Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸா: இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு நடுவே ஒரே மருத்துவமனையில் 15 ஆயிரம் பேரின் கதி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளும் இலக்காகியுள்ளன. காஸாவில் குறைந்தது 4 முக்கியமான மருத்துவமனைகள் இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவமனைக்குள் சிக்கியுள்ளனர்.

காஸாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் குண்டு வீசி தாக்கியதாக பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவனையில் உள்ள நோயாளிகள் மருத்துவர்களின் நிலைமை கவலையளிப்பதாக பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபுஅலூஃப் கூறியுள்ளார்.

அதே மருத்துவமனையில் பணியாற்றும் மார்வன் அபு சத்தா என்கிற மருத்துவர், பிபிசியிடம் கூறுகையில், "அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள முக்கியமான அவசர சிகிச்சைப் பிரிவு மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியது. ஒவ்வொரு நொடியும் குண்டு சத்தமும் துப்பாக்கிச் சூடும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மருத்துவமனையை விட்டு யாரும் வெளியே செல்ல முடியாது. யாரும் உள்ளேயும் நுழைய முடியாது. மருத்துவமனையை விட்டு வெளியேறிய மக்கள் சிலர் இஸ்ரேலிய படைகளால் வீதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனையில் குடிநீர், உணவு, மின்சாரம் எதுவுமே இல்லை. வெண்டிலேட்டரில் இருந்த 2 நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர். அதில் ஒரு குழந்தையும் அடங்கும்" என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

"போரை நிறுத்தாவிட்டாலோ அல்லது மருத்துவ உபகரணங்களை வழங்காமல் இருந்தாலோ, அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் இறந்துவிடுவார்கள். மருத்துவமனையே முற்றிலும் மயானமாக மாறிவிடும்" என்று மொகம்மது அபு முகாய்சேப் என்கிற மற்றொரு மருத்துவர் கவலையுடன் கூறியுள்ளார்.

அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் மட்டும் 15,000-க்கும் அதிகமானோர் இருப்பதாக பிபிசியிடம் அந்த மருத்துவமனை இயக்குநர் முகமது அபு சலாமியா கூறினார். அவர் பேசுகையில், "காஸாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் குறி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் தலைப்புச் செய்தி. நாங்கள் அவர்களுக்கும் இந்த மொத்த உலகிற்கும் சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறோம். எங்களோடு ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவக் குழுவினர் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு சேவை செய்வோமே தவிர, இங்கிருந்து செல்ல மாட்டோம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தாலும் சரி, இங்கிருந்து செல்ல மாட்டோம்." என்று உறுதிபடக் கூறினார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடிய, போரில் காயமடைந்த முகமது ரய்ஹான் பிபிசியிடம் பேசிய போது, நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அரபு நாடுகள் எங்களோடு துணை நிற்க வேண்டும். நாங்கள் சோர்ந்துவிட்டோம். இறைவனின் கருணையால் மட்டுமே உயிர் வாழ்கிறோம். எங்களுக்காக கொஞ்சம் உணர்ந்து செயல்படுங்கள். நாங்களும் மனிதர்கள்தான்." உருக்கமாக கூறினார்.

அல் ஷிஃபா மருத்துவமனையில் எரிவாயு தீர்ந்துவிட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இன்குபேட்டரில் இருந்த ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும் மேலும் 45 குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை வளாகங்களுக்கு கீழே சுரங்கம் அமைத்து ஹமாஸ் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இதனை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

இஸ்ரேல் பிரதமரின் பதில் என்ன?

காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையின் நிலைமை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.

மின்சாரம் இல்லாததால், இரண்டு குறைமாதக் குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 37 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மருத்துவமனையில் தண்ணீர், உணவு, மின்சாரம் தீர்ந்து விட்டதாக மற்றொரு மருத்துவர் கூறினார்.

இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, 'இது உண்மையல்ல. ஹமாஸ் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறது. அல் ஷிஃபா மருத்துவமனையில் மின்சாரம் உள்ளது, எல்லாம் வேலை செய்கிறது." என்றார்.

