Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் தலைப்பின் கீழ் தான் வாதாடுகிறார்கள்.ஆகவே வலைஞன் நீங்கள் குறிப்பிட்ட சொற்களை தகுந்த இடத்தில் பிரயோகப்படுத்துகிறார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.

"பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?" என்கிற இத்தலைப்பின் கீழ் அது தொடர்பான ஆக்கங்களையும் கருத்துக்களையும் மட்டுமே பதிவு செய்யுங்கள். பெரியார், பார்ப்பனர், ஆரியம், இந்துமதம், திராவிடம் போன்ற கருத்துக்களை அவற்றுக்கென ஏற்கனவே உள்ள தலைப்புகளின் கீழ் பதிவுசெய்யுங்கள். அங்கும் இங்குமாக கருத்துக்களையும் முரண்பாடுகளையும் காவித் திரியாதீர்கள். தலைப்புகளை உரியமுறையில் பயன்படுத்தி ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடரவும். தயவுசெய்து கருத்துக்கள நிர்வாகத்துக்கு ஒத்துழையுங்கள்.

வணக்கம். இங்கே எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பார்த்தீர்களானால் திரு.சபேசன் அவர்கள் தான் இந்து மதம் நோக்கியதாக விவாதத்தை திருப்பி உள்ளார் (கருத்து எண்: 2 , 4 ). அவரின் தவறான பிரசாரங்களை முறியடிக்கும் கடமை ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.அனைவருக்கும் உள்ளது.

அத்தோடு மார்க்சிசம் என்பது வெறும் சமத்துவத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல. இறைவன் என்றொரு சக்தி இருப்பதை மறுக்கும் லௌகீக வாதத்தையும் (materialism) உள்ளடக்கியது. ஆதலால் பாரதி மார்க்ஸிஸ்டா? என்று வரும் போது, பாரதியின் கடவுள் நம்பிக்கை பற்றி எழுதுவதும் விவாதிப்பதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது அல்லவா.

materialism holds that the only thing that can truly be said to exist is matter. Nothing else. However it is now scientifically established that only less than 4% of universe is composed of matter.

பாரதி மிகப் பெரிய புரட்சியாளன். இந்து மதம் சொன்ன அனைத்தையும் போட்டு உடைத்தவர்.

பாரதிக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஏதோ ஒரு சக்தியை (பராசக்தி) அவர் வணங்கினார். கடவுளை வணங்குவதற்கு அவர் சில சொற்களை பாவித்திருப்பார்.

ஒருவர் "அமென்" என்று சொல்லி விட்டு பைபிளை எரித்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் பாரதி "ஓம்" என்று சொல்லிவிட்டு இந்து மதத்தை எரித்தார்.

இதோ பாரதி கீதாசாரியன் கண்ணனை பாடும் பாட்டு

"காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்

கண்மகிழ் சித்திரத்தில் - பகை

மோதும் படைத்தொழில் யாவினுமே

திறம் முற்றிய பண்டிதன் காண் -உயர்

வேதமுணர்ந்த முனிவர் உணர்வினில்

மேவும் பரம்பொருள் காண்

நல்ல கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்

கீர்த்திகள் வாழ்த்திடுவேன்"

இதோ பகவத்கீதைக்கு பாரதி எழுதிய உரையின் ஒரு பகுதி

"வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, 'இஃதெல்லாம்

கடவுள்' என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும்

பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்' என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே

பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ

அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்யை யார் தடுக்கிறார்கள்?

ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை' என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் - எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.)

'ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்'

என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது.

அதாவது :- 'இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது' என்று பொருள்படும்.

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், 'இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்' என்று சொல்லுகிறார்" - பாரதி

இதன் பின்னும் பாரதி இந்து மதத்திற்கு எதிரானவன் என்று நீங்கள் விதண்டாவதம் செய்து கொண்டிருப்பீர்களானால், களத்தின் வாசகர்கள் உங்களை பார்த்து கைகொட்டி சிரிக்கத்தான் அது உதவும்

திரு.சபேசன் நீங்கள் வாதம் செய்வதாக நினைத்துக் கொண்டு முழுப்பூசணிக்காய்களை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் போது உங்கள் கருத்துக்கள் மேலான மற்றவர்களின் நம்பகத்தன்மை தான் பாதிக்கப்படும். விவாதத்தில் எப்படியாவது எதிரியை மட்டந்தட்டியே ஆவது என்ற எண்ணத்துடன் பொய்களையும் புரட்டுகளையும் கலந்து விடுவது என்பது, களத்தின் வாசகர்களுக்கு எந்த நன்மையும் செய்துவிட போவதில்லை.

