Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செக் குடியரசின் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் : 10 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 DEC, 2023 | 09:49 PM
image
 

செக் குடியரசின் சென்ட்ரல் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோன் பலாச் சதுக்கத்தில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

TELEMMGLPICT000360671376_17031729028140_

TELEMMGLPICT000360669556_17031737532320_

TELEMMGLPICT000360670953_17031717801440_

https://www.virakesari.lk/article/172247

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி சூடு நடத்திய பல்கலைக்கழக மாணவர் பற்றி திடுக்கிடும் தகவல்

ஐரோப்பிய நாடான செக்குடியரசு நாட்டின் தலைநகரான பராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டார்.

இதனால் உயிருக்கு பயந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் வகுப்பறை கதவுகளை மூடிக்கொண்டனர். பலர் குண்டுபாய்ந்து இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து பொலிஸார் அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Capture-15.jpg

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தார். அவர் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பொலிஸார் சுட்டுக்கொன்றனரா? என்பது தெரியவில்லை.

பொலிஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் டேவிட் கோசாக் (வயது 24) என்பதும், அந்த பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர் மீது பொலிசில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் சட்டப்பூர்வமாக பல துப்பாக்கிகள் வைத்து இருந்தார். மேலும் நிறைய வெடிமருந்துகளும் வைத்து இருந்தார்.

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பராக் நகருக்கு மேற்கே சொந்த ஊரான ஹோக் டவுனில் தனது தந்தையை கொன்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பு எதுவும் இல்லை என அந்நாட்டு மந்திரி விடராகுசன் தெரிவித்துள்ளார். செக் குடியரசு நாட்டை பொறுத்த வரை இது போன்ற துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியது கிடையாது. முதன் முறையாக இந்த பெரிய அளவிலான தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/285646

  • கருத்துக்கள உறவுகள்

விதைத்ததை அறுக்கின்றார்கள்.

அம்புட்டுதே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செக்குடியரசில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

23 DEC, 2023 | 02:49 PM
image

பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு  இரங்கல் தெரிவிக்கும் வகையில் செக்குடியரசில் இன்று சனிக்கிழமை தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, உத்தியோகபூர்வ அரச கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நண்பகல் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (21) தலைநகர் ப்ராக்கில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலை பீட கட்டிடத்தில் மாணவன் ஒருவனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 20 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மாணவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

குறித்த தாக்குதலுக்கான காரணத்தை  கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழகத்தின் இசையியல் பிரிவின் தலைவரான லென்கா ஹ்லவ்கோவாவும் அடங்குவார்.

மேலும்,  மொழிபெயர்ப்பாளரும்  ஃபின்னிஷ் இலக்கிய நிபுணர் ஜான் ட்லாஸ்க் மற்றும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பாக செக்குடியரசின் பிரதமர் பீட்ர் ஃபியாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்த "கொடூரமான தாக்குதலால் " நாடு அதிர்ச்சியடைந்துள்ளது. ஒருபுறம் கண்டனத்தை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது கடினம். மறுபுறம் கிறிஸ்துமஸுக்கு முன்னர் இந்த நாட்களில் நமது முழு சமூகம்  வலி மற்றும் துக்கம் அனுபவிக்கிறது என தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூட்டை நடத்திய மாணவன்  வேறொரு தந்தை கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

அத்தோடு, 15 ஆம் திகதி ப்ராக் புறநகரில் உள்ள ஒரு காட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் மற்றும் அவரது இரண்டு மாத மகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபராவார்.

இந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஒரு தனி நபரால் துப்பாக்கியால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

1347 இல் நிறுவப்பட்ட சார்லஸ் பல்கலைக்கழகம் செக் குடியரசின் மிகப் பழமையானதும் மிகப்பெரிய பல்கலைக்கழகம்.  ஐரோப்பாவில் உள்ள பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

https://www.virakesari.lk/article/172328

  • கருத்துக்கள உறவுகள்

காசாவோடு ஒப்பிட்டால் சிறிய துயரம்தான். ஆனால், ஐரோப்பிய நாடல்லவா. அதனால், மிகத்துயரமான சாவுகள் என்று எல்லா ஊடகமும் ஒப்பாரி வைக்கிறார்கள். ஆழ்ந்த இரங்கல். ஆயுத அனுமதிப்பத்திர அனுமதியை ஒவ்வொரு ஆறுமாதமும் புதுப்பித்தல், ஒவ்வொரு முறையும் உளவியல் மதிப்பீட்டு அறிக்கைக் கோருதல் போன்ற விதிகளை நடைமுறைக்கொண்டுவந்தால் இது போன்ற அவலங்களைக் குறைக்கலாம். தடுக்கேலாது. தடுத்தால் ஆயுத வியாபாரிகளின் பிழைப்பு என்னாவது. 

காசாவுக்கும் பராக்குக்கும் இடையில் ஒரு 4000கி.மீ தூரம் இருக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nochchi said:

காசாவோடு ஒப்பிட்டால் சிறிய துயரம்தான். ஆனால், ஐரோப்பிய நாடல்லவா. அதனால், மிகத்துயரமான சாவுகள் என்று எல்லா ஊடகமும் ஒப்பாரி வைக்கிறார்கள். ஆழ்ந்த இரங்கல். ஆயுத அனுமதிப்பத்திர அனுமதியை ஒவ்வொரு ஆறுமாதமும் புதுப்பித்தல், ஒவ்வொரு முறையும் உளவியல் மதிப்பீட்டு அறிக்கைக் கோருதல் போன்ற விதிகளை நடைமுறைக்கொண்டுவந்தால் இது போன்ற அவலங்களைக் குறைக்கலாம். தடுக்கேலாது. தடுத்தால் ஆயுத வியாபாரிகளின் பிழைப்பு என்னாவது. 

காசாவுக்கும் பராக்குக்கும் இடையில் ஒரு 4000கி.மீ தூரம் இருக்குமா? 

😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.