Jump to content

மதிவதனி மற்றும் துவாரகா வீர மரணம் - புகைப்பட ஆதாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2023 at 05:16, ரதி said:

இந்த படங்களில் இறந்து கிடப்பது துவாரகா இல்லை ..நான் தான் துவாரகா என்று வெளிக்கிட்டு இருப்பவர்களும் துவாரகா  இல்லை...சொல்ல போனால் .இறுதி யுத்தம் நடக்கும் போது அவ அங்கேயே  இல்லையாம்  
 

இதுதான் இந்தத் தொடரின் முக்கிய பகுதி! தேடிக்கண்டுபிடிக்கப்படுள்ளது. அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பவர்களிடமும் ஆதாரமில்லை, எங்கே இருக்கிறார்கள் என வெளியிட. அவர்கள் இல்லை என்பவர்களிடமும் ஆதாரமில்லை அவர்களுக்கு என்ன நடந்தது என்று நிரூபிக்க. அவர்கள், இருக்கிறார்கள் இல்லை என்பவர்கள் கூட முன்னுக்கு பின் முரணான செய்திகளையே வெளியிடுகிறார்கள் தங்கள் ஆதாயத்துக்காக. அவர்கள் உயிரோடு இருந்தால்; இருக்குமிடத்தில் நிம்மதியாக வாழட்டும் எங்கேயாவது ஒரு மூலையில்,  இல்லையென்றால்; அமைதியில் இளைப்பாறட்டும்விடுங்களேன்!  புலனாய்வுக்கு, தாங்கள் முன்பு வெளியிட்ட கருத்தில் சந்தேகம், தடுமாற்றம் ஏதும் ஏற்பட்டு விட்டதோ தெரியவில்லை? தமிழரிடமிருந்து அவர்களுக்கு என்ன நடந்தது என அறிய எதிர்பார்த்து இப்படி புரளி எழுப்பி விட்டிருக்கோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2023 at 00:46, ரஞ்சித் said:

இவனே நடேசன் அண்ணாவும் புலித்தேவன் அண்ணாவும் இன்னும் பலரும் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர் சவேந்திர சில்வாவினால் அடித்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதை முதன் முதலில் வெளியிட்டவன்.

 

இதை நீங்கள் நம்புகின்றீர்களா? சவேந்திர சில்வா விடுதலைப்புலிகள் தலைவரை தலையில் வாளால் வெட்டி கொன்றார் என முன்பு இலங்கை ஊடகம் ஒன்று எழுதியது. அதை நம்புவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இதை நீங்கள் நம்புகின்றீர்களா? சவேந்திர சில்வா விடுதலைப்புலிகள் தலைவரை தலையில் வாளால் வெட்டி கொன்றார் என முன்பு இலங்கை ஊடகம் ஒன்று எழுதியது. அதை நம்புவீர்களா?

நம்புவது கடிணமானதுதான். ஏனென்றால், தலைவர் சிங்களவரிடம் உயிருடன் பிடிபடக் கூடியவரல்ல என்பதை நான் நம்புவதால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் விடியலுக்கான ஏதுநிலையொன்றை உருவாக்க வேண்டுமென்றால் இரு விடயங்கள் தெளிவாக வேண்டும். ஒன்று தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் இல்லை என்பதைத் தமிழ் மக்கள் ஏற்றல். மக்களிடையேயான உரையாடல் வெளியை நோக்கினால் அந்த ஏற்புநிலையைத் தமிழினம் எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது.

இரண்டாவது புதிய தலைமையின் கீழ் தமிழினம் அணியமாவது. அல்லது காத்திரமான புதிய தலைமையொன்று உருவாகும்வரையான காலத்திற்கு அல்லது உலக நிலைமைகளில் ஏற்படும் சாதகமான வினைவுகளைப் பற்றிப்பிடித்து நகர்வதற்கான சூழல் உருவாகும்வரையான காலம்வரை இதுவரை தமிழினம் பெற்ற பட்டறிவின் ஊடான படிப்பினைகளையும், நிலைப்பாடுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதன் ஊடாக போராட்டத்தின் நியாயப்பாடுகளைத் திரவநிலையில் வைத்திருத்தல். இது ஒருவகையில் சிறியளவிலாயினும் நிகழ்வாதாகவே தோன்றுகிறது. இவற்றை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமெனில் தேசியத் தலைவரைத் தேடாத சூழலில், ஏனென்றால் இருந்தால் தலைவன் இல்லையென்றால் இறைவன் என்ற நோக்குநிலையில், அடுத்த கட்டமாகத் துவாரகா அவர்களை அரங்கிற்கு இழுத்துவருகிறார்கள். 
                  அது எந்தக் காலமாக இருக்கிறதென்றால்,  தியாக தீபம் லெப்டினட் கேணல் திலீபன்  அவர்களது நினைவுகளோடு தமிழினம் ஒன்றித்திருக்கும் காலமும் இந்தியத் துரோகத்தின் நினைவூட்டற்காலமுமாய் இருக்கும் காலத்தில் என்பதையும் கவனத்திற் கொள்ளாதிருக்க முடியுமா? தமிழினத்திடையேயான  ஒருமைப்பட்ட நிலையில்லாதபோதும், இதுபோன்ற நினைவுகளோடு ஒன்றிக்கும் நிலையொன்று உண்டு. இவற்றைச் சிதைப்பதால் பயனடைவோர் யார்? அவர்களே காலத்துக்காலம் புதிய கதைகளோடு தமிழினத்தின் உளவியலைச் சிதைக்கும் வேலைகளில் கச்சிதமாக ஈடுபட அதற்கு எமது ஊடகங்களும் வலையொளிகளும் வண்ணமிடுகின்றன. ஒருவேளை துவாராகா அவர்கள் வந்தால், அவரால் இந்தப் புலனாய்வுகளையும் துரோகங்களையும் கடந்து என்ன செய்ய முடியும்? 

தமிழினம் தனது விடுதலைக்காக யாராவது வருவாரா என்ற போக்கிலிருந்து விடுபட்டு, எனக்கான, எனது தேசியத்திற்கான, எனது இனத்திற்கான, எமது இருப்புக்கான விடுதலைக்கு நானே உழைக்க வேண்டும் என்று துணியாதவரை இதுபோன்ற போலிகள் எமது வேலிகளை மேய்ந்துகொண்டே இருக்கும்.

நன்றி 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.