"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 70 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
மகாவம்சத்தின் ஆசிரியர், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் தம்பபன்னி [இலங்கை] என்ற பகுதியில் கிமு 543 இல் புத்தர் காலமான அதே தினத்தில் வருகை தந்ததாக, ஒரு மத முக்கியத்துவம் கொடுப்பதற்காக, செயற்கையாக நிர்ணயித்தார். அதற்காக, அதாவது இந்த சூழ்ச்சியால், விஜயனுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர்களின் ஆட்சிக் கால இடைவெளியை நிரப்புவதற்காக ஆட்சிக்காலத்தை சிலருக்கு நீட்டப்படுள்ளது. உதாரணமாக, அபயனின் மருமகன் பண்டுகாபயா [பண்டுகாபயன் / King Pandukhabaya, nephew of Abhayan] கிமு 377 முதல் கிமு 307 வரை, அதாவது 70 ஆண்டுகள் என நீடிக்கப் பட்டுள்ளது. பண்டுகாபயாவின் மகன் மூத்தசிவா 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார் (கி.மு. 307 - கி.மு. 247) இவ்வாறு தந்தையும் மகனும் 130 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்! மேலும் விஜயனின் வருகை பற்றிய கதை கிபி 6 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுக்கு கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், விஜயன் ஒரு பௌத்தர் அல்ல. ஆனால் ஒரு இந்து, சிங்களவர் அல்ல, ஆனால் பெங்காலி - கலிங்க வம்சாவளி! மற்றது உலகில் சிங்களம் என்ற மொழியே இல்லை! புத்தர் இறந்த மாதத்தில், கட்டாயம் இலங்கை வந்து அடைய முடியாது என்பதை விபரமாக, காற்றின் படங்களுடன் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது.
7வது அத்தியாயம் விஜயனின் முடிசூட்டு விழாவைப் [பட்டாபிஷேகம்] பற்றியது. விஜயன் இலங்கையைச் சேர்ந்த குவேணி [Kuveni / Kuvanna
/ குவண்ணா] என்ற இயக்கர் பெண்ணை [யட்சினி / Yakshini] சந்திக்க நேர்ந்தது. அவன் அவளை மணந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவளின் உதவியுடன் இயக்கர்களை (Yaksha) கொன்றான். என்றாலும் விஜயனுக்கு இலங்கையின் அரசனாவதற்கு ஒரு உன்னதமான பெண் தேவைப்பட்டது. அப்போது மதுரை மன்னனின் மகளும், விஜயனின் 700 தோழருக்கான மதுரை தமிழ் பெண்களும், பணியாட்கள் மற்றும் வணிகர்களுடன், தமிழ்நாட்டின் பாண்டிய அரசின் ஒரு பகுதியான மதுரையில் இருந்து, வரவழைக்கப் படடனர். எனவே இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அந்த நேரத்தில் தமிழர்களாக இருக்க வேண்டும். முதல் மனைவி குவண்ணாவை விஜயன் விரட்டியடிக்கும் பொழுது, அவனது சொந்தக் குழந்தைகள் இருவரும் தாயுடன் சென்றனர். குவண்ணாவின் சொந்த மக்கள் உடனடியாக அவளைப் பழிவாங்கும் வகையில் கொன்றனர். எனினும் குழந்தைகள் சுமனகுட்டா [Sumanakutta] வழியாக மலைநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். அதனால், அவர்களின் சந்ததியினர் மலைநாட்டில் குடியேறினர் பெருக்கினார். விஜயன், பாண்டிய மன்னனுக்கு ஆண்டுக்கு இருமுறை நூறாயிரம் (பணத்துண்டுகள்) மதிப்புள்ள சிப்பி முத்துக்களை [shell pearl ] அனுப்புவது வழக்கம் ஆகியது. 'சிப்பி முத்து' என்பது சிப்பி ஓடுகளின் உட்புறப் புறணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இது முத்தின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. [Shell Pearls are made from the inner lining of oyster shells, also known as Mother of Pearl.] மேலும் விபரத்துக்கு 7 - 67 முதல் 74 வரை பார்க்கவும்.