இஸ்ரேலிய இராணுவம் மருத்துவமனையின் மேலாளர்களுடன் பேசி வருவதாகவும், ஹமாஸ் தலைமையகம் கட்டிடத்தின் கீழ் இருப்பதாகக் கூறுவதாகவும் அவர் கூறினார்.

அல்-ஷிஃபா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் குண்டுவீச்சு நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அந்நாடு கூறியுள்ளது. உண்மையில் ஹமாஸ் தான் அங்கு தாக்குதலை நடத்தியது என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் 'தீவிர கவலை' தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

அல் ஷிஃபா மருத்துவமனை

காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவுடனான தகவல் தொடர்பை நேற்றிரவு இழந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. மேலும் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து அந்த அமைப்பு "கடுமையான கவலைகளை" வெளிப்படுத்தியது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் முன்பு பிபிசியிடம் "எரிபொருள் பற்றாக்குறையால் அல்-ஷிஃபா மருத்துவமனை செயல்படவில்லை" என்று கூறினார்.

இன்று காலை, ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர், இருதய சிகிச்சை பிரிவு அழிக்கப்பட்டுவிட்டதாக மேலும் கூறினார்.

இஸ்ரேல் தனது படைகள் மருத்துவமனையைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பலமுறை மறுத்துள்ளது, ஆனால் அப்பகுதியில் ஹமாஸ் போராளிகளுடன் மோதல்களை ஒப்புக் கொண்டுள்ளது.

அல்-குத்ஸ் மருத்துவமனை

அல்-குத்ஸ் மருத்துவமனையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும், இனி செயல்படவில்லை என்றும் இன்று காலை, பாலத்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி (PRCS) கூறியது. மின்சாரம் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஊழியர்கள் இன்னும் முயற்சி செய்து வருவதாக அது கூறியது.

மருத்துவமனை இஸ்ரேலிய டாங்கிகளால் சூழப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அந்த அமைப்பு முன்பு கூறியிருந்தது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ,"தற்போது நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கை" பற்றிய பிரத்யேகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தோனேசிய மருத்துவமனை

வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையில் வான்வழித் தாக்குதலில் காயமடைந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்க முயற்சிக்கும் வீடியோவை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று காலை பகிர்ந்துள்ளது. மருத்துவமனையின் மருத்துவர்களும் தங்களிடம் மின்சாரம் அல்லது ஆக்ஸிஜன் இருப்பு இல்லை என்றும், கைமுறையாக உயிர்ப்பிக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்றும் கூறுகிறார்கள்.

ரான்டிசி மற்றும் அல்-நஸ்ர்

ஒரு சில ஊழியர்கள் மற்றும் படுத்த படுக்கையான நோயாளிகள் தவிர மற்ற அனைவரும் இந்த குழந்தைகள் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதாக நேற்று, இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) என்ற மருத்துவ தொண்டு நிறுவனம், ரான்டிசி இஸ்ரேலிய டாங்கிகளால் சூழப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியது.

https://www.bbc.com/tamil/articles/c6pdzve73p4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை- புதிதாக பிறந்த 37 குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து

Published By: RAJEEBAN     13 NOV, 2023 | 07:04 AM

image

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அவலம் தொடர்கின்றது.

புதிதாக பிறந்த மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது என பிபிசிக்கு தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர்  இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக பிறந்த குழந்தைகளிற்கான தீவிரகிசிச்சை பிரிவில் மின்சாரம் செயல் இழந்துள்ளதால் 37 குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது.இந்த குழந்தைகளை இருதயசத்திரசிகிச்சை பிரிவிற்கு மாற்றியுள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தைகளின் படங்களை மருத்துவமனை வட்டாரங்கள் பிபிசிக்கு அனுப்பிவைத்துள்ளன.

al_shifa_babies.jpg

இந்த குழந்தைகள் அனைவரையும் இழக்கப்போகின்றோம் என அஞ்சுகின்றேன் என சத்திரகிசிச்சை பிரிவின் தலைவரான வைத்தியர் மர்வன் அபு சடா தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசாவின் பிரதான மருத்துவமனையில் நிலைமை மிகமோசமானதாக ஆபத்தானதாக காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் முற்றுமுழுதாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது உணவும் தண்ணீரும் இல்லாத நிலை காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையை சுற்றி தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகங்களையும் குண்டுவீச்சினையும் செவிமடுக்க முடிவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அல்ஸிபா தற்போது ஒரு மருத்துவமனையாக இயங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/169148

