லிம் தலைமைகளுடன் பேரம்பேசி முஸ்லிம் ஊர்காவல்படை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை தமிழர்களுக்கு எதிரான மோதலுக்குள் தள்ளி வீழ்த்தியது.

இந்த நடவடிக்கைகளுக்கு அப்போதிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமே பிரதான பங்காளியாக இருந்ததை எவரும் மறுத்துவிடமுடியாது.

கிழக்கில் இரண்டாவது ஈழ யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற தமிழர் அழிப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் ஊர்காவல் படையினரையேஇ அரச படையினர் பயன்படுத்தினர் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

சிங்களப் பேரினவாதத்தால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அதன் எதிரொலியாக முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற சம்பவங்களும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே மறக்கமுடியாத கசப்பான வரலாற்றை தோற்றுவித்தது.

இவ்வாறானதோர் நிலைமைகளுக்கு மத்தியில் தான் மீண்டும் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை உருவாக்கும் முயற்சிகளில் அரச படையினர் மட்டுமன்றி வேறு பல அந்நிய சக்திகளும் ஈடுபட்டு வருகின்றதாகவே அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கிழக்கில் ஜிகாத் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தவொரு பெயரிலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ள நிலையில் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்கள் தம்மிடமுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.


தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கான பேரினவாத சக்திகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமையும் அதிக கரிசனை எடுப்பது இன்றைய தருணத்தில் அவசியமானதொன்றாகும்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

 

விடுதலைப் புலிகள் கைதுசெய்த ஊர்காவல் படையினரை தமிழீழ காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உந்துருளியில் சென்ற போது மார்ச் 14ஆம் திகதி பிடிபட்ட இரண்டு ஊர்காவல் படையினரையும் தமிழீழக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சம்பூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். வாழைச்சேனையைச் சேர்ந்த திரு.சித்திக் ரெசீன் (23) மற்றும் தோப்பூரைச் சேர்ந்த திரு.ஹனிபா அன்சார் (30) ஆகிய இரு ஊர்காவலர்களை வழமையான நடைமுறையின்படி தமிழீழ நீதிமன்றம் விடுதலை செய்ய முடியும் என விடுதலைப் புலிகளின் திருகோணமலைப் பொறுப்பளர்கள் மேலும் சந்திப்பில் தெரிவித்தனர்.

ads.jpg

கைது செய்யப்பட்ட முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் சம்பூரில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காட்டப்பட்டனர். 
படிமப்புரவு: தமிழ்நெற்

உசாவலின் போது ஊர்க்காவல் படையினர் முக்கிய தகவல்களை வெளியிட்டதாக புலிகளின் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

“மது போதையில் இருந்ததால் மஹிந்தபுர படை முகாமைத் தவிர்க்க விரும்பியதால், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சிலம்பற்றுப் பிரிவில் அமைந்துள்ள வீதியின் ஊடாக மட்டக்களப்பு நோக்கி உந்துருளியில் சென்றபோது மார்ச் 14ஆம் திகதி புலிகளால் கைது செய்யப்பட்டோம். மேலும் எங்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை" என்று இரண்டு ஊர்க்காவல் படையினரும் செய்தியாளர் சந்திப்பில் ஒரு வினாவிற்கு மறுமொழியளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயுதக் குழுக்கள் குறித்து ஊர்க்காவல் படையினரிடம் கேள்வி தொடுத்தபோது, "மூதூர், தோப்பூர் பகுதிகளில் ஜிகாத் குழு தொழிற்படுகிறது. நாசர், மஃபரிங், தௌபீக், கந்தப்போடி ராசிக், நந்து, வண்டிக்குட்டன் ஆகியோர் மூதூரில் ஜிகாத் குழுவை வழிநடத்துகின்றனர். ஹாஜா மொஹிதீன், உபைபுலா, நிஜாம்தீன், சலீம்தீன் ஆகியோர் தோப்பூரில் ஜிகாத் குழுவை வழிநடத்துகின்றனர். எவ்வாறெயினும் ஜிகாத் குழுவுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜிகாத் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரிகளுடன் தொடர்புள்ளது."

