Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியாரின் கொள்கைகள் தமிழர்களை வழிநடத்துகின்றன - டாக்டர் ராமதாஸ்

Featured Replies

ஆறரை கோடி தமிழ் மக்களுக்கு முதல்வராக இருக்கிற கருணாநிதியை மத வெறி சக்திகள் மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வ இந்து பிரஷத் அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கொலை வெறியை தூண்டும் வகையில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழர்களை எல்லாம் திடுக்கிட வைத்துள்ளது.

பெங்களூரில் முதல்வரின் மகள் செல்வியின் விட்டை தாக்கியவர்கள், தமிழக அரசு பேருந்து ஒன்றை தீவைத்து கொளுத்தி 2 தமிழர்களின் உயிரை பறித்தவர்களும், இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் தான்.

இந்த மதவாத சக்திகளின் மிரட்டலை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களது கொலைவெறித் தாக்குதலுக்கு பெரும் பின்னணி இருக்கிறது. முன்பு காமராஜர், காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை தாக்கி தீ வைத்துக் கொளுத்தி அதன்மூலம் அவரை கொல்ல முயன்றவர்கள் இந்த மதவெறி சக்திகள் என்பதை மறந்துவிடக்கூடாது.

எனவே முதல்வருக்கு எதிரான கொலைவெறி தாக்குதலை தூண்டிவிட்டிருக்கும் இவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உடனடியாக மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக என்ற ஒரு கட்சிக்கு மட்டுமே கருணாநிதி சொந்தமானவர் கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள ஆறரை கோடி தமிழர்களுக்கு அவர் முதலமைச்சர். 84 வயதிலும் ஒரு இளைஞரைப் போல தமிழகத்திற்காகவும், தமிழர்களுக்காகவும் சிந்தித்து உழைத்து கொண்டிருப்பவர். ஒரு பெரும் கொள்கை மரபுவழிக்குச் சொந்தக்காரர். இவர் பின்பற்றி வந்துள்ள கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர். அந்த வகையில் துணிச்சலான கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.

தமிழர்களின் நீண்டநாள் கனவான சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கையில், அதை முடக்கி பகல் கனவாக்க சிலர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு ராமர் பெயரையும், ராமர் பாலத்தின் பெயரையும் பயன்படுத்தி மக்களை திசை திருப்பிக் கொண்டிருப்பதையும் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் முதல்வர் சில கருத்துக்களை வெளியிட்டார்.

உலகில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று எதுவும் கிடையாது. ஜனநாயக நாட்டில் கருத்துக்களை வெளியிடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கின்றது.

ஒருவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மாற்றுக் கருத்துக்கள் வெளியிடலாம். அதற்கு மாற்றாக கொலை வெறியை தூண்டும் வகையில் பேசுவதையோ, செயல்படுவதையோ ஏற்று கொள்ள முடியாது.

தமிழகம் பெரியாரின் பூமி. இன்று பெரியார் நம்முடன் இல்லை. ஆனால் அவரது பகுத்தறிவு கொள்கைகளும், சுயமரியாதை சிந்தனைகளும் இன்றைக்கும் தமிழர்களை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன.

இங்கே மதத் தீவிரவாதிகளின் சலசலப்பு எடுபடாது என்பதை வேதாந்திகளும், அவருக்குப் பின்னால் மறைந்திருக்கும் மதவாத சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். மதவாத சக்திகள் ஒருபுறம் திசை திருப்பிக் கொண்டிருக்கையில், தமிழர்களை பெரியாரின் பகுத்தறிவு பாதையில் இருந்தும், சிந்தனைகளிலிருந்தும் தடம்புரளச் செய்வதற்கான சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தகையச் செயலில் ஈடுபடும் சக்திகளையும் நம் இளைஞர்களையும் அடையாளம் காட்ட நாம் தவறிவிடக்கூடாது. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், பெரியாரின் கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இந்த ஆபத்தையும் உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இவர் ஆரம்பித்த கட்சியின் முன்னய பெயர் வன்னியர் சங்கம்... பின்னர் ப,ம,க ... பெரியாரின் கொள்கைகளை கடுமையாக கைகொள்பவர்... கட்டபஞ்சாயத்து, கந்து வட்டி எண்டு தமிழகம் அறிந்த சேவைகளை செய்யும் அண்ணா தமிழ் குடிதாங்கி சொன்னால் சரியாகதான் இருக்கும்..