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் தாக்குதல் - அல்ஸிபா மருத்துவமனையில் மூன்று தாதிமார் பலி

Published By: RAJEEBAN   13 NOV, 2023 | 01:53 PM

image

அல்ஸிபா மருத்துவமனையில் மூன்று மருத்துவ தாதிமார் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர் என  ஐநா தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு அருகில் விமானக்குண்டுவீச்சும் மோதல்களும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தகவலை ஐநா வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையின் ஒக்சிசன் உற்பத்தி நிலையம் இருதயசத்திரசிகிச்சை பிரிவு தண்ணீர் தொட்டிகள் உட்பட முக்கியமான கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுவதை மருத்துவமனையின் சத்திரகிசிச்சை பிரிவின் தலைவர் வைத்தியர் மர்வன் அபு சடா பெரும் பொய் என நிராகரித்துள்ளார்.

நாங்கள் பொதுமக்கள் நான் மருத்துவர் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் நோயாளிகள் உள்ளனர் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் வேறு எவரும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169177

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்: ஜோ பைடன்

காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை அல்-ஷிபா. இந்த மருத்துவமனையில் காயம் அடைந்தோர், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனை இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மறைந்து கொண்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இஸ்ரேல் குற்றச்சாட்டை காசா மறுத்துள்ளது.

மருத்துவனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயல் இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இன்குபெட்டரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.

மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும்? என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “மருத்துவமனையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது கவலையை இஸ்ரேலிடம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு, “மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

https://thinakkural.lk/article/281188

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் பிணங்கள்; கல்லறையாகும் காஸா மருத்துவமனை - உலக சுகாதார அமைப்பு தரும் அதிர்ச்சித் தகவல்கள்

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இருக்கும் சில தகவல்கள் உங்களைச் சங்கடப்படுத்தலாம்.)

உலக சுகாதார அமைப்பு (WHO) காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை ‘கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டதாக’ தெரிவித்துள்ளது.

காஸாவின் வடக்கில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில்தான் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. இதனால் இந்த மருத்துவமனை கடந்த சில நாட்களாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தீவிரமான தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.

ஆனால், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸும் அல்-ஷிஃபா மருத்துவமனையும் மறுத்துள்ளன.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, அல் ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர், சுமார் 600 பேர் மருத்துவமனையில் தங்கியுள்ளனர், மற்றவர்கள் அதன் பிற அறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர், என்றார்.

"மருத்துவமனையைச் சுற்றியும் சடலங்கள் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தவோ, புதைக்கவோ அல்லது பிணவறைக்கு எடுத்துச் செல்லவோ முடியாத சூழ்நிலை உள்ளது," என்று அவர் கூறினார். "மருத்துவமனை வேலை செய்யவில்லை. இது கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டது," என்று லிண்டெமியர் கூறினார்.

 
இஸ்ரேல், ஹமாஸ், காஸா, அல் ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சுமார் 600 பேர் மருத்துவமனையில் தங்கியுள்ளனர்

அழுகும் சடலங்கள், இறக்கும் குழந்தைகள்

மருத்துவமனையில் சடலங்கள் குவிந்து அழுகிப்போகத் துவங்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அழுகிய உடல்களைப் புதைப்பதறகாக மருத்துவமனையை விட்டு வெளியேற இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்காததால், நாய்கள் இப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து சடலங்களை உண்ணத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் மொஹமட் அபு செல்மியா பிபிசியிடம் தெரிவித்தார்.