adsa.jpg

படிமப்புரவு: தமிழ்நெற்

வாழைச்சேனை காவல்துறையில் பணிபுரிவதால் கருணா குழுவுடன் தொடர்பு உள்ளதா என ஊர்காவல் படையினர் இருவரிடமும் வினவிய போது, “தீவுச்சேனைக்கு உறவினரை பார்க்க சென்ற போது படைமுகாமிற்கு அருகாமையில் கருணா முகாம் அமைந்துள்ளதாக அறிந்தோம். கருணா முகாமின் உறுப்பினர்கள் படைமுகாமின் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கருணா குழு உறுப்பினர்களை அப்பகுதியில் உள்ள ஈபிடிபி முகாமில் சந்தித்து வருவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது".

விடுதலைப் புலிகள் தம்மை மிகவும் சிறப்பாக நடத்துவதாகவும், விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து அறிந்துள்ளதால் மகிழ்ச்சி அடைவதாகவும் ஊர்க்காவல் படையினர் இருவரும் தெரிவித்தனர்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 24/3/2006
  • பக்கம்: 1, 14

 

விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் ஊர்காவலரும் விடுதலை : மூதூர், சம்பூரில் வைத்து ஒப்படைப்பு

மூதூர்,மார்ச் 24 

மூதூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் நேற்று முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மூதூர் கிழக்கு, சம்பூரிலுள்ள திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் தோப்பூர் மற்றும் மூதூர் பள்ளிவாசல் சபைகளின் தலைவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இருவரையும் திருமலை கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்.

கடந்த மார்ச் 14ஆம் திகதியன்று மது போதையில் இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஈச்சிலம்பற்று பகுதிக்குள் உள்நுழைந்ததையடுத்து கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம்களின் ஜிகாத் குழு, கருணா குழு ஆகியன பற்றி பல உண்மைத் தகவல்களை இந்த இரு ஊர்காவலர்கள் வெளியிட்டனர்.

இந்த நிலையில் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையிலும், புரிந்துணர்வை உருவாக்கும் வகையிலும் இரண்டு ஊர்காவலர்களையும் புலிகள் விடுவித்து அவர்களை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கையளித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. 

(க- 3)

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: இச்செய்தியின் ஆங்கில வடிவத்தை தமிழ்நெட்டில் வாசிக்குக (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17549)

 

The released two home guards (extreme left) are seen with Muslim religious leaders, Mr.Elilan, SLMM Trincomalee head Mr.Ove Jansen..jpg

ஒப்படைக்கப்பட்ட போது நிழற்படத்திற்கு அனைவரும் ஒன்றாக பொதிக்கின்றனர். இவர்களுடன் இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்செனும் நிற்பதைக் காண்க. படிமப்புரவு: தமிழ்நெற்

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • வலைத்தளம்: புதினம்
  • திகதி: 28/03/2006
  • கொழுவிhttps://www.puthinam.com/ 

 

கிழக்கில் உதயமாகிறது சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ "ஜிகாத்" குழு!

சிறிலங்கா இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணியை உருவாக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியதாவது:

இராணுவ முஸ்லிம் படையணியின் தேர்வுக்கான நேர்காணல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அம்பாறையில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் நாள் வரை இந்த நேர்காணல் நடைபெறும். இப்படையணியில் மொத்தம் 500 பேர் இணைக்கப்பட உள்ளனர் என்றார் சமரசிங்க.

இது தொடர்பிலான விளம்பரம், சிறிலங்கா அரச ஊடகமான கடந்த ஞாயிறன்று சண்டே ஓப்சர்வரில் வெளியாகி இருந்தது.

புதிதாகச் சேர்க்கப்பட உள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிமாகவும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும்.

ஒரு நபருக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய். இதில் போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், தங்குமிடம் அனைத்தும் அடங்கும்.

கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களின் துணை இராணுவக் குழுவான ஜிகாத் குழு இயங்கி வருகிறது என்றும் இது பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுத்துறை உதவியுடன் இயங்குவதாகவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பிலான ஆதாரங்கள் உள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் "இராணுவத்தில் முஸ்லிம் படையணி" என்பதும் இந்தப் படையணி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கும் என்பதும் ஒரு உத்தியோகபூர்வமான ஜிகாத் குழுவை உருவாக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கும் இந்த முஸ்லிம்கள் குழுக்களின் நீண்டகால செயற்பாடுகள் பற்றிய ஒரு தொகுப்பு:

தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை தொடக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மீதான பாரிய படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டது.

