Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

பாலஸ்தீனப் பயங்கரவாதத்தின் முகம்

HOW DOES THE MINISTRY ARRIVE AT A DEATH TOLL?

https://apnews.com/article/israel-hamas-war-gaza-health-ministry-health-death-toll-59470820308b31f1faf73c703400b033

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நன்னிச் சோழன் said:

பாலஸ்தீனப் பயங்கரவாதத்தின் முகம்

இஸ்ரேல் அறிக்கையின்படி அவர்களது முக்கியமான இடங்கள் sheffa வைத்தியசாலையின் கீழே உள்ளது. அவர்கள் தங்கும் இடமும் அங்குதான் உள்ளது. எல்லாமே வரை  படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள் . விரைவில் அங்கு ஒரு பெரிய அழிவு நடக்கபோகின்றது. பயங்கரவாதிகளின் மனித கேடயம்தான் அழிவுக்கு முக்கிய காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்+

3 minutes ago, Cruso said:

அது என்ன எப்படி என்று தெரியவில்லை. மெய்ய பொய்யா என்று. எது எப்படி ஆயினும் இஸ்ரேல் உள்ளே சென்றாப் பிறகு எல்லாம் தெளிஞ்சிடும். அப்போது பார்ப்போம், உண்மையா பொய்யா என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகனின் உடல்நிலை என் கண்முன்னால் மோசமடைகின்றது -சிகிச்சைக்கான வழிகள் இன்றி பரிதவிக்கும் காசா பெண் கதறல்

Published By: RAJEEBAN    28 OCT, 2023 | 06:59 AM

image

காசாவின் தென்பகுதியில் ரபாவில் வசிக்கும் அஸ்மாவின் பத்து வயது மகன் புற்றுநோயாளி.

மோதல்கள் ஆரம்பமான பின்னர் அவர்கள் ஐநாவின் பாலஸ்தீனியர்களிற்காக முகவர் அமைப்பின் முகாமில் தஞ்சமடைந்தனர் எனினும் மகனின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் வீடுதிரும்பியுள்ளனர்.

தனது மகனிற்கு அவசியமாக தேவைப்படுகின்ற மருந்துகளை சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில்  அஸ்மா கடும் நெருக்கடிகளையும் ஏமாற்றங்களையும்  எதிர்கொண்டுள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில் காசாவின் ஐரோப்பிய மருத்துவமனையிலிருந்து சிறுவனிற்கு மருந்துகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் காணப்பட்டன ஆனால் மருத்துவமனையில் மருந்துகள் மருத்துவபொருட்களின் எண்ணிக்கை வேகமாக குறைவடைவதால் அந்த மருத்துவமனை சிறுவனிற்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளது.

என் கண்முன்னால் எனது மகனின் உடல்நிலை மோசமடைவதை நான் பார்க்கின்றேன் என தாயார் பிபிசிக்கு  தெரிவித்தார்.

காசாவின் ஏனைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான வாய்ப்புகள் காணப்படலாம் ஆனால் அவர்களால் அங்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது நான் ரபாவில் வாழ்கின்றேன் இஸ்ரேல் வாகனங்களை இலக்குவைத்து தாக்குவதால் என்னால் காசாவிற்கு செல்ல முடியாது பொதுமக்களின் வாகனங்களை அம்புலன்ஸ்களை கூட தாக்குகின்றனர் என அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் காசாவிற்கான மின்சாரத்தை துண்டித்துள்ளதுடன் எரிபொருளை அனுப்ப மறுக்கின்றது.

இது அஸ்மாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது வீட்டிலிருந்த எனது மகனின் மருந்துகள் சில பழுதடைந்துள்ளன எங்களால் மருந்துகளை பாதுகாக்கவோ சேமிக்கவோ முடியாது ஒருவரிடம் சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்கள் உள்ளன நான் அவரிடம் மருந்துகளை கொடுத்துவைத்திருக்கின்றேன் ஆனால் அந்த வீடு மிகவும் தூரத்தில் உள்ளது நாங்கள் அங்கு செல்வது மிகவும் ஆபத்தான விடயம் என அவர் தெரிவிக்கின்றார். 

bbc

https://www.virakesari.lk/article/167915

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text

May be an illustration of map, helicopter, blimp and text

May be a doodle of crocodile and text

May be a doodle of text

May be a doodle of map and text

May be an illustration of text

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவிற்கான இண்டெர்நெட்டை இஸ்ரேல் முற்றாக துண்டித்த நிலையில், ஐ நா உடபட்ட உதவி அமைபுக்களிற்கு ஸ்டார்லிங் சட்டிலைட் மூலம் இண்டெர்நேட் வழங்க ஈலோன் மஸ்க் முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

