Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று!

05-11.jpg

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் ஆரம்பிப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து இந்த தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமைத் தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/282103

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1st T20I (N), Visakhapatnam, November 23, 2023, Australia tour of India

 

Australia FlagAustralia        (20 ov) 208/3

India chose to field.

Current RR: 10.40    • Last 5 ov (RR): 57/2 (11.40)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெறும் இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே… இந்திய அணி கெப்டனுக்கு வந்த சோதனை

Capture-19.jpg

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய கிரிக்கெட் தெரிந்த அனைத்து தரப்பு மக்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

இதற்கிடையே இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கெப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா டி20 அணியின் 9ஆவது கெப்டன் இவராவார்.

முதன்முறையாக கெப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதன்முறையாக கெப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான செய்தியாளர்கள் கேள்வி கேட்க அமர்ந்திருப்பார்கள் என உற்சாகமாக வந்தார்.

ஆனால், அங்கே இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இது அவருக்கும், பிசிசிஐ-க்கும் நிச்சயமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/282145

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Australia FlagAustralia                  208/3
India FlagIndia          (6.1/20 ov, T:209) 64/2

India need 145 runs in 83 balls.

Current RR: 10.37   • Required RR: 10.48

 • Last 5 ov (RR): 52/1 (10.40)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
AUS FlagAUS
208/3
IND FlagIND
(19.5/20 ov, T:209) 209/8

India won by 2 wickets (with 1 ball remaining)

PLAYER OF THE MATCH
80 (42)

ஒரு பந்து இருக்கும் நிலையில் இந்தியா வென்றுவிட்டது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

வெறும் இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே… இந்திய அணி கெப்டனுக்கு வந்த சோதனை

Capture-19.jpg

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய கிரிக்கெட் தெரிந்த அனைத்து தரப்பு மக்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

இதற்கிடையே இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கெப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா டி20 அணியின் 9ஆவது கெப்டன் இவராவார்.

முதன்முறையாக கெப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதன்முறையாக கெப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான செய்தியாளர்கள் கேள்வி கேட்க அமர்ந்திருப்பார்கள் என உற்சாகமாக வந்தார்.

ஆனால், அங்கே இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இது அவருக்கும், பிசிசிஐ-க்கும் நிச்சயமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/282145

எல்லாம் ஜ‌பிஎல் விளையாட்டால் நிறைய‌ சர்வ‌தேச‌ போட்டிக‌ள் குறுகிய‌ கால‌த்தில் வைக்க‌ வேண்டி இருக்கு...........உல‌க‌கோப்பை முடிந்து ஒரு கிழ‌மையும் ஆக‌ வில்லை அத‌ற்கிடையில் இந்த‌ போட்டி...........இந்த‌ போட்டிய‌ த‌ள்ளி போட்டு இருக்க‌லாம் அடுத்த‌ மாத‌ம்...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூர்ய குமார் யாதவ்: உலகக் கோப்பையில் திணறியவர் ஆட்ட நாயகனானது எப்படி?

இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி கடைசி நேர பரபரப்புக்குப் பிறகு வெற்றி பெற்றது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் முழுவதுமே சரியாக ஆடாத சூர்ய குமார் யாதவ் இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி சேஸிங்கின்போது கடைசி ஓவரில் ஆட்டம் ஒட்டுமொத்தமாகப் மாறி கையைவிட்டுச் செல்லும் நிலைக்குச் சென்றது. கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் வெற்றிக்குத் தேவை. ரிங்கு சிங் களத்தில் இருந்தார். சீன் அபாட் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரிங்கு சிங் 2-ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

இந்திய அணி வெற்றிக்கு 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்ததால், இந்தியாவின் வெற்றி உறுதியானது என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால், 3-வது பந்தில் அக்ஸர் படேல்-2 ரன்கள் சேர்த்த நிலையில் அபாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 
இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்ச்சி

அடுத்து களமிறங்கிய ரவி பிஷ்னோய் வந்தவேகத்தில் ரன் அவுட் ஆகினார், அர்ஷ் தீப் அடுத்து பேட் செய்யவந்தார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் வெற்றிக்குத் தேவை. 5-பந்தைச் சந்தித்த ரிங்கு சிங் ஒரு ரன் எடுத்து 2 ஆவது ரன் ஓட முயன்றபோது, அர்ஷ்தீப் சிங்கும் ரன் அவுட் ஆகி இந்தியாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட் காலியானது.

கடைசிப்பந்தில் இந்திய அணி வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. எளிதாக வெற்றி பெறக்கூடிய ஆட்டத்தை இப்படி ஹைபிரஷர் ஆட்டமாக இந்திய பேட்டர்கள் மாற்றிவிட்டனர்.

அபாட் வீசிய கடைசிப்பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

கேப்டன் பதவி ஏற்று முதல் ஆட்டத்திலேயே சூர்யகுமார் யாதவ் பாஸ் ஆகியுள்ளார். ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் யாதவின் வெற்றி

ஹைதராபாத்தில் நேற்று நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்த கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.

இங்கிலிஸ் சதம் வீண்

ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்கிலிஸ் உலகக் கோப்பைக்குத் தேர்வாகி ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் வகையில் பேட் செய்யவில்லை. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்துவைத்து நேற்றைய ஆட்டத்தில் வெளுத்துவாங்கினார். 47 பந்துகளில் சதம் அடித்த இங்கிலிஸ்110 ரன்களில்(8சிக்ஸர்,11பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

ஸ்மித் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவர் அடித்ததுதான் ஆஸ்திரேலிய அணியில் பெரியஸ்கோராகும் மற்றவகையில் எந்த பேட்டரும் ஸ்கோர் பெரிதாக செய்யவில்லை.ஆனாலும், ஜோஷ் இங்கிலிஷ் அடித்த சதம் நேற்றை ஆட்டத்தில் வீணாகிப் போனது. 2வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் சேர்ந்து இங்கிலிஸ் 130 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெருமைக்குரிய தருணம்

வெற்றிக்குப்பின் சூர்யகுமார் யாதவ் பேசுகையில் “ வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்களும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு அதன்பின் வெற்றி பெற்றோம். கேப்டனாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தியாவுக்கு பிரதிநிதியாக இருந்து விளையாடுவது மகிழ்ச்சியான தருணம். பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்த்தேன் ஆனால் இல்லை. சிறிய மைதானம் என்பதால் சிக்ஸர், பவுண்டரி அடிப்பது சுலபமாக இருந்தது. இலக்கைப்பற்றி கவலைப்படாமல் பேட் செய்ய இஷானிடம் தெரிவித்தேன். ரிங்குவின் கடைசி நேர ஆட்டம் அருமை. 3 வேகப்பந்துவீச்சாளர்களும் கடைசி டெத் ஓவர்களில் ரன்கள் ஏதும்வழங்காமல் சிறப்பாகப் பந்துவீசினர்” எனத் தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் முயற்சி

இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்து வந்த சூர்யகுமார் யாதவ் 80 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் கையைவிட்டுச் சென்றுவிடும் என்று ரசிகர்கள் பதற்றப்பட்டனர். ஆனால், ஐபிஎல் நம்பிக்கை நாயகன் ரிங்கு சிங் 19-வது ஓவரில் 7 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அணியை கொண்டு சென்றார். கடைசி ஓவரிலும் வெற்றியை எளிதாக இந்தியஅணி நெருங்கினாலும், அடுத்தடுத்து விக்கெட் சரிவு சற்று பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் அதற்குள் அணியைத் தயார் செய்யும் முனைப்பில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இறங்கியுள்ளன. அதன் முன்னோட்டமாகவே 5 போட்டிகள் கொண்டடி20 தொடரில் ஆஸ்திரேலிய-இந்திய அணிகள் விளையாடுகின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டர்களின் சொர்க்கபுரி

ஹைதராபாத் ஆடுகளம் தட்டையாகவும், பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாகவும் இருந்ததால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் எப்படிப் பந்துவீசினாலும் பேட்டர்களின் பேட்டை நோக்கியே வந்தது. இதனால் இங்கிலிஸ், ஸ்மித் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை வெளுத்து வாங்கி, உரித்து எடுத்தனர்.

தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 13 ரன்களி்ல் பிஸ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2வது விக்கெட்டுக்கு இங்கிலிஸ், ஸ்மித் சேர்ந்தபின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

குறிப்பாக பிஷ்னோய் வீசிய 8-வது ஓவரில் இங்கிலிஸ், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 19 ரன்கள் விளாசினார். அதேபோல பிஸ்னாய் வீசிய 12-வது ஓவரிலும்2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 18 ரன்கள் வெளுத்தார். பிஸ்னாய் வீசிய 15-வது ஓவரில் இங்கிலிஸ் 3 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து வெளுத்தார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த இங்கிலிஸ் 47 பந்துகளில் சதம் அடித்தார். அதாவது அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்தார்.

பவர்ப்ளே ஓவரில்கூட ஆஸ்திரேலிய அணி பெரிதாக ரன்களைச் சேர்க்க முடியாமல் திணறி ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இங்கிலிஸ் களமிறங்கியபின்புதான் ஆட்டம் தலைகீழானது.100 ரன்களை 11.3 ஓவர்களில் எட்டிய ஆஸ்திரேலிய அணி அடுத்த 100 ரன்களை 18.5 ஓவர்களில் எட்டியது. அதாவது, அடுத்த 41 பந்துகளில் 100 ரன்களை எட்டியது. 47 பந்துகளில் சதம் அடித்த இங்கிலிஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆரோன் பிஞ்ச் வைத்திருந்த சாதனையை சமன் செய்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் யாதவுக்கு சோதனை

சூர்யகுமார் இதற்கு முன் மும்பை அணிக்கு 36 முறை கேப்டன்ஷிப் செய்திருந்தாலும் நேற்றைய ஆட்டம்தான் அவரின் திறமைக்கு உரைகல்லாக இருந்தது. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தது, பேட்டர்களின் பேட்டுக்கே பந்து செல்வதால் ரன்ரேட் எகிறுகிறது, பந்துவீச்சாளர்களை எப்படி மாற்றினாலும் இங்கிலிஸ், ஸ்மித் வெளுத்து வாங்கியதால், சூர்யகுமார் சற்று கலங்கிப்போனார்.

இதனால் பவர்ப்ளே ஓவருக்குப்பின் அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் என இருவரையும் சூர்யகுமார் பந்துவீசச் செய்யும் பலனில்லை. அதிலும் ரவி பிஸ்னாய் ஓவரை இங்கிலிஸ் கிழித்து தொங்கவிட்டார். வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவு எடுக்காததால், சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி சற்று முள்கீரிடமாக இருந்தது.

சேஸிங் ஒன்றே நம்பிக்கை

அவரின் நம்பிக்கை அனைத்தும் ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தமுடியவில்லை, சேஸிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் இருந்தது. இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அர்ஷ்தீப் மட்டும் தொடக்கத்தில் ஓரளவுக்க சிறப்பாக வீசினார் ஆனால் கடைசி நேரத்தில் டெத் ஓவர்களில் அவரின் பந்துவீச்சும் பலிகடாவானது.

