Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத்தொடர்

Featured Replies

சர்வதேசம் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது: ஐ.நாவில் மகிந்த குற்றச்சாட்டு

சர்வதேச நாடுகள் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த மாநாட்டில் உரையாற்றிய மகிந்த ராஜபக்சவின் முக்கிய பகுதிகள்:

http://www.eelampage.com/?cn=33567

இறைவன் மாமா மகிந்த தான் உரையாற்றினவரா அல்லது வாயசைக்க பின்னால இருந்து வேற யாரும் உரையாற்றினவையோ!! :P

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மேசையில் ஒன்றும் இல்லையே!

[26 - September - 2007]

* போர் ஒரு மாயையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகிறார் பிரதம நீதியரசர்

வ.திருநாவுக்கரசு

ஐ.நா.வின் 62 ஆவது வருட மாநாட்டில் நேற்றைய ஆரம்ப நாளிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். வரலாற்றில் முதல் நாளிலேயே இலங்கை தலைவர் ஒருவர் உரையாற்றியது இது தான் முதல் தடவை என்ற வகையில் அது ஒரு பெரும் பேறாகக் கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் அடங்கலான பல விடயங்கள் மேற்படி மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன. இக்கட்டுரை அச்சுக்குப் போகும் வரை ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையின் விபரங்கள் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் பொதுவாக நாட்டின் அரசியல், பொருளாதார விடயங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் தான் அவரது உரையின் உள்ளடக்கமாயிருக்கலாம். இம்மாதம் முற்பகுதியில் 6 ஆவது ஆண்டு நினைவு கூரப்பட்டதாகிய 9/11 சம்பவத்தையும் அவர் தொட்டுப் பேசக்கூடும். ஏனென்றால் அதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் முடுக்கி விட்டதாகிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது பயங்கரவாதத்தின் மூல காரணத்திற்குப் பரிகாரம் தேடாமல் கண்மூடித்தனமாக இராணுவ அடக்குமுறையினை மேற்கொள்ளும் நாட்டுத் தலைவர்கட்கு மிக வாய்ப்பான சுலோகமாய் அமைகிறது. இன்றைய நிலையில் இலங்கையைப் பொறுத்தவரை யுத்தம் தொடரப்படுவது ஏற்புடையதல்ல என சர்வதேச சமூகத்தினால் சற்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் , உள்நாட்டிலும் குறிப்பாக நீதித்துறையிலிருந்தும் அதற்கு ஒப்பான கருத்துகள் மற்றும் கரிசனைகள் வெளிக்காட்டியிருப்பதைக் காண முடிகிறது.

விடுதலைப் புலிகளை 100% தோற்கடிப்போம்

விடுதலைப் புலிகளை 100% தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடர்ந்து நடத்தப்படுமென அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ திருகோணமலை கடற்படைத்தளத்தில் இடம்பெற்ற கொண்டாட்டத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னிலையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் ஒறுகொடவத்தையில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஏ.பிளேக் உரையாற்றுகையில்;

சில இராணுவ வெற்றிகளை ஈட்டிய அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இராணுவத்தீர்வை நோக்கி நகரக்கூடாது. பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாயினும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் நோக்கிலான அரசியல் தீர்வையே நோக்கி நகர வேண்டும்.

சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி போன்ற சர்ச்சைக்குரிய சொற்பதங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கையூட்டும் விதத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. மேலும், மக்கள் பிரதிநிதிகளோடு அரசாங்கம் கலந்துரையாடிக் கருமமாற்றத் தவறினால் துணைப்படைகளைக் கட்டுப்படுத்தத் தவறினால் பிரச்சினைக்கான தீர்வு காண்பது கடினமாகிவிடும் என்றெல்லாம் கூறியுள்ளார்.

அமெரிக்கா ஒரு சமஷ்டி முறைமை கொண்ட நாடு என்பதை யாரும் அறிவர். என்றாவது தூதுவர் பிளேக் கூறிவைத்திருக்கலாம்.

பிரதம நீதியரசர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் அடுத்து பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இருவேறு வைபவங்களில் முன்வைத்த கருத்துகளும் கரிசனைகளும் குறிப்பாக ஆளும் தரப்பினரால் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையாகும். முதலாவதாக அண்மையில் அனுராதபுரத்தில் மேல் முறையீட்டு நீதிமன்ற திறப்பு விழாவின் போது எந்தவொரு பிரஜைக்கும் அநீதி விளைவிக்காமல் நெகிழ்வுத் தன்மையான அதிகாரப் பரவலாக்கம் ( devolution) மூலம் இலங்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனக் கூறியுள்ளார். அங்கே அவர் மேலும் கூறியதாவது;

இந்த யுத்தம் ஒரு மாயையின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய முறையில் அதிகாரப் பரவலாக்கத்தைச் செய்யலாம். நீதித்துறை இதனைச் செய்யலாமென்றால் ஏனைய வகைகளும் இதனை இலகுவாகச் செய்யலாம். சமஷ்டி (Federal) எனும் சொற்பதத்தினால் நாம் அமிழ்ந்து போகத் தேவையில்லை.