இதற்கு வீரமுனை கிராமப் படுகொலையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரமுனை என்கிற தமிழ்க் கிரமாமமானது பல முஸ்லிம் கிராமங்களைச் சூழ்ந்து அமைந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தென்மேற்கில் இக்கிராமம் உள்ளது.

1990 ஜூன் மாதம் 11 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் தொடங்கிய போது வீரமுனை கிராமம் 3 பாரிய படுகொலைகளைச் சந்திக்க நேர்ந்தது.

ஜிகாத் அமைப்பு, சிறிலங்காவின் "ஊர்காவல்" படையினர், சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம், சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இந்தப் படுகொலைகளை நடத்தின.

தமிழ்க் கிராமங்களில் யுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் மீறியதில் பாரிய பங்களிப்புச் செய்தது சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை.

1990 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று மேலே குறிப்பிட்டுள்ள குழுவினருடன் இணைந்து கொண்ட சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து கொண்டுவெட்டுவான் முகாமுக்குக் கொண்டு சென்றது.

பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அனைவரையுமே படுகொலை செய்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடைமைகளையும் வீடுகளையும் எரித்து நாசப்படுத்தினர்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையினர், ஜிகாத் அமைப்பில் உள்ள முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் வீரமுனை கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.

முன்னைய பாரிய படுகொலைச் சம்பவங்களால் அச்சமடைந்த அம்மக்கள் சிந்தையாதிரை பிள்ளையார் ஆலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஆலயத்துக்குள் உள்நுழைந்த முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் ஆலயத்திலேயே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 56 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர்.

இந்தப் படுகொலைகளால் வீரமுனை கிராமமே ஒட்டுமொத்தமாக வெளியேறி காரைதீவு அகதி முகாமுக்கு இடம்பெயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு இக்கிராமத்தினர் சிலர் வீரமுனை கிராமத்துக்குத் திரும்பினர். பெருமளவானோர் இன்னமும் அகதி முகாம்களிலே வசித்து வருகின்றனர்.

1998 ஆம் ஆண்டு அம்பாறை அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.என்ற முஸ்லிம் ஆயுதக் குழு உருவானது. இக்குழுவானது முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமிழர்கள் உள்நுழவதைத் தடை செய்வதாக அறிவித்தது. இத்தகைய பெயரில் 1985, 1990 ஆண்டுகளில் தமிழர் விரோத சக்திகள் ஒரு குழுவை உருவாக்க முனைந்துள்ளனர். அக்குழுவினர் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் வெளியிட்ட துண்டறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைகளை முஸ்லிம் பகுதிகளில் கைவிட வேண்டும் என்று எச்சரித்தது.

இருப்பினும் இக்குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

1999 ஆம் ஆண்டு அபுசாலி ஜூலியா (வயது 34) என்ற ஏறாவூர் தாமரைக்கேணியைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணமான வேறு ஒரு ஆணை விரும்பியதால் இஸ்லாமிய மதச் சட்டத்தை அப்பெண் மீறியதாகக் கூறி முஸ்லிம் ஆயுதக் குழுவினர் படுகொலை செய்தனர்.

அதன் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறத் தொடங்கிய 2002 ஆம் ஆண்டு சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் பாரிய படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற ஊர்காவல் படையில் உள்ள 23 ஆயிரம் பேரினது எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

கற்பிட்டியில் ஜூன் மாதம் 21 ஆம் நாள் ஊர்காவல்படையினர் முகாமில் ஜோன் அமரதுங்க பேசியதாவது:

சிறிலங்கா காவல்துறையினரது கடமைகளை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினரை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். நாளாந்த ஊதியமே ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுகிறது.

அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஊர்காவல் படை கலைக்கப்படமாட்டாது. மாறாக அது வலுப்படுத்தப்படும் என்றார்.

இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜூன் 23 ஆம் நாள் (2002) விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில்,

முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை ஒப்புக் கொண்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான நல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைதியை விரும்புகிற அனைத்து முஸ்லிம்களும் இத்தீவிரவாதக் குழுக்களின் செயற்திட்டங்களுக்குப் பலியாகாமல் அமைதிக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் மீதான இத்தாக்குதலையடுத்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றம், மோதல் ஏற்பட்டது.

அப்போது மக்கள் நடத்திய பாரிய அளவிலான பேரணியில் "ஒசாமா" குழு எனப்படுகிற முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது.

ஒசாமா குழு என்றும் ஜிகாத் குழு என்றும் இயங்கி வந்த இக்குழுவை சிறிலங்கா இராணுவம் இயக்கியது. அதன் தலைவராக ஹக்கீம் என்பவர் செயற்பட்டு வந்தார்.

ஜூன் மாதம் 26ஆம் நாள் (2002) இல் பி.பி.சி. தமிழோசை நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ் ஊடகவியலாளர் பி. சதாசிவானந்தத்தின் மூதூர் இல்லம் மீது மீண்டும் ஒசாமா அணி என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த ஜிகாத் குழு தாக்குதல் நடத்தியது.

சதாசிவானந்தம் நடத்திய ஆதரவற்ற சிறார் விடுதியையும் இந்த ஜிகாத் குழு தாக்கியது.

மூதூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 6 பேர் பலியாயினர்.
வன்முறைப் பகுதிகளை பார்வையிடச் சென்ற சிறிலங்கா உள்விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிய கதையாக ஒரு உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார். 

அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்க, கடந்த வாரம் (2002 ஜூன் 23 ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை) நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் இத்தகைய தீவிரவாதக் குழுவினரைக் கொண்டு சிறிலங்காவின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக முஸ்லிம் ஊர்க்காவல் படை வலுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் இந்த ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபக்கம் தனது துணைப் படைகளில் இணைத்துக் கொண்டிருந்த நிலையில் - சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிற லஸ்கர் இ தொய்பா, சிறிலங்காவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கில் கால் பதித்தது.

சிறிலங்காவின் கிழக்கில் ஜிகாத் குழுவாக அறியப்படுகிற இந்தக் குழு பாகிஸ்தானின் உதவியுடன்தான் இயங்கி வருவதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவும் எச்சரித்திருந்தது.

இந்தியாவின் "அவுட்லுக்" வார ஏட்டில் இது தொடர்பான கட்டுரையும் வெளியாகி இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ராமன், முஸ்லிம் ஜிகாத் குழு தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அப்போது சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக ஓய்வு பெற்ற இராணுவ கேணல் பசீர் வாலி நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தை நிராகரிக்குமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தார்.

அவர் எழுதிய கட்டுரையின் விவரம்:

இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவது தொடர்பில் எதுவித ஆதாரமும் இல்லை. இருந்தபோதும் சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர் இ தொய்பா அமைப்பு ஆர்வம் காட்டுகிறது.
கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது.

2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் "ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது.

பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர் இ தொய்பா நெருங்கிய தொடர்புகொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது.

இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது.

ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச் சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை என்றும் இராமன் தெரிவித்திருந்தார்.

"அவுட்லுக்" இதழ் வெளியிட்டிருந்த இக்கட்டுரையை 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாளன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட மறுப்பறிக்கை:

இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கிறது.

இந்திய உளவு அமைப்பான றோவின் முன்னாள் செயற்பாட்டாளரால் தவறான தகவலை பரப்பும் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதுவித ஆபத்தான சூழ்நிலை உணரப்பட்டாலும் பாகிஸ்தான் மீது பகைமையைத் தூண்டு வகையில் ஐ.எஸ்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து இயங்குகிற காஸ்மீர் ஆயுதக் குழு லஸ்கர் இ தொய்பா. மர்கஸ் தாவா- வல்- இர்ஸாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஆயுதக் குழுதான் லஸ்கர் இ தொய்பா.

இச்சூழலில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் ஆலயம் அமைக்க பேரினவாத சக்திகள் முயற்சித்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன.

