Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் தொடர் மழை - செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கன அடி நீர் திறப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னையில் மழை
57 நிமிடங்களுக்கு முன்னர்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் நீர் திறப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டும் எச்சரிக்கை குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாற்றில் 8000 கன அடி நீர் விநாடிக்கு திறந்து விடப்படுவதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது.

செம்பரம் ஏரியில் இரண்டு நாட்கள் முன்பு வரை விநாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக 1000 கன அடி, 2500 கன அடி என உயர்த்தப்பட்டு தற்போது 6000 கன அடி திறந்து விடப்படுகிறது.

 
சென்னையில் மழை

தமிழ்நாட்டிலேயே அதிக மழை சென்னையில்

தெற்கு அந்தமான கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது.

இதில் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் அதிக மழை பெய்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 96.7 மில்லி மீட்டர் மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாவதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 81 மில்லி மீட்டர் மழையும் அடுத்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 76 மில்லி மீட்டரும் மழையும் பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக சென்னை நகரில் தி.நகர், கோடம்பாக்கம், வடபழநி, கொளத்தூர், பட்டாளம் என பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. பிரதான சாலைகளிலேயே மழை நீர் தேங்கியிருந்ததால் நேற்று மாலை பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் 145 இடங்களில் நேற்று தேங்கியிருந்ததாகவும் அதில் 70 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைசென்னையில் மழை

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மழையின் காரணமாக, சென்னை ,ராணிப்பேட்டை ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை. திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் எரி அல்லாமல் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பூண்டி, சோழவரம், தேர்வாய்கண்டிகை என மற்ற ஏரிகளில் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையவுள்ளது.எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையில் மழை

தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்

படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள், என மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் வெள்ள நீர் சூழந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை மீட்புப் பணிகளை தொடங்குவார்கள்.

தி.நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட எங்கெங்கு தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அங்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்கூட்டியே சென்று தயாராக இருக்க, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தி.நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கூடிய ரங்கராஜன் சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றப்படுவது சவாலாக இருப்பதால், அங்கு கூடுதல் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c80w795ej5xo

  • கருத்துக்கள உறவுகள்

நீர் மேலாண்மை இல்லாததால் இவ்வளவு நீரையும் வீணடித்து விட்டு அடுத்த மூன்று மாதங்களின் பின் வறட்சி வறட்சி என்று கர்நாடகாவிடம் கையேந்தவேண்டியது ........!  😴

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை புயல்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையில் மழை

பட மூலாதாரம்,IMD.GOV.IN

30 நவம்பர் 2023, 04:09 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி வரும் 4ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிக்கு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை

சென்னைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்கள் படி, நவம்பர் 30ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்யாவிட்டாலும், மாலை நேரம் முதல் மிக கன மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்யாவிட்டாலும், மாலை நேரம் முதல் மிக கன மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 1ம்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2ம் தேதி கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை

பட மூலாதாரம்,IMD.GOV.IN

தமிழகதில் 33 செ.மீ மழை பதிவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் தற்போது வரை 33 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான 35 செ.மீ மழையை விட 6% குறைவு.

சென்னையில் இந்த பருவ மழைக் காலத்தில் இது வரை 59 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவான 64 செ.மீ விட 8% குறைவாகும்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படக்கூடிய நீரின் அளவு விநாடிக்கு 4000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காலை முதல் மழை பெய்யாத காரணத்தால், தேங்கியுள்ள மழைநீர் விரைவில் வடிய வேண்டும் என்ற காரணத்தால் திறந்துவிடப்படும் நீரின் அளவை குறைக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு காலை 11 மணிக்கு பிறகு 4000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக இன்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மழை தற்காலிகமாக நின்றிருப்பதன் காரணமாக தற்போது திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

 
சென்னையில் மழை

தமிழ்நாட்டிலேயே அதிக மழை சென்னையில்

தெற்கு அந்தமான கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது.

இதில் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் அதிக மழை பெய்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 96.7 மில்லி மீட்டர் மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாவதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 81 மில்லி மீட்டர் மழையும் அடுத்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 76 மில்லி மீட்டரும் மழையும் பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக சென்னை நகரில் தி.நகர், கோடம்பாக்கம், வடபழநி, கொளத்தூர், பட்டாளம் என பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. பிரதான சாலைகளிலேயே மழை நீர் தேங்கியிருந்ததால் நேற்று மாலை பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் 145 இடங்களில் நேற்று தேங்கியிருந்ததாகவும் அதில் 70 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை
 
சென்னையில் மழை

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மழையின் காரணமாக, சென்னை ,ராணிப்பேட்டை ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை. திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் எரி அல்லாமல் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பூண்டி, சோழவரம், தேர்வாய்கண்டிகை என மற்ற ஏரிகளில் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையவுள்ளது.எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை

ஆரஞ்ச் அலர்ட்

சென்னையில் மழை

பட மூலாதாரம்,IMD.GOV.IN

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடல்

தி.நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய குறுகிய ரங்கராஜன் சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றப்படுவது சவாலாக இருப்பதால், அங்கு கூடுதல் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள 20 பிரதான சுரங்கப்பாதைகளில் 16 சுரங்கப்பாதைகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, ராயபுரம் மண்டலத்தில் உள்ள கெங்குரெட்டி சுரங்கப்பாதை, பெரம்பூர் நெஞ்சாலை சுரங்கப்பாதை, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால், இந்த சுரங்கப்பாதைகள் மூடப்படவில்லை. அங்கிருந்து மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

14 கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புவதை உறுதி செய்யவும் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மழை

மாநாகராட்சி பணிகளை பார்வையிட்ட முதல்வர்

மழை நிவாரண பணிகளுக்காக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்யும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, தொலைபேசி மூலம் புகார் தெரிவித்த மக்களிடம் பேசினார்.

தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்

படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள், என மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் வெள்ள நீர் சூழந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை மீட்புப் பணிகளை தொடங்குவார்கள்.

தி.நகர் ,மேற்கு மாம்பலம் உள்ளிட்ட எந்தெந்த தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அங்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்கூட்டியே சென்று தயாராக இருக்க, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தி.நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கூடிய ரங்கராஜன் சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றப்படுவது சவாலாக இருப்பதால், அங்கு கூடுதல் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c80w795ej5xo

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா .......இனி கொஞ்ச நாட்களுக்கு கூவம் ஆறு சுத்தமாக சத்தமிட்டு ஓடும் ......அதன் அருகில் வாழும் மக்களும் சுத்தம் சுகாதாரமாக இருப்பார்கள்........!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும்புயல் - எப்போது, எங்கு கரையைக் கடக்கும்?

சென்னை புயல்

பட மூலாதாரம்,IMD.GOV.IN

30 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வருவதால், தமிழகத்தில் கன மழை மற்றும் சில இடங்களில் மிக கன மழையும் பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. டிசம்பர் 3ம் தேதிவாக்கில் இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வுத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இலங்கை கடல் பகுதியிலும் இதே நேரத்தில் மற்றொரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு நாள் தாமதாக புயலாக மாறுகிறது.

ஞாயிற்றுகிழமை புயலாக மாறி டிசம்பர் 4ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் புயலாக நிலவக் கூடும். சென்னை-மசூலிப்பட்டினம் அருகே 4ம் தேதி மாலை இது கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், வட தமிழக கடலோரத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை

1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

வங்கக் கடலில் புயல் உருவாகும் சாதகமான சூழல் உள்ளதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் நேற்று இருவர் உயிரிழப்பு

சென்னையில் தி.நகர் சுற்றியுள்ள பகுதியில் நேற்று மழை காரணமாக இருவர் உயிரிழந்தனர். தி.நகர் வாணி மகால் அருகே மழைநீரில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும் மேற்கு மாம்பலம் பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டே சென்ற நபர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது செல்போன் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரும் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு மேலும் குறைப்பு

2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பாதிப்புகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென திறக்கப்பட்ட அதிக அளவிலான நீரே காரணமானது. இந்நிலையில் செம்பரம்பாக்கத்திலிருந்து எவ்வளவு நீர் திறக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் முக்கியமான தகவலாகவே இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு விநாடிக்கு 6000 கன அடி திறக்கப்பட்ட்டது. அதன் பிறகு மழை குறைந்ததன் காரணமாக காலை 11 மணி முதல் 4000 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று முழுவதும் பெரிய மழை இல்லாத காரணத்தினால், இன்று காலை செம்பரம்பாக்கத்துக்கு நீர் வரத்து 1431 கன அடியாக இருக்கிறது. எனவே தற்போது விநாடிக்கு 402 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c80w795ej5xo

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே மக்கள் பாதிக்கப்பட்டாலும் செய்தி களில்  வராது திமுக ஆட்சிக்கு வந்த உடனே முதலில் ஊடகங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்ஜம் புயல்: தமிழ்நாட்டை நெருங்கும் புயல், கரையைக் கடக்கும் தேதி மாற்றம் - சமீபத்திய தகவல்கள்

மிக்ஜம் புயல்

பட மூலாதாரம்,IMD

30 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் அதி தீவிர கன மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது?

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் புகுதியால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சனிக்கிழமை காலை 7 மணியிலிருந்து அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தமிழ்நாடு புயல்

பட மூலாதாரம்,IMD

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெரும் என்றும் டிசம்பர் 3-ஆம் தேதி இது புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்குப் பிறகு இந்தப் புயல், டிசம்பர் 4-ஆம் தேதியன்று மதியம் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளை வந்தடையும். பிறகு இந்தப் புயல் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டியே நகர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூருக்கும் மசூலிப்பட்டனத்திற்கும் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னத்தின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 
சென்னையில் மழை

டிசம்பர் 3, 4 தேதிகளில் தீவிர கன மழை எச்சரிக்கை

இந்தப் புயலின் காரணமாக, டிசம்பர் 3-ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் டிசம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 4-ஆம் தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60கி.மீ முதல் 70கி.மீ வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் வீசும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

புயலாக மாறியபின் என்ன பெயர் வைக்கப்படும்?

இது புயலாக உருமாறிய பிறகு இதற்கு, 'மிக்ஜம்' எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயர் மியான்மரால் வழங்கப்பட்டது.

இந்தப் புயலின் காரணமாக, வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மூன்றாம் தேதி காலை வரை 80கி.மீ. வேகத்திலும் அன்று மாலை வரை மணிக்கு 70 முதல் 80கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மூன்றாம் தேதி மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90கி.மீ வேகத்திலும் இடையிடையே 100 கி.மீ வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும்.

இதன் காரணமாக மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் இன்று கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c80w795ej5xo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.