மின்தடை காரணமாக இன்க்யுபேட்டர்களில் வைக்கப்பட முடியாமல் இருக்கும் டஜன் கணக்கான குறைமாத குழந்தைகளின் நிலை குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. அவற்றில் ஏழு குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டதாக செல்மியா கூறினார்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, அல் ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மின்தடையால் இன்க்யுபேட்டரிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தைகள்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த ஆலோசகர் மார்க் ரெகெவ், குழந்தைகளை வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் ‘நடைமுறை தீர்வுகளை’ வழங்குவதாகவும், ஆனால் ஹமாஸ் அதனை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

கடந்த அக்டோபர் 7-ஆம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல் நடத்திவருகிறது. அப்போதிருந்து அல்-ஷிஃபாவைத் தவிர, காஸா பகுதி முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடை உள்ளிட்ட பரவலான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

 
இஸ்ரேல், ஹமாஸ், காஸா, அல் ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

நோயாளிகளை வெளியேற்ற உதவ இஸ்ரேலிய ராணுவம் இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை

‘இதுவரை 32 பேர் இறந்துள்ளனர்’

மருத்துவர் மொஹமட் அபு செல்மியா, அல்-ஷிஃபா மருத்துவமனையிலுள்ள மோசமான நிலைமை குறித்து பிபிசியிடம் கூறுகையில், அங்கு சமீபத்திய நாட்களில் 32 பேர் இறந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவர்களில் மூன்று குறைமாத குழந்தைகள் மற்றும் 7 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தனர் என்று அவர் கூறினார். டயாலிசிஸ் தேவைப்படும் இன்னும் பல நோயாளிகள் சிகிச்சை கிடைக்காததால் ‘அடுத்த இரண்டு நாட்களில் இறக்கும் அபாயம் உள்ளது’, என்றார்.

நோயாளிகள் அல்லது குறைமாதக் குழந்தைகளை வெளியேற்றுவது தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் ஏதேனும் தெரிவித்ததா என்று அபு செல்மியாவிடம் பிபிசி கேட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை என்றார். “அதற்கு பதிலாக நாங்கள் அவர்களை அணுகினோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. குறைமாத குழந்தைகளை வெளியேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை," என்றார்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, அல் ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மருத்துவமனையில் சடலங்கள் குவிந்து அழுகிப்போகத் துவங்கியுள்ள

அடக்கம் செய்யப்படாமல் கிடக்கும் 150 உடல்கள்

மேலும் பேசிய மருத்துவர் அபு செல்மியா, அவர் மருத்துவமனையின் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அங்கு கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முயற்சித்து வருவதாகக் கூறினார். சுமார் 150 சடலங்கள் மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறினார்.

ஆனால் தற்போது அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனைக்குள் வந்த நாய்கள் பிணங்களை உண்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நோயாளிகளை வெளியேற்ற உதவ இஸ்ரேலிய ராணுவம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவர் மீண்டும் கோரிக்கை வைத்தார். "எந்த நோயாளியும் இறக்கக் கூடாது. அவர்கள் உயிர் பிழைக்க வேண்டும், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சேவையைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

 

அல் ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்: பைடன்

அல் ஷிஃபா மருத்துவமனையின் நிலைமை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.

"மருத்துவமனையின் மீது குறைவான தாக்குதல் நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் ‘இஸ்ரேலியர்களுடன் தொடர்பில்’ இருப்பதாகவும் கூறினார்.

இதற்கு முன் அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளரான மேத்யூ மில்லர் அமெரிக்கா ‘பொதுமக்கள் தாக்குதலில் சிக்குவதை அமெரிக்கா விரும்பவில்லை’ என்றும் ‘ஹமாஸ் தனது கட்டுப்பாட்டுத் தளங்களாகப் பயன்படுத்திவரும் மருத்துவமனைகளை உடனடியாகக் காலி செய்வதைப் பார்க்க விரும்புவதாகவும்’ கூறியிருந்தார்.

"ஹமாஸ் வைத்திருக்கும் எரிபொருள் இருப்புகளில் ஒரு பகுதியை எடுத்து, வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c032nmmg5gzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்ஸிபா மருத்துவமனையின் கீழ் ஹமாசின் கட்டளைப்பீடம் - அமெரிக்கா

Published By: RAJEEBAN    15 NOV, 2023 | 10:55 AM

image

காசா  மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் அடியில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த ஹமாஸ் அங்கிருந்தே இஸ்ரேலின் மீது தாக்குதல்களை திட்டமிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள சுரங்கங்களில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக  அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளமை இதுவே முதல்தடவை.

எனினும் ஹமாஸ் இதனை நிராகரித்துள்ளது.

