Jump to content

45 வயதில் வேலையை உதறிவிட்டு விரும்பியபடி வாழ விரும்பினால் இந்த ‘ஃபையர்’ உங்களுக்கு அவசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
45 வயதில் வேலையை உதறிவிட்டு விரும்பியபடி வாழ விரும்புகிறீர்களா?  இந்த ‘ஃபையர்’ உங்களுக்கு அவசியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா
  • பதவி, பிபிசிக்காக
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சில ஆண்டுகளாக நிதி சுதந்திரம் மற்றும் ஓய்வு பெறுதல் (Financial Independence and Retire Early - FIRE) இயக்கம் பெரியளவில் பிரபலமடைந்து வருகிறது.

பெரும்பாலான நாடுகளில், 55-60 வயது என்பது பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது பெரிய விஷயமில்லை. 40 - 45 வயதுக்குள் தேவையான பணத்தை சேமித்து நிதி சுதந்திரம் அடைவதும், பின்னர் வருமானத்திற்காக பணியைச் சார்ந்து இருக்காமல் சொந்த முதலீட்டின் மூலம் வாழ்க்கையை நடத்துவதே இந்த ஃபையர் கோட்பாட்டின் மையப்புள்ளி.

தனிப்பட்ட நிதித் திட்டமிடலை பொறுத்தவரை, வருமானத்தில் அதிகப்படியான தொகையை சேமித்து வைத்து செலவை குறைத்துக்கொண்டு வாழ்வது போன்ற யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஃபையர் கோட்பாட்டை பொறுத்தவரை எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு செலவுக்கும் இப்போதே சேமித்து வைக்க வேண்டும்.

இந்த புரட்சிகரமான மாற்றத்திற்குக் காரணம் என்ன? சராசரியாக முதலீடு செய்பவர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

 

ஃபையர் இயக்கம் எப்போது தொடங்கியது?

நிதி சேமிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கோட்பாட்டின் மீது 1980க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஜேக்கப் ஃபிஸ்கரின் ‘எர்லி ரிட்டயர்மென்ட் எக்ஸ்ட்ரீம்’ என்ற புத்தகம் ஃபையர் யோசனையின் மறுபரிசீலனையாகும்.

மேலும், விக்கி ராபின் எழுதிய 'உங்கள் பணம் உங்கள் வாழ்க்கை' புத்தகத்தில் இந்தக் கோட்பாடு குறித்து வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. புத்தகங்கள் தவிர, இந்தக் கோட்பாட்டுக்கு ஆதரவாகப் பலர் தங்கள் கருத்துகளை சமூக ஊடக வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக, இந்த கோட்பாட்டின்பால் ஈர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் 40 வயதுக்கு பிறகுதான் தொடங்குகிறது என்ற நம்பிக்கை வெளிநாட்டினர் மத்தியில் வலுவாக உள்ளது. இந்தக் கோட்பாடு அந்த நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்ப்பதாகப் பார்க்கப்படுகிறது.

பலரும் தங்களுக்குப் பிடித்த தொழிலைத் தொடர 45 வயதில் வேலையை விட்டுவிட விரும்புகிறார்கள். நாம் சம்பாதித்து வைத்திருக்கும், முதலீடு செய்திருக்கும் பணமே போதுமானதாக இருக்கும் என்பதால் அதுவரை கிடைத்து வந்த சம்பளம் வரவில்லையென்றாலும் பிரச்னையாக இருக்காது என்ற நம்பிக்கை பரவியது.

ஏனென்றால் பலர் தங்களுக்குப் பிடித்த தொழிலைத் தொடர 45 வயதில் வேலையை விட்டுவிட விரும்புகிறார்கள். அதனால், சம்பாதித்து முதலீடு செய்த தொகையே போதுமானது என்பதால், முந்தைய சம்பளம் வரவில்லை என்றாலும் பிரச்னை இருக்காது என்ற நம்பிக்கை பரவியது.

 

இந்தியாவில் இந்த கோட்பாட்டின் பிரபலத்துக்கு காரணம் என்ன?

நிதி சேமிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்பே பலமுறை குறிப்பிட்டது போல, தற்போதைய உழைக்கும் தலைமுறையினர் தங்களுக்கு முந்தைய உழைக்கும் தலைமுறையினரிடம் இருந்து மிகவும் வேறுபட்டவர்கள்.

முன்பு, பலரும் பல ஆண்டுகளுக்கு ஒரே அரசாங்க வேலையில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால் தற்போதெல்லாம் ஒருவர் ஒரு அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவதே குறைவுதான்.

அதேபோல், முன்பு 60 வயதான நபர் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் பெறும் வசதி இருந்தது. தற்போது அப்படி எதுவும் கிடையாது. எனவே, வேலையில் இருக்கும்போதே முடிந்தவரை அதிக வருமானம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற யோசனையில் இருந்து இந்த ஃபையர் இயக்கம் உதித்தது.

தற்போதைய காலகட்டத்தில் வேலை நேரமும் முன்புபோல் சீராக இல்லாமல் ஷிஃப்ட் முறையில் உள்ளது. இதனாலேயே, வயதாகிவிட்டால், அதே வேலையைச் செய்ய முடியாது என்ற எண்ணம், தற்போதைய தலைமுறையினரிடம் அதிகமாக உள்ளது. எனவே, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை வலியுறுத்தும் இந்தக் கோட்பாடு அவர்களைக் கவர்ந்துள்ளது.

