Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விபச்சாரப் பண்ணை அம்ஸ்ரடாம்.. உருமாறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாம் விபச்சாரத்துக்குப் பெயர் போனது. இங்கு கடந்த 700 ஆண்டுகளாக பெண்கள் தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்தும்.. பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்ய ஓடி வருகின்றனர். விபச்சசாரம் அங்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டும் இருக்கிறது. இப்போ அதன் காரணமாக புதிய தலைவலிகள் அரசுக்கு ஏற்பட்டிருப்பதால்.. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணை தற்போது தன்னை உருமாற்ற ஆரம்பித்திருக்கிறது. சுமார் 33% அதிகமான விபச்சார காட்சி மனைகள் மூடப்பட்டு.. வர்த்தக நிலையங்களாக மற்றும் வீடுகளாக மாற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளன.

விபச்சாரம் செய்யும் பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் வன்முறைகள் அதிகரித்து வருவதும்.. பெண்கள் விபச்சாரத்துக்காக கடத்தி வரப்படுவதும்.. நெதர்லாந்து அரசுக்கு தலையிடியாக மாறியுள்ளது.

இந்தக் கட்டுரையில்.. விபச்சாரம் மூலம் பெறப்படும் பணத்தை.. Dirty money என்று உச்சரித்திருக்கும் பிபிசி.. விபச்சாரத்தின் விளைவுகள்.. சமூகப் பாதிப்பு நோக்கி இட்டுச் செல்வதாக எழுந்துள்ள கவலையையும் சுட்டிக்காட்டியுள்ளது.

விபச்சாரம் உல்லாசப்பயணிகளைக் கவர என்று அம்ஸ்ரடாம் போன்ற மேற்குலக நகரங்களில் பெண்களுக்கு முதலீடில்லாத வியாபாரமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணையில் உள்ள காட்சி மனைகளில் நிர்வாணமாக விபச்சாரிப் பெண்கள் காட்சியளிப்பராம். அதற்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 யூரோக்கள் அறவிடப்படுகிறது. பெண்கள் போகப் பொருளா என்று கேள்வி கேட்டு முழக்கும் பெண் உரிமையாளர்கள்.. பெண்கள் தாங்களாகவே தங்களை போகப்பொருளாகச் சித்தரிப்பது குறித்து.. வெட்கப்பட வேண்டியதும் இந்த இடத்தில் தான். *** தணிக்கை

நெதர்லாந்து அரசின் இந்தத் திடீர் முடிவை விபச்சாரிப் பெண்களுக்கு என்றுள்ள சங்கம் கண்டித்துள்ளதுடன்.. இது இத்தொழிலுக்கு அடிமைப்பட்டுப் போன விபச்சாரிப் பெண்கள் *** தணிக்கை விபச்சாரம் செய்ய வீதி மறைவுகளைத் தேடி ஓட வைக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். :unsure:

Amsterdam to cut back on brothels

_44129238_street_ap203b.jpg

The 700-year-old red light district is a big tourist attraction

The Dutch city of Amsterdam is to close one-third of the brothels in its famous red light district.

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7005768.stm

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

நெடுக்ஸ் பெண்களைப் பற்றி நல்ல நல்ல செய்தி எல்லாம் கொஞ்சக்காலமய் கொண்டுவாறீங்க....ம்....தொடரட்டும

பலரும் பலதடவை சொன்ன ஒரு கருத்துத் தான். மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன்.

விபச்சாரம் செய்யுமு; பெண்களை ஏளனமாக கேவலமாக கருதும் பலர் இந்தப் பெண்ணகளின் மூலமாக காமப் பசியாறச் செல்லும் ஆண்களை விமர்சிப்பதில்லை. அதிலும் அந்த ஆண்களில் பலர் திருமணமாகி வீட்டில் மனைவி இருக்க இந்தப் பெண்களைத் தேடி அலைகின்றனர்.

இன்னொரு விசயத்தையும் இங்கே சொல்ல வேண்டும். வெளியே விபச்சதரம் செய்யும் பெண்களைப் கேவலமாகப் பார்ப்பவர்களும் கேவலமாக விமர்சிப்பவர்களும் இரகசியமாய் இதே பெண்களைத் தேடிச் செல்வது அதிகம் என்பதே உண்மை. ஆக இந்தப் பெண்களை வெளிப்படையாய் விமர்சிப்பதை தங்கள் கேவலமான செயலுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்

  • தொடங்கியவர்

கடைவீதியில காட்சிப் பொருளா இருந்தா பொருட்களை வாங்கத்தான் செய்வினம். கடைவீதியில பொருட்களா நிற்கிறவையை அடிச்சு விரட்டினா.. வாங்கப் பொருள் கிடைப்பது சுலபமாகாது.

விபச்சாரத்தை விமர்சிப்பவர்கள் எல்லாம் விபச்சாரிப் பெண்களிடம் போறவர்கள் என்ற உங்கள் கண்டுபிடிப்புப் பிரமாதம். அதேபோல்... விபச்சாரிப் பெண்களைப் போற்றிப்பாடுபவர்கள்.. ஜோக்கியமானவர்கள் என்ற உங்கள் மறைமுகக் கருத்தும் பிரமாதமோ பிரமாதம். :unsure::lol:

விபச்சாரம் சமூகக் கேடு என்பதுவும்.. விபச்சாரத்தால் பணம் ஈட்டலாம் என்ற இழிவான சிந்தனை பெண்கள் மத்தியில் வளர்க்கப்படுவதும்.. அதற்கு வாய்ப்பு உண்டு பண்ணிக் கொடுப்பதுமே அது பெருக உதவிட்டு இருக்குது. இப்படிப் பட்ட பெண்களால்... சமூகம் குட்டிச்சுவரான பின்னர்.. அல்லது சமூகப் பாதிப்புக்கள் எல்லை மீறுகின்ற போது நடவடிக்கை எடுக்க சிந்திக்கும் அரசுகள்.. அதற்கு முன்னரே வரையறைகளை வகுத்துக் கொள்வது நல்லம்.

குறிப்பாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற சிந்தனையை சமூக ஒழுக்கத்தை விதைக்கிறது நல்ல அறுவடையைத் தரும்.

மனைவிமார் ஒழுங்கா இருந்தா ஏன் ஆண்கள் அடுத்தவளைத் தேடிப் போகப் போயினம்...????! :D:D

Edited by nedukkalapoovan

ஐயா கடை வீதியில் மதுக் கடை இருந்தாலும் மது அருந்தும் எண்ணம் இல்லாதவன் அங்கே போகப் போவதில்லை.

உங்களால் புலனை அடக்க முடியாவிட்டால் உங்களால் உங்கள் மனைவிக்குத் துரோகம் செய்யக் கூடாது என்ற மனநிலை இல்லாவிட்டால் அதற்காக அந்தப் பெண்களை அடித்துத் துரத்த வேண்டும் என்று குரல் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கடை வீதியில் மதுக் கடை இருந்தாலும் மது அருந்தும் எண்ணம் இல்லாதவன் அங்கே போகப் போவதில்லை.

உங்களால் புலனை அடக்க முடியாவிட்டால் உங்களால் உங்கள் மனைவிக்குத் துரோகம் செய்யக் கூடாது என்ற மனநிலை இல்லாவிட்டால் அதற்காக அந்தப் பெண்களை அடித்துத் துரத்த வேண்டும் என்று குரல் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.

புலன் என்னத்துக்கு இருக்கு. தூண்டத்தானே. எதுக்கும் புலனை அடக்கு அடக்கு என்றீர்கள். புலனை அடக்கி வாழ மனிதன் என்ன சடப்பொருளா...???!

புலனைத் தூண்டுறதை நிறுத்திறதுதான் புலனைத் தூண்டாமல் இருக்க செய்யும். அதைவிடுத்து.. புலனை அடக்கு மூளையைத் தறி..என்பதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமில்லாதவை.

புலனைத் தூண்ட தங்கள் தேகத்தை நிர்வாணமாக்கி.. போகப் பொருளாக்கி வைத்திருக்கும் பெண்களை விரட்டிறது மட்டுமில்ல.. உலகத்தில் இருந்தே ஒரேயடியா விரட்டனும். அப்பதான் அவர்களின் கீழ்நிலைப் புலனை தூண்டி பிழைப்பு நடத்தும் அர்ப்ப புத்தி போகும். அழியும்.

மதுக்கடையை மூடினா.. குடிக்க நினைக்காதவன் கூட குடிக்க நினைப்பதையும் தடுக்கலாம்.. குடிப்பவனையும் தடுக்கலாம். அதை விட்டிட்டு.. மதுக்கடையைத் துறந்து வைச்சிட்டு.. புலனை அடக்கு என்பது.. சாத்தியப்பாடனா செயல் அல்ல. புலனைத் தூண்டத்தானே மதுக்கடையே. அதை அடக்க முடியாதவனை மதுக்கடைக்குள்ள இழுத்து அழிப்பது நியாயம் என்று சொல்வது எப்படி நியாயமாகும். புலனை தவறான பாதையில் தூண்டக் கூடியவை அனைத்தையும் அழிக்கனும். ஒழிக்கனும். அப்பதான் புலன் நல்வழில போகும்.

மனைவிமார் தங்கள் கணவன்மாரின் புலனை சீர்ப்படுத்தி இருந்தா.. அது ஏன் கண்டதுக்கும் துலங்கப் போகுது..??! அதுபோல சில கணவன் மாரும்.. மனைவிமாரின்ர புலனை கட்டுப்படுத்தி இருந்தா.. அவையேன் மேயப் போயினம். கணவன்மாரில்லாது மேயப் போற விபச்சாரிப் பெண்களும் வேற இருக்கினம்.. அதையேன் பேசுவான். பேசினா பெண்கள் உலகம் நாறீடும். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணதுக்கு அறபு நாடுகளில் ஏன் விபச்சாரம் இல்லையெனில் அங்கு விபச்சார விடுதி இல்லை.கவியா இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள்?.