ரவி பிஸ்னாய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 பேருமே ஓவருக்கு 12 ரன்களை வாரி வழங்கினர். ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிரமம் கொடுக்கும் அளவுக்கு சுழற்பந்துவீச்சில் உயிர் ஏதும் இல்லை. குறிப்பாக லைன் லென்த்தில் பெரும்பகுதியான பந்துகளை வீசவில்லை. ரவி பிஸ்னாய் பந்தை டாஸ் செய்கிறாரே தவிர லைன் லைன்த்தில் வீசாமல் ஓவர் பிட்சாக வீசுவதால் பேட்டர்களுக்கு பெரிய ஷாட்களை ஆட ஏதுவாக இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

திணறிய பந்துவீச்சாளர்கள்

அர்ஷ்தீப், பிரசித்கிருஷ்ணா பந்துவீச்சும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரக்கூடியதாக இல்லை. ஓவருக்கு 3 பந்துகள் மட்டுமே துல்லியமான லைன் லென்த்தில் வீசினர், இதனால் தவறான பந்துகள் வீசப்படும்போதெல்லாம் சிக்ஸர், பவுண்டரிகள் பறந்தன. உலகக் கோப்பைக்கு 6 மாதங்கள் இருக்கும்நிலையில் அதிகமான உழைப்பு அவசியம் என்பது தெரிகிறது.

இந்திய அணியில் 8-வது வரிசைவரை பேட்டர்களை வைத்திருந்தாலும் அதில் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஒருவரும் இல்லை. ஆக்ஸர் படேலை ஆல்ரவுண்டர் வரிசையில் சேர்க்கும் அளவுக்கு பெரிதாக ஏதும் விளையாடவில்லை. பேட்டர்களை நம்பியே இந்திய அணி களமிறங்கியது.

ஆமதாபாத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடுகளம் மெதுவானதால் சூர்யகுமார் யாதவால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. ஸ்லோ பால் வீசி சூர்யகுமாரை எளிதாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வெளியேற்றிவிட்டனர்.

ஆனால், ஹைதராபாத் ஆடுகளம் தட்டையான, கடினமாக இருந்ததால், சூர்யகுமார் யாதவுக்கு அல்வா சாப்பிட்டது போன்று இருந்தது. ஒவ்வொரு பந்தும் பேட்டரின் பேட்டுக்கே வேகமாக வந்ததால், பெரிய ஷாட்களை அடிக்க வசதியாக இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

கெய்க்வாய்டின் டயமண்ட் டக் அவுட்; கிண்டல் செய்த ஸ்டாய்னிஸ்

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், நல்ல தொடக்கத்தை அளித்தாலும், தகவல் பரிமாற்றம் புரிதல் இல்லாததால், கெய்க்வாட் தேவையின்றி ரன்அவுட் ஆகினார். கெய்க்வாட் ரன் அவுட் ஆகியபோது, ஜெய்ஸ்வாலைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ் மிகவும் கிண்டலாக சிரித்தது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையானது. ஜெய்ஸ்வாலும் 8 பந்துகளில் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

டயமண்ட் டக் அவுட் என்பது என்ன?

ஒரு பேட்ஸ்மேன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆவதை டக் அவுட் என்பார்கள். தான் சந்திக்கும் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனால் அதை கோல்டன் டக் அவுட் என்பார்கள். அதுவே இரண்டாவது பந்து என்றால் சில்வர் டக் அவுட் என்றும், மூன்றாவது பந்து என்றால் வெண்கல டக் அவுட் என்றும் கூறுவார்கள்.

எந்தப் பந்தையுமே சந்திக்காமல் அவுட் ஆவதைத்தான் டயமண்ட் டக்அவுட் என்கிறார்கள். டைம்டு அவுட் முறையிலும், எதிர்முனையில் நின்று பந்தைச் சந்திக்காமலேயே ரன் அவுட் ஆவதும் இந்த வகையில் சேரும்.

கெய்க்வாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எந்தப் பந்தையுமே சந்திக்காமல் அவுட் ஆவதைத்தான் டயமண்ட் டக்அவுட் என்கிறார்கள்.

நம்பிக்கையளித்த இஷான் கிஷன், சூர்யகுமார் கூட்டணி

இஷான் கிஷன், சூர்யகுமார் கூட்டணி 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை நிமிர்த்தியது. 3வது விக்கெட்டுக்கு இருவரும் 112 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இஷான் கிஷன் 37 பந்துகளில் அரைசதம் அடித்து 58ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்துவந்த திலக் வர்மாவும் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

சூர்யகுமார், ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி குறித்து ரசிகர்ளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. சூர்யகுமார் 29பந்துகளில் அரைசதம் அடித்து 80ரன்களுடன் வலுவாக இருந்தார். ஆனால் 18-வது ஓவரில் பெஹரன்டார்ப் பந்துவீச்சில் சூர்யகுமார் 80ரன்களில் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சூர்யகுமார், ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி குறித்து ரசிகர்ளுக்கு எந்த சந்தேகமும் இல்லை

எல்லைக் கோட்டி தாண்டி அடித்தும் சிக்ஸர் இல்லை

கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ரிங்கு சிங் 19-வது ஓவரில் பவுண்டரி உள்பட 7 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அபாட் வீசிய முதல் பந்தில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி அடித்து, 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது, 4வது, 5-வது பந்துகளில் வரிசையாக விக்கெட் சரியாக கடைசிப் பந்தில் இந்திய அணி வெற்றி்க்கு ஒரு ரன் தேவைப்பட்டது. கடைசிப்பந்தில் ரிங்கு சிங் லாங்ஆன் திசையில் சிக்ஸர் விளாச இந்திய அணி 214 ரன்கள் சேர்த்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அபாட் கடைசிப்பந்தை நோ-பாலாக வீசியதால், ரிங்கு சங் அடித்த ஷாட்டை சிக்ஸர் கணக்கில் எடுக்காமல் இந்திய அணிக்கு ஒரு ரன் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் 209 ரன்கள் சேர்த்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியிலும் பெஹரன்டார்ப் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசி 6 ரன்ரேட் வழங்கினார். மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஓவருக்கு12 ரன்கள் என்ற ரீதியில் ரன்களை வாரி வழங்கினர்.

https://www.bbc.com/tamil/articles/c1w248lqpnqo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? நாளை 2 ஆவது போட்டி

இந்தியா- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அவுஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 2 ஆவது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

முதல் போட்டியில் அவுஸ்திரேலியா சிறப்பாக பெட்டிங் செய்த போதிலும், இந்திய அணி கெப்டன் சூர்யகுமார் யாதவ் (42 பந்தில் 80 ரன்), இஷான் கிஷன் (39 பந்தில் 58 ரன்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். ரிங்கு சிங் இறுதியில் 14 பந்தில் 22 ரன்கள் எடுத்து பினிஷராக செயற்பட்டார்.

Capture-7-3.jpg

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 8 பந்தில் 21 ரன் எடுத்த போதிலும், ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். இந்த ஜோடி குறைந்தபட்சம் பவர்பிளேயான முதல் ஆறு ஓவர்கள் விளையாடினால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரும். திலக் வர்மா 10 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். இந்த ஆறு பெட்ஸ்மேன்களில் மூன்று பேருக்கு கிளிக் ஆனால் இந்தியாவின் பெட்டிங் டாப்பாக இருக்கும்.

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பிரசித், முகேஷ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முகேஷ் குமார் மட்டுமே குறைவான ரன்கள் (ஓவரில் 29 ரன்கள்) விட்டுக்கொடுத்தார். அதேபோல் அக்சார் பட்டேல் 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஏனைய பந்து வீச்சாளர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

Capture-8-1.jpg

அவுஸ்திரேலியாவை பொறுத்தரை பெட்டிங்கில் ஸ்மித், மேத்யூ ஷார்ட், இங்லிஸ், ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், வடே என உள்ளனர். பந்து வீச்சில்தான் அந்த அணிக்கும் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் பந்து வீச்சில் கவனம் செலுத்தும்.

இரு அணிகளில் சிறப்பாக பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

https://thinakkural.lk/article/282398

  • கருத்துக்கள உறவுகள்
Posted
nd T20I (N), Thiruvananthapuram, November 26, 2023, Australia tour of India
 
IND FlagIND
(7.1/20 ov) 85/1
AUS FlagAUS

Australia chose to field.

https://crichdplayer.com/willow-cricket-live-stream-play

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸி.க்கு எதிரான 2-வது டி20: ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ரிங்கு சிங் அதிரடியால் இந்தியா இமாலய ரன் குவிப்பு

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 நிமிடங்களுக்கு முன்னர்

பவர் ப்ளேவில் சரவெடியாக வெடித்த ஜெய்ஸ்வால்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் பெஹரன்டார்ப்புக்குப் பதிலாக ஆடம் ஸம்பாவும், ஹார்டிக்குப் பதிலாக மேக்ஸ்வெலும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியத் தரப்பில் எந்த மாற்றமும் இல்லை.

கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டாய்னிஸ், நாதன் எல்லிஸ் வீசிய முதல் இரு ஓவர்களில் பெரிதாக ரன்கள் ஏதும் இந்திய பேட்டர்கள் சேர்க்கவில்லை. 3-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். இந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியும் என15 ரன்கள் சேர்த்தனர்.

கெயில் அபாட் வீசிய 4-வது ஓவரை ஜெய்ஸ்வால் உரித்து எடுத்துவிட்டார். ஹாட்ரிக் பவுண்டரிகளை வெளுத்த ஜெய்ஸ்வால், 4வது பந்தில் ஒரு சிக்ஸரும், 5-வது பந்தில் ஒரு சிக்ஸரும் என விளாசி தள்ளி 24 ரன்கள் சேர்த்தார். ஆடம் ஸம்பா வீசிய 5-வது ஓவரில் ஜெய்ஸ்வால், கெய்க்வாட் இருவரும் தலா ஒரு பவுண்டரி என 10 ரன்கள் குவித்தனர்.

நாதன் எல்லீஸ் 6-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் அடிக்காத ஜெய்ஸ்வால், மீண்டும் ஒரு ஹாட்ரிக் பவுண்டரி விளாசி, 24 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அதைஓவரின் கடைசிப் பந்தில் ஜெய்ஸ்வால் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் ஸம்பா கேட்ச் பிடிக்கவே ஜெய்ஸ்வால் 53ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9பவுண்டரி, 2சிக்ஸர்கள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு கெய்க்வாட், ஜெய்ஸ்வால் கூட்டணி 77ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

பவர்ப்ளே முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் குவித்தது.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஷான் கிஷன் அதிரடி

அடுத்து இஷான் கிஷன் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். இருவரும் சேரந்து நிதானமாக ஆடியதால் ரன்ரேட் வேகம் குறையத் தொடங்கியது, பவுண்டரி, சிக்ஸர்கள் பெரிதாக ஏதும் அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்தது.

மேக்ஸ்வெல் 14-வது ஓவரை வீசியபோது அவரை இஷான் கிஷன் குறிவைத்தார். மேக்ஸ்வெல் ஓவரில் 2-பந்தில்சிக்ஸர் விளாசிய இஷான், 3-வது பந்தில் பவுண்டரி விளாசினார். கெய்க்வாட் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் விளாசினார். மேக்ஸ்வெல் ஓவரில் மட்டும் 23 ரன்கள் சேர்த்தனர்.

தன்வீர் சங்கா வீசி 15-வது ஓவரில் இஷான் கிஷன் 2 சிக்ஸர் விளாசி 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன்பின் நீண்டநேரம் இஷான் கிஷன் நிலைக்கவில்லை.

ஸ்டாய்னிஷ் வீசிய 16-வது ஓவரில் எல்லிஸிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர், 3பவுண்டரிஅடங்கும். 2வது விக்கெட்டுக்கு கெய்க்வாட், இஷான் கிஷன் 87 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் ஏமாற்றம்

அடுத்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஸடாய்னிஷ் வீசிய அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ப்ளிக் ஷாட்டில் லெக் சைடில் ஒரு சிக்ஸர் விளாசினார்.

ஆடம் ஸம்பா வீசிய 17-வது ஓவரில் சூர்யகுமார் ஸ்ட்ரைட் திசையில் சிக்ஸர் விளாசி அந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது.