எவ்விதமான அரசியலமைப்பின் கீழேயும் அதிகாரப் பரவலாக்கம் செய்யமுடியும். நாம் ஒருவரையொருவர் கொல்லத் தேவையில்லை. நாமாகவே நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நன்னோக்குடன் புதியதொரு அதிகாரப் பரவலாக்க முறைமையினை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு பிரதம நீதியரசர் அழுத்திக் கூறும் பொழுது அதிகாரப்பரவலாக்கம் என்பதற்கப்பால் அதிகாரப் பகிர்வு ( power- sharing) எனும் எண்ணத்தைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் போல் தெரிகிறது. மேலும் சமஷ்டி எனப்படுவது பிரிவினை அல்லது தனிநாடு என தென்னிலங்கையில் விசமத்தனமாக காலங்காலமாக அர்த்தம் கற்பித்து

வந்துள்ளமையால், அது பிரிவினைவாதம் அல்ல என அவர் விளக்கியிருந்தால், அறியாமையில் அமிழ்ந்திருப்பவர்கட்கும் தெளிவு ஏற்படச் செய்திருக்கும்.

இரண்டாவதாக சென்றவாரம் புதுக்கடைப்பகுதியில் காதி சபையொன்றினை அங்குரார்ப்பணம் செய்தபோது, பிரதம நீதியரசர் கூறியதாவது; "இறுதி வெற்றியினை யுத்தத்தினால் எட்ட முடியாது. அது தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதன் மூலம் அடைய வேண்டியதொன்றாகும். துப்பாக்கி ரவைகள், பீரங்கி மற்றும் பல்குழல் றொக்கற்றுகள் மூலம் தாக்குதல்கள் நடத்தி யுத்தத்தில் வெற்றியீட்ட முடியுமென்றாலும், மக்கள் மங்களை வெல்ல முடியாது. தமிழ் மக்களுக்கு எமது ஆதரவு உண்டு என அவர்கட்கு நம்பகத்தன்மை ஏற்படுத்த வேண்டும். அல்லாவிட்டால் இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. மக்களுக்குத் தேவை சாந்தி சமாதானத்தைத் தரவல்ல அரசாங்கம். யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகளிடமிருந்து கப்பம் கோரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாதளவு அவலங்களை அனுபவிக்கின்றனர். அதற்கப்பால் கப்பங்களும் கோரப்படுகின்றன. நாம் மக்கள் மீது யுத்தத்தை திணித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென பொதுமக்களின் அபிப்பிராயம் வளர்க்கப்பட வேண்டும்". இவ்வாறு பிரதம நீதியரசர் கூறியுள்ளார்.

கோதாபயவின் மாற்று அறிவித்தல்

இதனிடையில், விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கினால் பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. சென்ற வருடம் அக்டோபரில் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு அவர்கள் முன்வரலாம் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். அதாவது, அவர் திருகோணமலையில் ஆற்றிய உரையில் முழங்கியதற்கு மாறாக, மென்மையான போக்கினைக் கடைப்பிடிக்க தாம் தயார் என்ற அர்த்தப்படவே பிந்திய நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளதாக கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மேசையில், ஒன்றுமேயில்லை. எனவே, ஐ.நா.வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகவே பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்துள்ளார் போலும்.

குடும்ப ஆதிக்கம்

குடும்ப ஆதிக்க அரசியலானது இந்த நாட்டுக்கு அன்று தொட்டு ஊறு விளைவித்து வந்துள்ளது. தனக்குப்பின் தனயன் டட்லி எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்க செயற்பட்டு, அன்றைய ஐ.தே.க. அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சராகவும், சபை முதல்வராகவும், விளங்கியவராகிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார். அதாவது, டட்லி சேனநாயக்காவை அடுத்த பிரதமராக்குவதற்கே அத்திட்டம் அரங்கேற்றப்பட்டது. அதன் காரணமாகவே பண்டாரநாயக்க ஐ.தே.க.வை விட்டுவிலகி ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கினார். கூடவே, பிரதமர் பதவியை விரைந்து எட்டுவதற்காக, "24 மணித்தியாலத்தில் சிங்களம்" எனும் தீச்சுவாலை போன்ற சுலோகத்தினை முன்வைத்தவர். பிரதமர் பதவியும் கைக்கெட்டி "சிங்களம் மட்டும்" சட்டமும் நிறைவேற்றப்பட்டு விட்டது. பின்பு பண்டாரநாயக்க குடும்ப ஆதிக்கம் நிலைகொண்டுவிட்டது. நாடும் பின்னடைந்துவிட்டது.

