Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3    16 DEC, 2023 | 10:54 AM

image
 

இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.

கேரளாவில் நேற்று 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கேரளாவில் தற்போது பரவும் கொரோனா தொற்றினால்  இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் முதல்முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

https://www.virakesari.lk/article/171809

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவில் ஒரே நாளில் 335 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; 5 பேர் பலி

18 DEC, 2023 | 11:43 AM
image
 

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1701 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையில் அறிக்கையில் கூறியப்பதாவது: உயிரிழந்தவர்களில் 4 பேர் சமீபத்தில் ஜேஎன்.1 புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்ட கேரளாவிலும் ஒருவர் மத்தியப் பிரதேசத்திலும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா  பாதிப்பு 4.50 கோடியாக  உள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 4.46 கோடி பேர் குணமாகியுள்ளனர். தேசிய அளவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 98.81 ஆக உள்ளது.கொரோனாதொற்று பாதிப்பால் இதுவரை 533316 உயிரிழந்துள்ளனர்.  என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜேஎன்.1 பாதிப்பு: கேரளாவில் 78 வயதான மூதாட்டியிடம் நவம்பர் 18-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவில் அவருக்கு புதிய துணை வகையான JN.1 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு லோசன காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது என்றும் தற்போது அவர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக திருச்சியில் இருந்து அக்டோபர் 25-ம் தேதி சிங்கப்பூர் சென்ற தமிழருக்கும் JN.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும் திருச்சியிலோ அல்லது தமிழகத்திலோ வேறு எங்கும் பாதிப்புகள் இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் JN.1 வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் "கடந்த மாதத்தில் சிங்கப்பூர் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு இந்த புதிய துணை வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு இப்போது கேராளவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை இது ஒரு துணை வகை வைரஸ் தான். மக்கள் அச்சப்படத் தேவையில்லை.சூழ்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

வயதானவர்களுக்கு எச்சரிக்கை: கேரளாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 346 பேர்  பாதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் 1324 பேர்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே கொரோனா பாதிக்கப்பட்ட கோழிக்கோட்டைச் சேர்ந்த குமரன் (77) கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்கள் இறப்புக்கு வயது முதிர்வு மற்றும் இணைநோய்கள் காரணம் என்றும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171933

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேஎன் 1 கொரோனா: அறிகுறிகள் என்னென்ன?பாதுகாப்பாக இருப்பது எப்படி?

புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது வரை 1,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இதில் எத்தனை பேர் ஜேஎன் 1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனவும் மாநிலத்தில் அதிகளவில் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

"கடந்த சில வாரங்களாக கேரளா மாநிலத்தில் இருந்து கோவிட்-19 பரவல் அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் (ஐஎல்ஐ) பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் அதிகளவில் சோதனைகளுக்கு அனுப்பப்படுவதன் மூலம் இது தெரிய வருகிறது" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பால் கூறினார்.

 
புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 
புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல மாதங்களுக்கு பிறகு முகக்கவசம் குறித்த அறிவுறுத்தல்கள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வந்தது. இதனால் தீவிர பாதிப்பு இல்லையென்றாலும், பலருக்கு சளி, இருமல் போன்ற லேசான பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தியது.

ஏப்ரல் மாதத்துக்கு பின் கடந்த நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தினசரி ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. டிசம்பர் மாத தொடக்கம் முதல் தினசரி தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 20 பேர் வரை தொற்று உறுதி செய்யப்படுகிறது.

நவம்பர் மாத இறுதியில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20க்கும் குறைவாகவே இருந்து வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 63க்கும் மேல் உயர்ந்துள்ளது.

இதனால் தமிழக சுகாதாரத்துறை முகக்கவசம் அணிவது குறித்து பல மாதங்கள் கழித்து மீண்டும் அறிவுறுத்தல்களை வழங்க தொடங்கியுள்ளது.

பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் என்பதால் கர்ப்பிணி பெண்கள், தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜேஎன் 1 கொரோனா என்றால் என்ன ?

இதற்கு முன்பாக ஜேஎன் 1 வகை கொரோனா அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய வகை கொரோனா விரைவாக அல்லது திறம்பட பரவ இந்த மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன. அப்படி மாற்றம் பெற்றதுதான் ஜேஎன்1.

"ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மற்ற வகை கொரோனா வைரஸ்களுடன் புதிய வகை கொரோனாவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம்" என அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி (Centres for Disease Control and Prevention) கூறுகிறது.

 
புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் என்ன?

ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் குறித்து நுரையீரல் நிபுணர் சி. பாஸ்கர பாபு பிபிசியிடம் பேசினார்.