அத்தோடு பொய்யான கருத்துக்களை அவர்கள் இன்றோ நாளையோ பொய் என்று தெரிந்து கொள்ளும் போது, உங்களின் நியாயமான கருத்துக்களுக்கு கூட சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய் விடும்.

Edited by vettri-vel

பாரதி ஒரு கவிஞன்!

கவிஞர்களுக்குள் பொதுவாக போட்டி இருப்பது இயல்பு. அன்றைக்கு இருந்து கவிஞர்கள் அனைவரும் ஆன்மீகம் என்று எழுதிக் கொண்டிருந்த போது, பாரதியும் அப்படியான படைப்புக்களை தந்ததில் ஆச்சரியம் இல்லை.

பாரதியின் கண்ணன் பாட்டுக்களை பார்த்தீர்கள் என்றாலே இது புரியும்.

ஒவ்வொரு ஆழ்வாரும் கண்ணனை காதலன், குழந்தை என்று பாடல் இயற்ற, பாரதி போட்டியாக கண்ணனை காதலன், குழந்தை, ஆசிரியன், வேலைக்காரன் என்று அனைத்துவிதமாகவும் பாடல் புனைகின்றார்.

பாரதி பகவத்கீதையின் சில பக்கங்களை தமிழில் எழுதுகிறார். இது ஒரு மொழிப் பெயர்ப்பு. அவ்வளவுதான்.

பகவத்கீதையை மொழி பெயர்க்கும் போது, அதில் உள்ளவற்றைத்தான் தர முடியும். இந்து மத நூல்களில் ஒன்றான பகவத் கீதையை மொழிபெயர்த்துக் கொண்டு, அதற்குள் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை எழுத முடியாது.

ஆகவே பாரதி செய்த மொழி பெயர்ப்புக்களை வைத்துக் கொண்டோ, அல்லது ஆரம்ப காலங்களில் அவர் கவிதை எழுதும் பொழுது அழகுக்காக சேர்த்த வரிகளை வைத்துக் கொண்டோ, அல்லது அவர் போட்டிக்கு எழுதிய பாடல்களை வைத்துக் கொண்டோ பாரதியைப் பற்றி முடிவு செய்ய முடியாது.

ஆனால் பாரதி மக்களை நோக்கி அறிவுரை சொல்லும் நோக்கில் மட்டும் பாடிய பாடல்கள் உள்ளன. அங்கே பாரதியின் மனம் வெளிப்படுகிறது.

பாரதியின் பாடல்களில் இந்து மதத்திற்கு எதிரான பாடல்கள் நிறைய உண்டு. பக்தி சார்ந்த பாடல்களும் சில உண்டு. இந்த இடத்தில் பாரதி வாழ்ந்த வாழ்க்கையையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இந்து மத வேதங்கள், சாத்திரங்கள் போன்றவற்றை எதிர்த்து பாடியது மாத்திரம் அன்றி, அதற்கு எதிராகவே வாழ்ந்தவர் பாரதி.

என்னைப் பாத்து சிரிப்பார்களோ, அழுவார்களோ என்று சிந்தித்து கருத்து எழுத முடியாது. இவைகளை சிந்தித்தால் சுதந்திரமாக மனதில் பட்டதை எழுத முடியாது.

சரி! அது கிடக்கட்டும்

நீங்கள் பாரதியை சிறிது ஆழமாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு சிறுவயதில் இருந்தே பாரதியை பராசக்தி பக்தனாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, அதன்படி பழகி விட்டோம். வெளியே வந்து சிந்திப்பது கடினம்தான்.

நீங்கள் பாரதி பற்றிய தேடலை மேலும் ஆழமாக செய்யுங்கள்!. பாரதியை அவனுடைய இந்து சமூகம் ஏன் விலக்கி வைத்தது என்று கேள்வியை எழுப்பி பதிலை தேட வேண்டும். அப்பொழுது பாரதி பற்றி நீங்கள் புதிய விடயங்களை அறிந்து கொள்வீர்கள். பாரதி பற்றிய உங்கள் பார்வையும் மாற்றமடையும்.

Edited by சபேசன்

பாரதி ஒரு கவிஞன்!