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணதுக்கு அறபு நாடுகளில் ஏன் விபச்சாரம் இல்லையெனில் அங்கு விபச்சார விடுதி இல்லை.கவியா இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள்?.

விபச்சார விடுதி இல்லாட்டி என்னங்க அதுதான் ஒருவர் எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம் தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விபச்சார விடுதி இல்லாட்டி என்னங்க அதுதான் ஒருவர் எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம் தானே

அது ஒருவகையில் பாதுகாப்புத் தானே. பல பெண்களை நாடி தானும் அழிஞ்சு சமூகத்தையும் அழிக்கிறதிலும்.. ஒருவன் விரும்பினா.. பல பெண்களை திருமணம் செய்து கொண்டு.. அவனின் பாலியல் செயற்பாட்டை அவனுக்குரிய அந்தப் புதிய எல்லைக்குள் வைச்சிருக்கட்டன். அதனால முன்னரே திருமணமானவன் என்று அறிந்தும் திருமணம் செய்ய வரும் பெண்களுக்கும் ஒரு சமூகப்பாதுகாப்புக் கிடைக்குது. சமூக அந்தஸ்தும் கிடைக்குது.

இது என்னடான்னா.. காசைப் பாக்கிறதில இருக்கிற ஆர்வத்தில.. சமூகத்தை எல்லோ சீரழிக்குதுகள்..! இதைக்காட்டிலும் அது பறுவாயில்லை எனலாம். :P

Edited by nedukkalapoovan

நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாம் விபச்சாரத்துக்குப் பெயர் போனது. இங்கு கடந்த 700 ஆண்டுகளாக பெண்கள் தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்தும்.. பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்ய ஓடி வருகின்றனர். விபச்சசாரம் அங்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டும் இருக்கிறது. இப்போ அதன் காரணமாக புதிய தலைவலிகள் அரசுக்கு ஏற்பட்டிருப்பதால்.. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணை தற்போது தன்னை உருமாற்ற ஆரம்பித்திருக்கிறது. சுமார் 33% அதிகமான விபச்சார காட்சி மனைகள் மூடப்பட்டு.. வர்த்தக நிலையங்களாக மற்றும் வீடுகளாக மாற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளன.

விபச்சாரம் செய்யும் பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் வன்முறைகள் அதிகரித்து வருவதும்.. பெண்கள் விபச்சாரத்துக்காக கடத்தி வரப்படுவதும்.. நெதர்லாந்து அரசுக்கு தலையிடியாக மாறியுள்ளது.

இந்தக் கட்டுரையில்.. விபச்சாரம் மூலம் பெறப்படும் பணத்தை.. Dirty money என்று உச்சரித்திருக்கும் பிபிசி.. விபச்சாரத்தின் விளைவுகள்.. சமூகப் பாதிப்பு நோக்கி இட்டுச் செல்வதாக எழுந்துள்ள கவலையையும் சுட்டிக்காட்டியுள்ளது.

விபச்சாரம் உல்லாசப்பயணிகளைக் கவர என்று அம்ஸ்ரடாம் போன்ற மேற்குலக நகரங்களில் பெண்களுக்கு முதலீடில்லாத வியாபாரமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணையில் உள்ள காட்சி மனைகளில் நிர்வாணமாக விபச்சாரிப் பெண்கள் காட்சியளிப்பராம். அதற்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 யூரோக்கள் அறவிடப்படுகிறது. பெண்கள் போகப் பொருளா என்று கேள்வி கேட்டு முழக்கும் பெண் உரிமையாளர்கள்.. பெண்கள் தாங்களாகவே தங்களை போகப்பொருளாகச் சித்தரிப்பது குறித்து.. வெட்கப்பட வேண்டியதும் இந்த இடத்தில் தான். *** தணிக்கை

நெதர்லாந்து அரசின் இந்தத் திடீர் முடிவை விபச்சாரிப் பெண்களுக்கு என்றுள்ள சங்கம் கண்டித்துள்ளதுடன்.. இது இத்தொழிலுக்கு அடிமைப்பட்டுப் போன விபச்சாரிப் பெண்கள் *** தணிக்கை விபச்சாரம் செய்ய வீதி மறைவுகளைத் தேடி ஓட வைக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். :D

Amsterdam to cut back on brothels

_44129238_street_ap203b.jpg

The 700-year-old red light district is a big tourist attraction

The Dutch city of Amsterdam is to close one-third of the brothels in its famous red light district.

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7005768.stm

குறிப்பிட்ட இந்த செய்தி முழுக்க முழுக்க பிபிசி செய்தியின் மொழிபெயர்ப்பா? அல்லது உங்களின் கருத்தும் கலந்த தமிழாக்கமா?

மனைவிமார் ஒழுங்கா இருந்தா ஏன் ஆண்கள் அடுத்தவளைத் தேடிப் போகப் போயினம்...????! :D:lol:

ஒருசில துரதிஸ்டசாலிகளைத்தவிர பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை வரவில்லை என்பதையிட்டுச் சந்தோசப்படுவதுடன் அந்த ஒருசில ஆண்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட இந்த செய்தி முழுக்க முழுக்க பிபிசி செய்தியின் மொழிபெயர்ப்பா? அல்லது உங்களின் கருத்தும் கலந்த தமிழாக்கமா?

பிபிசியின் மூலச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட செய்தி.

அதன் மூலச் செய்தி ஆங்கிலத்திலும்.. அதன் இணைப்பு அதன் கீழும் தரப்பட்டுள்ளது. :D

மனைவிமார் ஒழுங்கா இருந்தா ஏன் ஆண்கள் அடுத்தவளைத் தேடிப் போகப் போயினம்...????!

----------------------------------------------------------------------------------------

"கிளி போல் பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல் வைப்பாட்டி இருக்கணும் " என்று ஒரு பழமொழி இருக்கின்றது.

பள்ளியறையில் மனைவி தாசிபோல் புருசனை கையாள வேண்டும் என்று ஒரு கோட்பாடு திருக்குறள் ஊடாக முன்வைக்கப்படுகின்றது அதே திருக்குறள் பத்தினி பெய்யென பெய்யும் மழை என்றும் கூறுகின்றது. ஆனால் சராசரி மனிதரின் வாழ்வில் இந்த கோட்பாடுகள் எவ்வாறான எதிர்மறை விழைவுகளை உண்டுபண்ணுகின்றது?

புருசனை தாசிபோல் திருப்தி படுத்தினால் மனைவியில் சந்தேகம். இவளுக்கு ஏதோ முன் அனுபவம் இருக்கு என்று சந்தேகம் தொடர்கின்றது.

அப்படி நடக்காவிட்டால் இவள் ஒரு மரக்கட்டை என்று வேறு இடத்துக்கு ஆணின் மனம் நாடுகின்றது.

இப்படியான உளவியல் தாக்கங்கள் கலாச்சாரத்தினூடாக ஏராளமான குடும்பங்களில் மலிந்து கிடக்கின்றது. பெண்கள் என்னதான் செய்ய முடியும்? நாணிக்கோணினால் தான் ஒழுங்கான பெண் என்றும் சொல்லும் எமது சமுதாயம் அதையே அவளுக்கு எதிராகவும் செயற்பட வைத்துள்ளது.

ஆணைப்பற்றி சுருக்கமாக "சேறுகண்ட இடத்தில் காலை வைப்பான் தண்ணி கண்ட இடத்தில் கழுவுவான"; என்கிறது பழமொழி. மைனர் குஞ்சுகளுக்கு வக்காலத்து வாங்கும் பல பழமொழிகள் இருக்கின்றது இருந்தும் பெண்ணை எவ்வளவு கேவலமாக சேறு என்கின்றது? அதே நேரம் பெண்ணை போற்றி புகழவும் பின்நிற்கவில்லை ஆனால் பெரும்பாலும் ஒழுக்கத்தையும் அழகையும் வலியுறுத்தியே போற்றி புகழப்படுகின்றது.

ஒரு ஆண் விபச்சார வீட்டுக்கு போனால் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் பெண் தவறாக நடந்தால் பிரச்சனை. அவளின் உழைப்போ அல்லது அவள் படும் கஸ்டங்களையோ கருத்தில் கொண்டு அவளை திருத்த முற்படுவதை ஆணாதிக்கம் செய்வதில்லை மாறக நிந்திக்கவும் தண்டிக்கவும் செய்கின்றது. காரணம் கற்பு என்ற ஒன்று ஏனைய சமூகங்களுக்கு மாறாக வீரியமடைந்து காது மூக்கு போல் எமது பெண்களுக்கு வளர்ந்திருப்பதால் வில்லன் காதலியையோ அல்லது மனைவியையோ கெடுத்து? விட்டால்(கற்பை அழித்து? விட்டால்) தமிழ் திரைப்படங்களில் இவர்கள் தற்போதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.

மதுரை மாநகரை கண்ணகி எரித்த நெருப்பிலும் சீதை குளித்த தீயிலும் ஏச் ஐ வி எரிந்து விடவில்லை மாறாக ஆபிரிக்காவை மிஞ்சி விட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றது. காரணம் கேட்டால் சனத்தொகை பெரிது என்பார். சீனாவை விடவா?