இதைக் கண்டித்து ஏப்ரல் 12ஆம் நாள் (2005) கொழும்பில் சிங்கள பௌத்த தேசியவாதிகள், பௌத்த பிக்குகள் கண்டனப் பேரணி நடத்தினர்.

அந்தப் பேரணி முடிவில் புத்த சாசன அமைச்சுவிடம் சிங்களப் பேரினவாதிகள் கையளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

பொத்துவில் பிரதேசத்தில் சட்டபூர்வமான பௌத்த மத செயற்பாடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், ஆயுதமேந்திய முஸ்லிம் தீவிரவாதிகளும் எதிர்க்கின்றனர். இந்த முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கல்முனையில் இரு சிறிலங்கா காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பேரணியை ஜாதிக ஹெல உறுமய நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜிகாத் குழுவின் தலைவராக குற்றம்சாட்டு வந்த அப்துல் சமது அப்துல் ஹக்கீம் என்ற மதுகர ஹக்கீம் (வயது 42) அடையாளம் தெரியாத நபர்களால் மூதூர் பளை நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவ நாளன்று மோட்டார் சைக்கிளில் தனது ஹலால் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. எப்போதும் அவருடன் இருக்கும் 6 பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த போது உடனிருக்கவில்லை.

கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமிலிந்து 500 மீற்றர் தொலைவில் மூதூர் பிரதான வீதியில் ஹக்கீம் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிகாத் குழுவினரிடையிலான உள்மோதல் அல்லது வர்த்தக மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர்.

1985, 1990, 1995 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவில் நடைபெற்ற தமிழ், முஸ்லிம் வன்முறைகளில் தொடர்புபட்டவர் இந்த ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் மீது ஜிகாத் குழு இயங்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன.

இந்த அறிக்கையின் விவரங்களை கொழும்பு ஆங்கில நாளேடான "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியிருந்தது.

ஜிகாத் குழுவின் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த திருகோணமலையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 22 ஆம் படையணியில் மேஜர் தரத்திலான அதிகாரி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ஜிகாத் குழுவினருக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது.

இருப்பினும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி றொட்ரிக்கோ, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிட்ட போது கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுதக் குழு இயங்குகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்திய போதும் தான் ஜிகாத் குழு என்று சொல்லவில்லை சில ஆயுதக் குழுக்கள் இயங்குகிறது என்று மீண்டும் விளக்கமளித்தார்.

அண்மையில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுத்த பல முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தாக்கி அச்சுறுத்தியிருந்தது.

முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான செய்திகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் நேரடியாக பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர்.

இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுவில் இணைவதற்கான சூழல் இருப்பதாக எச்சரித்து வந்தனர்.

அண்மையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் முஜிபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதமேந்துகிற உரிமை இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுத நடமாட்டத்தை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார்.

"அப்பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் நடமாடலாம் ஆனால் அவர்கள் ஆயுதக் குழுவினரா? ஜிகாத் குழுவினரா என்பது எமக்குத் தெரியாது என்று பிரசாத் சமரசிங்க கூறியிருந்தார்.

சிறிலங்கா இராணுவமானது முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரை முதலில் ஊர்காவல் படையில் இணைத்து உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக செயற்படுத்தியது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் துணையுடன் ஜிகாத் குழுவை உருவாக்க அனுமதித்து தெற்காசிய பிராந்திய அமைதிச் சீர்குலைவுக்கு உடந்தையாக சிறிலங்கா செயற்பட்டு வருகிறது.

இதனிடையே ஜெனீவா பேச்சுக்களில் இந்தக் குழுவினரை விடுதலைப் புலிகள் பகிரங்கப்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திவிட்டனர்.