இஸ்ரேல் அறிக்கையின்படி அவர்களது முக்கியமான இடங்கள் sheffa வைத்தியசாலையின் கீழே உள்ளது. அவர்கள் தங்கும் இடமும் அங்குதான் உள்ளது. எல்லாமே வரை  படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள் . விரைவில் அங்கு ஒரு பெரிய அழிவு நடக்கபோகின்றது. பயங்கரவாதிகளின் மனித கேடயம்தான் அழிவுக்கு முக்கிய காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

👆🏼திட்டமிட்டு இஸ்ரேலிய படைகள் மீது,  மருத்துவ நிலைய பெயர்பலகை அருகே நின்று கவிண் மூலம் கல்லடித்து, அதை பத்திரிகையாளரை கொண்டு படம் பிடித்து, ஏலவே தயாராக உள்ள மருத்துவ உதவியாளர்களிடம் சிகிச்சை எடுக்கும் பலஸ்தீன இளைஞன் என்கிறது ஒரு இஸ்ரேல் சார்ப்பு கணக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் நடைபெறும் பலஸ்தீன ஆர்ப்பாட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்லர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்.

இன்றைய பாலஸ்தீன ஆதரவு பேரணியில் துருக்கிய ஜனாதிபதி பேச்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம்- WHO தலைவர்

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வான்தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சில தினங்களாக பீரங்கிகள் மூலமாக காசாவில் சிறுசிறு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலால் காசாவில் உள்ள சுமார் 20 இலட்சம் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, மருத்துவ உதவிப்பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், காசாவில் பணியாற்றி வந்த உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மனிதாபிமான உதவிகள் செய்யும் பார்ட்னர்கள் ஆகியோர் உடனான தொடர்பை இழந்துவிட்டோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெ

காசாவில் உள்ள அனைத்து மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும். முழு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் யுனிசெப் தலைவர் ரஸல், “எங்களுடன் பணிபுரியம் சக அதிகாரிகள் உடனான தொடர்பை இழந்து விட்டோம். அவர்கள் பாதுகாப்பு விசயம் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/279007

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாசின் வான்படை தளபதி கொலை

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 21 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், காசாவில் ஹமாசின் வான்படை தளபதி இஸ்லாம் அபு ருக்பே கொல்லப்பட்டான் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் உளவு அமைப்பான ஷின்பெட் தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை ருக்பே நிர்வகித்து வந்தார்.

இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் மூளையாக செயற்பட்டது ருக்பே என விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த 14 ஆம் திகதி ஹமாஸ் விமானப்படையின் முந்தைய தளபதி முராத் அபு முராத் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/279039

  • கருத்துக்கள உறவுகள்+

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

காஸாவிற்கான இண்டெர்நெட்டை இஸ்ரேல் முற்றாக துண்டித்த நிலையில், ஐ நா உடபட்ட உதவி அமைபுக்களிற்கு ஸ்டார்லிங் சட்டிலைட் மூலம் இண்டெர்நேட் வழங்க ஈலோன் மஸ்க் முடிவு.

ஸ்டார் லிங்கை இவ்வாறு பயன்படுத்துவதை முடிந்தளவு எம்மிடம் உள்ள வளங்களை கொண்டு தடுப்போம் என்கிறது இஸ்ரேல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹமாஸ் செய்தது தவறுதான்.
அனால் அதற்கு பதிலாக பழிக்குப்பழி.....இரத்தத்திற்கு பதில் இரத்தம் தான் என மேற்குலகும் கூறினால் ஹமாஸ் செய்வதும் சரிதான்.

இந்த மேற்குலகு  மூன்றாம் உலகிற்கு மட்டும் மனித நேயங்களையும் மனிதவுரிமைகளையும் போதித்துக்கொண்டு  தன் விடயத்தில் போருக்கு போர் தான் பதில் என்றால் எப்படி பிரச்சனைகள் தீரும்?

சமாதான புறாக்களுக்கு சமாதானத்திற்கான வழி தெரியவில்லை. இனப்பிரச்சனைகளில் கூட தமக்கு சாதகமான தீர்வையே முன் வைக்கின்றார்கள். இன்றைய பலஸ்தீன விவகாரம் மேற்குலகின் கபட நாடகங்களை தோலுரித்து அம்மணமாக்கி விட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் மேற்கை பற்றி அதீத எதிர்பார்ப்போடு உள்ளீர்கள்.

தமது இராணுவத்தின் அழிப்பை குறைக்க, இரெண்டு ஜப்பானிய நகரங்களை தவிடு பொடியாக்கியவர்கள் மேற்கு.

இதை விட ஒரு யுத்த குற்றம் உலகில் இருக்க முடியுமா? இன்று வரை அதுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.

