Jump to content

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் மக்கள் ஆர்வம் காட்டினாலும் பாதுகாப்பற்ற நிலையினால் அவர்களினால் முதலீடு செய்ய முடியவில்லை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையின் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தமிழ் பெரும்பான்மை இன மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட்டால் நிச்சயமாக பாரியளவிலான முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரும்பான்மை இனத்தவரின் வீடுகளை சுற்றி இராணுவ முகாம்கள் இருந்தால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? 

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

யாழ்ப்பாணத்தை சுற்றுலாபுரியாக மாற்றும் நோக்கில் முதலீடு செய்து வருவதாகவும் இதனால் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களின் வாழ்வாரத்தை வலுப்படுத்த விரும்புவதாகவும் அதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறையினர் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் பெரும்பான்மை இன சமூகத்திற்கு காணப்படும் அதிகாரங்கள் தமிழ் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் கூறியுள்ளார்.

அவரது நேர்காணலின் ஒரு பகுதி கீழே...

கேள்வி - உங்கள் எல்லோருக்கும் தெரியும் நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன் என்பது. நான் யாழ்ப்பாணத்தின் ஆணையிறவு பகுதி பகுதியை சற்றே கடந்ததன் பின்னர் யாழ்ப்பாணம் இயக்கச்சி பகுதி அமைந்துள்ளது.

மணற்பாங்கான இந்தப் பகுதியின் இரண்டு பகுதிகளிலும் கடல் சூழ்ந்துள்ளது. மிகவும் ரம்யமான ஓர் இடமாக பொலிவுடன் காட்சியளிக்கும், இந்த பகுதியை வளமான நிலமாக மாற்றியவர் அவர்தான், இவருடன் எனக்கு மொழி தொடர்பான பிரச்சனை ஒன்று உள்ளது.

எந்த மொழியில் பேசுவது என்பது புரியவில்லை. நான் இன்று ரிச்சா இயற்கை பண்ணை, ரிச்சா ஹோட்டல் என்பனவற்றின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரனுடன் இணைந்திருக்கின்றேன்.

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

வணக்கம்…

பாஸ்கரன்  - வணக்கம்…

சதுர - உங்களால் சிங்களம் பேச முடியுமா அல்லது சில சொற்கள் பேச முடியும்.

பாஸ்கரன் - மச்சான், கோமத? போன்ற சில வார்த்தைகளை பேச முடியும்.

சதுர - தமிழ் மொழியில் பேச முடியுமா?

பாஸ்கரன் - நான் தமிழன் தமிழ் பேச முடியும்.

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

 

சதுர - ஆங்கில மொழி?

பாஸ்கரன் - ஓரளவு பேச முடியும். 

சதுர - இந்த நிகழ்ச்சியை மூன்று மொழிகளிலும் நடத்த நேரிடும் என நான் நினைக்கின்றேன்.

எனது குறைபாடுகள் இருந்தால் அது உங்களுக்கு தெரியும். அதே போல் இவரது குறைபாடுகள் இருந்தால் அதுவும் தெரியும்.

ஏனென்றால் எனக்கு தமிழ் மொழி புரியும், கொஞ்சம் பேசத் தெரியும் சில கேள்விகளை கேட்பதற்கு என்னால் முடியும் ஆங்கில மொழியில் பேசிக்கொள்ள முடியும்.

எனினும் நாம் இருவரும் கூறினோம் இதனை சமாளிக்க முடியும். எனக்கு சிங்கள மொழி நன்றாக தெரியும். இவருக்கு தமிழ் மொழி நன்றாக தெரியும்.

எனினும் இந்த ஊடாடலுக்கு மொழி ஒரு தடையாக இருக்கப் போவதில்லை. புலம்பெயர் இலங்கையர்களில் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர் தான் கந்தையா பாஸ்கரன்.

அவர் இலங்கைக்கு வருகை தந்து 150 ஏக்கர் தரிசு காணியை கொள்வனவு செய்து அதில் பத்தாயிரம் தென்னை மரங்களை நாட்டி இந்த பூமியை செழிப்பாக்கி உள்ளார்.

இங்கு வாழ்பவருக்கு தொழில் வாய்ப்பு வழங்கி ஹோட்டல் ஒன்றை அமைத்து இயற்கை பண்ணை ஒன்றை உருவாக்கி ஆச்சரியப்படும் அளவிற்கான சேவையை வழங்கியுள்ளார்.

நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இவ்வாறானவர்களே இந்த நாட்டுக்கு பணத்தை கொண்டு வர வேண்டும் பணம் இல்லாத இந்த தருணத்தில் இவர்கள் வரவேண்டும். பணத்தை கொண்டு வர வேண்டும். அதனால் தான் நாம் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தோம்.

ஆணையிறவு கடந்த காலங்களில் தெற்கிலிருந்து யானைகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்த இடம் பயன்படுத்தப்பட்டது.

இதனை இதனால் தான் ஆணையிறவு என இதற்கு பெயிரிடப்பட்டது.

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

 

நான் உங்களுக்கு நன்றி பாராட்டுகின்றேன். இவ்வாறான ஓர் பகுதிக்கு பாரிய சேவையை வழங்குவது பாராட்டுக்குரியது. மக்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கு நீங்கள் உதவி செய்திருக்கின்றீர்கள்.

இந்த உரையாடலை ஆரம்பிப்பதற்கு நீங்கள் இந்த பகுதியை பகுதியில் பிறந்தீர்களா? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கின்றேன்.

அல்லது வேறு ஒரு பிரதேசத்தில் பிறந்தீர்களா?

பாஸ்கரன்  - இல்லை இல்லை நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன்.

சதுர - யாழ்ப்பாணம்?

பாஸ்கரன்  - ஆம்.

சதுர யாழ்ப்பாண நகரிலா?

பாஸ்கரன்  - யாழ்ப்பாணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டத் தலைப்பு எனும் நகரில் நான் பிறந்தேன்.

சதுர - நீங்கள் இன்னமும் அந்த இடத்தில் வசிக்கின்றீர்களா?

பாஸ்கரன்  - இல்லை நான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றேன்.

சதுர - 30 ஆண்டுகள் ஹோலந்தில் வாழ்ந்து ஏன் இவ்வாறான ஓர் முதலீட்டை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தீர்கள்?

ஆணையிறவுக்கு ஏன் கொண்டு வந்தீர்கள் என நான் சிந்திக்கின்றேன்.

பாஸ்கரன்  - நான் 1991 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினேன். வேறொரு நாட்டில் வாழ்ந்தாலும் எனது இதயம் இந்த நாட்டிலேயே இருந்தது ஏனென்றால் நான் இந்த இடத்தை நேசிக்கின்றேன்.

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

நான் இந்த மக்களை நேசிக்கின்றேன் இந்த தேசத்தை நேசிக்கின்றேன். நான் எப்பொழுதும் எனது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை கொண்டிருக்கின்றேன்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இல்லை 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் சமூக சேவைகளில் ஈடுபட்டு இருக்கின்றேன்.

பின்னர் ஏதாவது ஒரு துறையில் பாரியளவில் சேவையாற்ற விரும்பினேன். நினைத்து மக்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கும் ஒரு பிரதான நோக்காக கொண்டே செயல்பட்டேன்.

இரண்டாவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்ய விரும்பினேன். சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் போது இயல்பாகவே பலருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கின்றது. இது ஓர் சிறிய உதாரணமாகும். என்னுடைய நிறுவனத்தில் 300 பேர் நிரந்தர பணியாற்றுகின்றனர்.

300 வீடுகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கின்றது. இன்னும் அதிக அளவிலான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

அதுவே எனது அவா. எனக்கு தெரியும் புலம்பெயர் சமூகத்தினர் இங்கு வந்து சிறிய வியாபாரங்களை மேற்கொள்கின்றனர்.

எனினும் பலர் அரசியல் தீர்வு திட்டம் எட்டப்படும் வரை காத்திருக்கின்றனர் பலர் அரசியல் தீர்வு திட்டம் தீட்டப்படும் வரை பாரிய அளவு முதலீடுகளை செய்ய காத்திருக்கின்றார்கள்.

அரசியல் தீர்வு ஏட்டப்பட்டால் நிச்சயமாக மிகப் பெரிய அளவிலான முதலீடுகளை செய்வார்கள். எனக்கு புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த பலரை தெரியும் அவர்கள் மிகுந்த செல்வந்தர்கள் அவர்களிடம் பணம் உள்ளது.

நீங்கள் கூட பல்வேறு நாடுகளில் பல்வேறு நபர்களை சந்தித்து இருக்கின்றீர்கள். அவர்களுக்கு இங்கு வர விருப்பம் உள்ளது என நான் நினைக்கின்றேன் அவர்கள் வருவார்கள் என்றே கருதுகின்றேன்.