கவிஞர்களுக்குள் பொதுவாக போட்டி இருப்பது இயல்பு. அன்றைக்கு இருந்து கவிஞர்கள் அனைவரும் ஆன்மீகம் என்று எழுதிக் கொண்டிருந்த போது, பாரதியும் அப்படியான படைப்புக்களை தந்ததில் ஆச்சரியம் இல்லை.

பாரதியின் கண்ணன் பாட்டுக்களை பார்த்தீர்கள் என்றாலே இது புரியும்.

ஒவ்வொரு ஆழ்வாரும் கண்ணனை காதலன், குழந்தை என்று பாடல் இயற்ற, பாரதி போட்டியாக கண்ணனை காதலன், குழந்தை, ஆசிரியன், வேலைக்காரன் என்று அனைத்துவிதமாகவும் பாடல் புனைகின்றார்.

பாரதி பகவத்கீதையின் சில பக்கங்களை தமிழில் எழுதுகிறார். இது ஒரு மொழிப் பெயர்ப்பு. அவ்வளவுதான்.

பகவத்கீதையை மொழி பெயர்க்கும் போது, அதில் உள்ளவற்றைத்தான் தர முடியும். இந்து மத நூல்களில் ஒன்றான பகவத் கீதையை மொழிபெயர்த்துக் கொண்டு, அதற்குள் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை எழுத முடியாது.

ஆகவே பாரதி செய்த மொழி பெயர்ப்புக்களை வைத்துக் கொண்டோ, அல்லது ஆரம்ப காலங்களில் அவர் கவிதை எழுதும் பொழுது அழகுக்காக சேர்த்த வரிகளை வைத்துக் கொண்டோ, அல்லது அவர் போட்டிக்கு எழுதிய பாடல்களை வைத்துக் கொண்டோ பாரதியைப் பற்றி முடிவு செய்ய முடியாது. :o:o:o

உள்ளுணர்ந்தோன் இயல்பு - மிக

காதல் சொல்லெடுத்து

வளர் இலக்கணம் சேர்

கற்றார் அறிவு மயக்கி

நெஞ்சத்தடயுமாம் கவி"

போட்டிக்கு கவி எழுதுபவன் அரசைவை கவிஞன் ஆகலாம் இல்லை என்றால் சினிமாவுக்கு பாடல் எழுதலாம். ஒரு சுதந்திரத்தை பாடிய தேசிய கவி ஆகமுடியாது.

உள்ளுணர்ந்து காதல் சொல்லெடுத்து தன் உணர்வுகளை உள்ளது உள்ள படி பாடக் கூடியவன் மட்டும் தான் புரட்சிக்கவி ஆகமுடியும். புலமையை மட்டும் காட்டுவதென்றால் பாரதி எத்தனையோ காவியங்கள் படைத்திருக்கலாம். கீதையின் தத்துவங்களை ஒப்புக்கொள்ளாதவன் கீதையை புகழ்ந்து எழுதவேண்டிய தேவை இல்லை.

பாரதியின் கண்ணன் பாடல்களை ஊன்றி படியுங்கள் தெரியும். ஆழ்வார்களை பாரதி போட்டியாக நினைத்திருந்தால் 4000 திவ்ய பிரபந்தங்களுக்கு பதிலாக 4001 திவ்ய பிரபந்தங்கள் பாடியிருப்பான்.

என்னைப் பாத்து சிரிப்பார்களோ, அழுவார்களோ என்று சிந்தித்து கருத்து எழுத முடியாது. இவைகளை சிந்தித்தால் சுதந்திரமாக மனதில் பட்டதை எழுத முடியாது.

உங்களுக்கே இப்படி இருக்கும் போது,

புரட்சிக்கவி, மகா கவி என்றெல்லாம் புகழப்படும் பாரதி,

தன் மானத்திற்காகவும் கொண்ட கொள்கைக்காகவும் வாழ்வின் சுகங்களை கூட தியாகம் செய்த பாரதி,

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! அச்சமில்லை!! என்று பாடிய பாரதி,

ஏதோ புகழுக்காக, போட்டிக் கவிதை புனைந்திருப்பான் என்பதும், பொழுது போகாமல் கீதைக்கு உரை எழுதி இருப்பான் என்பதும் உங்களுக்கே கோமாளித்தனமாக தெரியவில்லையா? :D

இன்னும் எத்தனை காலம் தான் தூங்குவது போல் நடிக்கப் போகிறீர்கள்?

