Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் : திருகோணமலைக்கு விஜயம் : திருக்கோணேஸ்வரத்திலும் சிறப்பு வழிபாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 OCT, 2023 | 10:16 PM
image

ஆர்.ராம்

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று மாலையில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் அவரை உயர்கல்வி அமைச்சர் கலாநிதி.சுரேன் ராகவன் நேரில் சென்று வரவேற்றிருந்ததோடு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடன் பங்கேற்றிருந்தார்.

மேலும் “மீண்டும் கொழும்மை வந்தடைவதை இட்டு மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் நாளையதினம் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதோடு கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கரூபவ் உள்ளிட்ட அரச உயர்மட்டத்தினரையும் சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து நாளைமறுதினம் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்களைச் சந்திக்கவுள்ளதோடு இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள சில திட்டங்களை அவர் பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளார்.

தொடர்ந்து திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள ஏனையத் திட்டங்கள் குறித்தும் அவர் ஆராயவுள்ளதோடு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணஸ்வர ஆலத்தில் நண்பகலளவில் வழிபாடுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜ்  நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்ட இந்திய வெளியுறவு செயலகம் அறிவித்தது.

https://www.virakesari.lk/article/166588

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் - ஜனாதிபதி ரணிலுக்கிடையில் சந்திப்பு : 3 ஒப்பந்தங்கள் கைசாத்து

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

 

இந்திய - இலங்கை  உறவுகளை  மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளும் வகையிலான 03 ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டன. 

 

அதேபோல் இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தை இணையத்தின் ஊடாக திறந்துவைக்கும் நிகழ்வும் இதன்போது, இடம்பெற்றது.  

 

10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 1.026 மில்லியன் ரூபாவை 2.8 மில்லியன் ரூபாயாக அதிகரித்துக்கொள்வதற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது. 

 

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை   மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் 9 திட்டங்களை விரைவில் நிறைவு செய்வதற்கு அவசியமான மேலதிக ஒதுக்கீடுகளை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதோடு அதற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது. 

 

அதன் கீழ் வடக்கு மாகாணத்தின் 27 பாடசாலைகளை மேம்படுத்தல்,  மன்னார் மற்றும் அநுராதபுரம் வீடமைப்புத் திட்டங்கள், அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் புஸ்ஸலாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி பணிகள், பொலன்னறுவையில் பல்லின - மும்மொழிப் பாடசாலையொன்றை நிர்மாணித்தல், யாழ்ப்பாணத்தில் மழைநீரை சேகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழான 2889 நிர்மாணிப்புக்கள், தம்புள்ளையில் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் பழுதடையாமல் பாதுகாப்பதற்கான 5000 மெட்ரிக் டொன் கொள்ளளவுடைய குளிரூட்டி வசதிகள் அமைத்தல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு புதிய சத்திரசிகிச்சை பிரிவொன்றை நிறுவுதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள்  விரைவில் நிறைவு செய்யப்படவுள்ளன. 

 

அதேபோல் இலங்கையின் தேசிய பாலுற்பத்தியை பலப்படுத்தும் வகையில் இந்தியாவின் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனமான (அமுல் குழுமம்) மற்றும் இலங்கையின் காகீல்ஸ் கூட்டு வர்த்தக நிறுவனம், இந்திய தேசிய பாலுற்பத்தி ஊக்குவிப்பு சபை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள கூட்டு வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது. 

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் பலனாக கைசாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இந்நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகள் கிடைக்கவுள்ளன. அத்தோடு, முதல் ஐந்து வருடங்களில் பால் உற்பத்தியை 53% வீதத்தினால் அதிகரித்துக்கொள்ளவும் 15 வருடங்களில் இலங்கையை பாலுற்பத்தியில் தன்னிறைவான நாடாக மாற்றும் நோக்கத்துடனும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.     

 

அதன் கீழ் கால்நடைகளுக்கு அவசியமான உயர்தர மருந்துகள் மற்றும் உணவு, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி 2 இலட்சம் பாலுற்பத்தியாளர்களை வலுவூட்ட எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மேலும் கால்நடை வளர்ப்புத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல், பால் உற்பத்திகளின் தரத்தை அதிகரிப்பதற்கான தொழில்நுடங்களுக்கான முதலீடுகள் மற்றும் பால் சார்ந்த உற்பத்திகளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரதிபலன்கள் கிட்டும். 

 

இதன்போது இலங்கை - இந்திய உறவுகளுக்கு 75 வருடம் பூர்த்தியாவதையிட்டு விசேட நினைவுச் சின்னமொன்றும் வெளியிடப்பட்டது.

 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் புனீத் அகர்வால் ஜே.பீ.சிங், இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே,  இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரசூ புரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.  இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் தேனுக விதான கமகே, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள்  தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.  