சர்வதேச ஒழுங்கில், நீதி, நியாயம், மனித உரிமை, ஜனநாயக விழுமியம், லொட்டு, லொசுக்கு எல்லாம் இரெண்டாம் பட்சம். இதே போலத்தான் இனங்களின் சுய நிர்ணய உரிமையும்.

பங்களாதேசில் சுய நிர்ணயத்தை ஆதரித்த இந்தியா, கஸ்மீரிலும், இலங்கையிலும் அதை முடக்க்கியது.

அதே போலத்தான் ரஸ்யாவும். அபகாசியா, தென் ஒசெசியாவின் சுய நிர்ணயத்தை அங்கீகரிக்கும், ஆனால் எம்மை அங்கீகரிக்காது.

நாடுகள் இந்த தத்துவங்களை தம் சுய நலனுக்கு ஏற்ப கையில் எடுக்கும், கைவிடும்.

இந்த கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஈழத்தமிழர் ஒரு அடி கூட முன் நகர முடியாது.

# வல்லான் வகுப்பதே (சர்வதேச) சட்டம், நடைமுறை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் மேற்கை பற்றி அதீத எதிர்பார்ப்போடு உள்ளீர்கள்.

மேற்குலக வாழ் மக்களும் அவர்கள் சார்பு பல கட்சிகளும் அன்றைய இன்றைய போர்களுக்கு எதிராகவே இருக்கின்றார்கள்.இன்றைய அரசுகளின் நேர்மையற்ற  விடயங்களுக்கு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றார்கள். அந்த வகையில் நானும் அவர்களில் ஒருவன்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகர ஆளுனரும் தனது கருத்தை தெருவித்துள்ளாராம்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகர ஆளுனரும் தனது கருத்தை தெரிவித்துள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

இப்படி போராடுபவர்களும் கூட தத்தம் சுய நலத்துடனே போராடுவர். ஈராக் சம்பந்தமாக போராடியோர், இலங்கைக்கு போராடவில்லை, இலங்கைக்கு போராடியோர், காஸாவிற்கு போராடவில்லை.

மிக சொற்பமானவர்களே போராடுவர். மிகுதி தம்பாட்டை பார்க்கும். ஏன் என்றால் இதுதான் நியதி என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியும்.

இல்லை என்றால் மேற்கில் எப்போதோ இஸ்ரேலை, இலங்கையை ஆதரிக்காத கட்சிகள் பதவிக்கு வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

பண பலமும் அரசியல் கொலைகளும் அரசியல் மிரட்டல்களும் இல்லையென்றால்.....

பல அரசியல் சரித்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும்....

அரபு வசந்தம் சவூதியிலும் ஜோர்டானிலும் வீசாமல் இருப்பது போல்....🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பண பலமும் அரசியல் கொலைகளும் அரசியல் மிரட்டல்களும் இல்லையென்றால்.....

பல அரசியல் சரித்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும்....

அரபு வசந்தம் சவூதியிலும் ஜோர்டானிலும் வீசாமல் இருப்பது போல்....🤣🤣🤣

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

————-

இன்னொரு விமானம் தாங்கி தாக்குதல் அணியான ட்வைட் ஐசின்கோவர் ஜிப்ரால்டர் நீரிணைய தாண்டி மத்திய தரை கடலினுள் உள்ளிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, goshan_che said:

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

 உங்களுக்கு  பக்காவான  பல அரசியல் சரித்திரங்கள்  தெரிந்திருப்பதால் தங்களின்  இந்த நழுவல் போக்கை வரவேற்கின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

 உங்களுக்கு  பக்காவான  பல அரசியல் சரித்திரங்கள்  தெரிந்திருப்பதால் தங்களின்  இந்த நழுவல் போக்கை வரவேற்கின்றேன். 🤣

இது நழுவல் போக்கு அல்ல. நீங்கள் மேலே சொல்லி இருப்பது ஒரு ஊகம்.

மேற்கு நாடுகள், ரஸ்யா, இந்தியா மேற்கொள்ளும் வெளிவிவகார தகிடுதத்தங்கள் மிக அரிதாகவே உள்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஈராக் ஆக்கிரமிப்பு, வியட்நாம் போல அரிதாக சிலதை தவிர்த்து ஏனையவற்றை இந்த நாட்டின் மக்கள் - மெளனம் சம்மதம் என்பதாக அங்கீகரித்தே உள்ளார்கள்.

இப்போ காஸாவை எடுங்கள், யூகேயில் உள்ள அத்தனை கட்சிகளும், ஏறக்குறைய ரிசியின் நிலைப்பாட்டில்தான் உள்ளன.