Edited by தயா

பாமக ஒரு தீயசக்தி: கனிமொழி

Thursday, 20 September, 2007 01:29 PM

http://www.maalaisudar.com/newsindex.php?i...p;%20section=19

சென்னை, செப். 20: வளர்ச்சியை தடுக்கும் தீய சக்தி என பாமகவை திமுக எம்பி கனிமொழி மறைமுகமாக தாக்கியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், நாள்தோறும் விரிவடைந்து வரும் சென்னை நகரத்துக்கு துணை நகரம் அவசியம் தேவை என்றும்,காலப்போக்கில் அது வந்தே தீரும் என்றும் கூறியுள்ளார்.

.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக எம்.பி.யும், முதலமைச்சர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் திமுக அரசு பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டாடாவின் டைட்டானியம் தொழிற்சாலை, சென்னை விமான நிலைய விரிவாக்கம், துணை நகரம் ஆகியவை இதில் அடங்கும்.

திமுக அரசு கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த முயலுகிறது. மக்களுக்கு விமான நிலையம் போன்ற கட்டமைப்பு வசதி தேவையாகும். அத்தகைய வளர்ச்சியை தீய சக்திகள் தடுத்து நிறுத்த கூடாது.

விமான நிலைய விரிவாக்கத்தை இழந்தால் விமான போக்குவரத்து பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு மாறிவிடும். சிரமமான ஒரு இடத்திற்கு விமானம் மூலம் வர தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாது. எனவே தொலைநோக்கு பார்வையில் மக்களுக்கு எது நல்லது என்பதை பற்றி தெளிவான கருத்து இருக்க வேண்டும்.

சென்னைக்கு நவீன விமான நிலையம் இல்லாமல் தொழிலை பெருக்க முடியாது. வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியாது. இப்படி செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும் போது விரக்தி ஏற்படுகிறது. ஆனால் எனது தந்தையை (கருணாநிதி) பொறுத்தவரை, அவருக்கு அதிகமான பொறுமை இருக்கிறது என்றே கருதுகிறேன்.

ஆனால் இதையெல்லாம் சிறிது காலம்தான் தடுத்து நிறுத்த முடியும். தேவை ஏற்படும் போது அது மீண்டும் வெடித்து கிளம்பும். அரசியல் சில காலத்துக்குத்தான் இதனை அலைகழிக்க முடியும்.

சென்னை நகரம் வெடித்து வருகிறது. எனவே அதற்கு நிச்சயம் துணை நகரம் தேவை. காலப்போக்கில் துணை நகரம் வந்தே தீரும். திடீர் திருப்பங்கள் மத்திய அரசியலுக்குள் என்னை கொண்டு வந்துள்ளது என்று நான் நினைக்கவில்லை. அவையெல்லாம் இல்லாமலே கூட நான் அரசியலுக்கு வந்திருப்பேன். திமுகவில் முதலில் கட்சிக்குத்தான் விசுவாசம். அடுத்துதான் குடும்பம் வரும். இவ்வாறு அவர் பேட்டி அளித்துள்ளார்.

முட்டாள்தனம்

இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?- 'விடுதலை'(14.11.1972)யில் பெரியார்

ஹிந்தி இருக்கட்டும்

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை. அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம். சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.- 'விடுதலை'(07.10.1948)யில் பெரியார்

[b]திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம்

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ஒரு புளுகு

....அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? ... இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? - விடுதலை(28.3.60)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி

இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக - அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை(28.7.51)யில் பெரியார்

முக்கொலை

போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும்கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? - விடுதலை (5.4.67)யில் பெரியார்

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது

தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். - தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில்..

தமிழின் பெயரால் பிழைப்பு

நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடுதலை (16.3.67)

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .

..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு - காரியத்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை - ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே - என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்?

சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். - தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். - தந்தை பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.- தந்தை பெரியார்

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம்

தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.

தமிழால் என்ன நன்மை?

தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுப்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை

இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?

EVR ON RESERVATION:

எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது

மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் - அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு, தாழ்வோ, அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.- தந்தை பெரியார்

  • தொடங்கியவர்

இதை நெடுக்காலபோவான் ஏற்கனவே இங்கு இணைத்திருக்கிறார்.

