Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் திங்கட்கிழமை (18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசிலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது என்றும், நடத்தப்படும் பேரணியை 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு புதன்கிழமை (20) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இவ் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதவான் நீதிமன்ற நீதவான் தெரிவித்தார். இவ் வழக்கில் எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சுகாஷ் ஆஜராகினார்.

தியாக தீபத்தின் நினைவேந்தலை தடுக்குமாறு பொலிஸார் கோரிய வழக்கு யாழ். நீதிமன்றால் தள்ளுபடி | Virakesari.lk

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பில்.. கேட்காமலே தடை.

யாழில் கேட்டும் தடையில்லை.

ஆக சொறீலங்காவில்.. உள்ளது நீதி நடைமுறையல்ல.

சிங்கள பெளத்த பேரினவாதத் திமிர் தான்.. நீதிமன்றில் தாக்கம் செய்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் நினைவேந்தலுக்கு தடை கோரி மீண்டும் மனு தாக்கல்!

adminSeptember 22, 2023
 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி, கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (22.09.23)  சென்ற  தந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதானிகள் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மனு மீதான விசாரணைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதனை தொடர்ந்து நீதிமன்று இன்றைய தினமே கட்டளை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலுக்கு தடை கோரி, யாழ்ப்பாண காவற்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று முன்தினம் புதன்கிழமை (20.09.21)  நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வந்த குழுவினால் மீள மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விசேட குழுவில் காவற்துறை சட்டப்பிரிவு பணிப்பாளர் காளிங்க ஜெயசிங்க , சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்கிரம உள்ளிட்டவர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2023/195423/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/9/2023 at 11:41, nedukkalapoovan said:

கொழும்பில்.. கேட்காமலே தடை.

யாழில் கேட்டும் தடையில்லை.

ஆக சொறீலங்காவில்.. உள்ளது நீதி நடைமுறையல்ல.

சிங்கள பெளத்த பேரினவாதத் திமிர் தான்.. நீதிமன்றில் தாக்கம் செய்கிறது. 

இதெல்லாம் சரத் வீரசேகராவிட்கு பலத்த அடி. இனிமேல் தமிழ் நீதிபதிகளுக்கு எதிராக வாய் திறக்க மாடடார் என நினைக்கிறேன். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.