கான், யூசூப் போல சிலர் தசை ஆடினாலும், அரசியல் கட்சிகள் மத்தியில் அணுகுமுறையில் பெரிய மாற்றம் இல்லை.

மக்கள் நிலைப்பாடு கூட ரிசியின் நிலைப்பாட்டை அணுகியே. இல்லாமல் மக்கள் மத்தியில் ஒரு நிலைப்பாட்டு மாற்றம் வந்திருப்பின், ஏதாவது ஒரு கட்சி தன் நிலைப்பாட்டை அதை நோக்கி நகர்த்தி இருக்கும்.

இதை நான் - மக்கள் பெரும்பாலான சமயங்களில் உள்நாட்டு விவகாரங்களையே கவனத்தில் எடுக்கிறார்கள், வியட்நாம், ஈராக் போல ஒரு யுத்தத்தில் நாட்டை கொண்டு போய் மாட்டாதவரை - அவர்களின் தேர்தல் தீர்மானத்தில் வெளிவிவகாரம் பெரிய பாதிப்பை தருவதில்லை என்கிறேன்.

இதை நான் உலக அரசியல் சுய நலன் சார்ந்தது, அதில் யாரும் நியாயமாக நடக்க முடியாது என்பதை உணர்ந்த வாக்காளரின்  சிந்தனை தெளிவினால் அவர்கள் எடுக்கும் முடிவு என நம்புகிறேன் (யூகே தேர்தலில் நான் வாக்களிக்கும் போது வெளிவிவகாரத்தை கணக்கில் எடுப்பதே இல்லை) . 

நீங்களோ இல்லை, பணபலமும், அரசியல் மிரட்டலும், கொலையும் வாக்காளரை இப்படி நடக்க வைக்கிறன என்கிறீர்கள்.

இவை இரெண்டுமே உண்மைதான். உதாரணமாக பிரெக்சிற்றை ஒப்பேற்ற, அந்த வாக்கெடுப்பில் வெல்ல, ஒரு எம்பியை கொன்றார்கள், துருக்கி இணைய போகிறது என அரசியல் பயம் காட்டினார்கள், தேர்தல் விதிமுறையை மீறி பணத்தை சமூகதளங்களில் செலவழித்தார்கள்.

ஆகவேதான் - வெளிவிவகாரங்களில் மக்கள் அதிகம் தலையிடாமல் அதை அரசுகளை நடத்த விடுவதற்க்கும் நீங்கள் சொல்வது, அல்லது நான் சொல்வது இரெண்டுமே காரணமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

நம் இருவரின் வியாக்கியானமும் ஊகத்தின் பால்பட்டதே. இரண்டையும் நிறுவ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்லர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்.

இன்றைய பாலஸ்தீன ஆதரவு பேரணியில் துருக்கிய ஜனாதிபதி பேச்சு.

இவர்களே ஒரு பயங்கரவாத கூடடம். எப்படி மற்றயவர்களை (ஹமாஸ், ஐசிஸ், ஜிகாத் etc ) பயங்கரவாதிகள் என்று சொல்லுவார்கள். ஓட்டோமான் என்னும் பயங்கரவாத அரசு இவர்களின் கட்டுபாட்டில்தான் இருந்தது. மில்லியன் கணக்கான அர்மீனியர்களை கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்தவர்கள். இப்போதும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம்தான் நடக்குதென்று எர்டோகான் நினைக்கிறார். பாவம் மனுஷன். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Cruso said:

அப்படிப்பார்த்தால் உலகில் பல நாடுகள் பயங்கரவாதிகள்தானே (சங்கிலியன் உட்பட).

நவீன துருக்கி திறம் எண்டு இல்லாவிடினும் இஸ்லாமிய நாடுகளில் மிக முற்போக்கான நாடு. எர்டஹோன் கொஞ்சம் மதவாதமாக மாற்றி வைத்துள்ளார்.

காஸாவின் மத்தியில் இஸ்ரேலிய கொடியாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அப்படிப்பார்த்தால் உலகில் பல நாடுகள் பயங்கரவாதிகள்தானே (சங்கிலியன் உட்பட).

நவீன துருக்கி திறம் எண்டு இல்லாவிடினும் இஸ்லாமிய நாடுகளில் மிக முற்போக்கான நாடு. எர்டஹோன் கொஞ்சம் மதவாதமாக மாற்றி வைத்துள்ளார்.

ஆனாலும்  பயங்கரவாதிகளாக மாறி மில்லியன் கணக்கான அப்பாவி கிறிஸ்தவ ஆர்மீனியர்களை கொன்ற  இவர்களுக்கு இதை சொல்வதட்கு தார்மீக ரீதியில் எந்த தகுதியும் இல்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.