கருணாநிதிக்கு வக்காலத்து வாங்க வேண்டிய தேவை வைத்தியருக்கு இருக்கிறது. ஏனென்றால் கருணாநிதியைப் பொலவெ கட்சியின் மூத் உறுப்பினர்களைப் பின் தள்ளி தன்னுஐடய மகனுக்கு மத்திய அமைச்சுப் பதவியைக் கொடுத்து வாரிசு அரசியலை வளர்ப்பவர் ராமதாஸ்

வாரிசு அரசியர் திராவிடத் தலவைர்கள் எல்லோருக்கும் ஒருமையான குணம் என்று அறியப்பட்ட பார்ப்பனப் பதிரிகையாளர் மாலன் எழுதி இருகிறார் இந்தப்பதிவில்.அதே குணம் வேலுப்பிள்ளை பிராபகருனுக்கும் இருக்கிறதாம்.

http://jannal.blogspot.com/2007/09/blog-post_19.html

//தமிழ் நாட்டுத் திராவிடத் தலைவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அழியாத தாக்கம் ஏற்படுத்தியிருப்பது போல் தெரிகிறது. அதனால் விடுதலைப் புலிகளிடமும் வாரிசு அரசியல் தொற்றிக் கொள்வது ஆச்சரியம் எதையும் ஏற்படுத்தவில்லை.தனது மகனும், ஏரோநாட்டிகல் பொறியாளருமான சார்ல்ஸ் அந்தோனி சீலன் வசம் தனது பயங்கரவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க பிரபாகரன் ஆர்வமாயிருக்கிறார்.

ஆனால் தனது வாரிசாக தன்னுடைய 22 வயது மகனுக்கு முடிசூட்டும் பிரபகரனது திட்டம் குறித்து விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களிடம் அதிருப்தி அதிகரித்து வருகிறது//

அதெப்படி நீங்கள் திராவிடத் தலைவர்கள் மேல் வைக்கும் எல்லாக்குற்றச் சாட்டுக்களும், பார்ப்பனர்களால் திருப்பி தேசியத் தலைவர் மீதும் வைக்கப்படுகிறது?

முதலில் நண்பன் யார் எதிரி யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எதிரிகளை உருவாக்க வைத்தது பெரியார் செய்த ஆரிய- திராவிட பிரச்சனையால் தானே. அண்டைக்கு எதுக்கெடுத்தாலும் பாப்பானி எண்டு புலம்பாமல் இருந்திருந்தால் இப்படி அவங்க எதிரியாக மாறியிருப்பினமா?

எதிர்காலத்தில் தமிழ் தெரிஞ்ச எல்லோரும் தமிழன் எண்ட கொள்கை வரவேணும். அது ராமசாமி நாயக்கர் ஆக இருக்கட்டும், பிராமணர் ஆக இருக்கட்டும். ஆனால் ஒரு கன்னடக்காரன் வந்து இவன் தமிழன், இவன் ஆரியன் எண்டு தமிழனுக்குப் பாடமெடுகின்ற நிலை எனி வரக் கூடாது கண்டியளோ!

இப்படி எதிரிகளை உருவாக்க வைத்தது பெரியார் செய்த ஆரிய- திராவிட பிரச்சனையால் தானே. அண்டைக்கு எதுக்கெடுத்தாலும் பாப்பானி எண்டு புலம்பாமல் இருந்திருந்தால் இப்படி அவங்க எதிரியாக மாறியிருப்பினமா?

எதிர்காலத்தில் தமிழ் தெரிஞ்ச எல்லோரும் தமிழன் எண்ட கொள்கை வரவேணும். அது ராமசாமி நாயக்கர் ஆக இருக்கட்டும், பிராமணர் ஆக இருக்கட்டும். ஆனால் ஒரு கன்னடக்காரன் வந்து இவன் தமிழன், இவன் ஆரியன் எண்டு தமிழனுக்குப் பாடமெடுகின்ற நிலை எனி வரக் கூடாது கண்டியளோ!

சும்மா திரும்பத் திரும்ப எல்லாத் தலைப்பிற்க்குள்ளும் பெரியாரைக் கொண்டு வருவதே உங்கள் கேவலமான கருத்தாடலாக இருக்கிறது.முன் எல்லாத் தலைப்பிற்க்குள்ளும் சொன்னதைத் தான் திருப்பிச் சொல்ல வேண்டு இருக்கிறது.ஆரியர் திராவிடர் என்பது பெரியார் உருவாக்கிய கோட்பாடு இல்லை.மொழியியல் தொல்பொருளியல்,சமூகவியல்,மரபண

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி. சபேசன் செய்றது போல பெரியாரையும், தலைவரையும் இணைச்சுக் கதைச்சு, இரண்டு பேரும் ஒரே நிலை எண்ட போலித் தோற்றத்தை ஏற்படுத்த நீங்களும் முனைகின்றியள். இது கொள்கைரீதியான உங்கட தோல்வி என நம்புறன்.