நடித்துக் கெட்டான் நம்மவன் சபேசன் என்று நாடு உங்களை சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :D:D:D

Edited by vettri-vel

பாரதி சிறுவயதில் இருந்தே பாடல்கள் எழுதியவர். அவர் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக எழுதியிருப்பார்.

அத்துடன் பொதுவாகவே கவிஞர்களுக்கு தமக்கு முன்னிருந்த கவிஞர்களின் தாக்கம் இருக்கும். அல்லது அவர்களை விட தான் அதிகமாக எழுத வேண்டும் என்ற வேட்கை இருக்கும்.

பாரதியின் கண்ணன் பாடல்களை "ஆழ்வார்களைப் பார்த்து கொப்பி அடித்தது" என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால் அப்படி அல்ல. ஆழ்வார்களின் பாடல்கள் பாரதியை கவர்ந்தன. தானும் கண்ணனை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் எழுதினான். இதை வைத்து பாரதி இந்து என்று வாதிட முடியாது.

கண்ணன் பாடல்கள் பாரதியின் கவித் திறனை வெளிப்படுத்துகின்றனவே தவிர, அங்கே மக்களுக்குச் சொல்லப்படும் செய்தி பெரிதாக இல்லை.

ஆனால் பாரதி மக்களை நோக்கிப் பாடுகின்ற பாடல்கள் நிறைய உண்டு. அவைகளைத்தான் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

அத்துடன் பாரதியின் வாழ்க்கையையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

நான் இங்கே பாரதின் சில பாடல்களை, வசனக் கவிதைகளை இணைத்திருக்கிறேன். ஆனால் அப்படியான பாடல்கள் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பாரதியைப் பற்றி பல வருடங்களாக ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது. ஆகவே உண்மையை சொல்கின்ற போது, பலர் நம்பமறுப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

பாரதி பற்றி இன்னும் ஒரு தகவலும் இருக்கிறது.

நாம் இந்து மத வேதங்கள் பற்றி பேசுகின்ற போது, சிலர் இங்கு "இடைச் செருகல்" என்ற வார்த்தையை பயன்படுத்தி தப்பிப்பது வழக்கம்.

அப்படி ஒரு இடைச் செருகலுக்கு பாரதியின் கவிதைகள் ஆட்பட்டுவிட்டன என்றும் சொல்கிறார்கள்.

பாரதிக்கு பிறகு அவருடைய கவிதைகள் சில காலம் செல்லம்மாவிடம் இருந்தன. பின்பு அவைகள் ஒரு வடநாட்டு மார்வாடியிடம் விற்கப்பட்டன. அந்த மார்வாடியிடம் இருந்துதான் மெய்யப்பச்செட்டியார் பாரதி பாடல்களை வாங்கினார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சில இந்துத்துவவாதிகள் பாரதியின் கவிதைகளில் சில மாற்றங்கள் செய்து விட்டதாக சொல்கிறார்கள். செல்லம்மா கூட சில வார்த்தைகளை மாற்றியதாகவும் சொல்கிறார்கள்.

பாரதியின் சில பாடல்களைப் பார்த்தால், பெரும் கோபத்தோடு இருக்கின்ற வரிகள், முடிவில் ஏனோதானோவென்று இருக்கும். இது எல்லாம் செல்லம்மாவின் கைங்கர்யம் என்று சொல்பவர்கள் உண்டு. இங்கே உள்ள ஒரு பாடலில் இருக்கின்ற "ஓம் ஓம்" பற்றியும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பாரதிதாசன் போன்றவர்கள்தான் பாரதியின் மறைக்கப்பட்ட கவிதைகளை மக்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்தார்கள்.

ஆகவே பாரதி பற்றி ஆராய்கின்ற போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்

கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே

வந்து சமன்செய் குட்டைமுனியும்

நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த

நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை

விதியுறவே மணம் செய்த திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம்

ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்

ஒன்று உன்மையொன்றோதி மற்

றொன்று பொய்யென்னும்

நன்று புராணங்கள் செய்தார் அதில்

நல்ல கவிதைகள் பலபல தந்தார்

கவிதை மிக நல்லதேனும் அக்

கதைகள் பொய்யெனத் தெளிவுறக் கண்டோம்

இதுவும் பாரதி எழுதியதுதான். தந்தை பெரியாரா பாரதியா அதிகமாக இந்து மதத்தை கண்டித்தது என்று பட்டிமன்றம் வைக்கலாம் போலிருக்கிறதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.