Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 JAN, 2024 | 03:27 PM
image
 

யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கருவிகள் மற்றும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஏராளமான தொல்பொருட்கள் காணப்படுகின்றன. இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட  காலத்திற்குரிய மிக அண்மித்த சான்று மாந்தையில் கி.மு.1600க்கு முற்பட்டவை கிடைக்கப்பெற்றிருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த இவ் அகழ்வாராய்ச்சியில் இருந்து கிடைத்த தொல்பொருள் சான்றுகளின் காலப் பகுப்பாய்வினை  அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தை இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்நோக்கி நகர்த்தியுள்ளது.

இவ்வகழ்வாய்வினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் திலங்க சிறிவர்தன அவர்களுடன் இணைந்து Groningen Institute of Archaeology of the University of Groningen in the Netherlands நிறுவனத்துடன் இணைந்து இந்திகா ஜெயசேகர, ஜனினா நோனிஸ் அத்துடன் தொல்லியல் மற்றும் பாரம்பரிய கற்கைகள் நிறுவகத்தின் நதீரா திஸாநாயக்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவர்களான டக்சினி, கனுஸ்டன், சுசாந்தி ஆகியோர் இவ் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

velanay_thol_2.jpg

velanaythol1.jpg

3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது.


பிறகு என்ன 3400 ஆன்டுகளுக்கு முன்பே ஐக்கிய இலங்கையாக இருந்திருக்கிறது...நாகர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கின்றனர் ...

எப்ப புத்தரின் சிலை கண்டு பிடிப்பார்கள் ?,

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:


பிறகு என்ன 3400 ஆன்டுகளுக்கு முன்பே ஐக்கிய இலங்கையாக இருந்திருக்கிறது...நாகர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கின்றனர் ...

எப்ப புத்தரின் சிலை கண்டு பிடிப்பார்கள் ?,

எங்கையோ ஒரு இடத்திலை ஒளிச்சு வைச்சிட்டுத்தான் தொடங்கி இருப்பினம்...பிக்குமர் வந்து பார்த்தவுடன் புத்தர் வெளியாலை வருவார்....அதுவரைக்கும் நீங்கள் வேலணைப் பக்கம் வந்திடாதையுங்கோ...அவசரத்துக்கு புத்தசிலை இல்லையென்றால்...உங்களை அமர்த்தி போடுவாங்கல்🤣

  • கருத்துக்கள உறவுகள்

வேலணையில் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் மீட்பு!

adminJanuary 11, 2024
Velanai2.jpg?fit=800%2C701&ssl=1

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர் கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொல்லியல் மையம் வேலணை சாட்டி கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

இவ் ஆய்வு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இலங்கையின் கரையோர வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கருவிகள் மற்றும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஏராளமான தொல்பொருட்கள் காணப்படுகின்றன.

இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது.இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மிக அண்மித்த சான்று மாந்தையில் கி.மு.1600க்கு முற்பட்டவை கிடைக்கப்பெற்றிருந்தது.

தற்போது நடைபெற்று முடிந்த இவ் அகழ்வாராய்ச்சியில் இருந்து கிடைத்த தொல்பொருள் சான்றுகளின் காலப் பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தை இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்நோக்கி நகர்த்தியுள்ளது.

இவ்வகழ்வாய்வினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் திலங்க சிறிவர்தன அவர்களுடன் இணைந்து Groningen Institute of Archaeology of the University of Groningen in the Netherlands நிறுவனத்துடன் இணைந்து தொல்லியல் மற்றும் பாரம்பரிய கற்கைகள் நிறுவகம்,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவர்கள் இவ் ஆராய்ச்சியை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

Velanai1.jpg?resize=800%2C600 Velanai3.jpg?resize=800%2C600Velanai4.jpg?resize=800%2C600

 

https://globaltamilnews.net/2024/199630/

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, alvayan said:

எங்கையோ ஒரு இடத்திலை ஒளிச்சு வைச்சிட்டுத்தான் தொடங்கி இருப்பினம்...பிக்குமர் வந்து பார்த்தவுடன் புத்தர் வெளியாலை வருவார்....அதுவரைக்கும் நீங்கள் வேலணைப் பக்கம் வந்திடாதையுங்கோ...அவசரத்துக்கு புத்தசிலை இல்லையென்றால்...உங்களை அமர்த்தி போடுவாங்கல்🤣

சிறிலங்கா ஏர்லைன்சில் பிரி டிக்கட் போட்டு தந்தாலும் வரமாட்டேன்,

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2024 at 00:25, putthan said:


பிறகு என்ன 3400 ஆன்டுகளுக்கு முன்பே ஐக்கிய இலங்கையாக இருந்திருக்கிறது...நாகர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கின்றனர் ...

எப்ப புத்தரின் சிலை கண்டு பிடிப்பார்கள் ?,

புத்தர் இல்லாத அகழ்வாராச்சி இலங்கையில் நடந்ததுண்டா? அவர் அடியில் இருக்கிறார். அவர் இல்லாத இடத்தில அகழ்வாராச்சி நடக்காது. இதுக்கெல்லாம் அவசரப்பட கூடாது.

விரைவில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை சுற்றியும் அகழ்வாராச்சி நடக்க போகுது. அப்போ  பாருங்கள் எப்படியான சிலைகள் அகப்பட போகுதென்று. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.