பெரியார் என்ன நோக்கத்தில் செய்ஞ்சார் எண்ட கருத்தாடலை விடுவம். ஏன் என்றால் அவற்ற மனதுக்குள் என்ன உண்மை இருந்ததோ, சூது இருந்ததோ எண்டது பற்றி சபேசன் போல கண்டுபிடிக்க எனக்கு வராது. ஆனா அவர் மூட்டிவிட்ட தீயால இண்டைக்கு எம் சமூகத்தில எத்தனை பிரச்சனைகள் இருக்குது எண்டது பற்றி ஆராய நீங்கள் வருவியள் எண்டால் அதை வரவேற்கலாம்.

அதுக்கு உங்கட ஒருத்தருமே தயார் இல்லை. பழைய சீலை கறகற எண்டமாதிரி பெரியாரைப் பற்றிப் புகழ்ந்து தள்ளிக் கொண்டே இருக்கின்றியள்.

பெரியாரைப் பற்றி எல்லாத் தலைப்பிலும் இழுக்கின்றம் எண்டு சொல்லுறியள். கடந்த சிலநாட்களாக ஓய்ந்திருந்த பெரியார் விவாதம் திரும்பி வரக் காரணமாக அமைஞ்சது சபேசன், பெரியாருக்கும் தேசியத் தலைவருக்கும் முடிச்சுப் போட்டு எழுதிய ஒரு தலைப்பால அதனால் தான் இது திரும்பவும் அவரைப் பற்றி எல்லா இடத்திலும் கதைக்க வைக்கின்றது என நினைக்கின்றன்.

நீங்கள் ஒழுங்கான விவாதி எண்டால் பெரியார் பற்றிய கொள்கையை நியாயப்படுத்த துப்பிருந்தால் அது பற்றிச் சொல்ல வாங்கோ! எதுக்கெடுத்தாலும் தலைவரோடோ, புலிகளோடோ இணைச்சுக் கதைச்சு ஒரு மருந்துக்கும் கொள்கையில்லாத திராவிடக் குழுமம் எண்டதை அடிக்கடி நிருபிக்கின்றியள்.

தம்பி. சபேசன் செய்றது போல பெரியாரையும், தலைவரையும் இணைச்சுக் கதைச்சு, இரண்டு பேரும் ஒரே நிலை எண்ட போலித் தோற்றத்தை ஏற்படுத்த நீங்களும் முனைகின்றியள். இது கொள்கைரீதியான உங்கட தோல்வி என நம்புறன்.

பெரியார் என்ன நோக்கத்தில் செய்ஞ்சார் எண்ட கருத்தாடலை விடுவம். ஏன் என்றால் அவற்ற மனதுக்குள் என்ன உண்மை இருந்ததோ, சூது இருந்ததோ எண்டது பற்றி சபேசன் போல கண்டுபிடிக்க எனக்கு வராது. ஆனா அவர் மூட்டிவிட்ட தீயால இண்டைக்கு எம் சமூகத்தில எத்தனை பிரச்சனைகள் இருக்குது எண்டது பற்றி ஆராய நீங்கள் வருவியள் எண்டால் அதை வரவேற்கலாம்.

அதுக்கு உங்கட ஒருத்தருமே தயார் இல்லை. பழைய சீலை கறகற எண்டமாதிரி பெரியாரைப் பற்றிப் புகழ்ந்து தள்ளிக் கொண்டே இருக்கின்றியள்.

பெரியாரைப் பற்றி எல்லாத் தலைப்பிலும் இழுக்கின்றம் எண்டு சொல்லுறியள். கடந்த சிலநாட்களாக ஓய்ந்திருந்த பெரியார் விவாதம் திரும்பி வரக் காரணமாக அமைஞ்சது சபேசன், பெரியாருக்கும் தேசியத் தலைவருக்கும் முடிச்சுப் போட்டு எழுதிய ஒரு தலைப்பால அதனால் தான் இது திரும்பவும் அவரைப் பற்றி எல்லா இடத்திலும் கதைக்க வைக்கின்றது என நினைக்கின்றன்.

நீங்கள் ஒழுங்கான விவாதி எண்டால் பெரியார் பற்றிய கொள்கையை நியாயப்படுத்த துப்பிருந்தால் அது பற்றிச் சொல்ல வாங்கோ! எதுக்கெடுத்தாலும் தலைவரோடோ, புலிகளோடோ இணைச்சுக் கதைச்சு ஒரு மருந்துக்கும் கொள்கையில்லாத திராவிடக் குழுமம் எண்டதை அடிக்கடி நிருபிக்கின்றியள்.