அமெரிக்காவிடம் பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் உள்ளன அவை இதனை உறுதி செய்கின்றன என குறிப்பிட்டுள்ள கிர்பி ஹமாசும் இஸ்லாமிக் ஜிகாத்தும் மருத்துவமனைக்கு கீழே உள்ள சுரங்கப்பாதைகளில் ஆயுதங்களையும் பணயக்கைதிகளையும் மறைத்துவைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துள்ளதால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சவாலானது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169325

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

200 உடல்களை அல்ஸிபா மருத்துவமனைக்குள்ளேயே புதைத்துள்ளோம் - வைத்தியர்கள் தகவல்

Published By: RAJEEBAN    15 NOV, 2023 | 05:46 AM

image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனைக்குள் உயிரிழந்த 200 பேரின் உடல்களை மருத்துவமனைக்குள்ளேயே பாரிய புதைகுழியொன்றிற்குள் புதைத்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்குள் 200 உடல்களை புதைத்துள்ளதாக மருத்துவர் அட்னான் அல் பேர்ஸ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் 200 உடல்களை புதைத்தனர் சுமார் ஆறுமணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உடல்கள் பல நாட்களாக சிதைவடையும் நிலையில் கைவிடப்பட்டிருந்தன இதன் காரணமாக பாரியமனித புதைகுழியொன்றை தவிர மருத்துவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை என எலும்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவரான வைத்தியர் அல்பேர்ஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் கொல்லைபுறத்திலிருந்து வரும் துர்நாற்றம் காரணமாக எங்களால் ஜன்னல்களை திறக்க முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் அங்கு 120 உடல்கள் காணப்பட்டன அவற்றையும் புதைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர பிரேத அறையில் 80 உடல்கள் காணப்பட்டன – அதிகமாக பெண்கள் சிறுவர்களின் உடல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169304

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஹமாஸ் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துள்ளதால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சவாலானது என அவர் தெரிவித்துள்ளார்.

இப்பிடி சொல்லித்தானே எங்கட சனத்தையும் முள்ளிவாய்க்காலில் கோத்துக்கொத்தாய் கொன்று போட்டீர்கள்!
காற்று எப்போதும் ஒரே திசையில் அடிக்காது!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அல்ஸிபா மருத்துவமனையின் கீழ் ஹமாசின் கட்டளைப்பீடம் - அமெரிக்கா

 

சதாம் பயங்கரமான ஆயுதங்களை வைத்துள்ளார் என்று சொன்ன நீங்கள் இதையும் சொல்வீர்கள்,

நீங்கள் சொல்வதுதானே பலருக்கு வேதவாக்கு☠️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் டாங்கிகளை நுழைத்ததா இஸ்ரேல் ராணுவம்? பல ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து

அல்- ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல்

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ட்ராஃபிடிங்
  • பதவி, பிபிசி உலக செய்திகள்
  • 15 நவம்பர் 2023

காஸாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவினுள் ஹமாஸுக்கு எதிரான துல்லியமான தேர்ந்த தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு உறைவிடமாக அந்த மருத்துவமனை உள்ளது.

இந்த தாக்குதல் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நடைபெறுவதாகவும் இது அவசியமான ஒன்று எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.

தங்கள் படையில் மருத்துவக் குழுவினரும், அரேபிய மொழி தெரிந்தவர்களும் இருப்பதாகவும் அவர்கள் இந்த சிக்கலான சூழலை எதிர்கொள்ள பயிற்சி பெற்றவர்கள் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது. அவர்களின் நோக்கம், “ஹமாஸ் மனித கேடயங்களாக பயன்படுத்தும் பொதுமக்களை தாக்குவது அல்ல” என்று உறுதி அளித்துள்ளது.

“மருத்துவமனையில் உள்ள அனைத்து ஹமாஸ் தீவிரவாதிகளும் சரணடைய வேண்டும்” என்றும் அறிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் உள்ளே ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என காஸா அதிகாரிகளை ஏற்கெனவே எச்சரித்ததாகவும், ஆனால் அது நடைபெறவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையை தங்கள் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது. சர்வதேச குழு வந்து நேரில் இதனைப் ஆய்வு செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை மீதான தாக்குதலை “போர் குற்றம்”, “தார்மீக குற்றம்”, “மனிதத்துக்கு எதிரான் குற்றம்” என்று கண்டித்துள்ளது.