வேசிபோல் இரு, இருக்காதே. மரக்கட்டை போல் இரு, இருக்காதே. இதற்குள் இருக்கின்றது பெரிய பூதம் ஒன்று. மேலே கதைத்தால் பிரச்சனை அதனால் நிப்பாட்டுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகன் நான் மனைவி மார் ஒழுங்காக இருந்தால் என்பது.. கணவன்மாரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள்ள.. சொல்வழி கேட்கத்தக்கதா வைச்சிருந்தா ஏன் போகப் போயினம் என்றுதான் கேட்டேன்.

பெற்றோருடன் இருக்கும் போது நல்ல பையனா இருக்கும் ஒருவன் அதேன் திருமணம் ஆனதும் தவறான வழில போகனும்...???! பெற்றோர் கூட உள்ள போதும் தப்புப் பண்ணுறவங்க இருக்காங்க. இருந்தாலும்.. அது குறைவு.

மனைவிமாரின் கண்டிப்பில்லாத தன்மை.. கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காக பெண்கள் ஆண்களின் இச்சைகளைத் தீர்க்கும் ஒரு கருவியா இருக்கனும் என்பதல்ல என் முன்னிறுத்தல்.

எதிலும் இலகுவா ஆணாதிக்கம் என்பதை வரையறுக்கும் நாம்.. பெண்கள் சார்பான நிலைப்பாடுகளும்.. ஆண்களின் தவறுகளுக்கான வாய்ப்பையும் ஆராய்வதில்லை.

எயிட்ஸ் இல் இந்தியா முன்னணியில் இருக்க ஆண்கள் மட்டும் காரணமல்ல. பெண்களும்.. இருவர் மத்தியில் இருக்கும் பாலியல் அறிவற்ற தன்மையும்.. சரியான பாலியல் நோய்த்தடுப்பு பற்றிய சாதன மயப்படுத்தப்பட்ட அறிவூட்டல் இன்மையும் என்று பல காரணிகள் அடங்கியுள்ளன.

எயிட்ஸ் போன்ற நோய்கள் விபச்சாரம் நகரங்களில் பெருகிக் கிடக்க.. மற்றைய நகரங்களில் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும் நீங்கள் அவதானித்து உங்கள் விமர்சனத்தை.. முன் வைத்திருக்க வேண்டும்.

தனி மனித ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தும் எந்த நாகரிகப்பண்பையும் நாம் வரவேற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தின் தொனிப்பொருள். அதில் ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கு இடமிருக்கக் கூடாது. அதேபோல் ஒரு சமூகப்பிரச்சனையின் வடிவத்தை சரிவர நோக்க வேண்டும். ஆண்களுக்கு எதிராக பெண்களுக்கு அனுதாபமாக நோக்குதல் தீர்வுகளைத் தராது. பிரச்சனையின் உண்மை வடிவத்தில்.. அதை ஆராயனும்.. தீர்வு தேடனும் அதுதான் சமூகத்துக்குப் பயன்மிக்கது. பெண்கள் என்பதற்காக அடக்கி வாசிக்கனும்.. குறை சொல்லக் கூடாது.. அனுதாபத்தோட நோக்கனும்.. பாவம் பார்க்கனும் என்று நினைக்கிறது.. தவறு. ஆண்கள் என்றால் கண்டிப்பாக இருக்கனும்.. கெட்டவங்க.. கொடூரமானவங்க.. ஆதிக்க சக்திகள் என்று காட்டுவதும் தவறு. இருவரும் மனிதர்கள்.. முதலில் இருவருக்கும் இடையே உள்ள மனிதப் பண்பை முன்னிலைப்படுத்தி விடயங்களை ஆராயுங்கள். ஆணாதிக்கம்.. பெண்ணடிமை.. இவற்றைக் கொண்டு போய் குப்பையில் கொட்டுங்கள். இவை வெறும் விவாதங்களாக உள்ளனவே தவிர.. சமூகத்தில்.. அவற்றுக்கான காரணிகள் வேறாக உள்ளன. :P

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவன் உங்கள் கருத்தை நான் நிராகரிக்கவில்லை மாறாக என்னுமொரு கோணத்தில் ஒரு பார்வையை முன்வைத்தேன். எமது சமூகத்தில் இது விசயமா உள்ள சில முரண்பாடுகளை சொல்வதே எனது நோக்கமாக இருந்தது.

--------------------------------------------------------------

தனி மனித ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தும் எந்த நாகரிகப்பண்பையும் நாம் வரவேற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தின் தொனிப்பொருள். அதில் ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கு இடமிருக்கக் கூடாது. அதேபோல் ஒரு சமூகப்பிரச்சனையின் வடிவத்தை சரிவர நோக்க வேண்டும். ஆண்களுக்கு எதிராக பெண்களுக்கு அனுதாபமாக நோக்குதல் தீர்வுகளைத் தராது. பிரச்சனையின் உண்மை வடிவத்தில்.. அதை ஆராயனும்.. தீர்வு தேடனும் அதுதான் சமூகத்துக்குப் பயன்மிக்கது. பெண்கள் என்பதற்காக அடக்கி வாசிக்கனும்.. குறை சொல்லக் கூடாது.. அனுதாபத்தோட நோக்கனும்.. பாவம் பார்க்கனும் என்று நினைக்கிறது.. தவறு.

--------------------------------------------------------------------------------------------

உங்கள் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. தவிர முரண்படும் நோக்கத்துடன் நான் எழுதவில்லை. ஒரு விசயத்தை சொல்ல எத்தனித்தேன் அவ்வளவுதான்.

தனி மனித ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்துவதில் சில தவறுகள் நடந்துவிட்டன என்பது எனது கருத்தின் நோக்கம். அதை திருத்த முற்பட வேண்டும். அந்த திருத்தத்தில் பெண்ணின் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என்பதும் எனது கருத்து.

இதையே பின்வருமாறு சுட்டிக்காட்டினேன்

ஒரு ஆண் விபச்சார வீட்டுக்கு போனால் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் பெண் தவறாக நடந்தால் பிரச்சனை. அவளின் உழைப்போ அல்லது அவள் படும் கஸ்டங்களையோ கருத்தில் கொண்டு அவளை திருத்த முற்படுவதை ஆணாதிக்கம் செய்வதில்லை மாறக நிந்திக்கவும் தண்டிக்கவும் செய்கின்றது. காரணம் கற்பு என்ற ஒன்று ஏனைய சமூகங்களுக்கு மாறாக வீரியமடைந்து காது மூக்கு போல் எமது பெண்களுக்கு வளர்ந்திருப்பதால் வில்லன் காதலியையோ அல்லது மனைவியையோ கெடுத்து? விட்டால்(கற்பை அழித்து? விட்டால்) தமிழ் திரைப்படங்களில் இவர்கள் தற்போதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாம் விபச்சாரத்துக்குப் பெயர் போனது. இங்கு கடந்த 700 ஆண்டுகளாக பெண்கள் தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்தும்.. பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்ய ஓடி வருகின்றனர். விபச்சசாரம் அங்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டும் இருக்கிறது. இப்போ அதன் காரணமாக புதிய தலைவலிகள் அரசுக்கு ஏற்பட்டிருப்பதால்.. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணை தற்போது தன்னை உருமாற்ற ஆரம்பித்திருக்கிறது. சுமார் 33% அதிகமான விபச்சார காட்சி மனைகள் மூடப்பட்டு.. வர்த்தக நிலையங்களாக மற்றும் வீடுகளாக மாற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளன.

விபச்சாரம் செய்யும் பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் வன்முறைகள் அதிகரித்து வருவதும்.. பெண்கள் விபச்சாரத்துக்காக கடத்தி வரப்படுவதும்.. நெதர்லாந்து அரசுக்கு தலையிடியாக மாறியுள்ளது.

இந்தக் கட்டுரையில்.. விபச்சாரம் மூலம் பெறப்படும் பணத்தை.. Dirty money என்று உச்சரித்திருக்கும் பிபிசி.. விபச்சாரத்தின் விளைவுகள்.. சமூகப் பாதிப்பு நோக்கி இட்டுச் செல்வதாக எழுந்துள்ள கவலையையும் சுட்டிக்காட்டியுள்ளது.

விபச்சாரம் உல்லாசப்பயணிகளைக் கவர என்று அம்ஸ்ரடாம் போன்ற மேற்குலக நகரங்களில் பெண்களுக்கு முதலீடில்லாத வியாபாரமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணையில் உள்ள காட்சி மனைகளில் நிர்வாணமாக விபச்சாரிப் பெண்கள் காட்சியளிப்பராம். அதற்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 யூரோக்கள் அறவிடப்படுகிறது. பெண்கள் போகப் பொருளா என்று கேள்வி கேட்டு முழக்கும் பெண் உரிமையாளர்கள்.. பெண்கள் தாங்களாகவே தங்களை போகப்பொருளாகச் சித்தரிப்பது குறித்து.. வெட்கப்பட வேண்டியதும் இந்த இடத்தில் தான். *** தணிக்கை

நெதர்லாந்து அரசின் இந்தத் திடீர் முடிவை விபச்சாரிப் பெண்களுக்கு என்றுள்ள சங்கம் கண்டித்துள்ளதுடன்.. இது இத்தொழிலுக்கு அடிமைப்பட்டுப் போன விபச்சாரிப் பெண்கள் *** தணிக்கை விபச்சாரம் செய்ய வீதி மறைவுகளைத் தேடி ஓட வைக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலே நெடுக்காலபோவானால் இணைக்கப்பட்டிருக்கும் செய்தி BBC ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம் அல்ல என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். (அவரும் அது தமிழாக்கம் என்று எங்கும் குறிப்பிடவில்லை). முழுக்க முழுக்க தனிப்பட்ட பெண்கள் மீதான வெறுப்புணர்வுடனும், குறுகிய மனப்பான்மையுடனும் மிகவும் மட்டமான முறையில் தனிப்பட்ட கருத்தை பிபிசி இன் செய்தியை துணையாகக் காட்டி மேற்கண்ட கருத்து எழுதப்பட்டுள்ளதாகவே பார்க்கமுடிகிறது. கருத்துக்கள உறவுகளோ அல்லது வாசகர்களோ மேலுள்ளதை பிபிசியின் கருத்தாக தவறாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதாலேயே இது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அத்தோடு தவறான தகவல்கள் பலவும் புகுத்தப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

அது ஒருபுறமிருக்க அம்ஸ்ரர்டாம் நகரில் இடம்பெறும் பாலியற் தொழில் தொடர்பாக மேலெழுந்தவாரியாக பெண்களை மிகமட்டமாக எந்தவிதப் பின்னணியும் அறியாது அல்லது பின்னணியை மறைத்து விமர்சிக்கிற தன்மை மிகவும் தவறானது.