சதுர -  எவ்வாறான அரசியல் தீர்வு திட்டத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

பாஸ்கரன் - நான் பல மில்லியன் டொலர் முதலீடு செய்தாலும் எனக்கு எவ்வித பாதுகாப்பும் கிடையாது. நான் இங்கு முதலீடு செய்தால் எனக்கு ஒரு பாதுகாப்பு தேவை எனக்கு தெரியாது.

நாளை என்ன நடக்கும் என்பது பற்றி நிச்சயமற்றத்தன்மை நிலவுகின்றது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு போர் இடம் பெற்றது. நாளை என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது ஏனென்றால் 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு போர் இடம் பெற்றது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை.

அரசியல் ரீதியான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால் பாரிய அளவில் முதலீடுகள் செய்யப்படும் என நினைக்கின்றேன். நான் பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறேன் அங்கு பல்வேறு நபர்களை சந்தித்து இருக்கிறேன்.

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

அவர்களில் பலர் அரசியல் ரீதியான ஸ்திரமான தீர்வு திட்டம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தாம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு போதிய அளவு பாதுகாப்பு உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அந்த நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டும். இலங்கையில் முதலீடு செய்ய இது உசிதமான தருணம் அல்ல என அவர்கள் நினைக்கின்றார்கள்.

சதுர - எனினும் இலங்கையில் எவருக்கும் முதலீடு செய்ய முடியும் எவ்வித தடையும் இல்லை.

நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இலங்கை முதலீட்டு சபையில் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் இங்கே தங்க விரும்பினால் அல்லது வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க விரும்பினால் உங்களுக்கு அதனை செய்ய முடியும்.

யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.

ஏன் நீங்கள் அரசியல் ரீதியான தீர்வு திட்டம் எட்டப்படும் வரையில் காத்திருக்கின்றீர்கள்?

பாஸ்கரன்  - இல்லை அரசியல் தீர்வு திட்டம் என நான் குறிப்பிடுவது, நான் இங்கு முதலீடு செய்தால் நாளை என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது.

எவ்வித உத்தரவாதமும் கிடையாது. மீண்டும் போர் ஏற்படலாம் மக்கள் நினைக்கின்றார்கள். மேலும் பிரச்சினைகள் அதிக அளவில் ஏற்படலாம் என நினைக்கின்றார்கள்.

சதுர - உங்களது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றார்கள்… அப்படியா?

பாஸ்கரன் - நான் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன், அதனால் தான் நான் இங்கு வந்தேன். நான் நிறைய மக்களை சந்தித்து இருக்கின்றேன்.

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

 

இலங்கையில் பாரியளவு முதலீடு செய்ய அவர்கள் விரும்புகின்றார்கள். தங்களது தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென அவர்கள் நினைக்கின்றார்கள்.

அத்துடன் அரசியல் ரீதியான தீர்வு திட்டம் எட்டப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அதனையே அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள். நான் நினைக்கின்றேன் அரசாங்கத்திற்கு அது தெரியும் அதனால் தான் கட்சிகள் இணைந்து அரசியல் தீர்வு திட்டத்தை எட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் கட்சிகளுடன் இது குறித்து பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. நிரந்தர தீர்வு திட்டம் ஒன்றை எட்டும் நோக்கில் இந்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியான தீர்வு திட்டம் எட்டப்பட்டால் நிச்சயமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இங்கு வருகை தந்து, முதலீடு செய்வார்கள் என்பதனை நான் திடமாக நம்புகிறேன்.

சதுர - அரசியல் தீர்வு திட்டம் என நீங்கள் கூறுவது 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனையா?

பாஸ்கரன் - நான் அரசியல்வாதி இல்லை. எனக்கு பாதுகாப்பே தேவை. சிங்கள மக்கள் எதனை அனுபவிக்கின்றார்களோ அதற்கு நிகரானதை நானும் அனுபவிக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.

சமமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதனையே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனக்கு 13 அல்லது 14 அல்லது வேற எதுவும் தேவையில்லை. எமக்கு எங்களது உயிர்களைப் பாதுகாக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு சிறிய உதாரணத்தை காண்பிக்கின்றேன்.

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

 

இது இயக்கச்சி, இந்த பண்ணையைச் சுற்றி பத்து இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன.

சதுர - 10?