இஸ்ரேல் பொதுமக்கள் பயன்படுத்தும் இடத்தை தாக்குகிறது, ராணுவ தளவாடத்தை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தரும் தகவலின் உண்மைத்தன்மையை பிபிசி உடனே உறுதி செய்ய முடியவில்லை.

அல்- ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

அல்-ஷிஃபா மருத்துவமனை உள்ளே இஸ்ரேல் ராணுவம்

அல் ஷிஃபா மருத்துவமனை உள்ளேயும் அதனை சுற்றியும் நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருக்கும் ஒருவர், புதன்கிழமை அதிகாலை இஸ்ரேல் ராணுவத்தினர் மருத்துவமனை உள்ளே“புகைக் குண்டை வீசினர்” என்று பிபிசியிடம் தெரிவித்தார். இதனால் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

“இஸ்ரேல் ராணுவத்தினர் சிறப்பு அறுவை சிகிச்சை துறையின் உள்ளே நுழைவதை நான் பார்த்தேன்” என்று நேரில் பார்த்த காதர் அல்-சானௌன் தெரிவித்தார்.

“மருத்துவமனை உள்ளே ஆறு டாங்கிகளை பார்த்தேன். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கமோண்டா படையினர் இருந்தனர். அவர்கள் பிரதான அவசர சிகிச்சை துறையின் உள்ளே நுழைந்தனர். சிலர் முக கவசம் அணிந்திருந்தனர். அவர்கள் அரேபிய மொழியில், “நகராதீர், நகராதீர்” என்று கத்தினர்.

மருத்துவமனையின் உள்ளே இருக்கும் பத்திரிகையாளர் ஒருவர், இஸ்ரேல் ராணுவத்தினர் ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு தளமாக சென்று நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என ஒவ்வொருத்தரையும் விசாரிக்கின்றனர் என்று தெரிவித்தார். அரேபிய மொழி தெரிந்த மருத்துவர்கள் மற்றும் நபர்கள் உடன் இருந்தனர் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேல் ராணுவம் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் துப்பாக்கி சூடு எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அல்- ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

காஸா சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளர், “அடுத்த சில நிமிடங்களில் அல்-ஷிஃபா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என இஸ்ரேல் தெரிவித்தது” என கூறியதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டது.

காஸா அதிகாரிகள் தாக்குதல் குறித்து செஞ்சிலுவை சங்கத்தை எச்சரித்ததாக அஷ்ரஃப் அல்-கித்ரா தெரிவித்தார்.

மருத்துவமனையில் நிலைமை மோசமாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் திங்கள்கிழமை எச்சரித்தது. சுமார் 200 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

மின் இணைப்பு துண்டிப்பு காரணமாக மருத்துவமனையில் அத்தியாவசிய மருத்துவ கருவிகள் செயல்படவில்லை என்று அதன் இயக்குநர் தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாததால் பல குறைமாத குழந்தைகளுக்கும், டயாலிசிஸ் தேவைப்படும் 45 சிறுநீரக நோயாளிகளுக்கும் முறையான சிகிச்சை வழங்க இயலவில்லை என உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

அல்- ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல்
 

அமெரிக்க உளவுத்துறை கொடுத்த தகவல்

“ஒரு மருத்துவமனையை வான்வழியாக தாக்குவதை நாங்கள் ஆதரிக்கவில்லை. எதிர்த்து போராட முடியாத, உடல் நலம் குன்றிய, அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை.” என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததை அவர் நினைவு கூறினார்.

மறுபுறம், அமெரிக்க அதிபரும் இஸ்ரேல் பிரதமரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கர்கள், பல குழந்தைகள் உட்பட ஹமாஸால் கடத்தப்பட்ட பிணை கைதிகளை விடுவிப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேசினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனையின் கீழ் ஹமாஸ் ஆயுத தளவாடம் இருப்பதாக தனது உளவுத்துறை தெரிவித்துள்ளதாக அமெரிக்கா முதல் முறையாக அறிவித்தது. அமெரிக்கா அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், மருத்துவமனையின் உள்ளே இஸ்ரேல் ராணுவத்தினர் நுழைந்தனர்.