பிபிசி இணையத்தளத்தின் குறிப்பிட்ட அந்த ஆங்கிலச் செய்தியோடு தொடர்புடைய மேலும் பல செய்திகள் அங்கு உள்ளன. ஆர்வமிருப்பவர்கள் வாசித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவற்றுக்கான இணைப்புகள் இதோ ...

Dutch brothels take city to court

How the Dutch protect their prostitutes

Crackdown on Amsterdam sex clubs

Dutch police plea to sex clients

பெண்கள் தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்

பெண்கள் இத் தொழிலில் பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உலகின் பல பகுதிகளில் இருந்தும்.. பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்ய ஓடி வருகின்றனர்.

கடத்தப்பட்டும், கட்டாயப்படுத்தியும் தான் இத்தொழில் பலர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முதலீடில்லாமல் தொழில் செய்ய ஓடிவருகிறார்கள் என்று எதனை ஆதாரம் காட்டி சொல்கிறீர்கள்?

விபச்சாரம் செய்யும் பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் வன்முறைகள் அதிகரித்து வருவதும்..

பெண்களால் அங்கு வன்முறை அதிகரித்து வருவதாக பிபிசி செய்தியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. வாடிக்கையாளர்களாலும் தரகர்களாலும் வன்முறைகள் நிகழ்வதற்கான சாத்தியங்களே அங்கு அதிகம்.

பெண்கள் விபச்சாரத்துக்காக கடத்தி வரப்படுவதும்.. நெதர்லாந்து அரசுக்கு தலையிடியாக மாறியுள்ளது

இதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

இது இத்தொழிலுக்கு அடிமைப்பட்டுப் போன விபச்சாரிப் பெண்கள் *** தணிக்கை விபச்சாரம் செய்ய வீதி மறைவுகளைத் தேடி ஓட வைக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்

பிபிசி செய்தியில் இப்பிடி ஒரு தகவல் குறிப்பிடப்பட்டதாக எனது மிகக் குறைவான ஆங்கில அறிவுக்கு புலப்படவில்லை. பின்வருமாறுதான் குறிப்பிட்டிருந்தார்கள். அதுகூட பிபிசியின் எச்சரிக்கையல்ல. பால்வினைத் தொழிலாளர் ஒன்றியத்தின் சார்பாக Metje Blaak என்பவர் கூறிய கருத்து:

"If the windows close down, women who are being exploited will be hidden somewhere else where union representatives and health workers can't make contact with them," she said.

அம்ஸ்ரர்டாம் நகரம் இரண்டு விடயங்களுக்கு பிரபல்யமானது. ஒன்று: "பாலியல் தொழில் காட்சி அறை" (Red Light Area). இரண்டு: போதைப் பொருள். இரண்டும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை (legal). இதன் காரணமாக உல்லாசப் பயணிகளை இது பெரிதும் கவர்ந்தீர்த்துள்ளது.

இங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் நிறையப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற கருத்து தவறானது. கண்ணாடி அறைகளில் காட்சிப் பொருட்கள் போன்று இவர்கள் முழு நிர்வாணமாகவோ, அரை நிர்வாணமாகவோ நிற்பார்கள். நாம் சனி ஞாயிறுகளில் கடைகள் மூடப்பட்ட பின்னர் வீதியில் நடந்து செல்லும் போது கண்ணாடிகளூடாக காட்சிக்கு வைத்திருக்கும் உடைகளை பார்த்துச் செல்வோம் அல்லவா? அது போன்று இங்கு பெண்கள் காட்சிப் பொருளாக நிற்பார்கள். இந்த வீதியால் செல்வதற்கோ அல்லது அவர்களைப் பார்த்துச் செல்வதற்கோ எதுவித கட்டணமும் அறவிடப்படுவதில்லை. உள்ளே செல்வதற்கும் பாலியல் உறவு கொள்வதற்கும் தான் பணம் அறவிடப்படுகின்றது. அதேநேரத்தில் இந்தப் பணம் நேரடியாக உரிய பெண்களிடம் சேர்வதில்லை. இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்களிடமே பணம் சேர்கிறது. கண்ணாடி காட்சி அறைகளுக்குள் நிற்கும் இவர்கள் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். ஐரோப்பாவின் ஏழை நாடுகளிலிருந்து வேலைக்கென்று அழைத்து வரப்பட்டு இப்படி பாலியல் தொழில் ஈடுபடுத்தப்படுபவர்களே அதிகம். அம்ஸ்ரர்டாம் நகரின் இந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தால் தெரியும் ஆண் தரகர்கள் எப்படி பெண்களை "சந்தைகளில் மரக்கறி மீன் போன்றவற்றை கூவி விற்பதுபோல்" வியாபாரம் செய்கிறார்கள் என்று.

உண்மையில் சொல்லப்போனால் விற்பவரும் வாங்குபவரும் ஆண்களாக இருக்க வெறும் பொருளாகவே பெண் கையாளப்படுகிறாள் (பெரும்பாலும்). அடிமைகள் போன்றே இவர்களும்! வெளியில் பார்க்க ஆடம்பரமாகவும் அழகாயும் தோன்றி உல்லாசப் பயணிகளைக் கவரும் இதன் பின்னணி மிகக் கொடூரமானது.

பாலியல் தொழில் "தாமாகவே" ஈடுபடுகிற பெண்களும் இருக்கிறார்கள். அதற்கான காரணங்களும் பல உண்டு. அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவே. பாலியல் தொழில் செய்யும் பெண்களால் தான் ஆண்கள் அவர்களை நாடிச் செல்கிறார்கள் என்ற வாதம் மிகவும் கீழ்த்தரமானது. இது எப்படியென்றால் மதுபானமிருப்பதால் தான் நாம் குடிக்கிறோம், சிகரெட் இருப்பதால் தான் நாம் புகைக்கிறோம் என்பது போல் உள்ளது. உண்மைதான். அவை இருப்பதால் தான் நீங்கள் இவற்றை செய்கிறீர்கள். ஆனால் அவையொன்றும் தாமாக உருவானவையல்ல. மனிதரால் உருவாக்கப்பட்டவை. வியாபாரத்துக்காக உற்பத்தி செய்யப்பட்டவை. உருவாக்குவதும் மனிதர் அனுபவிப்பதும் மனிதர் ஆனால் குறைமட்டும் அந்தப் பொருட்கள் மீது. இதேபோன்று தான் இந்தப் பாலியல் தொழிலும்.

ஆணை மையப்படுத்திய வியாபார உலகத்தால் உற்பத்தி செய்யப்படுபவர்களே அல்லது உருவாக்கப்படுபவர்களே இந்த பாலியற் தொழிலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் பெண்கள். வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் கொட்டித் தீர்ப்பதற்காக இப்படியான செய்திகளைப் பயன்படுத்தாமல் சமூகக் கண்ணோட்டத்தோடு அதன் பின்னணி பற்றி அறிந்துகொள்வதும் ஆராய்வதும் தான் அக்கறையுள்ளவர்களின் செயற்பாடாக இருக்கமுடியும். சும்மா மேலெழுந்தவாரியாக ஆண்களையோ பெண்களையோ தூற்றி மகிழ்வதால் தனிப்பட்ட முறையில் இன்பங்காணலாம். ஆனால் சமூகத்துக்கு பயனுள்ளதாக அது இருக்காது.

பால்வினைத் தொழில் தொடர்பாக சந்திரவதனா அக்கா முந்தி 2002 இல் எழுதிய கட்டுரை:

பால்வினைத் தொழில்

- சந்திரவதனா -

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது.

தற்போது இந்த 21ம் நூற்றாண்டில் வெளிப்படையான அதாவது அங்கீகாரத்துடனான விபச்சாரமும், அங்கீகாரமற்ற அனுமதியில்லாமல் செய்யப்படும் விபச்சாரமும் மிகவும் மலிந்து கொட்டிக் கிடக்கின்றன.

பின்லாந்தில் விபச்சாரம் தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை. இங்கு யேர்மனியில் பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன் படுத்தப் படுகின்றன.

இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.

இந்த முதலாவது வகையினரில் பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக் கழகப் பிள்ளைகளும் அடங்குவர். அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் பொக்கற் மணி போதாத பட்சத்திலும், படிப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத பட்சத்திலும் - வேறு வேலைகள் செய்வதை விட இந்த வேலையில் சுலபமாகப் பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்பது இவர்கள் கருத்து. இவர்கள் பெரும்பாலும் வீதிகளின் ஓரங்களில் காத்து நின்று, தம்மை இனம் காட்டுவார்கள். இவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதை விட வசதியான வாழ்க்கைக்காக பாடசாலை விடுமுறைக்கு உல்லாசப் பயணிகள் நிறைந்த பணக்கார நாடான சைப்பிரசுக்குச் சென்று பால்வினைத்தொழில் செய்து சம்பாதித்து வருவார்கள்.