இதனால் சர்வதேச சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற நடுக்கத்தில்-

உத்தியோகப்பூர்வமான ஜிகாத் குழுவாக-

"கிழக்குப் பிரதேச சிறிலங்கா இராணுவ முஸ்லிம் படையணி"யை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 04/4/2006
  • பக்கம்: 1, 14

 

இராணுவத்தில் முஸ்லிம் படையணி தேவையற்ற ஏற்பாட்டு நடவடிக்கை: அகில இலங்கை முஸ்லிம் சபை தெரிவிப்பு

"இலங்கை இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணி ஒன்றை தோற்றுவிக்க முனைவது தேவையற்ற ஒரு நடவடிக்கையாகும்." -இவ்வாறு அகில இலங்கை முஸ்லிம் சபை தெரிவித்துள்ளது என இணையத்தளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

மேற்படி அமைப்பின் செயலர் எம்.எப். மொகைதீன் இந்தக் கருத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்தவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:- 

எமது அகில இலங்கை முஸ்லிம் சபையானது மறைந்த சேர். ராசிக் பரீத்தினால், 1921ஆம் ஆண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த அமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் பல்கலைக்கழக கல்விச் சமூகம், அரச மற்றும் தனியார்துறை தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் அனைவரும் இணைந்து செயற்படுகின்றனர். எம்மைப் பொறுத்தவரை தனி முஸ்லிம் படையணி அமைக்கப்படுவது அவசியமற்ற ஒன்றெனவே கருதுகிறோம்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் படையணி அமைக்கப்படும் என்று அரசு கூறுகிறது. இது எதிர்காலத்தில் சாத்தியமான ஒருவிடயமல்ல. முஸ்லிம்கள் அனைத்து மாகாணங்களிலும் அனைத்து
மதத்தவர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்.

எங்களுக்குத் தெரிந்தவரையில் எந்தவொரு நாட்டின் இராணுவத்திலும் தனி ஒரு இனத்துக்காக அல்லது சமூகத்துக்காக ஒரு படையணி உருவாக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இந்நிலையில் பல்லின கலாசாரம், பல்லின மதங்கள் உள்ள எமது நாட்டில் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பானது இனங்களின் அடிப்படையில் இருக்கத்தேவையில்லை என்பதே எமது கருத்தாகும். எனவே, இவ்விடயத்தில் தாங்கள் கூடிய கவனம் செலுத்தி இந்த நடவடிக்கையை உடன் நிறுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் - எனத் தெரிவித்துள்ளார்.

(எ-க)

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை தமிழ்நெட்டில் வாசிக்குக (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17661)

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

திராய்க்கேணி படுகொலையின் 21வது ஆண்டு நினைவு நாள்

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி ஊரில் சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையின் ஆதரவுடன் முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட 47 தமிழ் பொதுமக்களின் இருபத்தியோராம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் மட்டக்களப்புக்கு தெற்கே 70 கி.மீ தொலைவில் திராய்க்கேணி ஊர் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 5, 1990 அன்று திகவாபி ஊரில் சிறப்புப் படையினரால் 13 முஸ்லிம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்குப் பகரடியாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படை முஸ்லிம் தொழிலாளர்களை படுகொலை செய்தது.

மறுநாள் சிறப்பு அதிரடிப்படை ஆளணியினரின் காப்புடன் முஸ்லிம் குற்றவாளிகள் குழுவொன்று தமிழர்களை அவர்தம் உற்றார் உறவினர் முன்னிலையில் கொன்றனர்.

முதியவர்களை அவர்தம் வீடுகளில் எரித்துக் கொன்றனர்.

350க்கும் மேற்பட்ட வீடுகள் முஸ்லிம் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகும், படுகொலைக்காக யாரும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படவில்லை.

இந்தப் படுகொலை குறித்து உசாவல் நடத்துமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுத்துவந்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இ.மயிலப்போடி அவர்கள் 1997ஆம் ஆண்டு துணைப்படைக் குழுக்களாலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களாலும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச கடந்த வாரம் வெளியிட்ட தனது தவறுத்தகவல் அறிக்கையில் காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டிருந்த போதிலும் கிழக்கில் நடந்த தமிழ்ப் படுகொலைகளை குறிப்பிடத் தவறியதாக அம்பாறையில் உள்ள தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்னி உங்கள் நேரத்துக்கும் இணைப்புக்கும் உங்கள் பதிவுகளை இந்திய தமிழ்நாட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு அனுப்பினேன் அநேகர் இலங்கை தமிழ் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக கருத்து வைப்பது போலவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக    கருத்து வைத்தனர் .

இவங்களில் ஒரே ஒரு மனிதர் மட்டும் எப்படி தப்பி பிழைத்தார் என்று கூடவே வேறு கேட்கிறார்கள் அந்த மாமனிதன் அப்துல் கமீத் வானொலி அறிவிப்பாளர் .

