Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
28 SEP, 2023 | 11:03 AM
image
 

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (27) மாலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மாவட்ட செயலர், பொலிஸார் உள்ளிட்டோர் நடாத்திய சந்திப்பின் போதே பொலிஸார் அவ்வாறு தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்திப்பில், 

யாழ்ப்பாணத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு கட்டணங்களை வசூலிக்கின்றன. 

அதனால் நீண்ட காலமாக சேவையில்  ஈடுபடும் எமது வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நாம் பெரும் தொகை பணத்தினை செலவழித்து மீற்றர் கருவியை பொருத்தினோம். அப்படியிருந்தும் அந்நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளே அதிக சேவைகளில் ஈடுபடுவதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

அதற்கு பதில் அளித்த மாவட்ட செயலர், சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மீற்றர் பூட்டுவது என்பது கட்டாயம். அதனையே நாமும் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம். 

அதேவேளை உரிய அனுமதிகளை பெற்று  சேவையில் ஈடுபடும் எந்த முச்சக்கர வண்டிகளையும் தடுக்க முடியாது. அத்துடன், போக்குவரத்து சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்தை தடுக்கும் அதிகாரம் இல்லை. 

மீற்றர் பொருத்தி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொதுமக்களால் தினமும் முறைப்பாடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் இதுவரையில் எந்த முறைப்பாடும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/165617

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழில், ஆட்டோக்காரர் கேட்பது கொள்ளை. வெளிநாட்டில் இருந்து வந்தால், கேட்டதை தர வேண்டியது தானே என்று நினைக்கிறார்கள்.

தம்பி எவ்விடம், ஸ்காபோரோவா... அட அப்ப, டூட்டிங்கோ என்று கேட்க்கிற விபரம்... 

நண்பர் ஒருவர், வேலணைக்கு போக ஆட்டோ பேரம் பேசினார். போக 3,500 வர 3,500 அப்புறம் வெயிட்டிங் என்று இழுக்க. அரண்டு போய், பஸ்சில் போனாராம். 120 ரூபா. வர 120 ரூபா. 240 உடன் கதை முடிந்தார்.

மீட்டர் போட்டால், கெஞ்ச ஆரம்பிப்பார்கள். 

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆட்டோகாரரை விடுவம்.... அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதோ செய்கிறார்கள். ஆனால்.. இந்த வான்.. கார் வாடகைக்கு கொடுக்கிற கூட்டம் இருக்கே.. ஒரு நாளுக்கு வாடகைக்கு விடுவதுமில்லாமல்.. அதில் கிலோமீட்டர் வரையறை வேறு. நாளுக்கு 20,000 ஆயிரத்துக்கு மேல். அதிலும் 80 கிலோமீட்டர் லிமிட்டாம். 100 கிலோமீட்டர் லிமிட்டாம். இதனை யார் கட்டுப்படுத்துவது..????!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, nedukkalapoovan said:

ஆட்டோகாரரை விடுவம்.... அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதோ செய்கிறார்கள். ஆனால்.. இந்த வான்.. கார் வாடகைக்கு கொடுக்கிற கூட்டம் இருக்கே.. ஒரு நாளுக்கு வாடகைக்கு விடுவதுமில்லாமல்.. அதில் கிலோமீட்டர் வரையறை வேறு. நாளுக்கு 20,000 ஆயிரத்துக்கு மேல். அதிலும் 80 கிலோமீட்டர் லிமிட்டாம். 100 கிலோமீட்டர் லிமிட்டாம். இதனை யார் கட்டுப்படுத்துவது..????!

போடட்டா போட்டி தான் கட்டுப்படுத்தும்.

Monopoly தான் இதுக்கு காரணம். இன்னொரு கம்பனி வர, சேர்ந்தே price fixing செய்வார்கள். Price fixing மேற்கே சட்டவிரோதமானது.

கடைசீல, அட நல்ல காசு பார்க்கலாம் போல என்று போட்டியாளர்கள் வர monopoly இல்லாது போக better pricing வரும்.

இதுவே சந்தை செயல்பாடு.

ஆட்டோகாரர்கள், லோக்கல் ஆக்களுக்கு ஒரு ரேட்.

அங்க போய், கூலங் கிளாஸ், அரை காற்சட்டையோட போய் ஆட்டோ பிடியாமல், சாரம் அல்லது வேட்டி, நெத்தீல துண்ணூறு, சந்தனம் வைச்சு, எங்கண்ட உடான்ஸ்சு சாமியார் போல, போய், 'அண்ண/தம்பி, புலோலி சந்திக்கு போகவேணும், எம்மளவு' எண்டு கேளுங்கோ.

'பார்த்துச் சொல்லண்ண / என்னடா தம்பி பொல்லால அடிச்ச காசு கேக்கிறியள்/கேக்கிறாய், வசு லேட்டாகுமாம் எண்டு தான உங்க வந்தனான்' எண்டு நில்லுங்கோவன்!!

லோக்கல் ரேட்.

Edited by Nathamuni


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.