இரண்டாவது வகையினர் கூடுதலாக போலந்து, செக்கொஸ்லொவோக்கியா, உக்ரையின் போன்ற நாடுகளிலிருந்து தரகர்களால் கடத்திக் கொண்டு வரப்பட்டு கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

இப்படி கடத்தி வரப் படுபவர்கள் விரும்பினால் கூட மீள முடியாத படி, துப்பாக்கி முனையிலும், குண்டர்கள் மத்தியிலும் காவல் வைக்கப் பட்டுத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் சொற்பமே. இவர்களின் உடலுக்காகக் கிடைக்கும் பணத்தில் 70 வீதத்தைத் தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மிகுதி 30 வீதமே இவர்களிடம் கொடுக்கப் படுகிறது.

இது ஒரு துன்பியல் நிறைந்த நரக வாழ்க்கை. கட்டாயத்தின் பேரில் ஒருத்தி தன் உடலை ஒருவனின் இச்சைக்கு இரையாக்க பெண்களை நாடு கடத்தி விற்கும் இடைத் தரகரும், பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து இச்சை தீர்க்க வரும் ஆண்களுக்கு பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டிப் பேரம் பேசி சிலமணி நேரங்களுக்கோ அல்லது ஒரு இரவுக்கோ வாடகைக்கு விடும் தலைமைத் தரகரும் அதில் பணம் சம்பாதிக்கும் அவலம் மிகவும் கொடுமையானது.

அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாலிப வயதுப் பெண்கள் நினைக்கிறார்கள் யேர்மனி பணக்காரநாடு. அங்கு போனால் நல்ல வேலையுடன் வசதியாக வாழலாமென்று. அதனால் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களைத் தேடி யேர்மனியின் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவருக்கான வேலைக்கோ, அல்லது பிள்ளைகளைப் பராமரிக்கும் பேபிமைண்டர் வேலைக்கோ அல்லது இது போன்ற இன்னும் வேறு வேலைகளுக்கோ விண்ணப்பிக்கிறார்கள்.

இது கூடுதலாகத் எமது தாயகத்திலிருந்து சவுதி போன்ற கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் எமது தமிழ் சிங்களப் பெண்கள் செய்வது போன்ற ஒரு ஒப்பந்தத்துடனான ஒரு வருட அல்லது இன்னும் கூடிய காலங்களுக்கான வேலையாகவே கருதப் படும்.

ஆனால் தாமும் பணம் சம்பாதிக்கும் காலம் ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இப்படி விண்ணப்பித்து வேலைக்கென யேர்மனிக்கு வந்து சேரும் வாலிபவயதுப் பெண்களுக்கு யேர்மனியில் காத்திருப்பது ஒரு பயங்கரமான, அருவருப்பான துயரம் தோயந்த எதிர்காலமே!

கூடுதலாக பேர்லினிலோ அல்லது ஹம்பேர்க்கிலோ தான் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கு சென்ற பின்தான் அவர்கள் கட்டாய பால்வினைத் தொழில் செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு விளங்கப் படுத்தப் படும். அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் பலாத்காரப் படுத்தி பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுவார்கள். இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை. கடத்தி வந்தவர்களைக் காவலில் வைத்திருப்பது போலவே இவர்களும் தப்பியோட முடியாத படி துப்பாக்கி முனைகளும் குண்டர்களும் காவலுக்கு நிற்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இப் பெண்கள் தப்பியோடினால் அவர்களது தாய்நாட்டில் இருக்கும் அவர்களது பெற்றோர்களும் சகோதரர்களும் துன்புறுத்தப் படுவார்கள், அல்லது கொலை செய்யப்படுவார்கள் என்று சொல்லிப் பயமுறுத்தப் படுவார்கள். இந்திய தமிழ் சினிமாக்களில் வரும் பிளாக்மெயில் தனமான வில்லத்தனம் போலவே அந்தப் பயமுறுத்தல் இருக்கும்.

இந்தத் தரகர்கள் கொடுக்கும் இப்படியான அதீதமான அழுத்தங்களினால் பொலீசிடம் போய் முறையிடும் துணிவு கூட இந்தப் பெண்களுக்கு இல்லாது போய்விடும்.

அதுமட்டுமல்லாமல் இந்த விபச்சார விடுதிகளை நடாத்துபவர்களின் முறைப் படி, தலைமைத் தரகரால் அப் பெண்கள் சில இரவுகிளப்புகளுக்கும் அரைகுறை ஆடைகளுடனோ அல்லது ஆடைகளே இல்லாமலோ நடனமாட கட்டாயமாக அனுப்பி வைக்கப் படுவார்கள்.

பல பெண்கள் உக்ரையின், லிற்றவ்வன், லெற்லாண்ட், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விசாவுக்கென ஏஜென்சியிடம் 750யூரோ கொடுத்து எதிர்காலத்தைப் பற்றியதான பலத்த நம்பிக்கையுடன் இங்கு யேர்மனிக்கு வந்து சேருகிறார்கள். ஆனால் இங்கே வந்ததும் தான் தாம் ஏஜென்சியால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து தெரிந்து நம்பிக்கைகள் எல்லாம் தவிடு பொடியாக மனமுடைந்து, ஆனாலும் விடுதலையோ அதை விட்டு வெளியேற ஒரு வழியோ தெரியாமல் துவண்டு போகிறார்கள்.

இவர்களைக் கூட்டி வந்த தரகர்கள் இவர்களை விபச்சார விடுதிக்கு விற்பனை செய்வார்கள். இவர்களின் பெறுமதி சிலசமயங்களில 25000யூரோ வரை கூட உயர்ந்திருக்கும். உக்ரையின் நாட்டுப் பெண்கள் அழகானவர்களாம். அவர்கள்தான் அதிகம் விலை போவார்கள்.

இடைத் தரகர் அந்தப் பணத்தை முக்கிய தரகரிடம் பெற்றுக் கொண்டு போன பின்னர் அந்த முக்கிய தரகர் தான் கொடுத்த 25000யூரோவையும் இந்தப் பெண்களிடமே பெற்றுக் கொண்டு விடுவார். அதாவது இந்தப் பெண்கள் தமது உடலை இன்னொரு ஆடவனின் இச்சைக்கு இரையாக்கும் போது வரும் பணத்தில் அந்த 25000யூரோ கணக்கு வைத்துக் கழிக்கப் படும். எப்படியானதொரு கொடுமை இது என்பது எத்தனை பேருக்குப் புரியும்.

புரிந்த ஆண்கள் கூட தமது இச்சை தீர்ந்தால் போதுமென்ற எண்ணத்துடன் இப்படியான சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்று இந்தக் கொடுமைகளுக்கு உரமும் வலுவும் கொடுப்பது எத்துணை அவலமானது. யேர்மனியில் மட்டும் ஒரு நாளைக்கு பத்துஇலட்சம் ஆண்கள் விலைமாதர்களிடம் போய் வருகிறார்களாம்.

இதே நேரம் எல்லாப் பெண்களுமே கடத்தப் பட்டு பலாத்காரத்தின் பேரில்தான் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. போலந்து, செக்கொஸ்லொவோக்கியா போன்ற நாட்டுப் பெண்களில் பலருக்கு இங்கு யேர்மனியில் வேலை என்ற பெயரில் என்ன காத்திருக்கிறது என்பது தெரியும்.

ஆனாலும் வறுமை, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் போன்ற காரணங்களால் யேர்மனிக்கு வந்து இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். சிலகாலங்களுக்கு உழைத்து விட்டு, அந்தப் பணத்துடன் தாய் நாடுகளுக்குத் திரும்பி நல்லதொரு வசதியான வாழ்வைத் தொடங்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை நிறைந்த ஆசை. அதற்காக ஏஜென்சிக்கு 750யூரோ கொடுத்து சட்டத்துக்கு முரணாக விசா பெற்று அவர் மூலமாகவே இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்து பால்வினைத் தொழிலை பணத்துக்கான ஒரு தொழிலாகச் செய்கிறார்கள்.

இப்படித் தாம் விரும்பி இத்தொழிலில் ஈடுபடும் கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் 30 வீதமானவர்கள் மட்டுமே! மிகுதி 70 வீதமான கிழக்கு ஐரோப்பியப் பெண்களும் ஏஜென்சிமார்களால் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டு விபச்சார விடுதி நடத்துனர்களாலும், இரண்டாவது தரகர்களாலும் கட்டாய பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது யேர்மனிய அரச நிறுவனங்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்த இரண்டாவது வகைப் பால்வினைத்தொழில் செய்யும் பெண்களில் தாய்லாந், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாட்டுப் பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆண்களால் ஏமாற்றப் பட்டே இங்கு அழைத்து வரப் படுகிறார்கள். ஐரோப்பிய ஆண்கள் இந்தக் கொடுமையைச் செய்வதற்கென்றே உல்லாசப் பயணிகளாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். அங்கு வறிய அழகிய பெண்கள் மேல் காதல் கொண்டது போல நடித்து, திருமணம் செய்வதாகப் பொய் சொல்லி இங்கு கூட்டி வந்து பால்வினைத் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள். இந்த ஆண்களில் பெண்களை இங்கு கொண்டு வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள். சொந்தமாகவே விபச்சாரவிடுதி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை விட பெண்களை ஏமாற்ற முடியாத பட்சத்தில் கடத்தியும் கொண்டு வருகிறார்கள். கடத்தலுக்கு இடைத்தரகராக நின்று உதவி செய்பவர்கள் பெரும்பாலும் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்களாகவே இருக்கிறார்கள்.