18-வது ஓவரை எல்லீஸ் வீசினார், அரைசதத்தை நெருங்கிய கெய்க்வாட், ஒரு ரன் சேர்த்து 39-பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சூர்யகுமார் யாதவின் பலவீனமான ஸ்லோவர் பால் என்பதைத் தெரிந்து கொண்டு அவருக்கு தொடர்ந்து ஸ்லோ பவுன்ஸராக எல்லீஸ் வீசனார். இதனால் சூர்யகுமாரும் பெரிய ஷாட்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தார். ஆனால், 4-வது பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்க சூர்யகுமார் முயன்று, ஸ்டாய்னிஷிடம் கேட்சானது. சூர்யகுமார் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசிக் கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடி

இந்திய அணிக்கு கடைசிக் கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடி காட்டினார். அவர் தான் சந்தித்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டிற்கு அனுப்பி வைத்த வண்ணம் இருந்தார். 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார். கடைசிக் கட்டத்தில் 2 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா ஒரு சிக்ஸர் அடித்தார்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

இந்தியா vs ஆஸ்திரேலியா
  • கருத்துக்கள உறவுகள்
Posted
India FlagIndia              235/4
Australia FlagAustralia         (5.5/20 ov, T:236) 53/3

Australia need 183 runs in 85 balls.

Current RR: 9.08    • Required RR: 12.91    • Last 5 ov (RR): 42/3 (8.40)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்பவர்களுக்கு நன்றிகள்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இர‌ண்டாவ‌து ம‌ச்சும் அவுஸ் தோல்வி............Yashasvi Jaiswal அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ளின் ப‌ந்தை அடிச்சு ஆடுகிறார்..........இந்தியாவின் எதிர்கால‌ ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம்..........19வ‌ய‌து உல‌க‌ கோப்பையில் இவ‌ரின் திற‌மைய‌ பார்த்தேன் 2020ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ 19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் உல‌க‌ கோப்பையில் இவ‌ர் தான் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சு ஆட்ட‌ நாய‌க‌ன் விருதை பெற்றார்..........இவ‌ர் அவுட் ஆக‌மா இருந்து இருந்தா கோப்பை வ‌ங்கிளாதேஸ்சின் கைக்குள் போய் இருக்காது............கூட‌ இந்தியா தான் 19வ‌ய‌து உல‌க‌ கோப்பை வெல்பார்க‌ள்...........அந்த‌ உல‌க‌ கோப்பையில் வ‌ங்கிளாதேஸ் வென்ற‌து ம‌கிழ்ச்சி............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரிங்கு சிங்: மரண ஓவர் அதிரடி பற்றி தோனி கூறிய அறிவுரை என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

18-ஆவது ஓவரில் இந்திய அணி 190 ரன்கள், 20வது ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் என்றால் நம்பமுடிகிறதா? ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததே காரணம். ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளுக்கு எதிராக ஹர்திக் பாண்டியாவுக்குப் பின் 9 பந்துகளில் 30 ரன்களுக்கு மேல் அடித்த 2வது பேட்டர் ரிங்கு சிங்தான்.

திருவனந்தபுரத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டம்தான்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. ஏறக்குறைய பந்துகளைவிட இருமடங்கு ரன்கள். 236 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு191 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி முன்னிலை

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து 25 பந்துகளில்53 ரன்கள் சேர்த்தும், இரு அருமையான கேட்சுகளைப் பிடித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சேர்த்த 5-வது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. இந்திய அணி வலுவான ஸ்கோர் சேர்ப்பதற்கு ஜெய்ஸ்வால்(53), கெய்க்வாட்(58), இஷான் கிஷன்(52) ஆகிய 3 பேரும் முக்கியக் காரணமாக அமைந்தனர். இதில் கெய்க்வாட் பொறுமையாக ஆடி கடைசி நேரத்தில்தான் அரைசதத்தை பதிவுசெய்தார்.

ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் விளாசல்

ஆனால், கடந்தகால சேவாக்கின் ஆட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடிவரும் ஜெய்ஸ்வால், தொடக்கத்திலேயே எதிரணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி 25 பந்துகளில் அரைசதத்தை விளாசி வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

அதேபோல இஷான் கிஷன் முதல் 22 ரன்களைச் சேர்க்க 26 பந்துகளை எடுத்துக்கொண்டாலும், அடுத்த 10 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி மட்டும் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 111 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோர் உயர்வுக்கு ஃபினிஷிங் டச் கொடுத்தவர் ரிங்குசிங்தான்.

 
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபினிஷிங் டச் ரிங்கு சிங்

9 பந்துகளை மட்டும் சந்தித்த ரிங்கு 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 190ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால், 2 ஓவர்களில் மட்டும் 45 ரன்களைச் சேர்த்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் ரிங்குசிங்தான். அதிலும் அபாட் வீசிய 19-வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் என 25 ரன்களை ரிங்கு சிங் சேர்த்தார்.

நெருக்கடி தரும் பந்துவீச்சு

இந்திய பேட்டர்கள் மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக்கொடுத்ததால்தான் பந்துவீச்சாளர்களால் நெருக்கடி இன்றி நேற்று பந்துவீச முயன்றது. பேட்டர்கள் அமைத்துக்கொடுத்த ரன்கள் பந்துவீச்சாளர்களுக்கு “குஷன்” போன்று அமைந்தது.

ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் நடுப்பகுதியில் அக்ஸர் படேல், ரவி பிஸ்னோய் அளித்த நெருக்கடி ஆஸ்திரேலிய பேட்டர்களை விக்கெட்டுகளை இழக்க வைத்தது.

 
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிரட்டிய டேவிட்-ஸ்டாய்னிஷ் கூட்டணி

இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தது என்பது ஸ்டாய்னிஸ்- டிம் டேவிட் கூட்டணி மட்டும்தான். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 38 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால், பிஸ்னாய் ஓவரில் டேவிட் 37 ரன்களிலும், முகேஷ் குமார் ஓவரில் ஸ்டாய்னிஷ் 45 ரன்களில் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலிய அணியின் போராட்டமும் முடிவுக்கு வந்தது.

16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்

35 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்புதான் ஸ்டாய்னிஷ்-டேவிட் கூட்டணி அணியைத் தூக்கி நிறுத்தி 81 ரன்கள் சேர்த்தனர். ஆனால், இருவரும் ஆட்டமிழந்தபின், விரைவாக 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா பறிகொடுத்தது. 139 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 16 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்ஸர், பிஷ்னோய், பிரசித் பந்துவீச்சு

திருவனந்தபுரம் க்ரீன்பீல்ட் ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீசியது உண்மையில் பாராட்டுக்குரியதுதான். பிரசித் கிருஷ்ணா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், தனது 2வது ஸ்பெல்லில் கட்டுக்கோப்பாக துல்லியமான யார்கர்களாக வீசி டெய்லண்டர்கள் பேட்டர்களை வெளியேற்றினார்.

ஆஸ்திரேலிய பேட்டர்களின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது ரவி பிஷ்னோய் லெக் ஸ்பின்தான். டிம் டேவிட், ஷார்ட், இங்கிலிஸ் ஆகிய 3 பேட்டர்களையும் விரைவாக வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார். நடுப்பகுதியில் அக்ஸர் படேல் வீசிய சில ஓவர்கள்தான் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய அக்ஸர் படேல் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டையும் வீழ்த்தி முக்கியப் பங்காற்றினார். பேட்டர்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அக்ஸர் படேல் மட்டும்தான் மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்துவீசியுள்ளார்.

மற்றவகையில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல்தான் வழங்கினர். வேகப்பந்துவீச்சாளர்கள் கடைசி டெத் ஓவர்களில் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினர், தொடக்கத்திலேயே இந்த ஒழுக்கத்தை வெளிப்படுத்தி இருந்தால், ஆஸ்திரேலிய அணி இன்னும் குறைந்த ரன்களில் சுருண்டிருக்கும்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவை ஏமாற்றிய வானிலை

இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், நேற்று பனிப்பொழிவும் பெரிதாக இல்லை, காற்றில் ஈரப்பதமும் குறைவாக இருந்தது.

இதனால் ஆஸ்திரேலிய கேப்டன் நினைத்ததற்கு மாறாக அனைத்தும் நடந்து சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக மைதானம் ஒத்துழைத்து, விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதனால் வெற்றிக்குத் தேவைப்படும் ரன்ரேட் 12க்கும் மேல் அதிகரித்ததால் நெருக்கடி ஏற்பட்டு விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு கட்டத்தில் 31 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது, தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது முக்கியக் காரணமாகும். ரன்களை விரைவாகச் சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

தோனிக்கு அடுத்தாற்போல் ஃபினிஷர்

தோனிக்கு அடுத்தாற்போல் இந்திய அணிக்கு ஒரு “ கிரேட் ஃபினிஷர்” உருவாகி வருகிறார் என்றால் அது ரிங்கு சிங்தான். முதல் டி20 போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு ரன் வெற்றிக்குத் தேவை என்றபோது, சீன் அபாட் ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி ரிங்கு சிங் அணியை வெற்றி பெறச் செய்தார்.

அதன்பின அது நோபாலாக அறிவிக்கப்பட்டதால், சிக்ஸர் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து அர்ஷ்தீப் சிங் , ரிங்கு சிங்கிடம் ஓய்வறைக்குச் சென்றபின் நோபால் தெரிவித்துள்ளார். ஆனாலும் அது குறித்து கவலைப்படாத ரிங்கு சிங், இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதே அதுபோதும் என்று ஓய்வறையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.அந்த போட்டியில் 14 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ரிங்கு சிங் கிரேட் ஃபினிஷராக ஜொலித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

344 ஸ்ட்ரைக் ரேட்டில் பயணித்த ரிங்கு

திருவனந்தபுரத்தில் நடந்த ஆட்டத்திலும் 9 பந்துகளில் 31 ரன்கள் விளாசி இந்திய அணி இமாலய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தார் ரிங்கு. அதிலும் 19-வது ஓவரில் ரிங்கு சிங் அடித்த 25 ரன்களும், கடைசி ஓவரில் வெளுத்த ரன்களும் கிரேட் ஃபினிஷிங் டச்சுக்கு உதாரணமாகும். ரிங்கு சிங்கின் நேற்றைய ஸ்ட்ரைக் 344 ஆகும்.

ஹர்திக்கிற்கு அடுத்து ரிங்கு

ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளுக்கு எதிராக 9 பந்துகளில் ஹர்திக் பாண்டியா சேர்த்த 32 ரன்கள்தான் அதிகபட்சம். அதற்கு அடுத்தார்போல் தற்போது ரிங்கு சிங் 31 ரன்களைக் குவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் அறிமுகமாகினார்.

இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே ஆடிய ரிங்கு சிங் 128 ரன்கள் குவித்து, 216 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார், ஒருமுறை மட்டுமே அவுட் ஆகியுள்ளார். இந்த ரன்களை ரிங்கு சிங் சேர்த்தபோது, அவர் 5முதல் 7-வது பேட்டராக களமிறங்கி சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங்கின் ஆட்டம் பெரிதாக பார்க்கப்பட்டு, அனைவராலும் கவனிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சயத் முஸ்தாக் அலி கோப்பையில் லக்னௌ அணிக்காக விளையாடி, 2வது அதிகபட்சமாக 256 ரன்களைச் சேர்த்ததும் ரிங்கு சிங்தான், இதலும் ரிங்கு சிங்கின் ஸ்ட்ரைக் ரேட் 170 ஆக இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனியின் அறிவுரை

தோனியின் அறிவுரையை தொடர்ந்து பின்பற்றுவதால்தான் என்னால் இப்படி சிறப்பாக ஆட முடிகிறது என்று ரிங்கு சிங் பிசிசிஐ சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில் “ஒருமுறை மகிபாயிடம்(தோனி) சென்று கடைசி சில ஓவர்களில் மட்டும் எவ்வாறு அதிரடியாக பேட் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு மகிபாய் என்னிடம் “ கடைசி ஓவர்களில் பேட் செய்யும்போது அமைதியாக, மனதை ஒருமுகப்படுத்தி இருக்க வேண்டும், பதற்றப்படக்கூடாது. பெரும்பாலும் ஸ்ட்ரைக் ஷாட்களாகவே அடிக்க முயல வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இன்றுவரை மகிபாய் கூறிஅறிவுரைப்படியே விளையாடுகிறேன். கடைசி ஓவர்களில் பேட் செய்யும்போது அமைதியாக இருப்பேன், எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் இருக்க முயல்வேன், இது எனக்கு பெரிதாக உதவியது” எனத் தெரிவித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிங்குவை புகழ்ந்த சூர்யகுமார்

ரிங்கு சிங் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவும் புகழ்ந்துள்ளார். வெற்றிக்குப்பின் சூர்யகுமார் கூறுகையில் “ விசாகப்பட்டிணத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ரிங்கு சிங் பேட் செய்ய களமிறங்கியபோது, இந்திய அணி வெற்றிக்கு 22 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரிங்கு ஆடியவிதம், அற்புதமானது, கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டார். அதுபோலத்தான் 2வது டி20 ஆட்டத்திலும் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை திருப்பிவிட்டார் ரிங்குசிங். இவரின் பினிஷிங் யாரையோ எனக்கு நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும்நிலையில் ஹர்திக் பாண்டியா “ஆங்கர் ரோல்” எடுத்தாலும், இந்திய அணிக்கு மிகச்சிறந்த ஃபினிஷர் தேவை. அந்தவகையில் தோனிக்கு அடுத்தார்போல் “ கிரேட் ஃபினிஷராக” ரிங்கு சிங் உருவாகலாம்.

https://www.bbc.com/tamil/articles/c2821l1ygwjo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இர‌ண்டு ம‌ச்சும் ஒரே மைதான‌த்தில் தான் ந‌ட‌ந்த‌து 

நான் நினைக்கிறேன் உந்த‌ மைதான‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ பிச் 

 

திற‌மையான‌ அவுஸ் வீர‌ர்க‌ளின் ப‌ந்துக்கு 200ர‌ன்னுக்கு மேல‌ எடுக்கின‌ம் என்றால் பிச் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாய் அமைக்க‌ ப‌ட்டு இருக்கு.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே ஓவரில் 30 ரன் - ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் சதத்தால் இந்தியா மீண்டும் இமாலய ரன் குவிப்பு

இந்தியா -ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

39 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று கெளஹாதியில் நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட், பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் முகேஷ் குமாருக்குப் பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஜெய்ஸ்வால், கெய்க்வாட் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். கடந்த இரு போட்டிகளிலும் வலுவான தொடக்கத்தை அளித்த ஜெய்ஸ்வால் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. கானே ரிச்சார்ட்சன் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், கெய்க்வாட் தலா ஒரு பவுண்டரி அடித்து 14 ரன்களுடன் அதிரடியாகத் தொடங்கினர்.

பெஹரன்டார்ப் வீசிய 2-வது ஓவரில் ஜெய்ஸ்வால் 6 ரன்னில், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த இஷான் கிஷனும் நிலைக்கவில்லை. கானே ரிச்சார்ட்சன் வீசிய 3-வது ஓவரில் கவர் திசையில் ஸ்டாய்னிஷிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் டக்அவுட்டில் வெளியேறினார். கடந்த 2 டி20 போட்டிகளிலும் அதிரடி அரைசதம் அடித்து கலக்கிய இரு பேட்டர்களும் விரைவாக விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

 

சூர்யகுமார் அதிரடி ஆட்டம்

இந்தியா -ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3-வது விக்கெட்டுக்கு வந்த சூர்யகுமார், கெய்க்வாட்டுடன் இணைந்தார். சூர்யகுமார் தனது வழக்கமான பாணியில் ஆடி, எல்லீஸ் வீசிய 5-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்தது.

7-வது ஓவரை தன்வீர் சங்கா வீசினார். தன்வீர் ஓவரை சிறப்பாகப் பயன்படுத்திய சூர்யகுமார் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் சேர்த்தார். ஹார்டி வீசிய 8-வது ஓவரிலும் சூர்யகுமார் 2 பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்தது.

ஹார்டி வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் 39 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் மேத்யூவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 3வது விக்கெட்டை இழந்தது.

 

கெய்க்வாட் அரைசதம்

இந்தியா -ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்து திலக் வர்மா களமிறங்கி, கெய்க்வாடுடன் சேர்ந்தார். களமிறங்கிய உடனே திலக் வர்மா அதிரடியாக பேட்டை சுழற்றினார். ரிச்சார்ட்சன் வீசிய 12ஓவரில் 2 பவுண்டரிகளும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியும் என 13 ரன்கள் சேர்த்தனர்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும், கெய்க்வாட் நிதானமாக ஆடி அரைசதத்தை நோக்கி நகர்ந்தார். சங்கா வீசிய 13வது ஓவரில் கெய்க்வாட் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் என 12 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார்.

ஹார்டி வீசிய 14-வது ஓவரில் திலக்வர்மா ஒரு பவுண்டரியும், கெய்க்வாட் 2 பவுண்டரிகள் விளாசி 4-வது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தத் தொடரில் கெய்க்வாட் அடிக்கும் 2வது அரைசதமாகும். தன்வீர் சங்கா வீசிய 15-வது ஓவரை வெளுத்த கெய்க்வாட் ஒரு சிக்ஸர், தேர்ட்மேன் திசையில் ஒருபவுண்டரி என 11 ரன்கள் விளாசினார்.

 

திணறிய இந்திய பேட்டர்கள்

இந்தியா -ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெத் ஓவரை வீச எல்லீஸ் வரவழைக்கப்பட்டார். கட்டுக் கோப்பாகப் பந்துவீசிய எல்லீஸ் இந்திய பேட்டர்களை பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் நெருக்கடி அளித்தார். எல்லீஸ் வீசிய 16-வது ஓவரில் இந்திய பேட்டர்கள் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

பெஹரன்டார்ப் 17-வது ஓவரை மிகுந்த ஒழுக்கத்துடன் வீசினார். லைன் லென்த்தில் துல்லியமாக வீசியதால் கெய்க்வாட், திலக் வர்மா இருவரும் பவுண்டரிகள், சிக்ஸர் அடிக்க சிரமப்பட்டனர். டெத் ஓவரில் ரன் சேர்க்கநினைத்த இந்திய பேட்டர்கள் திணறினர். இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

18-வது ஓவரை ஹார்டி வீசினார். முதல் பந்தை ஸ்லாட்டில் வீசிய உடன் அதை அவுட்சைட் ஆப்சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 2வது பந்திலும் கெய்க்வாட் மிட்விக்கெட் திசையில் 2வது சிக்ஸர் விளாசினார். 3-வது பந்தில் கெய்க்வாட் ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி அடித்து நொறுக்கினார். 5-வது பந்தில் கெய்க்வாட் ஸ்வீப் ஷாட்டில் மீண்டும் சிக்ஸர் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய கெய்க்வாட் இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் சேர்த்தார்.

கடந்த இரு ஓவர்களாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கமுடியாமல் திணறிய கெய்க்வாட், மொத்தமாகச் சேர்த்து ஹார்டி ஓவரை புரட்டி எடுத்துவிட்டார்.

19வது ஓவரை எல்லீஸ் வீசினார். 2 பந்துகளை வைடாக வீசிய எல்லீஸ் திலக் வர்மாவை வெறுப்பேற்றினார். எல்லீஸ் ஓவரை அடிக்க முயன்றாலும் திலக் வர்மா, கெய்க்வாட்டால் அடித்து ஆடமுடியவில்லை. 19-வதுஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

 
இந்தியா-ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசிய கெய்க்வாட்

யாரும் எதிர்பாராத விதமாக கடைசி ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். முதல் பந்திலேயே கெய்க்வாட் சிக்ஸர் அடித்து டி20 போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். 2வது பந்தில் கெய்க்வாட் ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி விளாசினார். 4-வது பந்தில் கெய்க்வாட் லாங்கான் திசையில் இறங்கி வந்து சிக்ஸர் விளாசினார். 5-வது பந்திலும் லெக் சைடில் கெய்க்வாட் அடுத்த சிக்ஸர் அடித்தார். கடைசிப் பந்தில் கெய்க்ட்வாட் பவுண்டரி அடித்து முடித்தார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி 30 ரன்கள் சேர்த்தது.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்து(7சிக்ஸர், 13பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மா31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 79 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 142 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் மேக்ஸ்வெல் கடைசி ஓவரை வீசி வாங்கிக்கட்டி கொண்டு 30 ரன்களை வாரிவழங்கினார். ஹார்டி, ரிச்சார்ட்ஸன், சங்கா மூவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதம் வள்ளலாக மாறினர். பெஹரன்டார்ப், எல்லீஸ் மட்டுமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். மற்ற வகையில் கடந்த 2 ஆட்டங்களைப் போலவே ஆஸ்திரேலியப் பந்துவீச்சு மோசமாகவே இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cx71j19e6wvo

  • கருத்துக்கள உறவுகள்
Posted
RESULT
3rd T20I (N), Guwahati, November 28, 2023, Australia tour of India
India FlagIndia                           222/3
Australia FlagAustralia              (20 ov, T:223) 225/5

Australia won by 5 wickets (with 0 balls remaining)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியப் பந்து வீச்சாளர்களை குறிவைத்து அடிக்க மேக்ஸ்வெல் வகுத்த வியூகம்

இந்தியப் பந்து வீச்சாளர்களை குறிவைத்து அடிக்க மேக்ஸ்வெல் வகுத்த வியூகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 நவம்பர் 2023, 05:01 GMT
    புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சாதிக்க முடியாத வெற்றியை, சாத்தியமாக்கிய மேக்ஸ்வெல் நேற்றைய இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்திலும் அதுபோன்ற வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு பரிசாக அளித்தார்.

கௌஹாத்தியில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றதற்கு ஒரு நபரின் தனிப்பட்ட உழைப்புதான் காரணமாக இருக்குமென்றால் அது மேக்ஸ்வெல் பேட்டிங் மட்டுமாகத்தான் இருக்கும்.

கடைசி இரு ஓவர்களில் 43 ரன்கள் அடிப்பது என்பது நிச்சயமாக சாத்தியமற்ற இலக்குதான். ஆனால், அதை நிகழ்த்திக் காட்டி மேக்ஸ்வெல் தனது அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

 

இரு வேறு பட்ட சதங்கள்

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தன்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்தப் போட்டியோடு மேக்ஸ்வெல் உள்ளிட்ட உலகக் கோப்பையில் பங்கேற்ற சில ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்புகிறார்கள். அவர்களுக்குப் பதிலாக பிக்பாஷ் லீக்கில் ஆடிய சில வீரர்கள் புதிதாக தொடரில் அறிமுகமாகிறார்கள்.

இந்திய அணியின் கெய்க்வாட்டும், மேக்ஸ்வெல்லைப் போன்று நேற்றைய ஆட்டத்தில் கடைசி நேரத்தில் சதம் அடித்து 215 ஸ்ட்ரைக் ரேட்டில் பயணித்தாலும், மேக்ஸ்வெல்லின் சதத்தின் முன் கெய்க்வாட்டின் ஆட்டம் அடங்கிப் போனது. அதற்குக் காரணம் இருவரும் சதம் அடித்த சூழல்தான்.