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபரே “முழு பொறுப்பு” என்றும் இஸ்ரேலுடன் இந்த தாக்குதலில் அமெரிக்கா நிற்கிறது என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை, மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த அனுமதி அளித்துள்ளது என்று ஹமாஸ் கூறியுள்ளது.

அல்- ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

 

மயானமாகி விட்ட மருத்துவமனை

மருத்துவமனையின் கீழே உள்ள சுரங்கங்களில் ஹமாஸ் இயங்கி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் ஹமாஸ் இதனை மறுத்துள்ளது.

மருத்துவமனையை விட்டு வெளியே சென்றால் படுகாயம் அல்லது மரணம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என மருத்துவமனை ஊழியர் கூறுகிறார்.

“தொடர் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீச்சுகள் மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள அவசர நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது” என உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியெசுஸ் கூறியுள்ளார்.

உணவு மற்றும் ஜெனரேட்டர்களை இயக்க எரிபொருள் ஆகியவை தீர்ந்து விட்டதாக பல்வேறு ஆதாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நேரங்களில் சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெயர், “மருத்துவமனையை சுற்றி தகனம் செய்யக் கூட எடுத்து செல்லப்படாத கேட்பாரற்று பிணங்கள் கிடக்கின்றன” என்று திங்கள்கிழமை கூறியிருந்தார்.

“மருத்துவமனை, மருத்துவமனை போல் செயல்படவில்லை, கிட்டத்தட்ட மயானம் ஆகிவிட்டது” என்றார்.

.https://www.bbc.com/tamil/articles/cnlpg2qz0g0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்-ஷிஃபா மருத்துவமனையின் கீழே ஹமாஸின் ரகசிய சுரங்கம் உள்ளதா? இஸ்ரேலுக்கு என்ன கிடைத்தது?

அல்-ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம்,IDF

படக்குறிப்பு,

காஸா மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் இருப்பதாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள படம். பிபிசி இதைச் சரிபார்க்கவில்லை.

18 நவம்பர் 2023, 02:53 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையிலான மோதல் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

அந்த மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாகக் கொண்டு வந்துள்ளது.

 

மருத்துவமனைக்கு அடியில் சுரங்க அமைப்புகளா?

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,IDF

இந்நிலையில், அல்ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸின் சுரங்கம் இருப்பதாகக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை `எக்ஸ்` (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தப் புகைப்படங்களை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

"அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே ஹமாஸ் ஆயுதக்குழுவின் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்தப் பதிவில் காஸா மருத்துவமனைக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலின் காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, காஸாவின் முக்கியமான குழந்தைகள் மருத்துவமனையான அல்-ரன்டிசியா மருத்துவமனைக்கு அடியிலும் "மற்றுமொரு ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் சுரங்கத்தை" கண்டறிந்துள்ளதாகக் கூறும் இஸ்ரேல் ராணுவம், அந்த சுரங்கப் பாதையின் உள்ளே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.

 
இஸ்ரேல் - பாலத்தீனம்
படக்குறிப்பு,

அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஓர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகள்.

அதோடு, இதே மருத்துவமனையில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கும் காணொளி ஒன்றையும் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்தது.

மேலும், அல்-கட்ஸ் மருத்துவமனையில் இருந்து "பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்" கண்டெடுக்கப்பட்டதாகக் காட்டும் புகைப்படத்தையும் இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் பதிவிட்டிருந்தது.

மருத்துவமனைகளுக்கு உள்ளே இருந்தும் அதன் அடியிலிருந்தும் ஹமாஸ் குழுவினர் இயங்கி வருவதாக இஸ்ரேல் கூறி வரும் நிலையில், தங்கள் கூற்றை ஆதரிக்கும் உளவுத் தகவல்களும் இருப்பதாகத் தெரிவித்து வருகிறது.

ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் இந்தக் கூற்றை ஹமாஸும் மருத்துவமனைகளின் நிர்வாகமும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

அல் ஷிஃபா மருத்துவமனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் தங்களது சோதனைகளைத் தொடர்ந்து வருகிறது.