இன்றைய நிலைமை என்னவென்றால் ராஜபக்ஷ குடும்ப ஆதிக்கம் முன்னெப்போதையும் விட அப்பட்டமானதாகிவிட்டது என்பதாகும். இவற்றின் காரணமாக நாட்டு நலனுக்கு பங்கம் விளைவிக்கப்படுகிறது என்பதே எமது கவலையாகும். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் உறவினர் உள்வாங்கப்படுதல் பளிச்சென்று தெரியும் விடயமாகிவிட்டதென சென்றவார இறுதி ஆங்கில இதழொன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காலஞ்சென்ற அமைச்சர் அன்வர் இஸ்மாயில் மறைந்த கையோடு, ஜனாதிபதியின் சகோதரரும் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ அன்வரின் இடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அன்வர் இஸ்மாயில் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் (தே.மு.கா.) தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டிருந்தவராகைய

அனைத்துலக நாடுகள் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தினை அடைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்ற போதும், சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

இலங்கையில் மனித உரிமை மீறால்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளன என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்து வருகின்ற போதும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளர், என இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த இராஜதந்திரி மேலும் தெரிவித்தவை வருமாறு :-

இலங்கை அரசுக்கு எதிரான தீhமானத்தை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.வின் மதனித உரிமை சபையிலும், பிரெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்டடிருந்த போதும் எதிர்வரும் மாதம் இலங்கை செல்லவுள்ள ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் ஆய்வாளர் லூய்ஸ் ஆர்பரின் பயணத்தின் பின்னர் அதனை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நாடான போர்த்துக்கல் தீர்மானித்துள்ளது என தெரிவித்தள்ளார்.

கடந்த இருவருடங்களில் இலங்கை அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தை மூன்று தடவைகள் ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்ததக்கது.இதனிடையே ஆர்பரின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து ஒரு சிறப்புக் கூட்டத்தை

கூட்ட வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதியான பீற்றர் ஸ்பிலின்ரர் தெரிவித்துள்ளார்.

நன்றி சுடர் ஒளி

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தப்பிப் பிழைத்தாலும் எப்போதும் தப்பிவிட முடியாது

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தற்போதைய ஆறாவது கூட்டத் தொடர் பெரும் பாலும் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை நிலைவரங்களை நேரில் கண்காணித்து, விசாரித்து, ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கக் கூடியதாக ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்றை நிரந்தரமாக இலங்கையில் நிறுத்த வேண்டும் என்ற பிரேரணையை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி வைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், இறுதிக் கட்டத்தில் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டி ருக் கின்றன. கைவிடப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கிலும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கை மீது விசேட கவனம் செலுத்தப்படவேண்டிய தேவை

*சுட்டிக்காட்டுகிறது ஐ.நா. அமைப்பு

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்கள், விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் மற்றும் கருணா அணியினரே இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 6 ஆவது கூட்டத் தொடரில் தனித்தனியாக அறிக்கைகளை விடுத்து பேசிய ஜேர்மன், பிரிட்டன், ஜப்பான் நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக பேசிய போர்த்துக்கல் நாட்டு பிரதிநிதியும் ஐ.நா.வின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தின் பிரதிபலன்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேநேரம், மனித உரிமைகள் பேரவையின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் இலங்கை அதனது உள்நாட்டுப் பிரச்சினைக்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டின் ஊடாக சமாதானமான பேச்சுகள் மூலமானதொரு தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும் அத்துடன், பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப் புள்ளியொன்றை வைக்க செயற்பட வேண்டுமெனவும் ஜேர்மன் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகளும் ஏனைய துணைப்படைக் குழுக்களும் வன்முறைகள், பொதுமக்கள் படுகொலை, கொள்ளை, கடத்தல்கள், பலவந்தமாக தடுத்துவைத்திருத்தல், காணாமல்போதல் மற்றும் சிறுவர்களை படைக்குச் சேர்த்தல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்து அவற்றை நிறுத்த வேண்டுமெனவும் ஜேர்மன் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம், பாரிய மனித உரிமை மீறல்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளிலுள்ள பாரிய தவறுகள், தடங்கல்களை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் 2 ஆவது இடைக்கால அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டிருப்ப

இரண்டு வருடங்களாக எல்லோரும் கவலை தெரிவிப்பதோடு சரி. சிங்கள இனவாதிகளுக்கு இவர்கள் தெரிவிக்கும் கவலைகளெல்லாம் பொருட்டல்லவே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு வருடங்களாக எல்லோரும் கவலை தெரிவிப்பதோடு சரி. சிங்கள இனவாதிகளுக்கு இவர்கள் தெரிவிக்கும் கவலைகளெல்லாம் பொருட்டல்லவே.

ரண்டு கிழமையா மனித உரிமை மீறல்பற்றி பேப்பர்வளிய, இணையத்தளங்கள்வளிய, ஐக்கியநாடுகள் த்தானிகராலயங்கள்வளிய காட்டுகத்தா கத்தியும் எவனும் கருத்தில எடுக்கேல, உவங்கள் இருந்தென்ன இல்லாட்டிலென்ன? :angry:

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறப்பு பார்வை செலுத்தப்படும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.