இந்திய வெளிவிவகார அமைச்சர் - ஜனாதிபதி ரணிலுக்கிடையில் சந்திப்பு : 3 ஒப்பந்தங்கள் கைசாத்து | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் இரத்து : திடீரென பறந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், பல உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு திடீரென நாடு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அவர் திடீரென நாடு திரும்பியது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மகிந்தவுடன் நீண்டநேரம் கலந்துரையாடல்

எனினும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, உடன் இந்திய வெளியுறவு அமைச்சர், முன்னாள் அதிபரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடிவிட்டு திடீரென நாடு திரும்பியதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் இரத்து : திடீரென பறந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் | The Indian Foreign Minister Went Back

மஹிந்த ராஜபக்சவுடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் அரசியல் நிலவரம், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள், எதிர்வரும் அதிபர் தேர்தல் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்நிறுத்தவுள்ள வேட்பாளர் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

https://ibctamil.com/article/the-indian-foreign-minister-went-back-1697263148

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2023 at 11:45, ஏராளன் said:
10 OCT, 2023 | 10:16 PM
image

ஆர்.ராம்

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று மாலையில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் அவரை உயர்கல்வி அமைச்சர் கலாநிதி.சுரேன் ராகவன் நேரில் சென்று வரவேற்றிருந்ததோடு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடன் பங்கேற்றிருந்தார்.

மேலும் “மீண்டும் கொழும்மை வந்தடைவதை இட்டு மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் நாளையதினம் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதோடு கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கரூபவ் உள்ளிட்ட அரச உயர்மட்டத்தினரையும் சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து நாளைமறுதினம் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்களைச் சந்திக்கவுள்ளதோடு இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள சில திட்டங்களை அவர் பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளார்.

தொடர்ந்து திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள ஏனையத் திட்டங்கள் குறித்தும் அவர் ஆராயவுள்ளதோடு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணஸ்வர ஆலத்தில் நண்பகலளவில் வழிபாடுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜ்  நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்ட இந்திய வெளியுறவு செயலகம் அறிவித்தது.

https://www.virakesari.lk/article/166588

செய்தி இப்படி இருந்தாலும், அமைச்சர் திருகோணமலைக்கு செல்லவில்லை என்று அறிய கிடைக்கிறது. ராஜதந்திர பேர்ச்சுவார்த்தையில் சில சிக்கல்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு! கொழும்பு விஜயம் செய்த அவர் விரைந்து திரும்ப இதுவே காரணம்

இஸ்ரேலுக்கு முழு ஆதரவான நிலைப்பாட்டை  இந்தியா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள பின்புலத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அவருக்கு உயர்ந்த மட்டத்தில் 'வை' ரகப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அது இப்போது நாட்டின் தலைவருக்கு ஒத்ததாக 'இஸட்' ரகத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் 

ஒரு டசினுக்கும் குறையாத கொமாண்டோக்கள் எந்நேரமும் அவரைச் சூழ வியூகம் வகுத்து நிலைகொண்டிருப்பர். அவரது பாதுகாப்பு ஆறு அடுக்கு வளையமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு! கொழும்பு விஜயம் செய்த அவர் விரைந்து திரும்ப இதுவே காரணம் | Israel Hamas War Indian Foreign Ministerjaishankar

வழமையான பாதுகாப்புக்கு மேலதிகமாக சி.ஆர்.பி.எவ். ஜவான்களின் விசேட பாதுகாப்பு வளையமும் வழங்கப்பட்டுள்ளது.

அவரது நகர்வுகள், போக்குவரத்துக்கள் மிக இரகசியமாக பேணப்படும் என்றும், அவர் பிரசன்னமாகக் கூடிய இடங்கள் துல்லியமான கவனிப்புக்கு உள்ளாகும் என்றும், அவரது பாதுகாப்புக்காக விசேட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநாடு 

இந்து சமுத்திர எல்லைப்புற நாடுகளின் மாநாடு இவ்வாரம் கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் நேரத்துடனான ஏற்பாடாகும்.

தவிர்க்க முடியாமல் அதற்கு அவர் வருகை தந்தாலும், ஒரே நாளில் இலங்கை விடயத்தைச் சுருக்கிக் கொண்டு அவர் புதுடில்லி திரும்பியமைக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளே காரணம் என்று கூறப்படுகின்றது.

ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு! கொழும்பு விஜயம் செய்த அவர் விரைந்து திரும்ப இதுவே காரணம் | Israel Hamas War Indian Foreign Ministerjaishankar

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்குச் சார்பான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து, எப்போதும் இஸ்ரேலோடு இந்தியா துணை நிற்கும் என்ற முடிவை புதுடில்லி அறிவித்தமையை அடுத்து, இந்தியாவின் வெளிவிவகார கொள்கை தொடர்பில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் சீற்றம் அதிகரித்திருக்கலாம் என்று கருதப்படும் சூழலிலேயே ஜெய்சங்கருக்கான பாதுகாப்பு திடுதிடுப்பென அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 

https://tamilwin.com/article/israel-hamas-war-indian-foreign-ministerjaishankar-1697334331?itm_source=parsely-api

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.