கண்டெடுக்கப்பட்ட பணயக் கைதிகளின் உடல்கள்

இஸ்ரேல்-பாலத்தீனம்

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 17) மாலை வரை, ஹமாஸ் குழுவினரால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் இருவரின் உடல்கள் அந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டடத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

அதில் 65 வயதான யஹுடிட் வைஸ் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நோவா மார்சியானோ இருவருடைய உடல்கள், அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள கட்டடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.

இவர்களுள் நோவா மார்சியானோ உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், அவருடைய உடலை அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு வீட்டிலிருந்து கண்டெடுத்ததாக வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

 

'அன்பான பாட்டி'

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,FAMILY HANDOUT

படக்குறிப்பு,

யஹுடிட் வைஸ்

காஸா எல்லைக்கு அருகேயுள்ள பியரி எனும் பகுதியைச் சேர்ந்த யஹுடிட் வைஸ் தன்னுடைய வீட்டிலிருந்து பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யஹுடிட் வைஸ் அந்த நோயிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்தார். ஹமாஸ் குழுவினரால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டபோது அவர் தன்னுடைய மருத்துகளைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை என, `பிரிங் தெம் ஹோம் நவ்` (Bring Them Home Now) என்னும் குழு தெரிவித்துள்ளது. இவருடைய உடல் 16ஆம் தேதி அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள கட்டடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

யஹுடிட் வைஸின் கணவர் ஷ்மூயெல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"முழுநேரமும் அன்பான பாட்டியாக இருப்பவர்" என யஹுடிட் வைஸ் குறித்து தெரிவித்துள்ள `பிரிங் தெம் ஹோம்` இணையதளம், கலாசாரம், விளையாட்டு, பயணம், பேக்கிங் உள்ளிட்டவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என விவரித்துள்ளது.

அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

"துரதிருஷ்டவசமாக, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் யஹுடிட் கொல்லப்பட்டார். சரியான நேரத்தில் எங்களால் அவரைச் சென்றடைய முடியவில்லை," என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். யஹுடிட் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்களை அவர் அளிக்கவில்லை.

 

நோவா மார்சியானா

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

மற்றொருவரான இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 19 வயதான நோவா மார்சியானாவின் உடல் இருக்கும் இடத்தை இஸ்ரேல் உளவு அமைப்பால் வழிநடத்தப்படும் படையினர் துல்லியமாகக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இதையடுத்து, நோவாவின் உடல் இஸ்ரேலில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹகாரி தெரிவித்தார்.

நோவாவின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பணயக் கைதிகள் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தங்களால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் காஸா நகரத்திற்குள்ளேயே "பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்க அமைப்புகளுக்குள்" மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

நோவா மார்சியானா எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த விவரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை.

ஆனால், நவம்பர் 9 அன்று இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தான் நோவா இறந்ததாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், ஹமாஸின் இந்தக் கூற்றை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,IDF

படக்குறிப்பு,

நோவா மார்சியானா

நோவா நஹல் ஓஸ் கிபுட்ஸில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இஸ்ரேல்-காஸா எல்லை வழியாக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் நோவா சிக்கினார்.

தாக்குதல் நடந்த அன்று காலையில் தனது மகளுடன் கடைசியாகப் பேசியதாக நோவாவின் தாயார் அடி மார்சியானா ஒரு பேட்டியில் கூறினார்.

தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அழைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும் தன் மகள் தெரிவித்ததாக அவர் கூறினார்.

"துப்பாக்கிச் சூடு, அலறல் சத்தத்தை நான் கேட்கவில்லை. அரை மணிநேரம் கழித்து நான் அவளின் செல்போனுக்கு செய்தி அனுப்பினேன், ஆனால் அவள் பதில் அனுப்பவில்லை," என அவர் கூறினார்.

கடந்த திங்கள்கிழமை ஹமாஸ் வெளியிட்ட காணொளியில் நோவா தோன்றினார். இதை "உளவியல் பயங்கரவாதம்" என இஸ்ரேல் தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/articles/cjrpe210njvo

  • கருத்துக்கள உறவுகள்

அல் ஷிஃபா மருத்துவமனைக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

காசா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையின் அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை 1 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அல் ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர்கள் 1 மணி நேரத்திற்குள் அனைவரையும் வெளியேற்றுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=180299

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.