Edited by பெருமாள்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 7/7/2024 at 18:37, பெருமாள் said:

நன்றி நன்னி உங்கள் நேரத்துக்கும் இணைப்புக்கும் உங்கள் பதிவுகளை இந்திய தமிழ்நாட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு அனுப்பினேன் அநேகர் இலங்கை தமிழ் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக கருத்து வைப்பது போலவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக    கருத்து வைத்தனர் .

இவங்களில் ஒரே ஒரு மனிதர் மட்டும் எப்படி தப்பி பிழைத்தார் என்று கூடவே வேறு கேட்கிறார்கள் அந்த மாமனிதன் அப்துல் கமீத் வானொலி அறிவிப்பாளர் .

மிக்க மகிழ்ச்சி... வரலாறுகளை மறந்தால் நாம் தான் பலிகடா ஆக்கப்படுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

ஆறு மாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

 

ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மனைவி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் மூலம் சுட்டும் வெட்டியும் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்ததுடன் அவர்களை அரைகுறையாக எரித்து மடு ஒன்றில் போட்டிருந்தனர் அவர்களின் ஆடைகளை வைத்து தான் நாம் எமது உறவினர்களின் சடலங்களை அடையாளம் கண்டோம். என தனது ஆறுமாதக் கர்ப்பிணி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை பறிகொடுத்த மரியசீலன் தெரிவித்துள்ளார்.


மொத்தமாக சவுக்கடிக் கிராமத்தைச் சேர்ந்த 26 பேரும் ஊரணி போன்ற வெளியிடங்களில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து 33 பேர் அந்த நேரத்தில் படுகொலை செய்யப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணித்தாய் உட்பட 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டதன் 28ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று வவுக்கடி நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் கூறுகின்றார்கள்.


1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினரே அந்த காலப்பகுதியில் இது போன்ற படுகொலைகளில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் உண்டு.

மட்டக்களப்பில் செப்டெம்பர் படுகொலைகள் என்பது 1990 ஆண்டு நடைபெற்ற படுகொலைகளையே சொல்லப்படுகிறது.

1990 ஆண்டு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை வெட்டுப்பாட்டி என்ற இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்த முஸ்லீம் ஊர்காவல் படையினருமே இணைந்து தமிழ் மக்களை வகை தொகை இன்றி படுகொலை செய்தமைக்கு இந்த சவுக்கடிப் படுகொலைகளும் சாட்சியாக உள்ளது.

துப்பாக்கியால் சுட்டும் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்கொண்டார்கள். அவ்வேளை நிலவிய சூழ்நிலையில் அவர்களை அருகாமையில் சென்று அடையாளம் காண முடியவில்லை என்கின்றார் மீனவரான ஜி. மரியசீலன்.

சவுக்கடி கிராமம் ஏறாவுர் முஸ்லிம் பிரதேசத்திற்கு அண்மித்த கிராமம் என்பதால் இந்த படுகொலைச் சம்பவத்துடன் முஸ்லிம்களும் தொடர்புபட்டிருப்பதாக தமிழர் தரப்பில் சந்தேகங்கள் உள்ளன.


1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் இன ரீதியான மோதல்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே இந்தச் சந்தேகம் இருந்தாலும் பொறுப்பானவர்கள் யார்? என்பதை தங்களால் உறுதிபடக் கூற முடியாது எனவும் மரியசீலன் குறிப்பிடுகின்றார்.

28 வருடங்களுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத படுகொலைகளில் ஒன்றாக இந்த சவுக்கடிப் படுகொலையும் கடந்து செல்கின்றது.

இலங்கை அரசு இந்தப்படுகொலைகள் குறித்து உண்மைகளை கண்டறிவதற்கோ அல்லது இது போன்ற படுகொலைகள் மீள நிகழாமல் இருப்பதற்கோ எந்தவகையான அர்ப்பணிப்பையும் செய்ததாக தெரியவில்லை.

ibc.jpg

படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக நாட்டப்பட்டுள்ள நினைவுத்தூண். | படிமப்புரவு: IBC தமிழ்

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.