பாஸ்கரன் - 10 இராணுவ முகாம்கள் எனது பிள்ளைகள் இங்கு வர விரும்புவதில்லை. அவர்கள் அஞ்சுகின்றார்கள்

சதுர - பாஸ்கரன் பெரிய உதாரணம் ஒன்றை தருகின்றார். அவரது பிள்ளைகள் இலங்கைக்கு வர விரும்புவதில்லை ஏனென்றால் இந்த பண்ணையை சுற்றி 10 இராணுவ முகாம்கள் காணப்படுகின்றதாக அவர் தெரிவிக்கின்றார்.

நாம் தெற்கில் இருந்து பார்க்கும்போது இதனையே பாதுகாப்பு என கருதுகின்றோம். இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை நாம் விரும்புகின்றோம்.

எனினும் பாஸ்கரன் அதனை அவ்வாறு நினைக்கவில்லை. அவர்கள் வேறு விதமாக நினைக்கின்றார்கள். நீங்கள் கூறுவது போல் தெற்கு மக்களுக்கு செய்யக்கூடிய வடக்கு மக்களினால் செய்ய முடியாத விடயங்கள் என்ன?

சதுர - பாஸ்கரன் நீங்கள் சுதந்திரத்தை உணர்கின்றீர்களா? எனினும் நான் அவ்வாறு உணரவில்லை. எனக்கு சுதந்திரம் உண்டு என்பதை நான் உணரவில்லை.

அது ஒரு வேறுபாடாகும். உங்களுக்கு இலகுவில் புரிந்து கொள்வதற்கு நீங்கள் எங்கு பிறந்தீர்கள்? பண்டாரவளை அல்லது மொரட்டுவ அல்லது வேறு எங்கோ...

சதுர - மொரட்டுவ.

பாஸ்கரன் - இல்லை. உதாரணத்துக்கு சொல்கின்றேன். உங்களது வீட்டைச் சுற்றி 10, 11 இராணுவ முகாம்கள் இருக்கின்றதா?

சதுர - இல்லை

பாஸ்கரன் - அப்படி என்றால் ஏன் எனக்கு அவ்வாறு இருக்க வேண்டும். அந்த உணர்வையே நான் குறிப்பிடுகிறேன். அது ஒரு வேறுபாடு. அதனாலேயே நாம் சமமான சுதந்திரத்தை கோருகின்றோம். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

அவர்கள் இலங்கைக்கு வர விரும்புவதில்லை ஆங்காங்கே இராணுவத்தார் துப்பாக்கிகளுடன் இருக்கும்போது அவர்கள் இலங்கைக்கு வர விரும்புவதில்லை.

அவர்கள் இந்தியாவிற்கு செல்லவே விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இந்தியா செல்கின்றார்கள். எனினும் எனது பிள்ளைகள் இங்கு வரவேண்டும் என நான் விரும்புகின்றேன்.

அவர்கள் இங்கு வியாபாரங்களை தொடங்க வேண்டும் என விரும்புகின்றேன்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என விரும்புகின்றேன் அவர்கள் முயற்சியான்மையுடன் ஊடாக இந்த நாட்டிற்கு எதனையாவது சேர்க்க வேண்டுமென விரும்புகின்றேன்.

அவர்கள் மொத்த தேசிய உற்பத்திக்கு ஏதாவது ஒரு பங்களிப்பு செய்ய வேண்டும் என நினைக்கின்றேன் எங்களுக்கு இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் அல்லவா?

சதுர - உங்களிடம் இருப்பது புலியின் பணமா

பாஸ்கரன் - புலம்பெயர் சமூகத்தினரும் எல்லோரிடமும் எல்.ரீ.ரீ.யின் பணம் இல்லை. எல்.ரீ.ரீ.ஈ பணத்தை கொண்டு அவர்கள் வியாபாரங்களை செய்வதில்லை.

அதே நேரத்தில் எல்.ரீ.ரீ.யின் பணத்தை கொண்டு வந்து இங்கு முதலீடு செய்கின்றார்களா என எனக்கு தெரியாது.

நாங்கள் 20 ஆண்டுகளாக ஓர் வியாபாரத்தை அபிவிருத்தி செய்து அந்த நிறுவனத்தை விற்று அந்த பணத்தில் புது வியாபாரங்களை மேற்கொள்கின்றோம்.

அந்த பணத்தில் கொஞ்சம் பணத்தையே இங்கு இலங்கையில் கொண்டு வந்து முதலீடு செய்து வியாபாரங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.