 
நிதி சேமிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூடுதலாக, இன்றைய காலகட்டத்தில் காப்பீடு முதல் ஓய்வூதியத் திட்டமிடல் வரை அனைத்து தகவல்களையும் உடனடியாக நம்மால் பெற முடிகிறது. தற்போது கிடைப்பதுபோல் இத்தகைய நிதி பற்றிய தகவல்கள் கடந்த காலங்களில் கிடைக்கவில்லை.

கடந்த காலங்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான முகவர்கள் மூலம் மட்டுமே செய்ய முடியும். தற்போது அப்படியில்லை, நிதி திட்டமிடல் தொடர்பாக எக்கச்சக்க தகவல்கள், தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கின்றன.

முன்னதாக, நிறுவனங்களின் முகவர்கள் மூலமாக மட்டுமே முதலீடுகள் செய்யப்பட்டன. ஆனால், இப்போது அப்படியில்லை. இணையத்தில் ஒவ்வொரு நிதி திட்டமிடல் தேவைக்கும் நிறைய தொழில்நுட்ப ஆதரவு உள்ளது. இதெல்லாம் தொழில்நுட்ப புரட்சியால் ஏற்பட்ட மாற்றம் என்று சொல்லலாம்.

 

ஃபயர் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

நிதி சேமிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

காப்பீடு: நாம் எடுத்துக்கொள்ளும் ஆயுள் காப்பீடு நமது ஆண்டு செலவினங்களைவிட குறைந்தது இருபது மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். இதேபோல் முழு குடும்பத்திற்கும் போதுமான மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி: ஒரு ஊழியர் 45 வயதை அடையும்போது, அவர்களது குடும்பத்தின் ஆண்டு செலவினத்தில் 25 மடங்கு வருங்கால வைப்பு நிதியாக இருப்பது மிகவும் முக்கியம். பணவீக்கத்தை முறியடிக்க அத்தகைய நிதியை உருவாக்குவது இந்தக் கோட்பாட்டிற்கு முக்கியமானது.

நிதி இலக்குகள்: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிதி இலக்கிற்கும் போதுமான அளவு முதலீடு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விதிவிலக்கு அளிக்கக்கூடாது. அனைத்து நிதி இலக்குகளையும் சமமாக நடத்துவதே தனிநபர் நிதி மேம்பாட்டின் அடிப்படைக் கொள்கை.

செலவை கட்டுப்படுத்த வேண்டும்: ஃபையரின் முக்கியக் கொள்கையானது, அவ்வப்போது செலவுகளைக் கண்காணிப்பதன் மூலம் அதிகப்படியான செலவுகள் மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதாகும். மாதாந்திர சம்பளத்தில் சேமித்த பிறகு, மீதமுள்ள தொகையை செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். ஆனால் இது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை, எனவே செலவுகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

 

இந்த கோட்பாட்டிற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள்

நிதி சேமிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட உதவும் இந்தக் கோட்பாட்டுக்கு எதிராக வைக்கப்படும் முக்கிய விமர்சனம், சிக்கனமாக வாழ்வது என்பதன் மூலம் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதை இது கைவிடச் செய்கிறது என்பதாகும். எனினும், இந்த விமர்சனம் முற்றிலும் உண்மையல்ல. காரணம், இன்பம் என்பது உணர்வு சார்ந்த விஷயம். நிதி விஷயங்களில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.

இந்தக் கோட்பாடு அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற விமர்சனமும் உள்ளது. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், நாளைய தேவையை உணர்ந்து சேமிக்கத் தொடங்குபவர்களால் மட்டுமே நிதி ரீதியாக இன்னொரு அடி எடுத்து வைக்க முடியும்.

ஃபையர் இயக்கத்தின் விளைவுகள்: இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டதன் காரணமாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. தற்போது வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியும் இந்த இயக்கத்தில் இருந்து பிறந்த யோசனைதான். பொதுவாக, முதலீட்டாளர்களின் அதிகரிப்பால்தான் பங்குச் சந்தை இயங்குகிறது.

முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக சமூக ஊடகங்களில் அதிகம் சம்பாதித்ததாக சிறு முதலீட்டாளர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

https://www.bbc.com/tamil/articles/c06r47r6836o

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

45 வயது வரை உழைத்து விட்டு, பின்னர் ஒய்வாக நாம் விரும்பும் வழியில் நாட்களைச் செலவு செய்யலாம், தவறொன்றுமில்லை. ஆனால், விடிய எழும்பி, போய் செய்யும் வேலை,  தம் சுய அடையாளத்தின் ஒரு பகுதி என்றிருப்போர் இப்படி ஓய்வை நோக்கி நாட்களை எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

வேலையையும், ஓய்வையும் ஒரே சமகாலத்தில் அனுபவிக்கலாம், அப்படிச் செய்யக் கூடிய வேலையை கல்வி, திறன் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்வது தான் மேற்கு நாடுகளில் கிடைக்கும் சுதந்திரம்!

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.