அண்ணை (இல்லை தம்பிகாவுமிருக்கலாம்) ,

நீங்கள் எழுதினதை ஒருக்காத் திருப்பி வாசியுங்கோ.இங்கே நீங்கள் தான் பெரியார் தான் எல்லாத்தையும் உருவாக்கினார் என்டு சொன்னணியள்.அது பிரபாகரன் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று , எல்லா வரலாற்று உண்மைகளையும், துன்பங்களையும்,துயரங்களையும

  • தொடங்கியவர்

நான் பெரியார் பற்றி ஆரம்பித்த தலைப்புகள் வெகு குறைவு. ஐரோப்பாவில் பெரியார் இயக்கம் ஒன்றுதான பெரியாரை மையப்படுத்தி நான் ஆரம்பித்த தலைப்பு என்று நினைக்கிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம், ராமதாஸ் அறிக்கை ஆகியவற்றை செய்தியாகத்தான் இணைத்தேன்.

ஆனால் இங்கே இந்து மதம் சார்ந்த நிறையக் கருத்துக்களை எழுதியிருக்கிறேன். ஆனால் அப்படி எழுதிய ஒவ்வொரு முறையும், பதிலுக்கு பெரியார் பற்றி கருத்து எழுதி வாதத்தை சிலர் திசை திருப்ப முயல்வது இங்கே வழமையாகப் போய்விட்டது.

நான் தெளிவாகச் சொல்கிறேன். எனக்கு பெரியார் மீது உயர்ந்த எண்ணம் உண்டு. ஆனால் அவரை எல்லோரும் போற்ற வேண்டும் என்ற சிந்தனை எனக்குள் இல்லை. 35 வருடங்களுக்கு முன்பு இறந்து போய்விட்ட அவருக்கு வாக்குச் சேகரிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஆனால் இங்கே ஐரோப்பாவில் எம்மவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போயிருப்பது பற்றி பெரும் கவலை எனக்கு உண்டு. மதங்களிற்குள் வீழ்ந்து போய் கிடக்கும் தமிழர்களிற்கு என்னுடைய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற சிந்தனை எனக்குள் இருக்கிறது.

ஆகவே நான் இந்து மதம், மூட நம்பிக்கைகள் பற்றி பேசுகின்ற போது, அதற்கான பதிலை தாருங்கள். விவாதத்தை பெரியாரை நோக்கி கொணடு போகாதீர்கள்.

பெரியாரை தேசியத் தலைவருடன் ஒப்பிடுவது பற்றி சொல்லியிருந்தீர்கள்.

நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கின்ற இரண்டு பெரும் தலைவர்களை ஒப்பிடுவது எனக்கு தவறாகத் தெரியவில்லை.

என்னுடைய ஒப்பீட்டை வலுவாக்குகின்ற வேலையை நீங்கள்தான் செய்கிறீர்கள்.

தேசியத் தலைவரை நோக்கி எதிரிகள் எறிகின்ற அதே கணைகளை நீங்களும் பெரியாரை நோக்கி எறிகிறீர்கள்.

நீங்கள் எமக்கு எதிரான ஊடகங்களை போய் படித்துப் பாருங்கள். தேசியத் தலைவர் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்கள் சொல்கின்ற அதே குற்றச்சாட்டுகளை, நீங்கள் பெரியார் மீது வைப்பது புரியும்.

;ஆகவே என்னுடைய ஒப்பீட்டை நீங்கள்தான் வலுப்படுத்துகிறீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல வேண்டும்

எமக்கு ஆதரவாக பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் செயற்படுகின்ற திருமாவளவன், ராமதாஸ் போன்ற தலைவர்களை, அவர்கள் பெரியாரின் பெயரை பாவிக்கின்ற ஒரே காரணத்திற்காக ஒரு நிமிடத்திலேயே உங்களால் தரக்குறைவாக கதைக்க முடிகிறது.

அவ்வளவு தூரம் உங்களுக்குள் மதவெறி ஊறிப் போய்கிடக்கிறது.

நீங்கள்தான் அப்படி என்று அல்ல. பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மதம்தான் முதலில். அதன் பிறகுதான் மற்றதெல்லாம் வரும். தங்களை அறியாமலேயே பலர் மதவெறியர்களாக இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.