கெய்க்வாட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியதே 18 ஓவர்களுக்குப் பிறகுதான். அதுவரை சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரின் ஆதரவோடு நிதானமான ஆட்டத்தையே கடைபிடித்தார். இந்திய அணிக்கு விக்கெட் நெருக்கடி ஏதும் இல்லாததால் கெய்க்வாட் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது.

 
இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

துல்லியத் திட்டத்தை செயல்படுத்திய மேக்ஸ்வெல்

ஆனால், மேக்ஸ்வெல் களமிறங்கியபோது ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேக்ஸ்வெல் களமிறங்கிய சிறிது நேரத்தில் ஸ்டாய்னிஷும் மோசமான ஃபார்ம் காரணமாக விரைவாக ஆட்டமிழந்தார்.

இதனால், அணியை ஒற்றை மனிதராக மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தம் மேக்ஸ்வெலுக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரையும் நடுப்பகுதி ஓவர்களில் குறிவைத்து ரன்களைச் சேர்த்தார்.

மேக்ஸ்வெல் களத்தில் நங்கூரமிட்டால் இந்திய அணி சேர்த்த 222 ரன்கள் வெற்றிக்கு உகந்தது இல்லை, பாதுகாப்பான ஸ்கோர் இல்லை என்பது அனைத்து வீரர்களுக்கும் தெரியும். இதனால், மேக்ஸ்வெல் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விக்கெட்டை சாய்க்கவும் பல பந்துவீச்சாளர்களை கேப்டன் சூர்யகுமார் பயன்படுத்தியும் பயனில்லை.

 
இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

மேக்ஸ்வெல் ஆட்டம் குறித்து சூர்யகுமார் கூறுகையில் “ மேக்ஸ்வெல்லின் பேட்டிங் எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. விரைவாக மேக்ஸ்வெலை ஆட்டமிழக்கச் செய்ய விரும்பினோம், அதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. அதிகமான பனிப்பொழிவு இருந்தால், நிச்சயம் 222 ரன்களை டிபெண்ட் செய்வது கடினமானது, பந்துவீச்சாளர்களால் நினைத்தமாதிரி பந்துவீசுவது கடினம் என்பது தெரியும். தேநீர் இடைவேளையின்போதுகூட நான் சகவீரர்களிடம் மேக்ஸ்வெல் குறித்துக் கூறுகையில் மேக்ஸ்வெலை விரைவாக ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும் என நினைத்தால் அது பைத்தியக்காரத்தனம் என்றேன்” என்று தெரிவித்தார்.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் கைகளில் வெற்றி

ஏனென்றால், 18-ஆவது ஓவர் வரை ஆட்டம் இந்திய அணியின் கைகளில்தான் இருந்தது. ஆட்டம் குறித்த கணிணியின் கணிப்புகூட இந்திய அணியின் வெற்றிக்கு 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்தது. ஆனால், அக்ஸர் படேல் வீசிய 19-வது ஓவரும், பிரசித் கிருஷ்ணா வீசிய 20-வது ஓவரையும் பயன்படுத்திய மேக்ஸ்வெல் ஆட்டத்தின் போக்கேயே மாற்றிவிட்டார்.

28 பந்துகளில் அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் அதன்பின் தனது பேட்டிங் கியரை மாற்றிப் பயணித்து, அடுத்த 19 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்து 47 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிவிரைவாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் ஆரோன் பின்ச், இங்கிலிஸ் ஆகியோருடன் மேக்ஸ்வெலுடன் சேர்ந்தார். இதில் ஒற்றுமை என்னவென்றால் 3 வீரர்களுமே 47 பந்துகளில் சதம் அடித்தவர்கள்.

இதற்கு முன் 2016ம் ஆண்டு பல்லேகேலை நகரில் நடந்த இலங்கைக்கு எதிரானடி20 ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 49 பந்துகளில் அதிவிரைவாக சதம் அடித்தநிலையில் அந்த சாதனையை நேற்று அவரே முறியடித்தார். 2019ம் ஆண்டு பெங்களூருவில் இந்திய அணிக்கு எதிராக டி20 ஆட்டத்தில் 50 பந்துகளில் சதம் அடித்திருந்த மேக்ஸ்வெல் நேற்று 47 பந்துகளில் சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியைத் தேடித்தந்தது எப்படி?

2016ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஷேன் வாட்ஸன் 124 ரன்கள் சேர்த்தும் தனது அணிக்கு வெற்றிதேடித் தரமுடியவில்லை. ஆனால், அதுபோன்றதொரு ஆட்டத்தை நேற்று மேக்ஸ்வெல் ஆடவில்லை. கடைசிவரை களத்தில் நங்கூரமிட்ட மேக்ஸ்வெல், ஒவ்வொரு ஷாட்டையும் தேர்ந்தெடுத்து, திட்டமிட்டு ஆடி ரன்களைச் சேர்த்தார்.

6-வது ஓவரில்தான் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அப்போது 14.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 157 ரன்கள் தேவை, இது மிகப்பெரிய இலக்கு என்பது அப்போதே மேக்ஸ்வெலுக்கு தெரிந்துவிட்டது. இதனால், பிரசித் கிருஷ்ணாவின் 8-வது ஓவரை குறிவைத்த மேக்ஸ்வெல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அப்போதே தனது திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினார். டிம் டேவிட், ஸ்டானிஷ் ஆட்டமிழந்தது மேக்ஸ்வெலுக்கு மேலும் நெருக்கடி அளித்தது.

அது மட்டுமல்லாமல் நடுப்பகுதி ஓவர்களில் பிஷ்னோய், அக்ஸர் படேலின் சுழற்பந்துவீச்சும் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்துக்கு கடிவாளம் போட்டது வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட்டை அதிகப்படுத்தியது. 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது. அதாவது ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலை இருந்துத.

ஆனால், இவை அனைத்தையும் கடந்துதான் மேக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தை செயல்படுத்தினார். அதிலும்கூட 18-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா கட்டுக்கோப்பாக வீசி 6 ரன்கள் கொடுத்தது ஆஸ்திரேலியாவின் வெற்றியை பறித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது, இந்த இலக்கை அடைவது அவ்வளவு சுலபமானது அல்ல என்று ரசிகர்கள் எண்ணினர்.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியைத் தவறவிட்ட இஷான் கிஷனின் தவறுகள்

ஆனால், அக்ஸர் படேல் வீசிய 19-வது ஓவர் பெரிய திருப்பத்தை ஆஸ்திரேலிய அணிக்கு அளித்தது. இஷான் கிஷன் செய்த இரு தவறுகள் 12 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு தாரை வார்த்தது. இந்த ரன்களை இந்திய அணி சேமித்திருந்தால், கடைசி ஓவரில் 33 ரன்களை ஆஸ்திரேலிய அணி அடிக்க வேண்டியிருந்திருக்கும், தொடரை இந்திய அணி வென்றிருக்கும்.

அக்ஸர் படேல் வீசிய 19-வது ஓவரில் 4வது பந்தில் இஷான் கிஷன் செய்த தவறால் நோபால் அறிவிக்கப்பட்டு ப்ரீஹிட்டில் மேத்யூ வேட் சிக்ஸர் அடித்ததும் கடைசிப்பந்தை பைஸ் மூலம் இஷான் கிஷன் 5 ரன்கள் கோட்டைவிட்டதும் ஆஸ்திரேலிய வெற்றிக்கு பெரும்பகுதி உதவியது, மேக்ஸ்வெல் பணியை எளிதாக்கியது.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேக்ஸ்வெல்லின் மரண ஓவர் மாயாஜாலம்

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவை, அதிலும் 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைப் போல், இந்த முறையும் ஏதேனும் மாயஜாலத்தை நிகழ்த்துவார் மேக்ஸ்வெல் என்ற அச்சம் இந்திய வீரர்களிடம் இருந்தது. ஆனாலும், 16 ரன்களை அடிப்பது சாத்தியமில்லாதது என்றும் ரசிகர்கள் எண்ணினர். ஆனால் அனைவரின் கணிப்பையும் மேக்ஸ்வெல் பொய்யாக்கி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

பிரசித் கிருஷ்ணாவின் கடைசி ஓவரில் 3-வது பந்திலிருந்து மேக்ஸ்வெல் ஆட்டத்தைக் கையில் எடுத்தார். 3-வது பந்தில் ஆப்-சைடில் சிக்ஸர் விளாசிய மேக்ஸ்வெல், அடுத்ததாக 4-வது பந்தில் டீப் தேர்டு திசையில் ஒரு பவுண்டரி, 5-வது பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி, கடைசிப் பந்தில் ஸ்ட்ரைட் திசையில் ஒரு பவுண்டரி என ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

யாரும் எதிர்பாராத வெற்றியை, நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றியை மேக்ஸ்வெல் சாத்தியமாக்குவார் என யாரும் கணிக்கவில்லை. கடைசி இரு ஓவர்களில் 41 ரன்களைத் தடுக்க செய்யமுடியாமல் இந்திய அணியிடம் இருந்து வெற்றியை மேக்ஸ்வெல் பறித்துவிட்டார்.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியா சாதனை

கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடித்து வெற்றி பெற்ற வரிசையில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்று சாதனை படைத்தது. இதற்கு முன் கடைசி ஓவரில் 19 ரன்கள் சேர்த்து 2016ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் அணிதான் வெற்றி பெற்றிருந்தது. அதை ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல் ஆட்டத்தால் முறியடித்தது.

டி20 போட்டியில் 4 சதங்களை விளாசி, மேக்ஸ்வெல், ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். ரோஹித் சர்மா 140 இன்னிங்ஸில் செய்த சாதனையை, மேக்ஸ்வெல் 92 இன்னிங்ஸில் எட்டி சாதனை படைத்துள்ளார்.

மேக்ஸ்வெல் டி20 போட்டியில் அடித்த 4 சதங்களில் 3 சதங்கள், சேஸிங் மூலம் அடித்தவையாகும். அதிலும் 4-வது இடத்தில் களமிறங்கி மேக்ஸ்வெல் இந்த சதத்தை அடித்துள்ளார்.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேக்ஸ்வெல்லின் வியூகம் என்ன?

மேக்ஸ்வெல் தனது திட்டத்தை செயல்படுத்தியது எப்படி என்பது குறித்துக் கூறுகையில் “கடைசி ஓவர்வரை களத்தில் நின்றால், ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நடுப்பகுதி ஓவர்களில் எனக்கு வெற்றி மீது நம்பிக்கையில்லாமல்தான் இருந்தது. குறிப்பிட்ட சில பந்துவீச்சாளர்களை குறிவைக்க நாங்கள் திட்டமிட்டோம். அக்ஸர் படேலுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்ததால், அந்த ஓவரை மேத்யூ சிறப்பாகப் பயன்படுத்தி எனக்குரிய நெருக்கடியைக் குறைத்தார்.” என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c88dele3yz0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸ்திரேலிய வீரர்கள் 'தண்ணி' காட்டியபோது இந்திய வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல் ஆகியோரின் கட்டுக்கோப்பான சுழற்பந்துவீச்சு, ரிங்கு சிங்கின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக வென்றது.

ராய்பூரில் நேற்று நடந்த 4-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம்5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் வென்று டி20 தொடரை சூர்யகுமார் தலைமை முதல்முறையாக கைப்பற்றியது. இந்த நம்பிக்கையுடன் வரும் 10ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று நம்பலாம்.

நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 
இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்து வீச்சுக்கான வெற்றி

இந்த ஆட்டத்தில் இந்திய அணி எடுத்த 175 ரன்கள் என்ற ஸ்கோர் எளிதாக சேஸிங் செய்யக்கூடியது என்றாலும், இந்திய அணியின் பிஷ்னோய், அக்ஸர் படேல் சுழற்பந்துவீச்சுக்கு முன் ஆஸ்திரேலிய பேட்டர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அக்ஸர், பிஷ்னோய் இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடுப்பகுதி ஓவர்களில் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்டை இழுத்துப்பிடித்து பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர்.

அதிலும் டிராவிஸ் ஹெட் தொடக்கத்தில் தீபக் சஹர் பந்துவீச்சை துவைத்து எடுத்த நிலையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நினைவுக்கு வந்தது. ஆனால், அடுத்த ஓவரில் அக்ஸர் படேல் வீசிய பந்தில் ஹெட் ஆட்டமிழந்தபின்புதான் ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. மெக்டார்மார்ட், ஹார்டி என நடுவரிசை பேட்டர்களின் விக்கெட்டுகளையும் அக்ஸர் எடுத்துக் கொடுத்து ஆஸ்திரேலிய அணியை நெருக்கடியில் தள்ளினார்.

ரவி பிஷ்னோய் தனது லெக் ஸ்பின் மூலம் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். தொடக்கத்திலேயே பிலிப் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த பிஸ்னோய்க்கு அடுத்து விக்கெட்டுகள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

இந்திய அணி தனது 175 ரன்களை டிபெண்ட் செய்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தது பிஸ்னோய், அக்ஸர் படேல் மட்டும்தான். இவர்கள் வீசிய 8 ஓவர்களும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தலைவலியாக மாறி ரன்ரேட்டையும் குறைத்தது, விக்கெட்டுகளையும் இழக்கச் செய்து தோல்விக் குழியில் தள்ளியது.

 
இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் கேப்டன்சி எப்படி?

சூர்யகுமார் யாதவ் எவ்வாறு அணியை வழிநடத்தப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், முதலிரு ஆட்டங்களில் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் மூலம் பெரிய ஸ்கோரை அடித்து வெற்றியை சூர்யகுமார் தலைமைக்கு எளிதாக்கினர். ஆனால், 3-வது ஆட்டத்தில் மேக்ஸ்வெலின் ஆட்டம் இந்திய அணியை சுயபரிசோதனைக்கு ஆளாக்கியது.

இந்த ஆட்டத்தில் 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்கிய சூர்யகுமார், அருமையாக பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்தார். ஆஸ்திரேலிய பேட்டர்கள் பெரிய ஷாட்களை அடிக்கத் தொடங்கும்போது, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியபோது, தொடர்ந்து நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை இழுத்துப் பிடித்து, கடந்த போட்டிகளில் செய்த தவறை சூர்யகுமார் திருத்திக்கொண்டார்.

5 தொடக்க ஆட்டக்காரர்கள்

இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணிக்கு 5 தொடக்க ஆட்டக்காரர்கள் கிடைத்துள்ளனர். இவர்களை எப்படிஅடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்தியஅ ணி நிர்வாகம் பயன்படுத்தப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. யாஹஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆகிய 5 தொடக்க வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் ரோஹித் சர்மா, கில் ஏற்கெனவே அணியில் இருக்கிறார்கள் என்ற நிலையில் மற்ற 3 பேரையும் எவ்வாறு சுழற்சி முறையில் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கு தயார் செய்யப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.

ஆடுகளம் பேட்டர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காதது என்பதால், அதைப் புரிந்து கொண்டு ரிங்கு சிங் மட்டுமே ஓரளவுக்கு அதிரடியாக பேட் செய்தார். இந்த ஆட்டத்தில் ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா இருவரின் ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே 150 கடந்திருந்தது. மற்ற இந்திய பேட்டர்கள் யாரும் ஸ்ட்ரைக் உயரும்வகையில் பேட் செய்ய முடியவில்லை.

குறிப்பாக கெய்க்வாட், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஆகியோர் ஏமாற்றம் அளிக்கும் வகையில் பேட்டிங் இருந்தது. ஜெய்ஸ்வால் வழக்கம்போல் நல்ல தொடக்கத்தை அளித்தாலும் பவர்ப்ளேவுக்கு அடுத்து அவரால் தனது ஆட்டத்தை நீட்டிக்க முடியாதது ஏமாற்றமாகும்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனுபவமில்லாத ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிலிய அணியில் உலகக் கோப்பையில் ஆடிய வீரர்களில் டிராவிஸ் ஹெட் தவிர அனைத்து வீரர்களும் புதியவர்கள்தான், அனுபவம் இல்லாதவர்கள்தான். இந்தியாவில் உள்ள ஸ்லோ-பிட்சுகளில் பந்துவீசியும், பேட் செய்தும் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் வெற்றி இந்திய அணிக்கு எளிதாகியது.

மேக்ஸ்வெல், வார்னர், கம்மின்ஸ், ஹேசல்வுட், போன்ற டி20 ஸ்பெசலிஸ்ட்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா களமிறங்கியது வலுவில்லாத அணியாகவே காணப்பட்டது. இந்த டி20 தொடரும் ஆஸ்திரேலிய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு பெரிய அனுபவமாகவும், டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயிற்சிப் பட்டறையாகவும் இருக்கும்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மேக்ஸ்வெல், ரிச்சார்ட்ஸன், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்குப் பதிலாக கிரிஸ் கிரீன், மெக்டார்மார்ட், வார்ஷிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணியில் இஷான் கிஷனுக்குப் பதிலாக ரித்தேஷ் ஷர்மாவும், அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக தீபக் சஹரும்,திலக் வர்மாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவர்ப்ளேக்கு மேல் தாங்காத ஜெய்ஸ்வால்

இந்திய அணியில் வழக்கம் போல் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஹார்டி வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் எந்த ரன்னும் அடிக்க முடியாததையடுத்து, மெய்டன் ஓவராக மாறியது. ஜெய்ஸ்வாலின் பலம் தெரிந்து ஆப்சை, மிட்ஆப், மிட்விக்கெட், கவர் திசையில் வலுவாக பீல்டிங் நிறுத்தியதால் ரன் ஏதும் கிடைக்கவில்லை.

பெஹரன்டார்ப் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட ஜெய்ஸ்வால் 11 ரன்கள் வார்ஷூஸ் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் சேர்த்து ஜெய்ஸ்வால் ரன்ரேட்டை உயர்த்தினார்.

5-ஆவது ஓவரே ஆஸ்திரேலிய அணியின் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் கிரிஸ் கிரீன் வீசினார். கிரீன் ஓவரை வெளுத்துவாங்கிய ஜெய்ஸ்வால் பாயின்ட் திசையில் பவுண்டரியும், மிட்விக்கெட்டில் சிக்ஸரும் என 14ரன்கள் சேர்த்தார்.

ஹார்டி வீசிய 6-வது ஓவரின் ஜெய்ஸ்வால் தூக்கி அடிக்க மிட்ஆன் திசையில் மெக்டார்மார்ட்டிடம் கேட்சாகியது. ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரேயாஸ், சூர்யகுமார் ஏமாற்றம்

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். தன்வீர் சங்கா வீசிய 7-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க முற்பட்டு கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஸ்ரேயாஸ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சூர்யகுமார் ஒரு ரன் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

திணறிய கெய்க்வாட்

4-வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் இணைந்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சுக்கு கெய்க்வாட் தடுமாறியது நன்றாகத் தெரிந்தது. கிரீன் வீசிய 11-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. 12-வது ஓவரை மேத்யூ ஷார்ட் வீசினார்.

வார்ஷூஸ் 13வது ஓவரை வீசினார். ஏற்கெனவே இவரின் ஓவரை ஜெய்ஸ்வால் குறிவைத்தநிலையில் கெய்க்வாட், ரிங்கு சிங் வெளுத்து வாங்கினர். கெய்க்வாட் மிட்ஆன் திசையில் பவுண்டரி அடிக்க, ரிங்கு சிங் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி14ரன்கள் சேர்த்தனர்.

14-வது தன்வீர் சங்கா வீசினார். முதல் பந்தைச் சந்தித்த கெய்க்வாட் ஷார்ட் தேர்ட் திசையில் பவுண்டரி விளாசி, 2வது பந்தையும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முற்பட்டார். ஆனால், தேர்டு மேன் திசையில் வார்ஷூயஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு கெய்க்வாட் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங், கெய்க்வாட் கூட்டணி 48 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து ஜிதேஷ் ஷர்மா களமிறங்கி, ரிங்குசிங்குடன் சேர்ந்தார். கிரீன் வீசிய 15-வது ஓவரை ஜிதேஷ் ஷர்மா எதிர்கொண்டார். 2-வது பந்தில் ஸ்வீப்ஷாட்டில் ஜிதேஷ் ஷர்மா மிட்விக்கெட் திசையில் சிக்ஸரும், 4-வது பந்தில் லாங்-ஆன் திசையில் ஒரு சிக்ஸரும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தண்ணி காட்டிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர்கள்

கிரீன் தனது சுழற்பந்துவீச்சு வேகத்தை குறைக்காமல் 90 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக வீசினார். இதனால் பேட்டரின் பேட்டருக்கு நேராக பந்துவந்ததால் வெளுத்து வாங்கினார். சிறிது வேகத்தை கிரீன் குறைத்து 80 கி.மீக்குள் வீசினால் நிச்சயமாக பெரிய ஷாட்களை ஆடுவது கடினமாக இருந்திருக்கும்.

15-வது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை தன்வீர் சங்கா அற்புதமாக வீசினார், எந்தப் பந்தையும் பெரிய ஷாட்களுக்கு இந்திய பேட்டர்களைச் செல்லவிடாமல் தண்ணிகாட்டினார். இதனால் 16-வது ஓவரில் இந்திய அணி வெறும் 5 ரன்களே சேர்த்தது.

17-வது ஓவரை ஆரோன் ஹார்டி வீசினார். ஏற்கெனவே தொடக்கத்தில் சிறப்பாக வீசிய ஹார்டி இந்த ஓவரையும் கட்டுக்கோப்பாக வீசி இந்திய பேட்டர்களை திணறடிக்க முயன்றார். ஆனால், பொறுமையிழந்த ரிங்கு சிங், ஸ்குயர் லெக் திசையில் ஒரு பவுண்டரி விளாச, கடைசிப்பந்தில், ஜிதேஷ் ஷர்மா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசி 13 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெத் ஓவர்களில் இந்தியா பேட்டிங் மோசம்

பெஹரன்டார்ப் 18-வது ஓவரை வீசினார். முதல் பந்தை ரிங்கு சிங் ஸ்வீப் ஆட முயன்றபோது, பந்து பேட்டில் எட்ஜ் எடுத்து பவுண்டரி சென்றது. 2வது பந்தை லெக் திசையில் ரிங்கு பவுண்டரி்க்கு விரட்டி 14 ரன்களை இருவரும் சேர்த்தனர்.

வார்ஷஸ் வீசிய 19-வது ஓவரை ஜிதேஷ் ஷர்மா எதிர்கொண்டார். 2வது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரி அடித்த ஜிதேஷ், 4-வது பந்தை தூக்கி அடிக்க 34 ரன்னில் லாங்-ஆன் திசையில் டிராவிஸ் ஹெட்டால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு அக்ஸர் படேல்வந்து ரிங்குவுடன் சேர்ந்தார். வந்த வேகத்தில் லாங்-ஆன் திசையில் ஷாட் அடிக்கமுற்பட்ட, அக்ஸர் படேல் தன்வீர் சங்காவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார்.