சீனாவைச் சேர்ந்த ஒரு விலைமாது சொல்கிறார். "நான் எனக்குப் 17 வயதாக இருந்த போது எனது ஒன்று விட்ட சகோதரியுடன், வேலை எடுத்துத் தருவதாகச் சொன்ன ஒரு உறவு மாமாவுடன் பஸ் ஏறினேன். நான்கு மணித்தியாலப் பயணம் என்றார் மாமா. ஆனால் நான்கு நாட்கள் காடுகள் மேடுகள் கடந்த பயணம் அது. அது கடத்தல் என்று தெரிய முன்னமே பயத்தில் வீடு திரும்ப மன்றாடினேன். மாமா விடவில்லை. பர்மா எல்லையில் நாமிருவரும் விலைபேசப் பட்டோம். அவர்கள் எம்மை ஒரு சட்டைத்துணி போல, ஒரு ரவிக்கை போல ஆராய்ந்து பார்த்தார்கள். கன்னி கழியாமல் இருக்கிறோமா என்பதைக் கூட கவனமாக ஆராயந்தார்கள். இப்போ நான் இந்த வாழ்வில் இருந்து மீளமுடியாதவளாகி விட்டேன். " என்று.

2002 மாசி பிற்பகுதியில் பேர்லினில் அங்கீகாரம் பெற்ற ஒரு விபச்சாரவிடுதியில் ஏறக்குறைய 1000 வெளிநாட்டுப் பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதும், அவர்களால் அவர்களை வாடிக்கையாளர்களிடம் வாடகைக்கு விடும் தலைமைத் தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் பெண்கள் பாதிக்கப் பட்டவர்களாகவே கண்டு கொள்ளப்பட்டார்கள்.

சிலபெண்கள் - இவர்களைப் பெண்கள் என்று சொல்வதை விட சிறுமிகள் குழந்தைகள் என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு இளம் வாலிப வயதுப்பெண்கள் இவர்கள். தரகர்களிடம் முரண்படும் சமயங்களில் தரகர்களால் அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள்.

பேர்லினில் இந்த வருட பெப்பரவரி மாத இறுதியில் ஒரு ரஷ்ய இளநங்கை மிகவும் கொடுமைப் படுத்தப் பட்ட நிலையில் பொலீசாரால் விடுவிக்கப் பட்டிருக்கிறாள். இவளை 3 ரஷ்யர்கள் 8மணி நேரமாகத் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அந்த ரஷ்யர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாளாம். அதைக் கொண்டாடு முகமாகவே அந்த இளநங்கை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறாள்.

எல்லோரும் நினைப்பது போல போலந்து நாட்டையோ ரஷ்ய நாட்டையோ சேர்ந்த தரகர்கள்தான் பெண்களை கட்டாய பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலான விபச்சார விடுதிகளின் சொந்தக் காரர்களும், தலைமைத் தரகர்களும் யேர்மனியர்களாகவே இருக்கிறார்கள். ரஷ்சியர்கள் அனேகமாக இடைத் தரகர்களாகத்தான் இருக்கிறார்கள்.

விபச்சார விடுதிகளிலும் தரகர்கள் மத்தியிலும் பெண்கள் கடைச்சரக்குகளாகத் தான் பாவிக்கப் படுகிறார்கள். இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் குறைவானதே. சராசரியாக அரைமணித்தியாலத்துக்கு ஒரு அறைக்கு 50யூரோ என்றே வசூலிக்கப் படுகிறது. இதில் அந்த அரைமணி நேரமும் யாரோ ஒரு காமுகனின் இச்சைக்கு எந்த உணர்வுகளுமின்றிய ஒரு ஜடம் போல தன் உடலை பலியாக்கிய பெண்ணுக்குக் கிடைப்பது வெறும் 15யூரோ மட்டுமே.

கூடுதலான பெண்கள் தமக்குக் கிடைக்கும் இப்பணத்தைச் சேமிக்கிறார்கள். சில பெண்கள் இதைத் தாய் நாட்டில் வறுமையில் வாழும் தமது தாய்தந்தையருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை பெற்றோருக்கு அனுப்புவதைத் தவிர்த்து சேமிக்க வேண்டுமென தலைமைத் தரகர்களால் வற்புறுத்தப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு யேர்மனிய ஆணை மணமுடிக்கும் பட்சத்தில்தான் விசாப் பிரச்சனையின்றி தொடர்ந்தும் யேர்மனியில் வாழ்வதற்கான வாய்ப்பும், இவர்களின் உடல்கள் மூலம் தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கிறது.

ஒரு விலைமாதை திருமணம் செய்து கொள்ள ஒரு யேர்மன் ஆண் 7500யூரோவை எதிர்பார்க்கிறான். அப்பணத்தை இப்பெண்களே சேமித்து, ஒரு யேர்மனிய ஆணைத் திருமணம் செய்து, தமக்கு உழைத்துத் தர வேண்டுமென இவர்கள் தரகர்களால் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். இது ஒரு அடிமைத் தனம் போன்றதுதான். முற்காலத்தில் மனிதர்கள் விற்கப் பட்டு அடிமைகளாக வாழ்ந்தது போன்றுதான் இன்றைய விலைமாதர்களும் வாழ்கிறார்கள். இவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் தரகர்களால் மிதிக்கப் படுகிறார்கள். தரகர்களால் மட்டுமல்ல. உடலுறவு பணத்துக்காக என்பதால் இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்ன செய்தாலும் வாய் பேசாது வலிகளைத் தாங்க வேண்டிய அவலத்திலும் இருக்கிறார்கள். எந்த உண்மையையும் வெளியில் சொல்ல தைரியமில்லாத படி அச்சப் படுத்தியே வாழ வைக்கப் படுகிறார்கள்.

இந்த விலைமாதர்கள் மீது அங்கு வந்து போகும் வாடிக்கையாளர்களில் யாருக்காவது விருப்பமோ காதலோ வந்தால், விலைமாதின் வயதுக்கும், உடல்வாகுக்கும், அழகுக்கும் முக்கியமாக அவளால் விடுதிக்கும் தரகருக்கும் வரும் வருமானத்துக்கும் ஏற்ப பேரம் பேசப்பட்டு, அவள் வாடிக்கையாளருக்கு விற்கப் படுவாள். அவள் தன்னை ஒரு கடைச்சரக்காக, அழுக்குத் துணியாக உணர்ந்து கொண்ட போதும், அவளின் பெறுமதி பல்லாயிரக்கணக்காக இருக்கும். அவளின் இந்தப் பெறுமதி 25000யூரோ வைக் கூடத் தாண்டியிருப்பதாக பேர்லினைச் சேர்ந்த பெண்கள் சங்கத்துக்கான காரியதரிசி Helga Korthaase சொல்கிறார்.

இவர்களில் ஓரிருவர் வாடிக்கையாளர்களால் நியமாகவே காதலிக்கப் பட்டு விடுதலை பெற்று குடும்பம் குழந்தையென்று வாழும் நிகழ்வுகளும் அபூர்வமாக நடந்துள்ளன.

இந்த வருட ஆரம்பத்தில் விலைமாதர்கள் தமது பால்வினைத்தொழிலை பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றதொரு சட்டம் யேர்மனியில் அமுல் படுத்தப் பட்டது. பதிவு செய்வதால் அவர்களுக்கான எல்லா காப்புறுதிகளும் செய்யப் பட்டு, அவர்களது எதிர்காலம் செழுமைப் படுத்தப் படும் என்பதும், பதிந்து பால்வினைத் தொழிலைச் செய்யும் போது தரகர்களினதும் விபச்சாரவிடுதி நடத்துனர்களதும் அவர்கள் மீதான அராயஜகம் தவிர்க்கப்படும் என்பதும் யேர்மன் அரசின் நம்பிக்கையான நன்நோக்கம்.

இந்தக் காப்புறுதிகளில் சுகவீனக்காப்புறுதி, பென்சன்காப்புறுதி... போன்ற பல நல்ல விடயங்கள் அடங்குகின்றன. ஆனாலும் இதுவரையில் எந்தப் விலைமாதரும் வந்து இதற்கான அலுவலகத்தில் தம்மைப் பதிந்து கொள்ளவில்லையென இவர்களுக்கான சட்டங்களுக்கும், தேவைகளுக்கும் பொறுப்பான Juanita Henning கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒரு விலைமாது கொடுத்த பதில் பத்திரிகைச் செய்தியாக வந்துள்ளது. அவர் கூறுவதாவது "பால்வினைத்தொழிலில் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதால் அந்த வேலை செய்பவர்களை மற்றைய வேலைகள் செய்பவர்கள் போலக் கருதாமல் ஒரு வர்த்தக நிறுவனம் வைத்திருப்பவர் போலவே கருதுகிறார்கள். அதனால் அதற்காக வசூலிக்கப் படும் வரிகளும் வர்த்தகர்களுக்குப் போலவேதான் வசூலிக்கப் படும். அதாவது ஒரு விலைமாது ஒருநாளைக்கு 250யூரோ உழைப்பதாகக் கணக்குப் போட்டு அதன் படியே எல்லா வரிகளும் காப்புறுதிகளுக்கான பணங்களும் அறவிடப்படும். இது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே நானுறுஆயிரம் விலைமாதர்களில் ஒருவர் கூடப் பதிந்து கொள்ள முன்வரவில்லை."