மகாவம்சம், அத்தியாயம் 7, வசனங்கள் 67-74 / மலைகளுக்கு தப்பி ஓடுதல் மற்றும் முடிசூடல் [சுருக்கம்]:
விஜயன் மற்றும் குவேனியின் இரு பிள்ளைகளான, சகோதரனும் சகோதரியும் பாதுகாப்புக்காக சுமனகூடத்திற்கு (ஆதாமின் சிகரம்) தப்பி ஓடினர். அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றனர். அவர்கள் அங்கு உள்ள மன்னரின் அனுமதியுடன் மலாயா பகுதியில் (இலங்கையின் மலைப்பகுதியான மத்திய பகுதியில்) வாழ்ந்தனர். அவர்களின் சந்ததியினர் தான் புலிந்தர்கள் என்றும், "புலிந்தர்கள்" என்பது காட்டுமிராண்டித்தனமான (நாகரிகமற்ற) பழங் குடியினருக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் என்றும் விவரிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த சூழலில், "புலிந்தர்கள்" என்பது இலங்கையின் பூர்வீக மக்களான வேடர்களைக் குறிக்கிறது. அத்துடன் இந்த பகுதி, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மலைப்பகுதிகளுக்கு இடையே உள்ள உள்நாட்டின் பகுதி, இப்போது சபரகமுவ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட, வேடர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் "புலிந்த" என்பது பண்டைய இந்திய மற்றும் இலங்கை வரலாற்றில் காட்டு அல்லது நாகரிகமற்ற மலைவாழ் பழங்குடியினருக்கான பொதுவான பெயராகும்.
விஜயனின் தூதுவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, பாண்டிய தமிழ் மன்னன், தன் மகளுக்கு [மதுரை இளவரிசிக்கு] ஏராளமான ஆடையணிகளுடனும் பிரயாணத்துக்குத் தேவையான எல்லா பொருள்களுடன் அனுப்பி வைத்தான். தேர்ந்தெடுத்த இதர [700] பெண்களுக்கும் ஆடை அணிகளை வழங்கினான். அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வகையில் யானைகள், குதிரைகள், வாகனங்கள் அனுப்பவும் ஏற்பாடும் செய்தான். கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் அவர்களுடன் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. அவர்களிடம் வெற்றி வீரனான விஜயனுக்கு ஓர் செய்தியையும் அனுப்பினன். இந்தப் பெருவாரியான மக்கள் கப்பலில் புறப்பட்டு இலங்கைத்தீவில் மகாதிட்டு எனப்படும் இடத்தில் கரையேறினர். இந்தக் காரணத்ததாலேயே அவர்கள் இறங்கிய இடம் மகாதிட்டு [the ancient port of Mahatittha / now Mantota opposite the island Manaar.] எனப்படுகிறது.
மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில், மன்னார் பகுதியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை மாதொட்ட அல்லது மகாதித்த என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் மாந்தை என்றும் மாதோட்டம் என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும், போசலின் [Porcelain] பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
அதன் பின், விஜயன் தமிழ் பாண்டிய இளவரசியை மணந்து மன்னனாக முடிசூடினான். அதேபோல மற்ற 700 பேரும் மதுரை தமிழ் பெண்களை மணந்தனர். அத்துடன் விஜயன் தனது அமைச்சர்களுக்கு செல்வத்தை வழங்கினார். அது மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும், தனது மனைவியின் தந்தைக்கு மதிப்புமிக்க முத்துக்களை அனுப்பினார். தனது கெட்ட வழிகளை மாற்றிய பிறகு, இலங்கையை தம்பபன்னி நகரில் (இன்றைய வடமேற்கு இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது?) 38 ஆண்டுகள் அமைதியாகவும் நியாயமாகவும் ஆட்சி செய்தார் என்று இந்த பகுதி கூறுகிறது.
Part: 70 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
Chapter 7: This is about consecrating of Vijaya. Vijaya happened to meet with Kuvanna, a Yakkhini, native of Lanka. He married her and she bore two kids to him. He slew the Yakkhas with her help. Vijaya needed a noble woman to marry to become the king of Lanka. Then the daughter of the king of Mathura, along with ladies for the 700 companions and with attendants and trades people came from Mathura, part of the Pandya Kingdom in Tamil Nadu. The majority of the people in Lanka, therefore, should be Tamils by that time. Vijaya chased away the first wife Kuvanna, and his own children went with her. Kuvanna’s own peopled promptly killed her in revenge, and the kids fled to the hill country through Sumanakutta. Their offspring populated the hill country, Malaya. Vijaya used to send a shell pearl worth twice a hundred thousand (pieces of money) to the Pandya king annually, 7 - 73. Vijaya ruled 38 years.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 71 தொடரும் / Will follow
துளி/DROP: 1950 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70
https://www.facebook.com/groups/978753388866632/posts/32955016070813615/?
By
kandiah Thillaivinayagalingam ·