19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய வார்ஷஸ் 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து அருமையான டெத் ஓவராக மாற்றினார்.

6-வது விக்கெட்டுக்கு தீபக் சஹர் களமிறங்கினார். கடைசி ஓவரை பெஹரன்டார்ப் வீச முதல் பந்தில் கால்காப்பில் வாங்கிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஏமாற்றத்துடன் பெவிலியின் திரும்பினார். 3-வது பந்தில் தீபக் சஹர் லாங்ஆன் திசையில் கிரீனிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். கடைசிப் பந்தில் ரவி பிஸ்னோய் ரன் எடுக்க முற்பட்டு 4 ரன்கள் சேர்த்தநிலையில் ரன் அவுட் ஆகினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

12 ரன்களுக்கு 5 விக்கெட்

20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி கடைசி 12 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. 167 ரன்கள்வரை 4 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த இந்திய அணி 179 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஓவர்களில் 79 ரன்களைச் சேர்த்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலிய அணி வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரோன் ஹார்டி, ஹெரன்டார்ப், தன்வீர் சங்கா 3 பேருமே சிறப்பாக, கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இந்த மூவருமே இந்திய அணியின் ரன்ரேட்டை உயரவிடாமல் இறுகப்பிடித்தனர்.

டிராவிஸ் அதிரடி ஆட்டம்

175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் ஆட்டத்தைத் தொடங்கினர். தீபக் சஹர் வீசிய முதல் ஓவரில் திணறிய ஹெட், பிலிப் பவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தனர்.

முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் பிலிப் ஒருபவுண்டரியும், ஹெட் ஒருபவுண்டரியும் என 11 ரன்கள் சேர்த்தனர். தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரை டிராவிஸ் ஹெட் வெளுத்து வாங்கினார். 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களை விளாசி சஹருக்கு நெருக்கடி கொடுத்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிஷ்னோய், அக்ஸர் கலக்கல்

4-வது ஓவரை வீச பிஸ்னோய் அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி பிலிப் 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து மெக்டர்மார்ட் களமிறங்கினார். இந்த ஓவரில் பிஸ்னோய் நெருக்கடி அளிக்கும் விதத்தில் பந்துவீச ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

5-வது ஓவரை வீச அக்ஸர் படேல் வந்தார். அஸ்கர் ஓவருக்கு தொடக்கத்திலிருந்து திணறிய டிராவிஸ் ஹெட், ஸ்வீப் ஷாட்டில் முகேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆரோன் ஹார்டே களமிறங்கினார். இந்த ஓவரில் அக்ஸர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.

7-வது ஓவரை அக்ஸர் வீசினார். 2-வது பந்தில் க்ளீன் போல்டாகி ஹார்டே 8ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரிலும் அக்ஸர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி இரு ஓவர்களில் பிஸ்னோய், படேல் இருவரும் சேர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி அளித்தனர்.

அடுத்து டிம் டேவிட், மெக்டார்மார்ட் ஜோடி சேர்ந்தனர்.ஆவேஷ் கான், அக்ஸர் படேல் ஓவரை இருவரும் நிதானமாக கையாண்டு ரன்களைச் சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்தது. 60 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் உயர்ந்து கொண்டே வந்ததால், பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்க வேண்டிய நிர்பந்தம் மெக்டார்மார்ட், டேவிட்டுக்கு ஏற்பட்டது.

12-வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். முதல் பந்தில் மெக்டார்மார்ட் பவுண்டரி அடிக்க, 2வது பந்தையும் அக்ராஸ் லைனில் பவுண்டரி அடிக்க முயன்று க்ளீன் போல்டாகினார். மெக்டார்மார்ட் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து மேத்யூ ஷார்ட் களமிறங்கினார். 12-வது ஓவரை கட்டுக்கோப்பாக அக்ஸர் படேல் வீசியதால், ஆஸ்திரேலிய அணிக்கு 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

48 பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது. ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் ரன் சேர்க்க திணறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். முகேஷ் குமார் வீசிய 14வது ஓவரை குறிவைத்த மேத்யூ ஷார்ட் 2 பவுண்டரிகள் உள்பட 9 ரன்கள் சேர்த்தார்.

தீபக் சஹர் வீசிய 15-வது ஓவரை குறிவைத்த ஷார்ட் ஒரு சிக்ஸர் விளாசி 3வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை டேவிட்டிடம் கொடுத்தார். 4-வது பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, ஜெய்ஸ்வால் கேட்ச் பிடிக்கவே 19 ரன்னில் டேவிட் வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

திணறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள்

30 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. 16-ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார், மேத்யூஷார்ட், வேட் இருவரும் இந்த ஓவரை குறிவைத்தனர், இதில் முகேஷ் குமார் நோபால் வீசவே, சிக்ஸர் உள்பட 14ரன்கள் சேர்த்தனர். 24 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது.

17-வது ஓவரை தீபக் சஹர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சஹர் ஸ்லோ பவுன்ஸராக வீசவே, மேத்யூ ஷார்ட் தூக்கி அடிக்கவே டீப் மிட்விக்கெட்டில் ஜெய்ஸ்வாலிடம் கேட்சானது. ஷார்ட்22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்ஷஸ் களமிறங்கி, கேப்டன் மேத்யூ வேட்டிடம் சேர்ந்தார்.

18 பந்துகளில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் சேர்க்க முடிந்தது.

12 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை முகேஷ் குமார் கட்டுக்கோப்பாக வீசியதால், 9 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேர்த்தது.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் பந்துவீச்சில் மேத்யூ வேட் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால் ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

20ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்க்கவே இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணித் தரப்பில் அக்ஸர் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும், பிஸ்னோய்ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் கூறியது என்ன?

வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவு பேசும்போது, “டாஸ் தவிர மற்ற அனைத்தும் நாங்கள் நினைத்தபடியே நடந்தன” என்று கூறிச் சிரித்தார்.

“வெற்றி பெரும் ஊக்கமாக இருந்தது, குறிப்பாக சிறுவர்கள் குணம் காட்டிய விதம். எல்லோரும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதைத்தான் நான் அவர்களிடம் சொன்னேன். பயப்படாமல் இருங்கள், உங்கள் விளையாட்டை விளையாடுங்கள், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஸ்டம்ப்களில் யார்க்கர்களை வீசுவது என்ற எங்களின் திட்டம் மிகத் தெளிவாக இருந்தது. அங்கிருந்து தொடங்குவோம். அது நடக்கவில்லை என்றால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினேன்.” என்றார் சூர்ய குமார்.

https://www.bbc.com/tamil/articles/cx91114qyrxo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா தொட‌ரை வென்ற‌து...........இள‌ம் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடினார்க‌ள்...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் .........!  😁

(உங்களின் பதிவுகளில் கீழே இருக்கும் "பஞ்ச்" வசனத்தை காணவில்லை......ஏதாவது ஒன்றைப் போடுங்கோ)

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, suvy said:

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் .........!  😁

(உங்களின் பதிவுகளில் கீழே இருக்கும் "பஞ்ச்" வசனத்தை காணவில்லை......ஏதாவது ஒன்றைப் போடுங்கோ)

இரண்டு அணியும் பி ரீமை அனுப்பிற்று சர்வதேசப் போட்டியாமெல்லே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

இரண்டு அணியும் பி ரீமை அனுப்பிற்று சர்வதேசப் போட்டியாமெல்லே!

அவுஸ்சில் ஒரு சில‌ வீர‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ வீர‌ர்க‌ள்...........இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌ இர‌ண்டு வீர‌ர்க‌ளை தான் சேர்த்து இருக்கின‌ம்........

அவுஸ்ரேலியாவை Bரீம் என்று சொல்ல‌ முடியாது அண்ணா..........அனுப‌வ‌மான‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை தான் தேர்வு செய்து இருக்கின‌ம்.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா4/1 தொட‌ரை வென்ற‌து.........இது அவுஸ்ரேலியாவுக்கு பெருத்த‌ அவ‌மான‌ம்...........இந்திய‌ இள‌ம் வீர‌ர்க‌ளில் விளையாட்டு அருமை அருமை...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசி ஓவரை வீச அர்ஷ்தீப் தயங்கியபோது, சூர்யகுமார் கூறியது என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவை. முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த கேப்டன் மேத்யூ வேட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஏற்கெனவே 3ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்த அர்ஷ்தீப் சிங்கை கடைசி ஓவரை வீச சூர்யகுமார் அழைக்க ரசிகர்கள் “உஷ்ஷ்ஷ்” என்று சத்தமிட்டனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத அதிசயம் அங்கு நிகழ்ந்தது. எந்தவிதமான பதற்றமும், அச்சமும் இன்றி பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் முதல் இரு பந்துகளை யார்கர்க்ளாக வீசி வீசி மேத்யூ வேடுக்கு நெருக்கடியளித்தார். 3ஆவது பந்தை அர்ஷ்தீப் யார்க்கராக வீசும் முயற்சி தோல்வி அடையவே அதை லாங்-ஆன் திசையில் மேத்யூ வேட் தூக்கி அடிக்க ஸ்ரேயாஸிடம் கேட்சானதும் ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர்.

அடுத்து வந்த பெரன்டார்ப் ஒரு ரன்னும், எல்லீஸ் ஒரு ரன்னும், கடைசிப் பந்தில் பெரன்டார்ப் ஒரு ரன்னும் எடுக்க இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 
இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெங்களூர் ஆடுகளத்தின் சிறப்பு என்ன?

பெங்களூரு சின்னசாமி ஆடுகளத்தில் 2023ம் ஆண்டில் இதுவரை நடந்த 7 சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. அதிலும் இந்த மைதானத்தில் 190 ரன்கள் அடித்தால்கூட அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அனைத்து கணிப்புகளையும் மாற்றி இந்திய அணி 160 ரன்கள் மட்டுமே சேர்த்து அதையும் டிபெண்ட் செய்து ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது.சூர்யகுமார் தலைமையில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தொடர் வெற்றியாகும்.

இதற்கு முன் கடைசியாக 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 139 ரன்கள் சேர்த்து, ஆர்சிபி அணியை 119 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றதே கடைசியாக குறைந்த ஸ்கோரில் டிபெண்ட் செய்யப்பட்டதாகும். அதன்பின் இப்போது இந்திய அணி டிபெண்ட் செய்திருக்கிறது.

 
இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிரட்டும் பந்துவீச்சாளர்கள்

முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. 161 ரன்களை சேஸிங் செய்ய புறப்பட்ட ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் வெற்றிக்கு உரித்தானவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். அதிலும் தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட் வெறி பிடித்தவர் போல் ஷாட்களை அடித்து ரன்களைக் குவித்தபோது அதற்கு கடிவாளம் போட்டு, பெவிலியனுக்கு அனுப்பியது சுழற்பந்துவீச்சாளர்கள்தான்.

பிஷ்னோய் தொடர் நாயகன்

சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல் பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய ரன்ரேட் படிப்படியாகச் சரிந்து, வெற்றிக்கான தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்து நெருக்கடியில் சிக்கியது.

சுழற்பந்துவீச்சுக்கு பலவீனமாக இருக்கும் டிராவிஸ் ஹெட்டை ஏன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நீண்டநேரம் நங்கூரமிட வைத்தது இந்திய அணி என்பது புரியவில்லை. இந்த தொடரில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தது அனைத்தும் ரவி பிஸ்னாயின் சுழற்பந்துவீச்சில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரிலும் அக்ஸர் படேல், பிஸ்னோய் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிஷ்னோய் சிறந்த லெக் ஸ்பின்னராகவும், ஆல்ரவுண்டராக அக்ஸர் படேலையும் உருவாக்க இந்திய அணிக்கு போதுமான அவகாசம் இருக்கிறது.