எங்களுடைய சமூகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்களையும் முன்னெடுக்கின்றோம் .

கிசுகிசு பேசுபவர்கள் எல்லா நேரத்திலும் அது பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அது பற்றி நான் கவலை கொள்ள போவதில்லை.

எங்களிடம் எல்.ரீ.ரீ.ஈ பணமில்லை. அது பற்றி எனக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. நான் எல்.ரீ.ரீ.ஈ பற்றி பேசப்போவதில்லை.

20 ஆண்டுகளாக கடின உழைப்பைக் கொண்டு உழைத்த பணமே என்னிடம் உள்ளது. எப்பொழுதும் எனது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

சதுர - நீங்கள் இந்த திட்டத்தில் மகிழ்ச்சி அடைகின்றீர்களா?

பாஸ்கரன் - நிச்சயமாக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த ஆண்டில் அதிகளவான காலத்தை நான் இலங்கையிலேயே கழித்தேன். பல்வேறு விடயங்களை செய்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆம் நான் இதனை விரும்பி செய்கின்றேன்.

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video) | Baskaran Kandiah Exclusive Interview

சதுர - இந்த இடத்தை ரீச்சா இயற்கை பண்ணை மற்றும் ரீச்சா ஹோட்டல் என பெயர் எழுதப்பட்டுள்ளது. எனினும் நீங்கள் ஒரு இயற்கை பண்ணைக்கும் அப்பால் பல்வேறு விடயங்களை செய்திருக்கின்றீர்கள்.

சிறுவர் பூங்கா ஒன்று கட்டியிருக்கின்றீர்கள் பல்வேறு மனதைக் கவரும் இடங்களை நிர்மானித்திருக்கின்றீர்கள். இதன் பின்னணியில் இருக்கும் மெய்யான நோக்கம் என்ன இது எந்த எண்ணக் கருவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?

பாஸ்கரன் - வடக்குக்கு தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றார்கள். எனினும் இங்கு பார்ப்பதற்கு பெரிதாக இடங்கள் எதுவும் இல்லை.

வடக்கு மக்களுக்கு பொழுது போக்குவதற்கான இடங்கள் மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

எனது பிள்ளைகளை நான் இங்கு அழைத்து வந்தால் அவர்களுக்கு செல்லக்கூடிய இடங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றன.

அவர்கள் ஒரு சில விடயங்கள் தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்களுக்கு விளையாடுவதற்கு இடம் இல்லை, அவர்கள் பொழுதுபோக்கு களியாட்டங்களில் ஈடுபட இடமில்லை.

கடற்கரைக்குச் செல்ல முடியும். ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு செல்வோம். நல்லூர் கோவில் மேலும் சில இடங்களுக்கு மட்டுமே செல்வோம்.

யாழ்ப்பாணத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு.  ஆம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஓரிடத்தை உருவாக்க நான் விரும்புகின்றேன்.

மக்கள் வந்து தங்குவதற்கு, நல்ல உணவு உண்பதற்கு நல்ல உணவகம், பிள்ளைகள் விளையாடுவதற்கு ஒரு நல்ல விளையாட்டுக்கள் இவ்வாறான விடயங்கள் இருந்தால் பிள்ளைகள் வந்தால் அவர்கள் திரும்ப போக விரும்ப மாட்டார்கள்.

அவ்வாறான ஒரு நிலை தற்பொழுது காணப்படுகிறது. அதை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த இடத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து 45 நிமிடங்கள் கிளிநொச்சியிலிருந்து 15 நிமிடங்கள் முல்லைதீவிலிருந்து 45 நிமிடங்கள் வவுனியாவிலிருந்து 45 நிமிடங்கள் இந்த இடம் வடக்கில் மத்தியில் அமைந்துள்ளது.

வடக்கில் இருக்கின்ற அனைவரும் இந்த இடத்திற்கு வர இலகுவாக அமைந்துள்ளது.

புத்தளம், சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை ஏனைய பகுதிகளிலிருந்தும் அதிகளவானவர்கள் வருகை தருகின்றனர்.

இந்த இடம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர் மேலும் நாடு முழுவதிலும் உள்ள அனைவரும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

https://tamilwin.com/article/baskaran-kandiah-exclusive-interview-1699024442

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
    • இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா?  தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.  
    • தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார். கடைசியாக வரும் என்று கணித்துள்ளார்கள்.
    • அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார்.  நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற  சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.