அப்போது அவர், “நோய் தொற்று உள்ளவர்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடுமையான இருமல் மற்றும் சோர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் காய்ச்சலில் தான் முதலில் தொடங்குகின்றன. இது நிமோனியா போன்ற நோய்களுக்கான அறிகுறிகளுக்கு நெருக்கமாக இருப்பதால், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது,” என்றார்.

இந்த அறிகுறிகள் முழுமையாக குறைய இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.

“முழுமையான படுக்கை ஓய்வு எடுப்பதன் மூலம் இதிலிருந்து விரைவில் மீண்டு வரலாம்.

கோவிட்-19 இன் இரண்டாவது அலை போல இது ஆபத்தானது அல்ல. சில முன்னெச்சரிக்கைகள் மூலம், JN1 ஐத் தவிர்க்கலாம்,”என்றார் டாக்டர் பாஸ்கர பாபு.

“அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அனைத்து மக்களும் மாஸ்க் அணிவதன் மூலம் இந்த நோயில் இருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

குளிர்ந்த உணவுப்பண்டங்களை சாப்பிடக் கூடாது. சிகரெட் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருமும்போது கண்டிப்பாக கை மற்றும் கைக்குட்டையை மூடிக்கொள்ள வேண்டும்.’’ என்றார் அவர்.

ஜேஎன்1 தொற்று உறுதி செய்யப்பட்டால், முதல் நான்கைந்து நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டு, முழு ஓய்வு எடுத்தால் அதிலிருந்து விடுபடலாம் என்றார் பாஸ்கரபாபு.

 
புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு வருமா?

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளும் ஜேஎன் 1 கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

எனினும் புதிய வகை வைரஸ்களை ஏற்கெனவே இருக்கும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்கும் என்பது பற்றி ஆய்வுகள் நடைபெறுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை

ஜேஎன்1 நோய்த்தொற்றின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எந்த அறிகுறியும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலமே இதனையும் கண்டறியலாம் என மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கோவிட் 19 வழிகாட்டுதல்களையே நடைமுறைப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஆர்டிபிசிஆர் சோதனைகளை அதிக அளவில் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய மாற்றங்களை சரியான நேரத்தில் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாவட்ட வாரியாக இந்த நோய் தொற்றின் தீவிரத்தை பொறுத்து அவ்வப்போது தகவல்களை திரட்டி, கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைந்த சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும், நோய் தொற்றுப்பரவல் அதிகரித்தால் ஆரம்ப கட்டத்திலேயே கவனிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறுவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு பரிந்துரைத்த விகிதத்தின்படி, ஆர்.டி.பி.சி.ஆர்., ஆன்டிஜென் பரிசோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/czv5dxk44wjo

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவில் ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா - 6 பேர் உயிரிழப்பு; ஜேஎன்.1 பாதிப்பு அதிகரிப்பு

28 DEC, 2023 | 03:15 PM
image
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4097 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (டிச.28) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் இருவரும் கர்நாடகா கேரளா மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் தலா ஒரு நபரும் என 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர். 

புதிதாக பரவி வரும் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் குளிர் காலத்துக்கு பிறகு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்இ டிசம்பர் 26-ல் வெளியான தகவல்படி ஜேஎன்.1 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109- எட்டியுள்ளது. இந்த பாதிப்பால் கர்நாடகா கேரளா கோவா குஜராத் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

corona_test.jpg

ஜேஎன்.1 திரிபு வைரஸ் எளிதில் பரவக் கூடியது என்றும் இது முதலில் குளிர் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும் அதன் பிறகு மேல் சுவாசக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழக நிலவரம் என்ன? - தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மதுரை திருச்சி கோவை திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

“தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட 56 மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 30 மாதிரிகளின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. ஏற்கெனவே சமூகத்தில் பரவியிருக்கும் எக்ஸ்பிபி வகை கொரோனா24 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இருவருக்கு பிஏ.1 வகை பாதிப்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் திருச்சி மதுரை கோவை திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா இருந்தது தெரியவந்தது. அவர்கள் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. கர்ப்பிணிகள் முதியோர் இணை நோயாளிகள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மரபணு பகுப்பாய்வுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட மேலும் 96 மாதிரிகளின் முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும்” என்று அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது “புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 26 மாதிரிகளின் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை. அதேபோல் மாநில பொது சுகாதாரத் துறையின் ஆய்வகத்தில் 70 மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகள் சில நாட்களில் கிடைக்கும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேநேரம் வழக்கமான கரோனா பரிசோதனைகள் தமிழகம் முழுவதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

https://www.virakesari.lk/article/172639



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.