இந்தப் போட்டியிலும் 31 ரன்கள் சேர்த்து, 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடர் முழுவதும் பந்துவீச வந்தவுடன் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்து, விக்கெட்டுகளை இக்கட்டான நேரத்தில் வீழ்த்திக் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளைச் சாய்த்த ரவி பிஷ்னோய் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மோசமாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்

வேகப்பந்துவீச்சில் இந்திய அணி முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் இருவரையும் அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு தயார் செய்ய முயல்கிறது. ஆனால், அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு ஐபிஎல் தொடரில் இருந்த துல்லியம், லெங்த், ஸ்விங் போன்றவை இந்திய அணிக்குள் வந்தபின் காணப்படவில்லை. ஐபிஎல் தொடரில் ஆடும் ஒவ்வொரு இந்திய வீரரும், இந்திய அணிக்குள் வருவதுதான் இலக்காக வைத்து ஆடிவிட்டு வந்தபின் ஃபார்மை இழந்துவிடுகிறார்கள் என்ற விமர்சனம் உண்டு.

இந்த தொடர் முழுவதுமே அர்ஷ்தீப் சி்ங் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. சிறந்த பயிற்சியாளரிடம் அர்ஷ்தீப் சிங் தீவிரமாகப் பயிற்சி எடுத்தால்தான் பந்துவீச்சில் உள்ள தவறுகளைத் திருத்த முடியும். இல்லாவிட்டால் வரும் ஐபிஎல் தொடர் கூட அர்ஷ்தீப் சிங் சார்ந்திருக்கும் அணிக்கு சிக்கலாகிவிடும்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

'குற்றவாளி போல எண்ணினேன்'

இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் அர்ஷ்தீப் சிங் அளித்த பேட்டியிலும் தனது பந்துவீச்சு மோசமாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார். அவர் கூறுகையில் “நான்தான் போட்டியின் பெரிய பங்காக இருக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் ஏற்கெனவே 3 ஓவர்கள் வீசி 37 ரன்கள்வரை கொடுத்து குற்றவாளிபோல் ஆகிவிட்டேன்.

ஆனால் இறைவன் எனக்கு கடைசி வாய்ப்பாக கடைசி ஓவரை வழங்கினார், என் மீது நம்பிக்கைவைத்து பந்துவீசினேன், வெற்றிக்கு துணையாகினேன். கடவுளுக்கும், என் மீது நம்பிக்கை வைத்த கேப்டன், சக வீரர்கள் நிர்வாகத்துக்கும் நன்றி.

கடைசி ஓவரை வீச சூர்யகுமார் என்னை அழைத்ததும் நான் தயங்கினேன். கவலைப்படாதீர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று நம்பிக்கையளித்தார். இந்திய அணி பேட்டர்களும் 160 ரன்கள் சேர்த்து பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவினர்” எனத் தெரிவித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முகேஷ் குமார் ‘வேகம்’

முகேஷ் குமார் இந்தத் தொடரில் ஓரளவுக்கு பந்துவீசினார் என்றுதான் கூற முடியும். முகேஷ் குமார் பந்துவீச்சிலும் துல்லியத்தன்மை, லைன் லென்த் ஆகியவை இன்னும் நிலைத்தன்மைக்குள் வரவில்லை. அர்ஷ்தீப் சிங்கோடு ஒப்பிடும்போது முகேஷ் குமார் பந்துவீச்சு ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது.

முகேஷ் குமார் தொடர் பயிற்சி, பந்தை ஸ்விங் செய்யும் திறனை வளர்த்தால், லைன்-லெங்த்தை மாற்றாமல் பந்துவீசி பயிற்சி எடுத்தால் நிச்சயமாக டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்குள் அழைத்துச் செல்லும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள். அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் இல்லாத வேகம் முகேஷ் குமார் பந்துவீச்சில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற வகையில் தீபக் சஹர், ஆவேஷ் கான் ஆகியோர் ஒருசில போட்டிகளில் பந்துவீசினாலும் அவர்களின் திறமை என்பது ஐபிஎல்வரை மட்டும்தான். சர்வதேச போட்டி என்று வரும்போது, அவர்களால் நெருக்கடிகளைச் சமாளித்து ஏற்றார்போல் பந்துவீசவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்ற தீபக் சஹர் ரன்களை வாரி வழங்கியது அவர் சர்வதேச போட்டிகளுக்கு இன்னும் தகுதியாகவில்லை என்பதையே காட்டியது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அருமையான கண்டுபிடிப்பு ‘ஜெய்ஸ்வால்’

பேட்டிங்கைப் பொறுத்தவரை கெய்க்வாட்டைவிட, ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அருமையான கண்டுபிடிப்பாகும். ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ந்து டி20 போட்டிகளில் வாய்ப்பளிப்பதன் மூலம் நிச்சயமாக டி20 உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக மாறுவார்.

இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் செய்த தவறு என்னவென்றால், அவரால் பவர்ப்ளே ஓவருக்குப்பின் தனது ஆட்டத்தை நீட்டிக்க தவறிவிட்டார் என்பதுதான். அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கும் ஜெய்ஸ்வால், தனது இன்னிங்ஸையும் நீட்டிக்க முயன்றால் அணிக்கு பெரிய ஸ்கோராக வந்து சேரும்.

கெய்க்வாட் எப்படி?

கெய்க்வாட்டைப் பொறுத்தவரை பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகங்களில் மட்டுமே கெய்க்வாட் பேட்டிங் பிரகாசித்துள்ளது. பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத கடினமான ஆடுகளங்களில் சமாளித்து ஆடுவதற்கு கெய்க்வாட் திணறுகிறார்.

சர்வதேச போட்டியில் விளையாடும் அளவுக்கு, எந்த ஆடுகளத்திலும் தனது பேட்டிங்கில் நிலைத்தன்மை வெளிக்காட்ட கெய்க்வாட்டுக்கு இன்னும் பயிற்சி அவசியமாகும். இந்தத் தொடரில் கெய்க்வாட் சிறப்பான சதம் அடித்தாலும், அதே போட்டியில் பேட்டிங்கிற்கு சாதமான ஆடுகளத்தில் மேக்ஸ்வெல் அடித்த சதம்தான் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் சதம் அடித்ததைவிட பேட்டிங் நிலைத்தன்மையை, நல்ல அதிரடியான தொடக்கத்தை அளித்தது ஜெய்ஸ்வால் மட்டும்தான்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடுவரிசை நாயகன் ரிங்கு சிங்

டி20 போட்டிக்கானவர் சூர்யகுமார் என்று முத்திரை குத்தப்பட்டதுபோல், அதே பாணியில் உருவாகியுள்ளவர் ரிங்கு சிங். வரும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் நடுவரிசைக்கு அருமையான கண்டுபிடிப்பாக ரிங்கு சிங்கை எடுக்கலாம்.

தேவைப்படும் நேரத்தில் தனது பேட்டிங்கின் கியரை மாற்றி அதிரடிக்கு மாறுவது, விக்கெட் சரிந்த நேரத்தில் நிதானமாக, பொறுப்புடன் பேட் செய்தது என ரிங்கு சிங் அனுபவமான பேட்டர் போல் செயல்பட்டார். கடைசி டி20 போட்டி தவிர மற்ற 4 போட்டிகளிலும் ரிங்கு சிங் ஆட்டம் பிரமாதமாக இருந்தது.

அதிலும் முதல் டி20 போட்டியில் கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து வெல்ல வைத்தது என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய ராபின் சிங்கை நினைவுபடுத்தியது. டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் நடுவரிசைக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு ரிங்கு சிங்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஸர் படேல் கூட்டணி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் 37 பந்துகளி்ல் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அணியில் அதிகபட்ச ஸ்கோரும் ஸ்ரேயாஸ் சேர்த்ததுதான். அதன்பின் அக்ஸர் படேல் 31 ரன்களும்,ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களும் சேர்த்தனர். மற்றவகையில் ஜெய்ஸ்வால்(21), கெய்க்வாட்(10) சூர்யகுமார்(5), ரிங்கு சிங்(6), என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சவாலாக மாறும் சங்கா

ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சில் அருமையான கண்டுபிடிப்பு தன்வீர் சங்கா. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி பேட்டர்களுக்கு சவாலாகவே தன்வீர் சங்கா பந்துவீச்சு இருந்தது. தொடர்ந்து போட்டிகளில் தன்வீர் சங்காவுக்கு வாய்ப்பளித்தால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் நிச்சயமாக அனைத்து அணிகளுக்கும் சவாலாக மாறுவார்.

161 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தை அளித்து, வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். அர்ஷ்தீப் சிங்கின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி ஹெட் நெருக்கடி அளித்தார். இதனால் 4 ஓவர்களில் ஆஸ்திரேலிய 40 ரன்கள் என 10 ரன்ரேட்டில் பயணித்தது.

சூர்யகுமாருக்கு தெரிந்தது ரோஹித்துக்கு தெரியவில்லையா?

ஆனால், டிராவிஸ் ஹெட் சுழற்பந்துவீச்சுக்கு இவ்வளவு பயப்படுவார், விளையாடத் தெரியாதவர் என்பதை சூர்யகுமார் கண்டுபிடித்த அளவுக்கு ரோஹித் சர்மா கண்டுபிடிக்காதது ஏன் எனத தெரியவில்லை.

டிராவிஸ் ஹெட் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ரவி பிஸ்னாய் பந்துவீச சூர்யகுமார் அழைத்தார். ரவி பிஸ்னாய் பந்துவீச வந்தவுடன் சுழற்பந்துவீச்சை சமாளித்த ஆடமுடியாமல் கிளீன் போல்டாகி டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வகையில் நடுவரிசை பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. எளிதான இலக்குதான் என்றாலும், சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட பேட்டர்கள் சிரமப்பட்டனர்.

கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல கேப்டன் மேத்யூ வேட் கடினமாக முயன்றார். ஆனால், கடைசி ஓவரில் 10 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டநிலையில், பெரிய ஷாட்டுக்குமுயன்று 22 ரன்களி்ல் ஆட்டமிழந்தார். மேத்யூ வேட் வெளியேறியதும் ஆஸ்திரேலிய தோல்வி உறுதியானது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நம்பிக்கையற்ற புதுமுகங்கள்

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குத் தயார் செய்ய மெக்டார்மார்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் பிலிப், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு சுழற்சி முறையில் இந்த போட்டியில் வாய்ப்பளித்தது. ஆனால், யாரும் பெரிதாக எந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. வேகப்பந்துவீச்சை விளையாடும் அளவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியாமல் திணறினர். இதில் மெக்டார்மார்ட் மட்டும்தான் இந்தத் தொடரில் அரைசதம் அடித்துள்ளார். மற்றவர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்காக அணியைத் தயார் செய்யும் ஆஸ்திரேலிய அணியின் இந்த முயற்சி ஏறக்குறைய தோல்விதான். டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட் இருவரின் பங்களிப்பையும் ஒதுக்கி வைத்து மற்றவர்களின் பங்களிப்பைப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் கூற முடியும். அனுபவமற்றவர்கள், புதியவர்களுடன் களமிறங்கி, இந்திய அணியுடன் விளையாடியதுதான் புதிய அனுபவமாக அமைந்தது. பந்துவீச்சில் தன்வீர் சங்கா மட்டும்தான் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பலமாகும்.

https://www.bbc.com/tamil/articles/cm5p0401xm0o



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.