இந்த விபச்சாரம் யேர்மனியில் மட்டுந்தான் என்று சொல்வதற்கில்லை. உலகளாவப் பரந்து கிடக்கிறது. மேற்கு ஆபிரிக்காவில் உள்நாட்டுச் சண்டை காரணமாக கென்யா, சீராலியோன்... போன்ற நாடுகளிலிருந்து தப்பியோடி வரும் பெண்குழந்தைகள் அவர்களுக்கான உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு பின்னர் விலைமாதர்கள் ஆக்கப் படுகிறார்கள்.

பெண்குழந்தைகள் பாலுறவுக்கு இணங்கும் பட்சத்திலேயே அவர்களுக்கு உண்ண உணவும், நோய்களுக்கான மருந்தும் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் வேலைசெய்யும் 70 பேர்கள், இந்தத் துர்வேலையைச் செய்து கொண்டிருந்ததை UNO உதவி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

இதற்கு ஃபறீ ரவுணைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார். "இது ஒன்றும் புதிதல்ல. இங்கு உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுடன் பாலுறவு கொள்வதால்தான் அகதிகளாகத் தப்பியோடி வந்த சிறுமிகள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். " என்று.

UNHCR சொல்கிறது. "ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் முதலில் இராணுவத்தாலும் பின்னர் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் உணவு உடை மருந்து பாடசாலை போன்றவற்றுக்காக பாலுறவுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள். அதன் பின் விலைமாதர்களாக்கப் படுகிறார்கள்." என்று

பால்வினை என்னும்

பாழ் கிணற்றுக்குள்

வாழ்விழந்த பெண்கள்

மீள வழி உண்டா.........!

ஏழ்மையினாலும்

சில மனிதர்களின் இச்சையினாலும்

சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும்

ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!

இவர்கள் உள்ளங்களும்தான்!

சந்திரவதனா

யேர்மனி

May - 2002

Edited by இளைஞன்

மிகவும் நன்றி இளைஞன்,

தத்தமது குரூர எண்ணங்களுக்கு ஒரு வெகுசன ஊடகத்தை பயன்படுத்துவதைப் பார்க்கின்ற போது சிறிலங்கா அரசின் செய்திச் சேவையான லங்காபுவத்தின் ஞாபகம் தான் வருகிறது.

தெளிவாக்கியமைக்கு நன்றி

ஒரு குட்டிக் கதை.

:D முன்னொரு காலத்தில் இரு நண்பர்கள் தெருவழியே போகும் போது ஒரு கோவில் வந்தது. அந்த கோவிலில் ஒரு சன்னியாசி இருந்து மதபோதனைகள் செய்து கொண்டிருந்தார். அதில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு விபசாரம் செய்யும் பெண்னின் வீடும் இருந்தது. நண்பரில் ஓருவன் கோவிலுக்கு சென்று மதபோதனை கேட்டான். மற்றவன் விபசாரபெண்னிடம் சென்றான்.

சிறிது காலத்தின் பின் இருவரும் இறந்து விட ஒன்றாக எமனிடம் செல்ல வேண்டி ஏற்பட்டது.

எமன் தாசியிம் சென்றவனை சொர்க்கத்திற்கும் கோவிலுக்கு சென்றவனை நரகத்திற்கும் செல்ல உத்தரவிட்டார். எமன் சாமியிடம் காரணம் கேட்டதற்கு சாமி சொன்ன பதில். மதபோதனை கேட்க சென்றவர் கோவிலில் இருந்தாலும் அவரின் நினைவு முழுக்க விபசார பெண்ணிடமே இருந்தது. அதே வேளை விபசார பெண்ணிடம் சென்றவனின் நினைவு முழுக்க கோவிலும் மதபோதனை பற்றியுமே இருந்தது. :P

கதை முடிஞ்சு.

வாசகன் பிழிவு: நான் ஏன் மினக்கெட்டு பிழிவான் நீங்களே பிழியுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது வழமையான உங்களின் கருத்து. இதற்கு பதிலளிப்பது என்னைப் பொறுத்தவரை அவசியமில்லை என்று கருதி.. முக்கியமா சொல்ல வேண்டியதை நான் கையாண்ட ஆதாரத்துடன் சொல்லிவிடுகின்றேன்.

விபச்சாரிப் பெண்கள்..

1. பணத்துக்காக விபச்சாரம் செய்ய வருபவர்கள். (தமது உடலை முதலீடாக்கி வருபவர்கள்)

2. உடல் தேவைகளுக்காக விபச்சாரத்துக்கு வருபவர்கள். ( இவர்கள் எதனையும் முதலீடு செய்யத் தேவையில்லை)

3. வியாபார நோக்கில் கடத்தப்பட்டு விபச்சாரத்துக்குள் திணிக்கப்படுபவர்கள் ( இவர்களும் எதனையும் முதலீடு செய்யவில்லை தங்கள் வாழ்வைச் சீரழித்துக் கொள்ள செய்யப்படுகின்றனர்)

4. போதைப் பொருளுக்கு அடிமையான பெண்கள்.. விபச்சாரத்தில் ஈடுபடுதல் ( இவர்களும் எதையும் முதலீடு செய்வதில்லை)

இவர்கள் தவிர விபச்சாரத்துக்கு முதலீடு செய்து நுழையும் பெண்கள்.. இருந்தால்.. நீங்கள் ஆராய்ந்த வகையில்.. அதை தெளிவுறுத்துங்கள் அறிய ஆவலாக உள்ளோம்.

He also said that the trade involved exploitation and trafficking of women, and other kinds of criminal activity

What we do want is to get rid of the underlying criminality," he said

இந்த விபச்சார வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் வன்முறை.. அதில் சம்பந்தப்பட்டவர்கள்.. பெண்கள்.. வாடிக்கையாளர்கள்.. தரகர்கள்.. எனது குறிப்பில்.. தரகர்கள் விடப்பட்டிருப்பின் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டவில்லை என்பதையும்.. இந்த விபச்சார வர்த்தகத்தில்.. ஈடுபடுவர்கள் மத்தியில் உள்ள வன்முறைகள்..என்பது தெளிவாகிறது...! அதற்கான ஆதாரம் மேலே தரப்பட்டுள்ளது ஆங்கிலத்தில்.

பிபிசி ஒரு படி மேலே போய்.. "Dirty money " ஊத்தைப் பணம் என்று வேறு குறிப்பிட்டுப்பது கூட.. கண்ணுக்கும் ஆங்கில அறிவுக்கும் புலப்படவில்லையா...???!

அதுமட்டுமன்றி sex workers என்று குறிப்பிடாமல் Prostitutes என்று ஆங்கிலத்தில் கூட சற்றுக் கீழ்தரமாக நோக்கப்படும் சொல்கொண்டு.. எழுதி இருக்கிறார்கள். அது கூடப் புலப்படவில்லையா...???! எந்த இடத்திலும் பிபிசி இவர்களை sex workers (பாலியல் தொழிலாளர்கள் என்று கூறவில்லை. மாறாக விபச்சாரிப் பெண்கள் எங்கிறது)

இதன் அர்த்தம் என்ன...

But the city's authorities say the windows are a magnet for crime and money laundering. இது நகர சமூகத்துக்கான எச்சரிக்கையின்றி வேறென்ன...???!

வருவாய் வராமல் எதற்கு நிர்வாணமாக அலைய வேண்டும். பேசாமல் பொலீசில் போய் சரணடவைதால் மறுவாழ்வுக்குரிய திட்டங்களின் கீழ் இணைந்து உருப்படியான வாழ்வை தேடிக் கொள்ளலாமே.

பெண்களின் ஒத்துழைப்பில்லாமல்.. இந்த விபச்சார வியாபாரத்தை நடத்த முடியாது. ஆகவே விபச்சாரப் பெண்கள் மீது கருசணை காட்டுவது என்பது சமூக ஆரோக்கியத்துக்கு கேடான செயலாகவே நான் கருதுகின்றேன். இவ்வகைப் பெண்களுக்கு குறித்த தொழிலை விட்டு வெளியேற போதிய சந்தர்ப்பங்கள் இருந்தும்.. அவர்கள் அதில் ஈடுபடுகின்றார்கள் என்றால்... அதன் நோக்கம் என்ன...???!

Edited by nedukkalapoovan

எனது கருத்து நெதர்லாந்து அரசு அந்த இடத்திலிருந்து அந்த மனைகளை நீக்கி வேறு வர்த்தக நிலையங்களை உருவாக்குவது தொடர்பானது இல்லை. பிபிசி இன் செய்தியை எடுத்து அதனை பெண்கள் மீதான வெறுப்புணர்வுக்கு பயன்படுத்தியமை தொடர்பானதே. அந்த விடுதிகளை நீக்கும்போது, இதுவரை பால்வினைத் தொழில் புரிந்த அல்லது புரிய நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களுக்கு சரியான வழிகாட்டும் முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவேண்டியது அவசியம். தொழில்வாய்ப்புகள், மருத்துவ உளவியல் சிகிச்சைகள், சரியான முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான வழிகாட்டல்கள் போன்றவற்றிலும் அரசு கவனம் செலுத்தவேண்டும். அத்தோடு இதன் பின்னணியில் இயங்கும் அதாவது கடத்தல்களிலும் கட்டாயப்படுத்தல்களிலும் ஈடுபடுகிற ஆசாமிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து தண்டிக்கவேண்டும்.

இனி உங்களின் பதிவுக்கு...

பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்ய ஓடி வருகின்றனர்.

முதலீடில்லாமல் தொழில் செய்ய ஓடிவருகிறார்கள் என்று எதனை ஆதாரம் காட்டி சொல்கிறீர்கள்?

"பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்யலாம்" என்ற காரணத்தால் தான் ஓடோடி வருகிறார்கள் என்பதற்கே, எதனை ஆதாரம் காட்டி அந்தக் காரணத்தை முன்வைத்தீர்கள் என்று தான் கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் முதலீடு பற்றிக் கதைக்கிறீர்கள். பறவாயில்லை...

மேலதிகமா பிபிசி இன் இந்த தகவலையும் சேர்த்துக்கொள்ளலாம்:

Prostitutes hire the windows for around 100 euros (£70, $141) for part of the day. One window is usually used by several prostitutes a day.

விபச்சாரம் செய்யும் பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் வன்முறைகள் அதிகரித்து வருவதும்..

He also said that the trade involved exploitation and trafficking of women, and other kinds of criminal activity.

இந்த விபச்சார வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் வன்முறை.. அதில் சம்பந்தப்பட்டவர்கள்.. பெண்கள்.. வாடிக்கையாளர்கள்.. தரகர்கள்.. எனது குறிப்பில்.. தரகர்கள் விடப்பட்டிருப்பின் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சொல்வதுபோன்று பாலியல் தொழில் புரியும் பெண்களும் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் (bbc) சொல்லவில்லை. முக்கியமாக இதன் பின்னணியில் இருக்கும் தரகர்கள் உங்கள் செய்தி உருவாக்கத்தில் விடுபட்டுப்போனதும், பெண்களை அங்கே முன்னிலைப்படுத்தியதுமே உங்கள் பதிவின் மீது சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.

நெதர்லாந்து அரசின் இந்தத் திடீர் முடிவை விபச்சாரிப் பெண்களுக்கு என்றுள்ள சங்கம் கண்டித்துள்ளதுடன்.. இது இத்தொழிலுக்கு அடிமைப்பட்டுப் போன விபச்சாரிப் பெண்கள் *** தணிக்கை விபச்சாரம் செய்ய வீதி மறைவுகளைத் தேடி ஓட வைக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பிபிசி செய்தியில் இப்பிடி ஒரு தகவல் குறிப்பிடப்பட்டதாக எனது மிகக் குறைவான ஆங்கில அறிவுக்கு புலப்படவில்லை. பின்வருமாறுதான் குறிப்பிட்டிருந்தார்கள். அதுகூட பிபிசியின் எச்சரிக்கையல்ல. பால்வினைத் தொழிலாளர் ஒன்றியத்தின் சார்பாக Metje Blaak என்பவர் கூறிய கருத்து:

"If the windows close down, women who are being exploited will be hidden somewhere else where union representatives and health workers can't make contact with them," she said.

But the city's authorities say the windows are a magnet for crime and money laundering. இது நகர சமூகத்துக்கான எச்சரிக்கையின்றி வேறென்ன...???!

நான் இதுபற்றி ஒன்றும் கேட்கவில்லையே அல்லது கருத்துக்கூறவில்லையே? நான் கேட்காத ஒரு விடயத்தை கேட்டதாகக் கருதி பதில் தருவது என்ன நோக்கத்தில்?

வருவாய் வராமல் எதற்கு நிர்வாணமாக அலைய வேண்டும். பேசாமல் பொலீசில் போய் சரணடவைதால் மறுவாழ்வுக்குரிய திட்டங்களின் கீழ் இணைந்து உருப்படியான வாழ்வை தேடிக் கொள்ளலாமே.

பெண்களின் ஒத்துழைப்பில்லாமல்.. இந்த விபச்சார வியாபாரத்தை நடத்த முடியாது. ஆகவே விபச்சாரப் பெண்கள் மீது கருசணை காட்டுவது என்பது சமூக ஆரோக்கியத்துக்கு கேடான செயலாகவே நான் கருதுகின்றேன். இவ்வகைப் பெண்களுக்கு குறித்த தொழிலை விட்டு வெளியேற போதிய சந்தர்ப்பங்கள் இருந்தும்.. அவர்கள் அதில் ஈடுபடுகின்றார்கள் என்றால்... அதன் நோக்கம் என்ன...???!

இது வழமையான உங்களின் கருத்து. இதற்கு பதிலளிப்பது என்னைப் பொறுத்தவரை அவசியமில்லை என்று கருதி..

நன்றி வணக்கம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து நெதர்லாந்து அரசு அந்த இடத்திலிருந்து அந்த மனைகளை நீக்கி வேறு வர்த்தக நிலையங்களை உருவாக்குவது தொடர்பானது இல்லை. பிபிசி இன் செய்தியை எடுத்து அதனை பெண்கள் மீதான வெறுப்புணர்வுக்கு பயன்படுத்தியமை தொடர்பானதே. அந்த விடுதிகளை நீக்கும்போது, இதுவரை பால்வினைத் தொழில் புரிந்த அல்லது புரிய நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களுக்கு சரியான வழிகாட்டும் முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவேண்டியது அவசியம். தொழில்வாய்ப்புகள், மருத்துவ உளவியல் சிகிச்சைகள், சரியான முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான வழிகாட்டல்கள் போன்றவற்றிலும் அரசு கவனம் செலுத்தவேண்டும். அத்தோடு இதன் பின்னணியில் இயங்கும் அதாவது கடத்தல்களிலும் கட்டாயப்படுத்தல்களிலும் ஈடுபடுகிற ஆசாமிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து தண்டிக்கவேண்டும்.

இனி உங்களின் பதிவுக்கு...

"பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்யலாம்" என்ற காரணத்தால் தான் ஓடோடி வருகிறார்கள் என்பதற்கே, எதனை ஆதாரம் காட்டி அந்தக் காரணத்தை முன்வைத்தீர்கள் என்று தான் கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் முதலீடு பற்றிக் கதைக்கிறீர்கள். பறவாயில்லை...

மேலதிகமா பிபிசி இன் இந்த தகவலையும் சேர்த்துக்கொள்ளலாம்:

நீங்கள் சொல்வதுபோன்று பாலியல் தொழில் புரியும் பெண்களும் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் (bbc) சொல்லவில்லை. முக்கியமாக இதன் பின்னணியில் இருக்கும் தரகர்கள் உங்கள் செய்தி உருவாக்கத்தில் விடுபட்டுப்போனதும், பெண்களை அங்கே முன்னிலைப்படுத்தியதுமே உங்கள் பதிவின் மீது சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.

நான் இதுபற்றி ஒன்றும் கேட்கவில்லையே அல்லது கருத்துக்கூறவில்லையே? நான் கேட்காத ஒரு விடயத்தை கேட்டதாகக் கருதி பதில் தருவது என்ன நோக்கத்தில்?

நன்றி வணக்கம் :D

But the city's authorities say the windows are a magnet for crime and money laundering.

பிபிசியின் செய்தியில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்... இந்த விண்டோக்கள் மூலம் கிறிமினல் செயற்பாடுகளும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளும்... கவர்ந்திழுக்கப்படுகின்றன என்று. ஆனால் நீங்களோ.. விபச்சாரப் பெண்களை பிபிசி ஒன்றும் சொல்லவில்லை.. எங்கிறீர்கள். பிபிசி.. ஊத்தைப் பணம் என்று கூட விழிக்கிறது.விண்டோவில் என்ன தரகர்களா நிற்க்க வைக்கப்பட்டுள்ளனர். விபச்சாரிப் பெண்கள் தான் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். பிபிசி தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறது விண்டோக்கள் மூலம் கிரிமினல் வன்முறைகள் கவர்ந்திழுக்கப்படுகின்றன என்று. நீங்கள் இதைக் கவனத்தில் எடுக்காமல்.. உங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த பிபிசி அப்படி நேரடியாகச் சொல்லேல்ல எங்கிறீர்கள். பிபிசியின் இந்த வரிச் செய்தியின் அது நகர அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டிச் சொல்லி உள்ளதன் அர்த்தம் தான் என்ன...???! :o

நீங்கள் விபச்சாரிப் பெண்களின் செயற்பாடுகளை சமூகவிரோதமாக நோக்காமல்.. பெண்களின் பாலியல் தொழில் உரிமை என்பதாக நோக்குவதற்கு நானும் உடன்பட வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. நான் தெளிவாகவே சொல்கிறேன்.. விபச்சாரிகள் அது ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும்.. சமூகத்தில் இருந்து அவர்கள் அதைச் செய்வதில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு பல் வேறுநடவடிக்கைகளும் அவசியம் என்பது.

உலகில் எங்கும் விபச்சாரம் ஒரு கெளரவமான பிறவெசனல் தொழிலாக அங்கீகரிக்கப்படல்ல. அதில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளைக் காக்க முனைவதிலும்.. அவர்களை அதிலிருந்து விடுவித்து வேறு துறைகளில்... அவர்களின் சிறந்த தொழில் திறனையும்.. அவர்களின் மனித வலுவையும் பாவிக்க முற்படுவதே சிறந்தது. மனித சமூகத்துக்கு அவசியமானது. அந்த வகையில் விபச்சாரிகளை தூக்கித் தலைல வைச்சு விமர்சிக்கனும் என்ற தேவை எனக்கில்லை. பிபிசியின் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் எனது கருத்தை பிரதிபலித்தேன். அதில் உடன்படுவதும் விடுவதும் அவரவர் தனி கருத்துரிமை. :P

Edited by nedukkalapoovan

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்பா இந்த கா*வெறி????

ஆண்மகன்களே நீங்கள் எல்லாரும் ஒருத்தனுக்கு ஒருத்தி எண்டு இருந்தியள் எண்டால் இந்த பாலியல் தொழிலாளர்கள் எல்லாம் அடியோடு காணாமல் போவார்கள்? தப்பை நம்மிடம் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைசொல்வதா?

Edited by வலைஞன்
ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.